நீராட்டும் ஆறாட்டும்

நீராட்டும் ஆறாட்டும், தொ.பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.75 புறவயமாகத் தமிழ்ப் பண்பாட்டைப் பேசும் வரலாற்று நூல்கள் தமிழில் அதிகளவில் எழுதப்பட்டுள்ளன. அகவயமாகத் தமிழரின் தொல் பண்பாட்டை ஆராயும் நூல்கள் மிக மிகக் குறைவாகவே எழுதப்படுகின்றன. அதில் ஒன்றுதான் தொ.பரமசிவனின் ‘நீராட்டும் ஆறாட்டும்.’ தமிழரின் புழங்குபொருள் சார்ந்தும் சடங்குகள் சார்ந்தும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். தொல் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்படுகின்றன. சில சிதைந்தும் மருவியும் தொடர்கின்றன. நாம் செய்யும் ஒவ்வொரு சடங்குக்குப் பின்னாலும் ஒரு […]

Read more

தலைவர்களை உருவாக்கிய தலைவர் பூபேந்திரநாத் தத்தா

தலைவர்களை உருவாக்கிய தலைவர் பூபேந்திரநாத் தத்தா, கே.சுப்ரமணியன், இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம்-சரோஜினி பதிப்பகம், விலை: ரூ.75. ‘வெய்ய சிறைக்குள்ளே புன்னகையோடு போம்/ ஐயன் பூபேந்த்ரனுக்கு அடிமைக்காரன்’ என பாரதியே வியந்து போற்றிய பூபேந்திரநாத் தத்தா, சுவாமி விவேகானந்தரின் இளைய சகோதரர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இளைஞர்களை அணிதிரட்டிய அனுசீலன் சமிதியின் உறுப்பினர் மட்டுமின்றி அதன் வெளியீடான ‘யுகாந்தர்’ இதழின் ஆசிரியர். பொறிபறந்த அவரது எழுத்துக்கு பிரிட்டிஷ் ஆட்சி ஓராண்டு கடுங்காவல் தண்டனை கொடுத்தது. சிறையிலிருந்து வெளியே வந்து, சகோதரி நிவேதிதா தேவியின் உதவியுடன் […]

Read more

மறக்கப்பட்ட திவான் கலிபுல்லாவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறும்

மறக்கப்பட்ட திவான் கலிபுல்லாவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறும், கே.எம்.சரீப், சமூக உயிரோட்டம் வெளியீடு, விலை 500ரூ. புதுக்கோட்டை சமஸ்தானத்தின் துணை ஆட்சியாளர், முதல் கவுன்சிலர், திவான் முதலான முக்கியப் பதவிகளை வகித்தவர் கலிபுல்லா. விளிம்புநிலை மக்களுக்காக சமஸ்தானத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்திய முன்னோடி. அவற்றில் முக்கியமானவை, மதிய உணவுத் திட்டமும் தவணை முறைக் கடனில் வீட்டு மனைகள் அளிக்கும் திட்டமும். துரதிர்ஷ்டவசமாக, அவரைக் குறித்த பதிவுகள் அருகிவிட்டன. அவரை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில் பல்வேறு தரவுகளைச் சேகரித்து நூல்வடிவம் வழங்கியிருக்கிறார் கே.எம். சரீப். […]

Read more

இரண்டாவது உலக யுத்தம்

இரண்டாவது உலக யுத்தம், வி.அ.மத்சுலேன்கோ, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.500 இரண்டாம் உலக யுத்தத்தை கண்முன் நிறுத்தும் நுால். வரலாற்று பின்னணியுடன் நுணுக்கமாக எழுதப்பட்டுள்ளது. யுத்தம் துவங்குவதற்கு முன், ஐரோப்பிய நாடுகளில் நிலவிய நெருக்கடிச் சூழலுடன் துவங்குகிறது. எட்டு பெரிய அத்தியாயங்களில், துணைத் தலைப்புகளில் தகவல்கள் உள்ளன. இரண்டாம் அத்தியாயம், போர் துவக்க நிகழ்வை தெரிவிக்கிறது. போரின் போக்கு, ஏற்ற இறக்கங்கள், நாடுகளின் போர் தந்திரம், ஆயுதப்பயன்பாடு, அவற்றால் ஏற்பட்ட விளைவு என, போரின் துயர வரலாற்றை மிக நுட்பமாக படம் பிடிக்கிறது. போரின் […]

Read more

திருப்பி அனுப்பும் வானம்!

திருப்பி அனுப்பும் வானம்!, முனைவர் மு.அப்துல் சமது, நேஷனல் பப்ளிஷர்ஸ், விலைரூ.125 உலக நலன், சமூக நலன், தனிமனிதச் சிந்தனையை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ள நுால். நபிகளின் கருத்துகளை மையமாகக் கொண்டது. உலகை நன்னெறிக்கண் செலுத்த வேண்டும் என்ற பண்பட்ட உள்ளத்தை ஒவ்வொரு கட்டுரையிலும் காணமுடிகிறது. மனித வளமேம்பாட்டுக்குரிய செய்திகளைத் தருகிறது. மனிதர்கள் இறைநெறி நின்று, அறநெறி காத்து, வாழ்வியலைச் செந்நெறிக்கு உட்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு படைக்கப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு குரான் சொல்லியுள்ள கோட்பாடுகளை முன்வைத்து எழுதப்பட்டுள்ளது. நவீன அறிவியலோடு திருமறை வழி நின்று கருத்துகளை விளக்குகிறது. […]

Read more

கர்ம வினைகள் நீக்கும் கால பைரவ ரகசியம்

கர்ம வினைகள் நீக்கும் கால பைரவ ரகசியம், ஜெகதா, சங்கர் பதிப்பகம், விலைரூ.260. கால பைரவரின் புராணத்தில் துவங்கி, பைரவர் சிறப்புகளையும் வழிபாட்டு முறைகளையும் கூறி, பைரவ வழிபாட்டால் கிட்டும் பலன்கள், தமிழகத்திலுள்ள பைரவர் தலங்கள், பைரவர் சஷ்டி கவசம், அஷ்ட பைரவர் அவதாரங்கள், பைரவர் ஆற்றல்கள், பிரபஞ்ச ரகசியம், நட்சத்திர கோவில்கள் போன்ற பல தகவல்கள் தொகுக்கப்பட்ட நுால். சனி பகவானுக்குக் குரு என்பதாகக் கூறி, ஒவ்வொரு ராசிக்காரரும் முறைமையோடு வழிபாடு செய்ய வேண்டிய கிழமைகள் தரப்பட்டுள்ளன. பைரவர் விரதம் மேற்கொள்ள வேண்டிய […]

Read more

திருக்குறள் திருமலை அழகன் உரை

திருக்குறள் திருமலை அழகன் உரை, திருமலை அழகன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.125 பரிமேலழகர் தொட்டு பலர் திருக்குறளுக்கு உரை தந்து இருக்கின்றனர். எளிமையாகவும், எளிதில் புரியும் உரைகளும் தான் நிலைத்து நிற்கின்றன இரண்டு வரி குறளுக்கு மூன்று வரியில் எளிய உரையாக வந்து உள்ளது இந்த நுால். அதிகார வரிசைக்கு பொருள் கூறுதல், பொருட்பாலில் 71 குறிப்பறிதல் அதிகாரம் அதற்குப் பொருள், காமத்துப்பாலில் 110ம் அதிகாரம் குறிப்பறிதல், அதற்குப் பொருள் தலைவன் தலைவியின் மன குறிப்புகள் புரிந்துகொள்ளுதல் என குறிப்பிடுகிறது. அதிகார வரிசையில் பொதுக் […]

Read more

நவ கைலாய கோவில்கள்

நவ கைலாய கோவில்கள், பாலசர்மா, ஆர்.ஆர்.நிலையம், விலைரூ.60 முக்கிய கோவில்களின் தகவல் களஞ்சியமாக வழிபாட்டு முறைகள் பற்றி விரிவாக விளக்கியுள்ள நுால். இமயமலைத் தொடரில் கைலாயமலைக்கு நிகராக தாமிரபரணி நதிக்கரை ஓரங்களில் அமைந்துள்ள ஒன்பது சிவாலயங்கள் நவ கைலாயம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன. இவற்றின் அமைவிடம், கலைநயம், கோபுரங்கள், இயற்கையழகு, புராண வரலாறு, அத்திருத்தலத்தின் தீர்த்தம், வழிபாட்டு முறைகள், வழிபாட்டு நேரங்கள், தோஷ நிவர்த்திகள், பூஜையின் பயன்கள் என விவரங்கள் தரப்பட்டுள்ளன. ஆன்மிக அன்பர்களுக்கு வழிகாட்டும் நுால். – புலவர் சு.மதியழகன் நன்றி: தினமலர், […]

Read more

வாழ்வியல் மாற்றம்

வாழ்வியல் மாற்றம், சி.வீரரகு, சத்தியா பதிப்பகம், விலைரூ.100. மாற்றங்களை எதிர்கொள்ள தயாராக இருக்க மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற முன்னுரையுடன் துவங்கும் புதின நுால். வாழ்வியல் மாற்றம், பாரதவிலாஸ், தயாளன் கமலா, கமலாவின் தவிப்பு, பால் விற்பனை செய்பவள், கணவனால் கைவிடப்பட்ட குடும்பம், குருக்கள் குடும்பம், சென்னையில் கமலத்திற்கு வேலை, தயாளன் வேலை, சொந்தவேலையில் தயாளன் கமலம், தயாளன் மஞ்சுளா பஞ்சாயத்துத் தலைவி கமலாவின் பிரமிப்பு, மீண்டும் தயாளனும் கமலாவும் என்ற தலைப்புகளில் மிக எளிமையாக எடுத்துச் செல்கிறது. – ராமலிங்கம் நன்றி: […]

Read more

வரம் தரும் அன்னை

வரம் தரும் அன்னை, பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.190. இந்து கடவுள் என்றால் இந்தியாவிலிருந்து தான் வரமுடியுமா… பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம்; மகாகாளி உருவெடுக்கலாம்; சரஸ்வதி வீணை மீட்டலாம். மகாலட்சுமி அருட்கடாட்சம் தரலாம் என்பதை உணர்த்தும் நுால். பிரான்சில் இருந்து வந்த மிர்ரா, அன்னையாக மகான் அரவிந்தர் அடியொற்றி, தத்துவங்களை பின்பற்றி நடந்தவர். நீ நீயாய் இரு என்பது தான் அன்னை சொல்லும் வேதம். உண்மை, அன்பு, பாசம் என நற்பண்புகளுடன் விளங்குவது தான் நீயாக இருப்பதன் அவசியம். […]

Read more
1 5 6 7 8 9