திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம், மு.அருணகிரி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.990. காசி மாநகரில் முனிவர்கள் பலர் கூடியிருந்து மதுரையைப் பற்றியும், அங்கே சிவபெருமான் கோவில் கொண்டிருப்பது பற்றியும் உரையாடுகின்றனர். அவர்களுடன் இருந்த அகத்தியரைப் பார்த்து, சிவபெருமான் திருவிளையாடல் புரிவதற்கு ஏற்ற இடமாக மதுரையைத் தேர்ந்தெடுத்தது குறித்து கேட்டனர். அந்த முனிவர்களுக்கு, 63 திருவிளையாடலையும் அகத்தியர் கூறுவதைப் போல் இந்த நுால் துவங்குகிறது. தமிழ் மொழியில் நுாற்றுக்கணக்கான தல புராணங்கள் உள்ளன. அவற்றில் எல்லாம் மிகவும் பழமையானதாக விளங்குகிறது. 13ம் நுாற்றாண்டில் தோன்றியது, திருவாலவாயுடையார் திருவிளையாடல் புராணம். […]

Read more

இதழ் விரிக்கும் தமிழ்ப் பூக்கள்

இதழ் விரிக்கும் தமிழ்ப் பூக்கள், க.ஜெய்சங்கர், அகநி, விலைரூ.120. பல்வேறு கருத்துகள் அடங்கிய 12 கட்டுரைகளின் தொகுப்பு நுால். மெய்ப்பொருள் நாயனார் கட்டுரை மூலம் திருக்கோவிலுார் அரசாண்ட குறுநில மன்னர் என்றும், சைவம் பரப்பிய பெருமையையும் அறிய முடிகிறது. நுால் இரு வகைப்படும். ஒன்று நடப்பு காலத்திற்கு ஏற்றது. அடுத்தது காலம் கடந்தும் நிற்பது. உதாரணங்களுடன் ஒரு கட்டுரையில் விளக்குகிறார். செய்யுள் என்பது சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது என்பதையும் ஒரு கட்டுரை காட்டுகிறது. இலக்கண அறிவை மேம்படுத்திக் கொள்ள விரும்புவோர் படிக்க ஏற்ற […]

Read more

பூனையும் யானையும்

பூனையும் யானையும், இரத்தின பாலச்சந்தர், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150 பூனை மற்றும் யானைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சிறுகதை நுால். பல கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன. விலங்குகள் பாசம், உழைப்பு, உதவி, நடிப்பு, நட்பு போன்றவை பற்றி அறியலாம். மனிதர்களை விட விலங்கு வாழ்க்கை சிறப்பாக உள்ளது என்பதை மெய்ப்பிக்கிறது. சிறியவர்களின் மனதை மகிழ்வித்து, உயிரினங்களைப் போற்றிப் பாதுகாக்கும் வகையில் முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் இவரது முதல் நுால். – வி.விஷ்வா நன்றி: தினமலர், 9/1/22. இந்தப் புத்தகத்தை […]

Read more

பகல் கனவு

பகல் கனவு, லா.ச. ராமாமிருதம், பாலாஜி பதிப்பகம், விலைரூ.130. வித்தியாசமான சிறுகதைகளின் தொகுப்பு நுால். இதில், 16 கதைகள் உள்ளன. வண்ணங்கள் தடவிய சொற்களால் ஆனது. ஒவ்வொரு சொல்லுக்கும் பல்லாயிரம் பொருள் கொள்ளும் வகையில் திறன் உட்பட்டது. மனக் குகையில் எழும் ஒலியின் வடிவத்தை விவரிப்பது. வாழ்வை மிகவும் நுட்பமாக கடந்து சென்று, கற்பனையாக, அனுபவமாக வெளிப்படுத்துகின்றன கதைகள். அன்பு, ஆசை, பக்தி, பாசம் என கதைகளின் உள்ளீடு கிறங்க வைக்கின்றன. சொற்சேர்க்கைகள் கவிதையாக பொழிகின்றன. வண்ணமயமான விளக்குகள் மனதுக்குள் ஒளிர்வது போன்ற தோற்றத்தை […]

Read more

திருவடி முதல் திருமுடி வரை

திருவடி முதல் திருமுடி வரை, அருண் சரண்யா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160 புத்தகத்தின் பெயரைப் பார்த்ததும் திருமாலும், பிரம்மனும் விஸ்வரூபம் எடுத்த சிவபெருமானின் அடியையும், முடியையும் காணச் சென்ற கதை தானே என்று நினைக்க வேண்டாம். திருவடி முதல், திருமுடி வரையான உடலின் ஒவ்வொரு உறுப்புகளைப் பற்றிய அரியின், சிவனின் திருவிளையாடல்கள் விளக்கப்படுகின்றன. சிறு சிறு கதைகளின் வழியே எளிமையாக மனதில் பதியும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. தன் இடையால் சிவபக்தனை திருத்திய திருமாலின் கதை சுவாரசியத்தைத் துாண்டும். ராதையின் அன்பை […]

Read more

நீதிமன்ற குறுக்கு விசாரணைகளும் விவரங்களும்

நீதிமன்ற குறுக்கு விசாரணைகளும் விவரங்களும், மேஜர் மொ.முத்துசாமி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.180. செய்திக்கு அப்பாற்பட்ட நிலையில் வழக்கு, குறுக்கு விசாரணை எவ்வாறு நடைபெறும் என்பதையும் விளக்கும் நுால். குறுக்கு விசாரணை கேள்விகளை வரிசையாகத் தந்துள்ளார். வழக்குகளுக்கான காரணங்களைக் குறிப்பிட்டு, அது எந்தத் தண்டனைச் சட்டத்திற்கு உட்பட்டது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். குற்ற வழக்கு, வாகன விபத்துகளில் எத்தகைய குறுக்கு விசாரணை நடக்கும் என எடுத்துரைக்கிறது. சாலையில் நடந்து செல்லும்போதே திடீரென ஒரு விபத்தையோ குற்றச்செயலையோ பார்க்க நேரிட்டு, அதன் காரணமாக நீதிமன்றித்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம் […]

Read more

திருப்பாவை

திருப்பாவை, கவிஞர் பிரபாகர பாபு, தமிழ்க்கவி பதிப்பகம், விலைரூ.80. மார்கழி மாத விடியற்காலை நேரத்தில் பெண்களை எழுப்பி நீராடச் செல்வதாகப் பாடப் பெறும் திருப்பாவைக்கு எளிய உரை தரும் நுால். இயல்பான ஓட்டத்தில் செல்கிறது. சில சொற்களுக்குப் புதிய நோக்கில் பொருள் காண முற்பட்டுள்ளது. குறளை என்ற சொல், கோள் சொல்வதாகத்தான் மூலத்தில் உள்ளது. தீயசொல் என்று இதில் சுட்டப்பட்டுள்ளது. வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று என்பது ஆண்டாள் கால ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தும் தொடர். வெள்ளி சுக்கிரனையும், வியாழன் குருவையும் குறிக்கும். மார்கழி மாதத்தில் […]

Read more

இந்த நாள் வெற்றித் திருநாள் – பாகம் 1

இந்த நாள் வெற்றித் திருநாள் – பாகம் 1, சிந்தனைக் கவிஞர் கவிதாசன், குமரன் பதிப்பகம், விலைரூ.100 வெற்றி பெறத் துடிக்கும் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை, உற்சாகம் தரும் நுால். ஒருவரிடம் உள்ள குறைகளைச் சொல்லக் கூடாது; மாறாக நிறைகளைச் சொல்ல வேண்டும். நிறைகளைச் சொல்லி குறைகளைத் திருத்த முயல வேண்டும். முன்னேற்றத்திற்கு மூன்று வழிகள், ஆறுவது சினம், சொற்களின் அற்புதம், விழிப்புணர்வே வெற்றி, மகிழ்ச்சியின் ரகசியம், முயற்சியே மூலதனம், அச்சத்தை விரட்டுங்கள், இலட்சியம் வெல்லட்டும் போன்ற தலைப்புகள் வசப்படுத்தும். பார்த்தது, படித்தது, கேட்டது மற்றும் […]

Read more

கிராம நிருவாகத்தின் புரட்சி

கிராம நிருவாகத்தின் புரட்சி, இரா.போசு, ரெயின்போ, விலைரூ.300. வருவாய் கிராம நிர்வாகத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி வரலாற்று பின்புலத்துடன் எழுதப்பட்டுள்ள நுால். கிராம நிர்வாகத்தின் தோற்றம், அதில் பணியாற்றிய கர்ணம், மணியம், தலையாரி நியமன முறை, அவர்களின் பணி நிர்ணயம், போலீஸ் அதிகாரத்துடன் பணியாற்றிய தலையாரிகள் போன்ற விபரங்கள் எளிமையாகத் தரப்பட்டுள்ளன. கிராம நிர்வாகத்தில் முதல் சட்டம், 1894ல் கொண்டு வரப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து கிராம உருவாக்கம் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப தலையாரிகள் நியமனம் செய்யப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Read more

களிப்பூட்டும் கணிதம்

களிப்பூட்டும் கணிதம், நல்லாமூர் கோவி. பழனி, வனிதா பதிப்பகம், விலைரூ.300. கணிதத்தை எளிதாக கற்க துாண்டும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். கணித அழகை ரசித்து, அதனுள் மூழ்கவைக்கும் விதமாக எளிமையாக படைக்கப்பட்டு உள்ளது. கணித சிந்தனைகள், கணித மன்ற செயல்பாடுகள், கணித விளையாட்டு, கணித மேதைகளின் சுருக்க வரலாறு என பல தலைப்புகளில் உள்ளது. கணித ஆர்வ களஞ்சியமாக அமைந்துள்ளது. ஒன்றிலிருந்து மற்றொன்று உருவாவதை தெளிவாக புரிந்து கொள்ளும் வகையிலும், அவற்றிற்கு இடையேயான தொடர்புகளையும் அடுக்கமைவு மூலம் தகவலாக கோர்க்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு பெருந்தலைப்புகளின் […]

Read more
1 6 7 8 9