பார்புகழும் பாம்பன் சுவாமிகள்

பார்புகழும் பாம்பன் சுவாமிகள், கு.சண்முக சுந்தரம், முல்லை பதிப்பகம், பக்.112, விலை ரூ.120. முருகப் பெருமானின் அருள்பெற்ற மகான், தவத்திரு பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல், குமாரஸ்தவம், ஷண்முகக் கவசம், வேற்குழவி வேட்கை, பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் ஆகியவற்றின் மூலமும் உரையும் இணைந்த பதிப்பு இது. ஷண்முகக் கவசப் பாடல்கள் ஆற்றல் மிக்கவை. இதற்குமேல் மந்திரம் எதுவுமில்லை என்று வாரியார் சுவாமிகள் இந்தப் பாடல்கள் குறித்து நூலாசிரியரிடம் சிறப்பித்துக் கூறியுள்ளார். பாம்பன் சுவாமிகள் அம்மை நோயால் மிகவும் துன்புற்ற சமயத்தில் அவரால் இயற்றப்பட்டதுதான் […]

Read more

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920

தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.720, விலை ரூ.630.   நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக 12,838 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம்,1920 எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம்தான் நகராட்சிகள், பேரூராட்சிகளின் அனைத்து செயல்பாடுகளுக்கும் அடிப்படையாகும். இந்த நூலில் நகராட்சிகள், பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பணி என்ன? அவர்களுக்கான அதிகாரங்கள் எவை? என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. […]

Read more

ஒப்பிலக்கியக் கோட்பாடுகளும் பிறதுறை ஒப்பீடுகளும்

ஒப்பிலக்கியக் கோட்பாடுகளும் பிறதுறை ஒப்பீடுகளும், பேரா. சே. சாரதாம்பாள், மீனாட்சி புத்தக நிலையம்,  பக். 418, விலை ரூ.400.  ‘ஒப்பிலக்கியம்’ என்ற ஓர் இலக்கியம் சென்ற நூற்றாண்டில்தான் தோற்றம் பெற்றுள்ளது. இதன் தாயகம் ஐரோப்பா. பிறகுதான் இது உலகெங்கும் பரவியதாகத் தெரிய வருகிறது. இந்த ஆய்வை மேற்கொண்டிருப்பவர் ஒப்பிலக்கியத் துறையில் பேராசிரியராக இருப்பதால், அதுகுறித்த ஆழ்ந்த புரிதலுடன் நுட்பமாக சில செய்திகளை இந்தநூலில் பதிவு செய்திருக்கிறார். ஆய்வுத் தலைப்புக்கேற்ப இரு பகுதிகளாகப் பகுத்து, முதல் பகுதியில் ‘ஒப்பிலக்கியக் கருத்துருவாக்கமும் கோட்பாடுகளும்’ எனும் தலைப்பில் பிரெஞ்சு […]

Read more

இந்தியாவில் கடல் கோட்டைகள்

இந்தியாவில் கடல் கோட்டைகள், சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், பக்.272, விலை ரூ.275. பாதுகாப்பற்ற கடல்களுக்கு நடுவே பாதுகாப்பான கோட்டைகளை அமைப்பது என்பது சாதாரண விஷயமா? ஆனால், அப்படிப்பட்ட கோட்டைகளையும் அமைத்துள்ளனர் என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது. உலகில் எங்கெல்லாம் கடல் சார்ந்த நாடுகள் உள்ளனவோ அங்கெல்லாம் தமது நாட்டைப் பாதுகாக்க இந்த வகை கடல் கோட்டைகள் அமைக்கப்படுகின்றன. இவை ராணுவ நடவடிக்கைகளுக்கு மட்டுமே பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய கடல் கோட்டைகள், கடல் நடுவில் துறைமுக வசதி கொண்ட மணல் தீவுகள் அல்லது பெரிய பாறைத் […]

Read more

1974 – மாநில சுயாட்சி – மைய – மாநில உறவு ஆய்வுக்குழு

1974 – மாநில சுயாட்சி – மைய – மாநில உறவு ஆய்வுக்குழு (ராஜமன்னார் குழு) அறிக்கை மற்றும் அதுதொடர்பான விஷயங்களின் தொகுப்பு,  ஆழி செந்தில்நாதன், ஆழி பப்ளிஷர்ஸ், பக். 608, விலை ரூ. 1,000. 1974 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தீர்மானம், அதன் மீதான விவாதங்களின் உரை ஆகியன நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அரை நூற்றாண்டுக்கு முன்னரே மத்திய, மாநில உறவுகள் அறுபட்டுவிடாமல் சீரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து திமுக தலைவரான மறைந்த கருணாநிதி சிந்தித்திருப்பதுடன் ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.  ‘ஓர் ஒற்றையாட்சியமைப்பை ஏற்க […]

Read more

சான்றுச் சட்டவியல்

சான்றுச் சட்டவியல், தி.வ.தெய்வசிகாமணி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், பக். 544, விலை ரூ.500. சான்று சட்டத்தின் முக்கியத்துவத்தை நூலாசிரியர் தெசிணி விரிவாக, எளிய மக்களுக்கு புரியும் வகையில் எடுத்துரைக்கிறார். இதுமட்டுமின்றி, பொருண்மைகள் (உண்மைகள்), சான்றுரைஞர்கள், ஆவணச் சான்றுகளின் வழிநின்று, அதனை மெய்ப்பிப்பதற்கான நடைமுறைகள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் விதிவிலக்குகளும் இடம்பெற்றுள்ளன. வாய்மொழிச்சான்றே முக்கியம் என திரைப்படத்தின் மூலம் ஆழ்மனதில் விதைக்கப்பட்ட ஒரு நம்பிக்கை கண்ணாடியைப் போல் நொறுங்குகிறது. வாய்மொழிச்சான்று கூறுபவரின் நடத்தை உள்ளிட்டவற்றை உற்று நோக்கிய பிறகே அதன் […]

Read more

பார்கின்சன்ஸ் நோய்

பார்கின்சன்ஸ் நோய், பேராசிரியர் டாக்டர் ம.தனராஜ், டாக்டர் எம்.டி. சாரிட்டபிள் டிரஸ்ட், பக்.136, விலை ரூ.500. நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன்ஸ் நோயைப் பற்றிய புரிதலை பாமரர்களுக்கும் ஏற்படுத்தும் வகையிலானதொரு நூல் இது. நரம்பியல் துறையின் முதன்மையான மருத்துவ நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படும் பேராசிரியர் டாக்டர் ம.தனராஜ் எழுதியிருக்கும் நூல் இது என்பதே அதன் கூடுதல் சிறப்பு. மருத்துவத் துறையில் இன்று கோலோச்சிக் கொண்டிருக்கும் பல பிரபல மருத்துவர்களின் ஆசானாக உள்ள தனராஜ், இந்தப் புத்தகத்தின் வாயிலாக எளிய வாசகர்களுக்கும் நடுக்குவாதம் குறித்து வகுப்பு எடுத்திருக்கிறார். […]

Read more

என் பார்வையில் பிரபலங்கள்

என் பார்வையில் பிரபலங்கள், பி.ஆர்.துரை, வர்த்தமானன் பதிப்பகம், பக். 316, விலை ரூ. 250, நூலாசிரியர் தனது வாழ்நாளில் சந்தித்த 73 பிரபலங்களைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்பு கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். சிறுவனாக நாடகங்களிலும், திரைப்படங்களிலும் தனது கலை வாழ்வைத் தொடங்கியவர் பி.ஆர்.துரை. இதில் எஸ்.வி.சகஸ்ரநாமம், ஜெமினி கணேசன், ஏ.பி.நாகராஜன், நாகேஷ் போன்ற முந்தைய தலைமுறை கலையுலக மன்னர்கள் முதல், கலையுலகிலிருந்து அரசியலுக்குள் நுழைந்த ஜாம்பவான்களான மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்டோர் வரை இடம் பிடிக்கின்றனர். ஒருசில தொழிலதிபர்களும் உண்டு. இவர்களுடன் ஏற்பட்ட […]

Read more

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை, மருதன், கிழக்குப் பதிப்பகம், பக். 440, விலை ரூ.475, சிந்து சமவெளி நாகரிகம் முதல் தற்போது வரை இந்தியாவின் வரலாற்றைப் பலர் பல்வேறு கோணங்களில் பதிவு செய்துள்ளனர். இந்தப் புத்தகம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் பார்வையில் இந்தியாவின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கிறது. கிரேக்கரான ஹொரோடோட்டஸில் தொடங்கி, தீஷியஸ், நியார்கஸ், மெகஸ்தனிஸ், பாஹியான், யுவான் சுவாங், அல்பெரூனி, மார்க்கோபோலோ, இபின் பதூதா, நிக்கோலா காண்டி, வாஸ்கோடா காமா, சீகன் பால்கு எனப் பல வெளிநாட்டவர்களின் குறிப்புகள் இதில் விரிவாக உள்ளன. இந்தியாவுக்கு வருகை […]

Read more

மனதின் குரல்

மனதின் குரல் (5 தொகுப்புகள்); பிரதமர் நரேந்திர மோடி, செந்தில் பதிப்பகம், பக். 1,664 (336+328+336+328+336), 5 தொகுப்புகள்: ரூ.2,000. விஜயதசமியன்று 2014 அக். 3-ஆம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடியின் “மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி ஒலிபரப்புத் தொடங்கியது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறன்று வானொலியில் உரையாற்றும் நிகழ்ச்சியானது, 87-ஆவது நிகழ்ச்சியை நிறைவு செய்திருக்கிறது. இதில் 85 உரையாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, 5 தொகுப்புகளாக வெளிக்கொணர்ந்திருப்பது ஆவணப் பெட்டகமே. உரையாடலில் பல்வேறு, தகவல்கள் இடம்பெற்றிருந்தாலும் அதில் தமிழகத்தைப் பற்றியும், […]

Read more
1 2 3 4 8