தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் பாகம் – 4, தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.610 தொப்பி, கறுப்புக் கண்ணாடி என்ற அடையாளங்களுடன் பிரபலமான தமிழ்வாணன் படைத்த இரும்புக் கை மனிதன், கருகிய கடிதம், பேய், ஒற்றைக்கண் மனிதன், சீன ஒற்றர்கள், மீனழகி ஆகிய மர்ம நாவல்களின் தொகுப்பு நுால். ஏற்கனவே தொடர்கதையாக வாசித்தவர்கள், இப்போது படித்தாலும் மெய் சிலிர்க்கச் செய்யும். எளிமையான உரைநடையைப் பயன்படுத்தும் வல்லமை மிக்கவர் தமிழ்வாணன். அவர் எழுதிய வாக்கியங்கள் நான்கு, ஐந்து சொற்களுக்குள் இருக்கும். பல தொடர்கள் ஒரு சொல்லாகவே அமைந்திருக்கும். […]

Read more

சிலேட்டுக்குச்சி

சிலேட்டுக்குச்சி, சக.முத்துக்கண்ணன், பாரதி புத்தகாலயம், விலைரூ.110 மாணவ – மாணவியரோடு செலவிடும் கொடுப்பினை, ஆசிரியர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும். அவர்களின் உளவியல் அனுபவங்களை, ஒரு ஆசிரியரால் தான் உள்வாங்க முடியும். அரசு பள்ளி ஆசிரியராக பணி புரிந்து, மாணவர்களின் வாழ்வியலை உள்வாங்கி, கட்டுரை தொகுப்பாக வெளியிட்டுள்ளார். ‘என்ன சிரிப்பு வேண்டியிருக்கு..’ என துவங்கி, ‘அவன விட்ருங்க பாஸ்..’ என முடியும், 17 கட்டுரைகள் முழுதும் சேட்டைகள் தான். கட்டுரைகள் பள்ளி காலத்திற்கு இழுத்துச் செல்கின்றன. பழைய இலக்கியம் முதல், நவீன இலக்கியம் வரை வாசித்த […]

Read more

திருமங்கை ஆழ்வார்

திருமங்கை ஆழ்வார்,முகிலை இராசபாண்டியன், முக்கடல், விலைரூ.80 திருமாலின் அருள் பெற்ற பன்னிரு ஆழ்வார்களில் பெரிதும் கவரும் நன்கலியன் திருமங்கை ஆழ்வாரை படம் பிடித்துக் காட்டுகிறது. திருமால் பற்றிய அறிமுகம், ஆழ்வார்கள் பற்றிய ஆய்வுடன் துவங்குகிறார். பத்து ஆழ்வார்களுடன், மதுரகவியும், ஆண்டாளும் பின்னர் சேர்க்கப்பட்டனர் என்கிறார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில், 3,776 பாடல்களே உள்ளதையும் கூறுகிறார். சோழன், வேல் வழங்கிய வரலாறு, நாகை, பொன் புத்தர் சிலையை, திருவரங்கம் திருப்பணிக்காக எடுத்தது, வாடினேன் வாடி வருந்தினேன் என்று பாடியது போன்ற அரிய செய்திகளால் நிரம்பியுள்ளது. மனம் […]

Read more

எனைத்தானும் நல்லவை கேட்க

எனைத்தானும் நல்லவை கேட்க, டாக்டர் பொற்கோ, இசையமுது பதிப்பகம், விலைரூ.360 தமிழர் வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கிய, 81 கட்டுரைகளின் தொகுப்பு நுால். நல்லவற்றைக் கேட்கவேண்டும், படிக்கவேண்டும், செய்யவேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. சான்றோன் இயல்பைச் சால்பு என்றும், சான்றோனாக இருக்க அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற நிலைகளைக் குறிப்பிட்டு வள்ளுவரின் வழிநின்று விளக்குகிறார். தமிழர்களின் கல்விப் பாரம்பரியம் இரண்டாயிரம் ஆண்டுகாலப் பழமையானது என்பதை ஆய்வுரையில் விளக்குகிறார். கணக்காயர், வானவியல், மருத்துவம் போன்ற துறைகளில் தமிழறிஞர்கள் புலமை பெற்று விளங்கியதைத் தொல்காப்பிய வழிநின்று […]

Read more

நெய்தல் சொல்லகராதி

நெய்தல் சொல்லகராதி, குறும்பனை சி.பெர்லின், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.315 தமிழகத்தின், கடலோரத்தில் மீன்பிடித் தொழிலை பிரதானமாகக் கொண்டு வாழும் மக்களின் உயர்ந்த பண்பாட்டை சொல்லும் நுால். மிகத் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் பயன்படுத்தும் கலைச் சொற்கள், மீன்களின் பெயர்கள், கடல் பாறைக் கூட்டங்களின் பெயர், கடலுக்கு அமைந்த பெயர்கள், நெய்தல் சமூகங்களின் பண்பாட்டு உயர்வு, நட்சத்திரங்களை அடையாளம் காணும் விதம், கடலில் வீசும் காற்றின் வகைமைகள், கடலோர பழமொழிகள், கடல் தொழிலுக்கு உதவும் கருவிகள், மீனவப் பெண்களின் விளையாட்டுப் பாடல்கள், […]

Read more

ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பகவத் கீதை, சைலேந்திர சர்மா, கிரி டிரேடிங் ஏஜன்சி பிரைவேட் லிமிடெட், விலைரூ.150 இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையில் உள்ள பண்டைய யோக பயிற்சிகளை தொடர்ந்து செய்வதால், கிருஷ்ணரை நேரில் காணும் பாக்கியம் கிடைக்கும் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 7/2/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%ef%bb%bf1000000027342_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

திருநெல்வேலி சுவைமிகு சைவ உணவு வகைகள்

திருநெல்வேலி சுவைமிகு சைவ உணவு வகைகள், எஸ்.செல்லம்மாள், ழகரம் வெளியீடு, விலைரூ.120 வாழ்க்கையின் ஜீவாதாரம் உணவு. உயிர்ப்போடு வைத்திருக்க உதவும் உணவுகள் பற்றி பேசுகிறது இந்த நுால். திருநெல்வேலி வட்டாரத்தில் பிரத்யேகமாக செய்யும் உணவு வகைகளின் செய்முறை எளிமையாக தரப்பட்டுள்ளது. மொத்தம், 105 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. இறுதி பகுதியில், ஆரோக்கியமாக வாழ உதவும் குறிப்புகளும் உள்ளன. வெள்ளை சர்க்கரையை ஒதுக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் குறிப்பு உள்ளது. சுவையான உணவு வகைகளின் செய்முறை கூறும் நுால். நன்றி: தினமலர், 6/12/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

ஆண்டாள் அந்தாதி

ஆண்டாள் அந்தாதி, சுரா, செந்தமிழ் அறக்கட்டளை, விலைரூ.100 அந்தாதி பாடுவது மிகவும் கடுமையான சவால். ஆதி, அந்தம் என்ற சொற்களின் கூட்டணியே அந்தாதி. இவ்வகையில் முதல் செய்யுளான, ‘படிக்குப்படி கமலம் வைப்பேன், படிக்கும்படி பாடல் தருவேன்’ என்று துவக்கி, ‘அருள்மிகச் செய்வாய் அம்மா’ என முடிக்கிறார். அடுத்த பாடலில், அம்மாவின் மறு சொல்லான, ‘அம்மையே அருள்வளர் அழகே’ என துவங்குகிறார். இப்படியாக, 100 செய்யுள்கள் நீள்கின்றன. இந்த எளிய பாடல்களுக்கு பொருளும் தந்துள்ளது, பொறுப்புணர்வைக் காட்டுகிறது.  நன்றி: தினமலர், 6/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

தமிழக மாவட்டங்கள்

தமிழக மாவட்டங்கள், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், விலைரூ.200 தமிழகத்தில், 36 மாவட்டங்கள் குறித்த செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. மாவட்ட பரப்பளவு, மக்கள்தொகை, லோக்சபா, சட்டசபை தொகுதிகள், வருவாய் கோட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சி நகராட்சிகள் என, அனைத்து விபரங்களும் அமைந்துள்ளன.கடந்த, 1956ல், 13 மாவட்டங்களாக இருந்த தமிழகம், 1966 முதல் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. புதிய மாவட்டங்கள் எந்த ஆண்டுகளில் உருவாக்கப்பட்டன என்ற தெளிவான விபரங்களும் உள்ளன. ‘சுப்ரீம் கோர்ட் ஆப் மெட்ராஸ்’ என துவக்கத்தில் இருந்தது, பின் ஆகஸ்ட் 15, 1862 முதல், […]

Read more

புல்லாங்குழல்

புல்லாங்குழல், ஆர்னிகாநாசர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160 ஆசிரியர் ஆர்னிகா நாசரின் விண்வெளி சிறுகதைகள் தொகுப்பின் கடைசி புத்தகம் புல்லாங்குழல். கற்பனைக்கு எட்டாத அதிசயங்களை அழகான கதையாக பிணைத்து உள்ளார். கதைக்கு கதை அறிவியல் வித்தியாசங்களை காட்டி அதிசயிக்கச் செய்யும் ஆசிரியரின் கைவண்ணத்துக்கு ஒரு கோப்பை தேநீர், காகித அம்பு கதைகளே சான்று. முனியம்மா ரயில் வண்டி நிலையம்… இனிமேல் நடக்கப் போகும் கூத்தின் ஆரம்ப கட்ட யதார்த்தம். ஆசிரியரின் கற்பனைக் கதைகளுக்கான அறிவியல் தேடல் மிக அதிகம் என்பதை அவரது […]

Read more
1 99 100 101 102 103 505