சிவா – விஷ்ணு ஆலயங்கள்

சிவா – விஷ்ணு ஆலயங்கள், ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, ஆசிரியர் வெளியீடு, விலைரூ.200. சிவா விஷ்ணு ஆலயங்கள், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் எங்கெங்கு உள்ளன என்பன பற்றிய தகவல்களும், கோவில் அமைப்பு, சிறப்பு பற்றி தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால். ஐயப்பன், பைரவர், வீரபத்திரன் கோவில்கள் அமைந்துள்ள இடங்கள், வழிபாட்டு நேரம், பூஜை காலம் பற்றிய தகவல்களுடன், பரிகார விளக்கத்தையும் விரிவாக தருகிறது. சிவன், யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம் தெட்சிணாமூர்த்தி, அம்பிகை, மயில் வடிவில் இறைவனை பூஜித்த தலம் மயிலாப்பூர், சிவபெருமான் […]

Read more

புதிய பார்வையில் ராமாயணம்

புதிய பார்வையில் ராமாயணம், பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.320 எளிமைக்கு உதாரணம் இந்த புதிய ராமாயணம். சொல்ல சொல்ல இனிக்குதடா… என்பது போல, படிக்க படிக்க பரவசம் தருகிறது. ராமா… உன் கருணை எத்தனை… என மனம் வியந்து கொண்டே கதைக்குள் செல்கிறது. சில மவுனங்கள் சில விளக்கங்களாய் ஐயம் திரிபுற விளக்குகிறார் ஆசிரியர். சில கதாபாத்திரங்கள் ராமனோடு பேசும் போது, அந்த கதாபாத்திரங்களின் பிரமிப்பை நம் மனம் அப்படியே உள்வாங்குகிறது. நம் இருவர் தொழிலும் ஒன்று தானே […]

Read more

விஜயநகரப் பேரரசு

விஜயநகரப் பேரரசு, கா.அப்பாதுரை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலைரூ.200. இந்தியாவின் தெற்கு பகுதியிலிருந்த விஜயநகரப் பேரரசின் சமூக அரசியல், பொருளாதார வளர்ச்சி எழுதப்பட்டுள்ளது. வரலாற்று நாவல் போன்றது எனலாம். பண்டைய வரலாற்று சிறப்புகளை அறிந்து கொள்ள, இத்தகைய நுால்கள் மிகவும் பயன்படும். விஜயநகர மன்னர்கள், நாயக்க அரசர்களோடு கொண்ட தொடர்புகள் மற்றும் மற்ற மன்னர்கள், சிற்றரசர்கள் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. விஜயநகரப் பேரரசு ஆண்டதாக கூறியுள்ள, 14 – 17ம் நுாற்றாண்டு வரை உள்ள தமிழக வரலாறு கோர்வையாக சொல்லப்பட்டுள்ளது. – என்.எஸ்., நன்றி: […]

Read more

உலகை உலுக்கும் கொரோனாவும் மறைமுக நன்மைகளும்

உலகை உலுக்கும் கொரோனாவும் மறைமுக நன்மைகளும், பு.சி. இரத்தினம், மணிமேகலை பிரசுரம், விலைரூ.100. கொரோனா என்ற தீநுண்மி நோயால் உலகம் முழுதும் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். ஆண்டு தோறும், 30 நாட்கள் கட்டாய ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்ற பரிந்துரையுடன் முடித்துள்ளார். கொரோனா அச்சம் ஏற்பட்டதில் இருந்து, நடந்த எல்லா மாற்றங்களையும் தொகுத்துள்ளார். படங்களையும் இணைத்துள்ளார். மனிதாபிமானம் மற்றும் இயற்கை ஆர்வம் சார்ந்த கண்ணோட்டம் புத்தகம் முழுதும் உள்ளது. ஆய்வு பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது. தொற்று நோய், உலகில் ஏற்படுத்திய மாற்றங்களை […]

Read more

நரேந்திர மோடி என்னும் நான்

நரேந்திர மோடி என்னும் நான்…, மானோஸ், குமரன் பதிப்பகம், விலைரூ.400 பிரதமர் மோடி, இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றிப் பெற்று, பிரதமர் ஆனதை முன்னிட்டு, அவரது சாதனை பயணத்தை விரிவாக எழுதியுள்ளார். மோடியின் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், அவரது அடுத்தடுத்த திட்டங்கள், வெளிநாட்டு பயணங்களின் நோக்கம், ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான அவரது திட்டங்கள் போன்றவற்றை விரிவாக, 125 அத்தியாயங்களில் எழுதியுள்ளார். – என்.எஸ்., நன்றி: தினமலர், 23/8/20. இந்தப் புத்தகத்தை […]

Read more

உடல் நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள்

உடல் நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள், பி.சி.கணேசன், நர்மதா பதிப்பகம், விலைரூ.80 நோயின்றி வாழ வழியும், நோய் வந்தால் நீக்க எளிய வழிமுறைகளும் கூறப்பட்டு உள்ளன. மனித உடல் ஓர் இயற்கை அற்புதம் என்று துவங்கி, 14 தலைப்புகளில் பயனுள்ள கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றுடன் உடலுக்கு உள்ள தொடர்பை அழகாகக் கூறியுள்ளார். உடலில் ஆறு நரம்பு மையங்களை, ஏழு பிரிவுகளாக கூறப்பட்டுள்ளது. அக்கு பங்சர், அக்குபிரஷருக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் கூறுகிறது. […]

Read more

எத்தனை கோடி உயிர்கள் எனக்குள்

எத்தனை கோடி உயிர்கள் எனக்குள், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.120. கண்ணுக்கு புலப்படாத பாக்டீரியா என்ற நுண்ணுயிரி பற்றி விளக்கும் அறிவியல் நுால். எட்டு தலைப்புகளில் உள்ளது. ‘அறிவு என்பது அறியாமையை மேலும் வெளிப்படுத்துவது’ என்ற பொன்மொழியுடன் துவங்குகிறது. மனித உடலில் உள்ள செல்களை விட, உடலில் வாழும் நுண்ணுயிரிகள் பல மடங்கு அதிகம் என்ற வியப்பூட்டும் உண்மை விளக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில், ‘உடலே ஒரு வனம்’ என்ற பகுதியிலிருந்து…உடலில் எத்தனை வகை பாக்டீரியாக்கள் வசிக்கின்றன என்பதைக் கணக்கிட முடியவில்லை. ஒன்றுக்கு பத்து என்ற விகிதத்தில் […]

Read more

மணல் உரையாடல்

மணல் உரையாடல், கவிதைகள், இசாக், தமிழ் அலை, விலை 150ரூ. பொருளின் பொருள்பார்த்த முகமெல்லாம் வேற்று முகமாக இருக்கும் வெளிநாட்டுப் பணியில்… தயக்கங்களுடன் போராடிய நினைவுகளின் தொகுப்பாக மணல் உரையாடல் கவிதைகளை எழுதியிருக்கிறார் கவிஞர் இசாக். நாடு அந்நியமாதல், மொழி அந்நியமாதல், உறவுகள் அந்நியமாதல், ஊர் அந்நியமாதல் என்பதெல்லாம் மானுட வாழ்வின் பெரிய துயரங்கள்தான் என்றாலும், ஒருவருக்கு தன் சொந்தவீடே அந்நியமாகிப் போகும் கொடிய துயரம் போன்ற பிரிதல்களில் ஏற்பட்டு விடுவதை எளிய சொற்களால் “கனவுகளில் வந்து கொஞ்சுகிற முகத்தைக் காணப் போகிற மகிழ்ச்சிஎனக்குள்ரசித்து […]

Read more

தாளடி

தாளடி, சீனிவாசன் நடராஜன், தேநீர் பதிப்பகம், விலை 230ரூ. நீரும் நெருப்பும் சம்பா, தாளடி, குறுவை என முப்போகம் விளைவது தஞ்சை மண். இங்கு 1960களின் இறுதியில் ஏற்பட்ட மாறுதல்கள், இடது சாரி இயக்கங்கள், திராவிட இயக்க எழுச்சி, விவசாயத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் ஆகியவற்றின் பின்னணியில் குறிப்பாக கீழத் தஞ்சையை முன்வைத்து தாளடி என்று இந்த நாவலை எழுதி இருக்கிறார் சீனிவாசன் நடராஜன். இப்பகுதியின் வாழ்வோடு தொடர்புடையவர் ஆசிரியர் என்பதால் வரிக்கு வரி நெல்வயலின் வாசமும், குளங்கள், ஆறுகள், செடிகொடிகள், மாட்டு வண்டிகள் ஆகியவற்றின் […]

Read more

அறுவகை இலக்கணச் சிறப்புகள்

அறுவகை இலக்கணச் சிறப்புகள், த.முத்தமிழ்,காவ்யா, விலைரூ.220. கால மாற்றங்களால் மொழி வழக்குகள் மாறும்போது இலக்கியங்களில் மட்டுமன்றி, இலக்கணங்களிலும் மாற்றுப்பார்வைகள் தோன்றி வருகின்றன. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐந்திலக்கணங்களுடன் புலமையிலக்கணத்தையும் தந்த, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் அறுவகை இலக்கண நுாலில் உள்ள மாறுபட்ட பார்வைகளை ஆய்ந்து விளக்கியுள்ளார் நுாலாசிரியர். எழுத்திலக்கணத்தின் உருவோசையியல்பில் அலகெழுத்து, கூட்டெழுத்து எனும் இரண்டை இணைத்து, குறிப்பெழுத்தை இலக்கணத்தில் சேர்த்து, பிற இலக்கணிகள் விரித்துக் கூறாத அலகுகள், எழுத்து வடிவங்கள், கூட்டெழுத்து வரி வடிவங்கள், எழுதும் முறைகள் படைத்திருப்பதை […]

Read more
1 115 116 117 118 119 505