அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள், அந்துமணி, தாமரை பிரதர்ஸ், பக். 312, விலை 280ரூ. நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தது, ‘தினமலர் – வாரமலர்’ அந்துமணியின், ‘கேள்வி – பதில்’ தொகுப்பு… இதோ புத்தகமாக வெளி வந்துவிட்டது. எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக வந்துள்ளது புத்தகம்! ‘நான் எழுதிய கருத்துக்கள், புத்தகத்தின், 312 பக்கங்களிலும் குவிந்து கிடக்கும் போது, எதற்கு என்னுரை, முன்னுரை எல்லாம்…’ என, அந்துமணி அவர் பாணியில் நேரடியாக களத்திற்கு வந்து விடுகிறார். எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், தன் அணிந்துரையில் குறிப்பிட்டது போல, 50 லட்சத்திற்கும் மேலான […]

Read more

கல்லிலே கலைவண்ணம்

கல்லிலே கலைவண்ணம், அதிசயக் கோவில் அங்கோர் வாட், அமுதன், தினத்தந்தி பதிப்பகம், பக்.272, விலை ரூ.150. கம்போடியா நாட்டுக்குச் சென்று ஆய்வு செய்து இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. கம்போடியா நாட்டில் உள்ள பல கோயில்களைப் பற்றி மிக விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது. கம்போடியா நாட்டு வரலாற்றையும், தமிழகத்துக்கும் கம்போடியாவுக்கும் இருந்த தொடர் புகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள முடிகிறது. கம்போடியா நாட்டின் மன்னராக பல்லவநாட்டில் இருந்து இடம் பெயர்ந்த ஒருவர் இருந்திருக்கிறார். கம்போடியா நாட்டின் சியம் ரீப் நகரில் இருக்கும் அங்கோர் வாட் கோயிலுக்கும் காஞ்சிபுரத்தில் […]

Read more

கல்வியா? செல்வமா?

கல்வியா? செல்வமா?, உதயை மு.வீரையன்; பாவை பப்ளிகேஷன்ஸ், பக்.160; விலை ரூ.125. நம்நாட்டின் கல்விமுறை குறித்து தினமணி உள்பட பல்வேறு இதழ்களில் 1996 முதல் 2017 வரை வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என்று நம் அரசியல் சட்டம் கூறினாலும் அவை இன்னும் எட்டப்படாத இலக்காகவே இருக்கிறது. “பணம் இருந்தால்தான் படிக்கவே முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. படிப்பு என்பதே பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தொழில் என்றே பெற்றோரும், மற்றோரும் எண்ணுகின்றனர். இந்தியக் கல்வித்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை […]

Read more

எழுதாப் பயணம்

எழுதாப் பயணம், லக்ஷ்மி பாலகிருஷ்ணன், கனி புக்ஸ், விலை 100ரூ. இந்த விமர்சனத்தைப் படிப்பவர் யாரும், ‘அச்சோ… இப்படி ஆகிடிச்சே…’ என, ‘உச்’ கொட்ட வேண்டாம். படித்த பின், ‘தேவைப்படுவோருக்கு பேருதவியாக இதைச் செய்வோம்’ என உறுதி பூண்டு, அத்தகையவர்களுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள் என, பகிரங்க அறிவிப்பு விடுகிறேன். இந்தப் புத்தகம், ‘ஆட்டிசம்’ பாதிப்புடன் இருக்கும் குழந்தையை வளர்ப்பது எப்படி என்பதைப் பற்றி விளக்குகிறது. ஆசிரியர், அத்தகைய குழந்தையை அணு அணுவாய் ஆராய்ந்து வளர்த்து வருபவர். ‘கழிவிறக்கமே வேண்டாம் எனக்கு… உங்கள் […]

Read more

இல்லுமினாட்டி

இல்லுமினாட்டி, குன்றில் குமார், அழகு பதிப்பகம், பக்.160, விலை 150ரூ. உலகம் முழுவதையும் ஒரே ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் எனும் ஒற்றை லட்சியத்தின் கீழ், 1776ம் ஆண்டு துவங்கப்பட்டு, உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களால் ரகசியமாகச் செயல்படுத்தப்படுவதாகக் கருதப்படும், ‘இல்லுமினாட்டி’ அமைப்பு பற்றிய விரிவான நுால். இல்லுமினாட்டி என்றால், ‘தெளிவூட்டுபவர்’ எனும் பொருள். உலக வங்கி மற்றும் ராணுவத் தலைமையகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும், உலகின் மக்கள் தொகையைக் குறைப்பதும், பஞ்சம், பட்டினி, வறுமை, யுத்தம், வியாதிகள் மூலமாக பேரழிவுகளை ஏற்படுத்துவது […]

Read more

சங்ககால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி

சங்ககால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி, முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக்.114, விலை 800ரூ. ஒருவரின் வாழ்க்கையில் சிறப்புத் தரவுகளை மணம் வீசும் மலர்களாக்கி தொடுத்து மகிழ் மாலையாக்கும் வித்தையை ஒருவர் கற்றிருந்தால் மட்டுமே, அந்தப் படைப்பு வரவேற்பைப் பெறும் என்ற கருத்தை, முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் ப.க.பொன்னுசாமி, தன் முன்னுரையில் கூறியிருப்பதை, இந்த தமிழ் கூறும் நல்லுலகம் அறிய, இந்த நுால் ஒரு சிறந்த உதாரணம். தமிழ் நாளிதழ், ‘தினமலர்’ எழுத்துச் சீர்திருத்தம். கணினியில் எழுத்துருவப் […]

Read more

பத்மநாபபுரம் அரண்மனை

பத்மநாபபுரம் அரண்மனை, எழில் ரத்னம், நிஜம் வெளியீடு, பக். 144, விலை 100ரூ. தொலை தொடர்பு வசதியில்லாத காலத்தில் இருபது அஞ்சல் அட்டைகள் மூலம், ‘பத்மநாபபுரம் அரண்மனை’ என்ற கடித இலக்கிய வரலாற்று ஆவணப் பனுவலை உயர்ந்த பரிணாமம் கொள்ளச் செய்த பெருமைக்குரியவர் ஆயன். இந்நுாலில், 64 மூலிகை மரங்களால் செய்யப்பட்ட அற்புதக் கட்டிலில் உறங்கிய மன்னருக்கு எந்த வகையில் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது என்பதை பக்கம் 13ல் சொல்லி இருப்பது, அந்த காலத்து வைத்திய முறைக்கு படிக்கல் எனலாம். – மாசிலா ராஜகுரு நன்றி: […]

Read more

மண்…மக்கள்…தெய்வங்கள்

மண்…மக்கள்…தெய்வங்கள், வெ.நீலகண்டன், விகடன் பிரசுரம், பக். 152, விலை 185ரூ. தமிழகத்தில் குல தெய்வ வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் குல தெய்வம் உண்டு. இந்த குல தெய்வங்கள், பெரும்பாலும் கிராம தேவதைகளாகத் தான் இருப்பர். கிராம தேவதைகளை வழிபடும் பலருக்கு, அவற்றின் வரலாறு தெரியாது; எதனால், வழிபடுகிறோம் என்றும் தெரியாது. அந்த குறையை போக்கும் வகையில், கிராம தேவதைகளான அய்யனார், கருப்பன்,மாடசாமி, மதுரை வீரன், பேச்சி பற்றி, ஆசிரியர் நீலகண்டன் எளிய தமிழில் சுவைபட எழுதியுள்ளார். இந்நுாலில், அய்யனார், கருப்பன் […]

Read more

ரமணரின் பார்வையில் நான் யார்?

ரமணரின் பார்வையில் “நான் யார்?, வேதகாலம் முதல் ரமணர் காலம் வரை…- அபிநவ ராஜகோபாலன், நர்மதா பதிப்பகம், பக்.280; விலை ரூ.175. அகங்காரம் (நான்), மமகாரம் (இது என்னுடையது) என்ற மனப்போக்கு வேத காலத்தில் நேர்மறைச் சிந்தனையாக முன்னெடுக்கப்பட்டு தனிப்பட்ட, சமுதாய வாழ்வியலில் மனிதன் உன்னத நிலையில் இருந்தான். வாழ்வில் மிகுந்த துயருற்று, தத்துவ விசாரத்தில் நாட்டம் கொண்டவர்களுக்கு மட்டுமே நான் யார்? என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்வி எழும்போதே, தேடலும் பயணமும் ஆரம்பமாகி இறுதியில் முக்தி எனும் விடை கிடைக்கிறது. நான் […]

Read more

தமிழ்ச் சிற்றிலக்கியங்கள்

தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் (ஆய்வுக் கட்டுரைகள், இரு தொகுதிகள்), தலைமைப் பதிப்பாசிரியர்: ப.முருகன்,  தமிழ்த்துறை, முதல் தொகுதி-பக்.520; ரூ.500; இரண்டாவது தொகுதி- பக்.496; ரூ.500. சென்னையில் இரு நாள்கள் நடந்த அனைத்துலக தமிழ்ச் சிற்றிலக்கிய மாநாட்டில் வாசிக்கப்பட்ட 140 ஆய்வுக் கட்டுரைகள் (தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உட்பட) இவ்விரு தொகுதிகளிலும் உள்ளன. இறைவன், அரசன், வள்ளல் முதலிய யாரேனும் ஒருவரை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு, பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கையில் சுருங்கியதாக அமைவது; அகப்பொருள் அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப்பற்றியதாகவும்; அறம், பொருள், […]

Read more
1 144 145 146 147 148 505