கடல் ஒரு நீலச்சொல்

கடல் ஒரு நீலச்சொல், மாலதி மைத்ரி, வெளியீடு: அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை: ரூ.100 முதுநீரை மூக்குத்தியாய் அணிந்த தென்முனைக் குமரி மன ஆழங்களை அகழ்ந்து சொற்களைத் துடுப்பாகி, பெண்ணாழியின் அரசியலை கரை சேர்க்கும் மொழிவெளிக்குள் கொந்தளிக்கும் நீர்மைக் கவிதைகளின் தொகுப்பு. நன்றி: இந்து தமிழ், 19/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030120.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தாயின் தாலாட்டு

தாயின் தாலாட்டு, அ.முத்துவேலன், அ.முத்துவேலன் வெளியீடு, விலை 90ரூ. மரபுக் கவிதைகளும் புதுக்கவிதைகளுமாக மொத்தம் 42 கவிதைகள் இடம் பெற்றுள்ள இந்த நூல், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல சிறிய புத்தகமாக இருந்தாலும் சீரிய முறையில் அமைந்து இருக்கிறது. இதழியல் துறையில் நீண்டகாலம் பணியாற்றியவர் என்பதால், தமிழ்த்தாய் வாழ்த்து, கடவுள் வணக்கத்திற்கு அடுத்தபடியாக எழுத்தாணியைப் போற்றும் அழகிய கவிதை படைத்து இருக்கிறார். வெளிநாடுகளில் இருந்து வந்து தமிழைப் போற்றி வளர்த்த அறிஞர்களைப் பாராட்டி இருக்கும் கவிஞர், கீழடி நாகரிகம், வைகை ஆற்றின் […]

Read more

அறுபத்து மூன்று நாயன்மார்கள்

அறுபத்து மூன்று நாயன்மார்கள், ம.அரங்கராசன், மணிவாசகர் பதிப்பகம், விலை 175ரூ. அநபாய சோழன் என்ற மன்னரிடம் முதல் அமைச்சராகப் பணியாற்றிய சேக்கிழார், சைவ சமயம் செழித்தோங்குவதற்காக இயற்றிய பெரிய புராணப் பாடல்களை அனைவரும் படித்து அறிந்துகொள்ளும் வகையில் எளிய உரை நடையில் இந்த நூலை ஆசிரியர் ஆக்கி இருக்கிறார். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் உள்ளிட்ட 63 நாயன்மார்கள் பற்றியும், 9 தொகை அடியார்கள் குறித்தும் கூறப்படும் வரலாற்றுத் தகவல்கள் சிறப்பாகத் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் அதே சமயம் […]

Read more

தமிழகத் தடங்கள்

தமிழகத் தடங்கள், மணா, அந்திமழை வெளியீடு, விலை 300ரூ. தமிழகத்தின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஏராளமான நினைவுச் சின்னங்களில், பல முறை சுட்டிக்காட்டப்பட்ட அம்சங்களைத் தவிர்த்து, பலரும் சற்றேறக்குறைய மறந்துவிட்ட – சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்று சம்பவங்களை இந்த நூல் நினைவுபடுத்தி இருக்கிறது. தென்னிந்தியாவின் முதல் தியேட்டர் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலக வளாகத்தில் இருக்கிறது என்பது போன்ற வியப்பான தகவல்கள் இதில் காணக்கிடக்கின்றன. வாஞ்சிநாதனால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆங்கிலேய கலெக்டர் ஆஷின் கல்லறை, ஆங்கிலேயப் படையில் பணியாற்றிய பின்னர் ஆங்கிலேயர்களால் […]

Read more

திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணம், வேணு சீனிவாசம், அழகு பதிப்பகம், விலை 380ரூ. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய, 64 திருவிளையாடல்களை எளிய உரைநடையில் எல்லாரும் படித்து இன்புறும் வகையில் எழுதி உள்ளார், ஆசிரியர். வேதாரண்யம் என்று இந்நாளில் சொல்லப்படும் திருமறைக்காட்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் கனவில் மதுரை மீனாட்சி அம்மனே தோன்றி, சிவபெருமானின் திருவிளையாடல்களை இனிய தமிழில் பாடுக என அருளிட, அவ்வாறே செய்து திருவாலவாய் நகரில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. சிவனின் முக்கண்களாகப் போற்றப்படுவன பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், கந்த புராணம் ஆகியனவாம். மதுரை காண்டம், […]

Read more

குறுக்கு வெட்டு

குறுக்கு வெட்டு, சிவகாமி, அணங்கு பெண்ணியப் பதிப்பகம், விலை 170ரூ. திருமண உறவு கடந்த காதல், சாகசமா துரோகமா அல்லது ஏமாற்றங்கள், புறக்கணிப்புகள், போதாமைகள், சலிப்புகள், திருப்தியின்மை, பழித்தீர்ப்பு, சவால்கள் போன்றவற்றின் புறவிளைவா? அது வாழ்வின் தென்றலா, புயலா? மரண விழைவா, உயிர்த்தல் விழைவா? உணர்வுக்கும் அறிவுக்குமான போராட்டத்தை உடலரசியல், பாலரசியல் ஆகிய இரு கத்திகளின் மீது மொழியை நடக்க விட்டிருக்கிறார் சிவகாமி. தீக்குச்சிக்கும் மருந்துப்பட்டைக்குமிடையில் உறைந்திருக்கும் அமைதியான நடிப்பை உரையாடல்களால் உரசி மூட்டுகிறது இந்நாவல். பேசப்படாத கதைக்களத்தைப் பெண் மொழியில் பேசுகிறது. நன்றி: […]

Read more

குக்கூவென

குக்கூவென, மு.முருகேஷ், அகநி, பக். 80, விலை 50ரூ. மூன்று வரியில் ஒரு, ‘அடடே’ போட வைக்கும் கவிதையே ஹைக்கூ. ஒரு பக்கம், ஒரு என, உள்ளங்கைக்குள் அடக்கும் வகையில், புதுமையான நூலை வெளியிட்டிருக்கிறார் மு.முருகேஷ். இவரின், ‘விரல் நுனியில் வானம், தோழமையுடன்’ உள்ளிட்ட ஹைக்கூ நூல்களைப் போலவே, இதுவும் கவனிக்கப்படும். நன்றி: தினமலர், 14/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சில கருத்துகள் சில சிந்தனைகள்

சில கருத்துகள் சில சிந்தனைகள், லட்சுமணப் பெருமாள், தடம் பதிப்பகம், பக். 216, விலை 200ரூ. அரசியல் கட்சிகளின் நுண்ணரசியல், சூழலியல் என, அவ்வப்போதைய சூழல்களைச் சார்ந்து, லட்சுமணபெருமாள், இணையதளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். இதில், ஹைட்ரோ கார்பன், லோக் ஆயுக்தாவின் மாநில உரிமை, முத்ரா வங்கி திட்டம் என, பலவற்றை புள்ளி விபரங்களுடன் பேசுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

பாம்பு இல்லாத பாம்பாட்டி

பாம்பு இல்லாத பாம்பாட்டி, ஸாய் விட்டேகர், அ.குமரேசன், புக்ஸ் பார் சில்ட்ரன், பக்.32, விலை 30ரூ. படிக்கத் தெரியாத வயதில் உள்ள குழந்தைகளுக்கு, கதை கேட்பது மிகவும் பிடித்தமானது. வாசிக்கத் தெரியும் போது, அவர்களை வசீகரிக்கக்கூடியது படக்கதைகள். அந்த வகையில், இந்த ஊர்வன பற்றிய காட்டின் கதை, அவர்களை கவரும். ஒற்றுமை உணர்வையும் வளர்க்கும். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மகிழம்பூ மணம்

மகிழம்பூ மணம், ஜயந்த் காய்கிணி, கே.நல்லதம்பி, காலச்சுவடு வெளியீடு, பக். 136, விலை 150ரூ. இந்திய மாநிலங்களுக்குள், நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியாக, யாளி அமைப்பின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இலக்கிய பங்களிப்பின் வழியாக இந்த நூல், கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணியை, இந்த நூலில் உள்ள, 11 சிறுகதைகளும் செய்யும், அவை, வாசகர்களின் வாசிப்பை விசாலப்படுத்தும்.   நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more
1 142 143 144 145 146 505