தொடரும் காஷ்மீர் யுத்தமும் இந்துத்துவ அரசியலும்

தொடரும் காஷ்மீர் யுத்தமும் இந்துத்துவ அரசியலும், கி.இலக்குவன், அலைகள் வெளியீட்டகம், விலை 140ரூ. இந்தியாவின் தலை போல அமைந்து, 70 ஆண்டுகளாகத் தீராத தலைவலியாக இருக்கும் காஷ்மீர் பிரச்சினை பற்றி, ஆதி முதல் தற்போது 370 – வது பிரிவு ரத்து செய்யப்பட்டது வரையில் நடைபெற்ற வரலாற்றை இந்த நூல் விளக்கமாகத் தருகிறது. முதல் நூற்றாண்டு முதல் அங்கு நடைபெற்ற படையெடுப்புகளும், 1846 -ம் ஆண்டு டோக்ரா மன்னர் குலாப் சிங்கிடம் 75 லட்சம் ரூபாய்க்கு காஷ்மீர் மாநிலம் ஆங்கிலேயர்களால் விற்கப்பட்டது என்ற வியப்பான […]

Read more

தினம் ஒரு சிந்தனை

தினம் ஒரு சிந்தனை, அரிமழம் ப.செல்லப்பா, ஜீவா பதிப்பகம், விலை 200ரூ. பல்வேறு தலைப்புகளில் சிந்தனையைத் தூண்டும் கருத்துக்களின் துணுக்குத் தோரணமாக இந்த நூல் விளங்குகிறது. இதில் இடம் பெற்றுள்ள 365 கருத்துக்களில் ஆன்மிக செய்திகள், வாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகள், பிரபலமானவர்களின் வாக்கு, உண்ணும் உணவில் உள்ள சிறப்பு, நவபாஷாணம் என்றால் என்ன என்பவை போன்ற ஏராளமான பயன் உள்ள தகவல்கள் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 4/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு, பேரறிஞர் அண்ணா, அர்ஜித் பதிப்பகம், விலை 110ரூ. தமிழகத்தின் முதல் அமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா எழுதிய சிறுகதைகளைத் தொகுப்புகளில் ஒன்றாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. பொங்கல் பரிசு என்ற தலைப்பு கொண்ட இந்தத் தொகுப்பில் அண்ணா எழுதிய 18 சிறுகதைகள் இடம்பெற்று இருக்கின்றன. ஒவ்வொரு கதையிலும் அண்ணாவின் சமூகக் கண்ணோட்டத்தைக் காண முடிகிறது. தவளையும் மனிதனும் என்ற கதை போன்ற சில கதைகள் இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்துவதாக அமைந்து இருக்கின்றன. அண்ணாவின் எளிய நடை, புத்தகத்தில் உள்ள அனைத்துக் […]

Read more

அக்பர் பீர்பல் கதைகள்

அக்பர் பீர்பல் கதைகள், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், ஒவ்வொரு நூலும் விலை 160ரூ மன்னர் அக்பரின் அரசையில் இருந்த பீர்பல், தனது சமயோஜித புத்தியால் தீர்வு கண்ட பல சம்பவங்கள், கதைகள் ரூபமாக பல ஆண்டுகளாக வழங்கி வருகின்றன. அந்தக் கதைகளில் 53 கதைகளைத் தேர்ந்தெடுத்து, சிறுவர்கள் முதல் அனைவரும் ரசித்துப் படிக்கும் வகையில் ஆசிரியர் தந்து இருக்கிறார். இந்த நூலின் ஆகிரியர், முல்லாவின் குறும்புக் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், நகைச்சுவைமன்னன் தெனாலிராமன் கதைகள், பரமார்த்த குரு கதைகள் ஆகிய நூல்களையும் […]

Read more

மணற்கேணி

மணற்கேணி, எச்.நாராயணசாமி(நானா), வானவில் புத்தக்களஞ்சியம், விலை 306ரூ. வித்தியாசமான அம்சங்களுடனும், மற்ற நூல்களில் இருந்து வேறுபட்டும் தயாராகியுள்ள இந்த நூல், பல விதமான மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தோரணம் போலக் காட்சி அளிக்கிறது. நூலாசிரியர் தான் கற்றரிந்த, தனது அனுபவத்தில் கிடைத்த மற்றும் தான் படித்த, பார்த்த பயனுள்ள தகவல்களைக் கேள்வி பதில் வடிவில் தந்து இருப்பது புதிய முயற்சி. வரலாறு, அறிவியல், காதல், காமம், முதுமை, தத்துவம், உளவியல், பத்திரிகை, மனதைத் தொட்ட பாடல்கள் போன்ற பல விஷயங்களை சுவைபடத் தொகுத்துத் தந்து […]

Read more

சங்கமி பெண்ணிய உரையாடல்கள்

சங்கமி பெண்ணிய உரையாடல்கள், ஊடறு றஞ்சி, புதிய மாதவி, காவ்யா வெளியீடு, விலை 400ரூ. இன்றைய சமுதாயத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னென்ன என்பது பிரபலமான பல பெண்களின் நேர்காணல் மூலம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஊடறு என்ற அமைப்பைச் சேர்ந்த றஞ்சி, இந்தியாவைச் சேர்ந்த புதிய மாதவி ஆகியோரால் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. பெண்கள் தாங்கள் எதிர்நோக்கி இருக்கும் சவால்களையும் மனக்குமுறல்களையும் இந்த நேர்காணல்களில் அப்பட்டமாகக் கொட்டி இருக்கிறார்கள். பெண்களை நுகர்வுப் பொருளாகச் சித்தரிக்கும் ஆண்கள், ஓரினச் சேர்க்கை, பெண்களின் மது […]

Read more

கேள்விநேரம்

கேள்விநேரம், ஆதி வள்ளியப்பன், இந்து தமிழ் திசை, விலை 110ரூ. இது பொது அறிவுக் கேள்வி பதில் புத்தகம் என்பதைத் தாண்டி, இந்தத் தகவல்களின் பின்னணியில் உள்ள சுவாரஸ்யமான அம்சங்களும் பதில்களில் விரிவாகத் தரப்பட்டுள்ளன. வெறும் தகவல்களாக மட்டும் அல்லாமல், அறிவை விரிவாக்கிக்கொள்ளவும் இந்தப் புத்தகம் உதவும். நன்றி: தமிழ் இந்து, 14/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கிளியோபாட்ரா

கிளியோபாட்ரா,  இரும்புப் பெண்மணி, எஸ்.எல்.வி.மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.304, விலை ரூ.288. எகிப்தின் மகாராணி கிளியோபாட்ரா என்பவர் ஓர் அழகுப் பதுமை என்னும் பொதுப் பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கிறது இந்நூல். எகிப்தின் மகாராணி கிளியோபாட்ரா என்பவர் ஓர் அழகுப் பதுமை என்னும் பொதுப் பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கிறது இந்நூல். கிளியோபாட்ரா அழகாகப் பிறந்தவர் என்பதைவிட தன்னைச் சுற்றிலும் ஆபத்துடன் பிறந்தவர் என்பதே பொருத்தம். 9 மொழிகள், மருத்துவம், கணிதம், வானியல் உள்ளிட்ட 6 துறைகள், அரசியல் சாமர்த்தியம், போர்த்திறன், அபாரத் துணிச்சல் ஆகியவற்றை […]

Read more

கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும்

கபிலரின் அருமையான குறிஞ்சிப் பாடல்களும் எளிமையான விளக்கங்களும், சி.விநாயகமூர்த்தி, மணிமேகலைப் பிரசுரம், பக்.268, விலை ரூ.200. கபிலர் பல இலக்கியங்களைக் பாடியிருந்தாலும், அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற இலக்கியம் குறிஞ்சிப் பாட்டுதான்! கபிலருக்கும் வள்ளல் பாரிக்குமான நட்பு, தலைவன்-தலைவியரின் காவியக் காதல், கபிலர் பாடிய-கபிலரைப் பாடிய மன்னர்கள், மன்னர்களை நல்லுரை கூறி நல்வழிப்படுத்திய கபிலரின் அறிவுத் திறன் முதலானவற்றுடன், பலவகையான உயிரினங்கள் மற்றும் வரலாற்றுத் தரவுகளையும் குறிஞ்சிப் பாட்டில் காணமுடிகிறது. அவற்றை இந்நூல் விரித்துரைக்கிறது. இயற்கை வருணனைகளையும், உவமைகளையும் தகுந்த இடங்களில் எடுத்துக்கூறி, […]

Read more

காதம்பரியம்

காதம்பரியம், அமர்நாத், வெல்லும் சொல் பக்.288, விலை ரூ.270. காதம்பரி என்ற பெயர் கொண்ட முன்னாள் தமிழ் நடிகையின் கதை. 22 வயதுக்குள் 20 படங்களில் நடித்து முடித்து இனி நடிப்பதில்லை என்ற முடிவுடன் அமெரிக்காவில் உள்ள சித்தப்பா வீட்டுக்குப் பயணமாகிறாள் கதையின் நாயகி. சித்தப்பாவின் வீட்டில் பிரேமசந்திரன் என்ற இளைஞனைச் சந்தித்துக் காதல் வயப்படுகிறாள். அவள் நடிகை என்பதைத் தெரியாது அவனும் விரும்புகிறான். சினிமாவை முற்றிலும் துறந்த அவள், மனைவி, தாய் என்ற புது கதாபாத்திரங்களை ஏற்கிறாள். துணைப் பேராசிரியரான பிரேமசந்திரன் அன்பும் […]

Read more
1 140 141 142 143 144 505