பூக்கூடை

பூக்கூடை,   படம் ஒன்று, கதைகள் முப்பத்தெட்டு, தொகுப்பாசிரியர்: பாலகணேஷ் , வாதினி, பக். 160, விலை: 160. ஓர் ஓவியத்துக்குப் பொருத்தமான சிறுகதை எழுதும் போட்டியில் பரிசு பெற்ற 38 கதைகளின் தொகுப்பு. 38 எழுத்தாளர்கள் தங்கள் கற்பனை வளத்தால் இந்நூலை சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்கள். நகரின் பரபரப்பான சாலையில் காரை ஓட்டும் இளம்பெண், காரின் மேற்கூரையில் கயிறால் கட்டப்பட்டிருக்கும் இளைஞன், இந்த விசித்திரக் காட்சியை வேடிக்கை பார்க்கும் பேருந்து பயணிகள், இருசக்கர வாகனத்தில் அமர்ந்த நிலையில் பார்வையிடும் தம்பதி ஆகியோர் மட்டுமே அடங்கிய ஓர் ஓவியம். […]

Read more

குறள் விருந்து கதை விருந்து

குறள் விருந்து கதை விருந்து, இரா.திருநாவுக்கரசு, குமரன் பதிப்பகம், பக்.232, விலை ரூ.200. திருக்குறளுக்கு நிறைய உரைகள் வெளிவந்திருக்கின்றன. திருக்குறளைப் படிக்கும் அனைவரின் மனதிலும் அது பதிந்துவிடும் என்று சொல்ல முடியாது. மருந்தின் கசப்பை நாக்கு ஏற்றுக் கொள்ள தேனைக் கலப்பது போல், நல்ல கருத்துகளை விதைக்க தேனான கதைகள் அவசியம் என நினைத்த நூலாசிரியர், திருக்குறளை ஒரு கதையுரையில் தந்தால் அது சிறக்கும் என்பதால், ஒரு குறளுக்கு ஒரு கதையை எழுதி விளக்கியிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட 108 திருக்குறள்களுக்கு 108 கதைகளை எழுதித் தொகுத்துத் தந்திருக்கிறார். […]

Read more

நெல்லை மறவர் கதைப்பாடல்கள்

நெல்லை மறவர் கதைப்பாடல்கள், சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 400 ரூ. முன்னோர்களை வழிபடும் தெய்வவழிபாடு, தமிழகத்தில் பன்னெடுங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதையொட்டி தொகுக்கப்பட்ட இந்த நூல், குறிப்பாகத் திருநெல்வேலிப் பகுதியில் இறந்தோர் வழிபாட்டில் பாடப்படும் பாடல்களை சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறது. நெல்லை மறவர் குலத்தைச் சேர்ந்த ஈனமுத்துப் பாண்டியன், மெச்சும் பெருமாள் பாண்டியன், சோனமுத்துப் பாண்டியன், சிவராமப் பாண்டியன், பாலம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பின்னர் அவர்களது வாழ்க்கை விவரம் தெய்வவழிபாட்டுப் பாடல்களாகப் பாடப்பட்டு இருக்கின்றன. இந்தப் பாடல்களையும் கதை மாந்தர்களின் வாழ்வில் நடைபெற்ற […]

Read more

கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை

கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை, ஓ.சோமசுந்தரம், இணையாசிரியர் டி.ஆர்.சுரேஷ், விலை 350ரூ. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநோய் மருத்துவமனை 1794ம் ஆண்டு முதல் இயங்கி வருவது தொடர்பான வரலாற்றுச் செய்திகளை இந்த நூல் தாங்கி வெளியாகி இருக்கிறது. கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவ நிலையத்தின் நிலைமை, மனி நேயபாவத்துடன் நோயாளிகளுக்கு அங்கு அளிப்படும் சிகிச்சை பற்றிய தகவல்கள், இதை நிர்வகித்த முன்னாள் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொருவரின் சிறப்பான செயல்பாடுகள், மாநாடுகள் மற்றும் மருத்துவ மேல் படிப்பு பயிற்சித் திட்டங்களுக்கு இந்த மருத்துவமனையின் பங்களிப்பு போன்ற […]

Read more

கில்கமெஷ் காவியம்

கில்கமெஷ் காவியம், தமிழில் ஸ்டாலின், சாகித்திய அகாதமி, விலை 190ரூ. தற்போதைய ஈராக் நாட்டில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மெசபொடோமியா நாகரிகத்தின் போது உருவான காவியம் என்றும், இதுவே உலகின் முதல் காவியம் என்றும் போற்றப்படும் கில்கமெஷ் காவியம், பல ஆண்டுகளாக களிமண் சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காவியத்தை எழுதியவர் யார் என்பது கண்டறியப்படவில்லை. கில்கமெஷ் காவியம், பல ஆண்டுகளாக களிமண் சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காவியத்தை எழுதியவர் யார் என்பது கண்டறியப்படவில்லை. கில்கமெஷ் அவரது […]

Read more

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு, பேராசிரியர் க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் உயிரினம் தோன்றியது எவ்வாறு என்பதை ஆய்வு நோக்கிலும், அதே சமயம் அறிவியல் துறையைச் சாராத சாமானியர்களும் தெரிந்துகொள்ளும் வகையிலும் இந்த நூல் தயாராகி இருக்கிறது. உயிரினம் தோன்றியது குறித்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய கருத்துக்கள் முதல் தற்காலத்தில் செயற்கையாக உயிரை மனிதன் படைத்தது வரையிலான தகவல்கள் எளிய நடையில் தரப்பட்டு இருக்கின்றன. பிக் பேங் எனப்படும் பெரு வெடிப்புக் கொள்கையை […]

Read more

ராக்கெட் சயின்ஸ்

ராக்கெட் சயின்ஸ் ஆங்கில நூல், டி.பிரவீன், ஓமேகா இன்டர்நேஷனல் ஸ்கூல், விலை 175ரூ. இப்புத்தகத்தை உருவாக்கியவர், 16 வயது இளைஞர். அறிவியலில், ‘ராக்கெட் சயின்ஸ்’ என்ற துறையை தன், 13ம் வயதில் இருந்து ஆவலாகக் கற்கிறார். அதைவிட, ‘நியூயார்க் அகாடமி ஆப் சயின்சஸ்’ அமைப்பின் இளைய உறுப்பினர். எழுத்தாளர், நடிகர் என்ற பன்முக பாங்கு உடையவர். அதிக கணக்கியல், மற்ற அறிவியல் துறை முதிர்ச்சி இருந்தால் தான், ‘ராக்கெட் தத்துவத்தை’ அறிய முடியும் என்பது தவறு. எளிய ஆங்கிலத்தில் இதை உணரலாம் என்பதை இந்த […]

Read more

சத்சங்கம்

சத்சங்கம், வெ.இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 160, விலை 150ரூ. அறிவு மட்டுமே ஒருவரை மேன்மையானவர் ஆக்கி விட முடியுமா? முடியாது என்கிறார் ஆசிரியர். மெத்த படித்தவராக, உலகே வியக்கும் தலைவராக ஒருவர் திகழ்ந்தாலும், இவ்வுலகில் யாராவது ஒருவருக்குக் கூட அவர் பகைவராகத் தென்பட்டால் அல்லது நடந்து கொண்டால், அவர் மேன்மையானவர் என்ற சொல்லுக்கு உகந்தவர் அல்ல. கோபம், அகந்தை, சோம்பல், வெறுப்பு, பிறழ்ந்து பேசுதல் ஆகியவை மனித இயல்பு என கருதினாலும், அவை தான் ஒருவரை பண்பட அல்லது மேன்மையடையச் […]

Read more

தமிழ்வாணனின் மர்மநாவல்கள் பாகம் 3

தமிழ்வாணனின் மர்மநாவல்கள் பாகம் 3, தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலை 650ரூ. தற்கால துப்பறியும் நாவலாசிரியர்களுக்கு முன்னோடியாகத் துப்பறியும் நாவல்களில் ஒரு புதுமையையும், விறுவிறுப்பான நடையையும் புகுத்தி ஏராளமான நாவல்களைப் படைத்த பெருமை. தமிழ்வாணனுக்கே உண்டு. அதிலும், ‘சங்கர்லால்’ என்ற பெயர் அவர் மூலமே பிரபலமானது. இந்நுாலில், ‘கடலில் மர்மம், சிம்லாவில் கண்ட அழகி, இருள், கைதி நம்பர் 811’ ஆகிய நான்கு வித்தியாசமான மர்மக் கதைகள் உள்ளன. கப்பலில் கடத்தப்பட்ட தங்கக் கட்டிகளைக் கண்டுபிடிக்கும் துப்பறியும் போலீஸ் சுந்தரேசன் மூலம் கப்பல் பற்றிய […]

Read more

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள்

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 164, விலை 170ரூ. இந்திய அருளாளர்கள் அதுவும் கிறிஸ்தவ அருளாளர்கள் ஐவரைப் பற்றிக் கூறுவதே இந்நுால். இந்த ஐவரில் மூவர் பெண்மணிகள், ஐவரில் மூவர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள். எஞ்சிய இருவர் அன்னிய மண்ணில் பிறந்து, இந்திய மண்ணில் உயிர் துறந்தவர்கள். மக்களின் தந்தை லெ.வேவை முன்வைத்து நுால் துவங்குகிறது. இவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்து, இன்றைய ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாளைக் கழித்தவர். ஏழைகளின் பங்காளன், இவர் ஆன்மிகப் பணியோடு […]

Read more
1 155 156 157 158 159 505