இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள்

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள், மதுரை இளங்கவின், காவ்யா, பக். 164, விலை 170ரூ. இந்திய அருளாளர்கள் அதுவும் கிறிஸ்தவ அருளாளர்கள் ஐவரைப் பற்றிக் கூறுவதே இந்நுால். இந்த ஐவரில் மூவர் பெண்மணிகள், ஐவரில் மூவர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள். எஞ்சிய இருவர் அன்னிய மண்ணில் பிறந்து, இந்திய மண்ணில் உயிர் துறந்தவர்கள். மக்களின் தந்தை லெ.வேவை முன்வைத்து நுால் துவங்குகிறது. இவர் பிரான்ஸ் நாட்டில் பிறந்து, இன்றைய ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்களுக்காகத் தன் வாழ்நாளைக் கழித்தவர். ஏழைகளின் பங்காளன், இவர் ஆன்மிகப் பணியோடு […]

Read more

இவர்களும் நமக்குள்ளே இருக்கிறார்கள்

இவர்களும் நமக்குள்ளே இருக்கிறார்கள், என்.அனுஷா, முல்லை பதிப்பகம், பக். 166, விலை 150ரூ. முப்பது சிறுகதைகளின் தொகுப்பே இந்நுால். கதையின் மாந்தர்கள் நமக்குள்ளே, நாம் பார்க்கும் மனிதர்கள் தான் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது நுாலின் தலைப்பு. வெவ்வேறு விதமான பல மனிதர்களை அறிமுகம் செய்கின்றன இக்கதைகள். ‘முதல் கவிதை’ எனும் முதல் கதையானது, பிரிந்த காதலர்களின் திடீர் சந்திப்பின் போது நிகழும் ஒரு மனப்போராட்டத்தை எடுத்துரைக்கிறது. யாயும் யாயும்… எனும் இலக்கிய வரிகளைத் தன் கதைக்குத் தக்க கவிதையாக்குகிறார், ஆசிரியர். ‘புரமோஷன்’ கதையில், டேபிள் […]

Read more

சயின்ஸ் விக்னெட்ஸ்

சயின்ஸ் விக்னெட்ஸ், ஜந்தர் மந்தர், சயின்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.110 சிறுவயதில் இருந்தே அறிவியலில் ஆர்வத்தைத் தூண்டும் நோக்கத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ‘துளிர்’ என்ற மாத இதழின் மூலம் 1987முதல் தமிழகச் சிறார்களுக்கு பெரும் சேவையாற்றிவருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஆங்கிலம் வழி பயிலும் மாணவர்களையும் கணக்கில்கொண்டு 1993-ல் ‘ஜந்தர் மந்தர்’ என்ற ஆங்கில மாத இதழும் வெளிவரத் தொடங்கியது. அவ்விதழின் வெள்ளிவிழாவை ஒட்டி வெளியாகியுள்ள இச்சிறப்பு மலர் பொது அறிவு கேள்வி-பதில், வேதியியல், புவியியல், வானியல் என அறிவியலின் பல்வேறு புதிர்களை அவிழ்க்கும் […]

Read more

தென் இந்திய வரலாறு

தென் இந்திய வரலாறு, கே ஏ நீலகண்ட சாஸ்திரி, ஜீவா பதிப்பகம், விலை ரூ. 500. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி வரை தமிழகத்தில் நடைபெற்ற அத்தனை வரலாற்று நிகழ்வுகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன, தமிழகத்தின் புவியியல் அமைப்பு, பூர்வகுடி மக்களின் கலாச்சாரம், மௌரியப் பேரரசு, சாதவாகனர்களின் ஆட்சி,  பல்லவர், பாண்டியர் ஆகிய மூன்று அரசுக்கு இடையே நடைபெற்ற மோதல், பாமணி அரசர்கள், விஜயநகரப் பேரரசின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி ஆகியவை மிக விரிவாக இந்நூலில் தரப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட […]

Read more

லக்கி லூக்கை சுட்டது யார்?

லக்கி லூக்கை சுட்டது யார்?, ஐம்போ காமிக்ஸ், பிரகாஷ் பப்ளிஷர்ஸ், விலை 100ரூ. துப்பாக்கி வெடிக்கும் ஓசை, வீழ்ந்து கிடக்கும் லக்கி லூக் என்று புதிய கோணத்தில் தொடங்கி கொலையாளி யார்? காரணம் என்ன? என்ற ப்ளாஷ்பேக்கில் நகரும் கதை. அப்பாவுக்கும் மகன்களுக்கும் இடையே நடக்கும் கொலைவெறி கோல்ட் வேட்டை அது மக்களிடையே பரவி நடக்கும் கரகர சண்டைகள் என்று கதையும் படங்களும் ‘ஜிவ்’வுகின்றன. உச்சக்கட்டத்தில் லக்கிக்கு உயிர் பிழைக்கும் லக் இருந்ததா, இல்லையா? சுட்டது யார்? என்பது யூகிக்க முடியாத சஸ்பென்ஸ், சிரியஸ் […]

Read more

ஒரு விரல் புரட்சி

ஒரு விரல் புரட்சி, அருணன், வசந்தம் வெளியீட்டகம், விலை 150ரூ. ஒற்றைவிரலில் ஒரு துளி மையால் கறைப்படுத்திக் கொண்டு தேர்ந்தெடுத்த நாட்டின் கறையைப் போக்கக்கூடிய கறையில்லா அரசியல் வாதியைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படுவதுதான் தேர்தல். ஆனால், ஜனநாயக நாட்டில் தேர்தலின் நோக்கம் சரியாக நடக்கிறதா? சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரையான தேர்தல் நிகழ்வுகள், வெற்றிக்காக கட்சிகள் வகுத்த வியூகங்கள், அதன் விளைவுகள் என்று சுமார் ஐம்பது ஆண்டுகால இந்திய, தமிழக தேர்தல் குறித்து அலசி ஆய்ந்து எழுதப்பட்ட வரலாறு, ஓட்டுப்போடும் பொது ஜனம் முதல் […]

Read more

அண்டை வீடு

அண்டை வீடு – பயண இலக்கியம், சுப்ரபாரதி மணியன், வெளியீடு: காவ்யா, விலை ரூ.110 பின்னலாடை உற்பத்தியில் திருப்பூருக்குப் போட்டியாக விளங்கும் வங்கதேசத்திற்கு, மேம்பட்டுள்ள பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிலையை ஆய்வு செய்வதற்காக, சென்ற குழுவில் சுப்ர பாரதி மணியன் தனக்கேற்பட்ட வங்கதேச அனுபவங்களை இதில் பகிர்ந்துள்ளார். பின்னலாடை பற்றிய ஆய்வை விட பங்களாதேஷ் எவ்வெவ் வகைகளில் மிகவும் சரிந்து சீர்கேடு அடைந்துள்ளது என்பதை பெரும்பாலான கட்டுரைகளில் விவரித்துள்ளார். நில நடுக்கங்கள், வங்கதேச விடுதலைப் போர்க் குற்றவாளிகள், மோசமான தொழில் என்று அழைக்கப்படும், ‘கப்பல் […]

Read more

எம்.ஜி.ஆர். ஒரு ஜீவ நதி

எம்.ஜி.ஆர். ஒரு ஜீவ நதி, சே ராஜேஸ்வரி வெளியீடு, சந்திரோதயம் பதிப்பகம்,விலை ரூ 200 புரட்சித் தலைவர் எம் ஜி ஆரை வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்துக் காட்டும் நூல்களில் இந்தப் புத்தகம் சிறப்பான இடத்தைப் பிடித்து இருக்கிறது. பெண்கள் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த அபரிதமான மதிப்பு பற்றிய பல செய்திகள் இந்த நூலில் காணப்படுகின்றன. பெண்களுடன் பேசுவதற்கு எம்ஜிஆர் எந்த அளவு கூச்சப் படுவார் என்பது பல சம்பவ சான்றுகளுடன் தரப்பட்டிருக்கின்றன. அதேபோல் எம்ஜிஆர் நடித்த படங்களில் அண்ணன் தங்கை பாசம் எந்த […]

Read more

சங்கீத நினைவலைகள்

சங்கீத நினைவலைகள், வாதூலன், ஜெரல் பப்ளிஷர்ஸ், பக். 220, விலை 140ரூ. ஓய்வு பெற வங்கி அதிகாரியான இந்நூலாசிரியர், சிறுகதைகள், நாடகம், பேட்டிகள், சமூகப் பிரச்னைகள் குறித்த கட்டுரைகள் என்று பல பத்திரிகைகளிலும் எழுதியுள்ளதோடு, அவற்றை தொகுத்து பல நூல்களையும் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இசையை பற்றியும், இசைக்கலைஞர்களைப் பற்றியும் இவர் எழுதிய இரண்டாவது நூல் இது. கர்நாடக இசையில் ஆயிரக்கணக்கான ராகங்கள் உள்ளன என்றும், அவற்றை எல்லாம் முழுமையாக அறியும் இசை ஞானம் தனக்கு இல்லை என்றும் எழுதியுள்ளது எப்படி என்று எண்ணத் […]

Read more

சாரணர் இயக்கம் கலைக்களஞ்சியம்

சாரணர் இயக்கம் கலைக்களஞ்சியம், கோ பெரியண்ணன், வனிதா பதிப்பகம், விலை ரூ. 150. ஒழுக்கத்துடன் வாழ்வது, விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்றவற்றைக் கற்றுத் தரும் சாரணர் இயக்கம் பற்றிய முழு விவரத்தை தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. சாரணர் இயக்கத்தின் சிறப்பு சின்னங்களை பெறும் முறை, உற்று நோக்கும் பயிற்சி முதலுதவி சிகிச்சை குழுவுடன் கலந்து பணி செய்தல், செய்கை பேச்சு யோகாசனம் போன்ற பல அம்சங்கள் படங்களுடன் விளக்கிக் கூறப்பட்ட இருக்கின்றன. இந்தியாவில் சாரணர் இயக்கம் முதன் முதலில் எவ்வாறு […]

Read more
1 157 158 159 160 161 505