இலக்கியத்தில் தேவதாசிகள்

இலக்கியத்தில் தேவதாசிகள், முருகேசன், சங்கர் பதிப்பகம், விலை ரூ.165. சிவன் தனது தலை முடியில் உள்ள ஆதிசேடனை நடனமாட சொன்னபோது ஆதிசேடன் தலையிலிருந்து வந்த ஐந்து பேரில் முதலில் வந்தவர்கள் தாசிகள் என்ற தகவலைத் தரும் இந்த நூல் தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இருந்த கணிகையர், நீதிநூல் காலத்து விரைவிலன் மகளிர், நாயக்கர் காலத்து ஆடல் மகளிர் ஆகியோரின் ஒன்றுபட்ட இனம்தான் தேவதாசிகளாக உருமாற்றம் பெற்றன என்ற வரலாற்றுச் செய்தியையும் பதிவு செய்திருக்கிறது. பக்தி இலக்கியங்களிலும் திரை தமிழிலும் தேவதாசிகள் எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறார்கள் […]

Read more

காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேங்கள்

காஞ்சி மகா ஸ்வாமிகளின் உபதேங்கள், ஸ்ரீதர் சாமா, விருட்சம் வெளியீடு, விலை 90ரூ. காஞ்சி மகா பெரியவரின் கருணை மொழிகளையும் பக்தர்கள் வாழ்வில் அவர் நடத்திய அற்புதங்களையும் சொல்லும் புத்தகம். பலருக்கும் தெரிந்த, தெரியாத விஷயங்களின் தொகுப்பு. படிக்கப் படிக்க சிலிர்க்கிறது. பண்பும் பக்தியும் மனதுக்குள் மலர்கிறது. நன்றி : குமுதம், 25/12/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உலகவர் போற்றும் முத்தமிழ்

உலகவர் போற்றும் முத்தமிழ், தொகுப்பாசிரியர் மு கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை ரூ. 500 இயல் இசை நாடகம் ஆகிய மூன்று வகை தமிழும் எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதை அறிந்துகொள்ள உதவும் ஆய்வு நூலாக இந்நூல் காணப்படுகிறது. மூவகை தமிழின் வளர்ச்சி தொடர்பாக அனைத்துலக அளவில் திருச்சியில் நடந்த முத்தமிழ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட பல அறிஞர்களின் கட்டுரைகள் தொகுப்பு இந்த நூல் இடம் பெற்றிருக்கிறது. தமிழின் பல வகையான நாடகங்கள் கூத்துகள் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் ஆடல் கலை சங்க காலம் முதல் […]

Read more

பழைய சோறு

பழைய சோறு, கோமல் அன்பரசன், தினத்தந்தி பதிப்பகம், விலை 70ரூ. புதிய கோணம் புதிய தகவல்களுடன் எப்போதும் சுவாரஸ்யம் நிறைந்திருக்கும் கோமல் அன்பரசன் எழுத்தில் பழைய சோறு நூல் உருவாகி இருக்கிறது. பழைய சோறு உணவு என்பதை தாண்டி ஆண்டாண்டு காலமாக நம் வாழ்வியலோடு கலந்த கலாச்சார குறியீடு. இத்தகைய பழைய சோற்றால் உடலுக்கும் மனசுக்கும் கிடைக்கும் நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றையெல்லாம் தன் சொக்கவைக்கும் நடையில் கவளம் கவளமாக தாயன்போடு நம் கைகளில் தருகிறார்கள். அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் எழுதப் பட்டிருப்பதால் படிப்பவருக்கு பழைய-சோறு […]

Read more

மேதையையும் பேதையாக்கும் போதை

மேதையையும் பேதையாக்கும் போதை, முளுங்குழி இலாசர், குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம், விலை ரூ.130 மது குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை இந்த நூல் அழகாக படம்பிடித்து காட்டி இருக்கிறது.  உலகின் மிகப்பெரிய தலைவர்களாக இருந்த அலக்சாண்டர், ஸ்டாலின், சர்ச்சில் மற்றும் சாதனைகளை பல புரிந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் தமிழ் பட கலைஞர்கள் ஆகியவர்கள் மது போதையால் எவ்வாறு சீரழிந்து என்ற விவரம் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஏலகிரி அருகே உள்ள மாடப்பள்ளி மடப்பட்டு கிராமத்தில் மட்டும் குடிப்பழக்கத்துக்கு பலியான ஆண்களால் 200 பேர் இளம் விதவைகள் ஆனார்கள் […]

Read more

ரஜினிகாந்த் எனும் காந்தம்

ரஜினிகாந்த் எனும் காந்தம், ஆசிரியர் ஸ்ரீநிதி ஸ்ரீனிவாசன், மணிமேகலை பிரசுரம், விலை 50 ரூ. சாதாரண நடிகராக திரைப்படத் துறையில் நுழைந்து குறுகிய காலத்தில் சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்படும் அளவுக்கு உயர்ந்த ரஜினிகாந்த் பற்றி சுருக்கமாக அதே சமயம் எதுவும் விட்டுப் போகாத வகையில் எல்லா விவரங்களும் இந்த நூலில் தரப்பட்டிருக்கின்றன. அபூர்வராகங்கள் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான லிங்கா படம் வரையும் அவர் நடித்த படங்கள் அத்தனையும் வரிசைக்கிரமமாக அதற்கு உரிய படக்காட்சிகளுடனும் ஒவ்வொரு படத்திலும் ரஜினிகாந்த் ஏற்று நடித்த கதாபாத்திரம் பற்றிய […]

Read more

சிவாஜியின் சிறப்பு வாய்ந்த கதாபாத்திரங்கள்

சிவாஜியின் சிறப்பு வாய்ந்த கதாபாத்திரங்கள், தொகுப்பு ஆசிரியர் கோவை சுந்தரம், விலை ரூ. 50 நடிகர் திலகம் என்று கொண்டாடப்பட்ட சிவாஜிகணேசன் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனப்படுவது உண்டு. அவற்றில் குறிப்பாக வாழ்ந்து மறைந்த உயர்ந்த மனிதர்களான வ.உ.சி., கட்டபொம்மன், பாரதியார், ராஜராஜசோழன் உள்பட பலரது கதாபாத்திரங்களில் சிவாஜி நடித்ததன் மூலம் அந்தத் தலைவர்களின் சிறப்பை மக்கள் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது என்பதை இந்த நூல் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறது. இவற்றுடன் சிவன், திருமால், கர்ணன், பரதன் ஆகிய இடங்கள் உள்பட […]

Read more

நீ நதி போல ஓடிக்கொண்டிரு

நீ நதி போல ஓடிக்கொண்டிரு, பாரதி பாஸ்கர், கவிதா, விலை 100ரூ. ‘கயமை’ என்ற கட்டுரையில், ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்’ என்று சீறுகிறார். ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இந்தியாவின் முதல் பெண் மருத்துவர். அவர் மருத்துவக் கல்லுாரியில் சேர்ந்தபோது, இவர் மட்டுமே பெண் என்பதால், உடன் படிக்கும் ஆண் மாணவர்களின் கவனம் கலையும்; மனம் கெட்டு விடும். அதனால், முத்துலட்சுமியை கல்லுாரியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று மாணவர்களின் பெற்றோர் மனு கொடுத்து இருக்கின்றனர். அப்போது டீனாக இருந்த ஐரோப்பியர், […]

Read more

முல்லாவின் குறும்புக் கதைகள்

முல்லாவின் குறும்புக் கதைகள், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், பக். 135, விலை 160ரூ. அறிவுரை மற்றும் நீதிகள் அடங்கிய முல்லாவின் கதைகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கப் பெற்று, கதைக் களஞ்சியங்களில் விருந்தாகவும், சாலச் சிறந்த கருத்துள்ளவையாகவும் இன்றளவும் போற்றப்பட்டு வருகின்றன. ஆணவம் கொண்டுள்ளோரை மனம் திருந்தச் செய்வதும், பேராசை கொண்டோருக்கு நல்லதொரு புத்தியை புகட்டுவதுமாக பல்வேறு கோணங்களில் அமைந்துள்ள முல்லாவின் கதைகள், அனைவரும் ரசிக்கும் வண்ணம் படைக்கப்பட்டுள்ள அற்புத நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை! – மாசிலா ராஜகுரு […]

Read more

சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா, ஆசிரியர் : எல்.முருகராஜ், வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.120 பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புதிதாக மாலை போட்டு, விரதமிருந்து அய்யப்பனை காணத் தயாராகியிருப்பர். இவர்களுக்கு எல்லாம் சபரிமலை அய்யப்பன் கோவில் பற்றி அவர்களது குருசாமி நிறைய சொல்லியிருந்தாலும், அதையும் தாண்டி மனதில் பல சந்தேகம் இருக்கும். எல்.முருகராஜ் ஒரு புகைப்படக் கலைஞர் என்பதால், புத்தகம் முழுவதும் பல வித்தியாசமான வண்ணப் படங்கள் பொக்கிஷம் போல நிறைந்து உள்ளன. வரும், 2020 மகர விளக்கு தரிசனம் வரை என்ன […]

Read more
1 158 159 160 161 162 505