தொடர்கதைகளும் முற்றும்

தொடர்கதைகளும் முற்றும், வெ.ஆத்மநாதன், மணிமேகலை பிரசுரம், பக். 160, விலை 80ரூ. இந்நுாலில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் அனைத்தும் அருமை. இதில் வரும் கதாபாத்திரங்கள் பலவற்றை, நாம் அன்றாட வாழ்வில் சந்தித்துள்ளோம். இந்த புத்தகத்தை படித்து முடித்தவுடன், புத்தகம் படித்த உணர்வு ஏற்படவில்லை. மாறாக, நமக்கு தெரிந்த நபர்களுடன் பேசிக் கொண்டிருந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. அதிலும், புத்தகத்தின் தலைப்பில் எழுதப்பட்டுள்ள கதையில் வரும் மீனாட்சி கதாபாத்திரம், நெஞ்சில் நிழலாடுவதாக அமைந்துள்ளது. அனைவராலும் விரும்பி படிக்கும் எளிய நுால் என்ற பாராட்டிற்குரியது. – ச.சுப்பு […]

Read more

ஸ்ரீ ஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி

ஸ்ரீ ஆதிசங்கரர் நிறுவிய ஆதிமடம் காஞ்சி, அல்லூர் வெங்கட்டராமய்யர், ஆனந்த நிலையம், பக். 165, விலை 200ரூ. சோதிடத்தில் தேர்ந்த ஆசிரியர் காஞ்சி மடத்தின் பெருமைகளை நுாலாக தொகுத்திருக்கிறார். காஞ்சி மகாபெரியவரின் ஆசி பெற்ற இவர் அம்மடத்தின் பரமபக்தன் என்பதில் பெருமை கொண்டவர். தொண்டைநாட்டின் புகழ்பெற்ற காஞ்சி, இந்திய திருநாட்டின் தெய்வீக நகரங்கள் ஏழினுள் ஒன்று என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இங்கு ஆதிசங்கர மகான் வந்தார் என்பதும் வரலாறு. ஆனால் அவர், ‘சனாதன மதம் ’என்ற தத்துவத்தை தன் அத்வைத கோட்பாடுகளால் நிறைவேற்றிய தெய்வீக […]

Read more

தமிழா தமிழ் படி

தமிழா தமிழ் படி, கோகிலா தங்கசாமி, ஆக்டீவ் தமிழ் காம், பக். 80, விலை 120ரூ. தமிழைக் கற்பித்தலில் புதிய அணுகுமுறை தேவை. அதைக் குழந்தைப் பருவ கல்வியில் இருந்து துவங்க வலியுறுத்தும் முதல் நுால் இது. வாசிப்பை சொற்களில் சொல்லித் தர வலியுறுத்தும் ஆசிரியர், இருவர் இருவராக கைதட்டியபடி சொற்களை உரக்கக் கூறி வாசிக்கத் துாண்டும் வகையில் வண்ணப்படங்களுடன் வெளியிட்ட முறை புதிய உத்தியாகும். மூன்று வயது முதல், 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உதவும் இப்புத்தகம் ஆரம்பப் பள்ளிகளுக்கு நிச்சயம் […]

Read more

எட்டுத்தொகை அகநூல்களில் தூது மரபு

எட்டுத்தொகை அகநூல்களில் தூது மரபு, இரா.செங்கோட்டுவேல், காவ்யா, பக். 112, விலை120ரூ. தன் கருத்தை மற்றொருவருக்கு நேரிடையாக கூறாமல், வேறொருவர் மூலமாக கூறச் செய்தலே துாது என்று அழைக்கப் பெறும். காடுகளில் சுற்றித் திரிந்த மனிதன் நாகரிக வளர்ச்சியுற்று குழு வாழ்க்கைக்கு வந்த பின் நாடு, நகர் என பண்பாட்டில் சிறப்புற்ற காலத்தில் துாது என்பது முறைமைப் படுத்தப்பட்டு சிறப்பான நிர்வாக முறையை தமிழக மக்கள் அறிந்திருந்தனர் என்பதற்கு, இலக்கியங்களில் காணக்கிடக்கும் துாது பொருண்மைகளும், துாது இலக்கியங்களும் சான்றாக விளங்குகின்றன. கோப்பெரும் சோழனிடம் பிசிராந்தையர் […]

Read more

கற்றது விசில் அளவு

கற்றது விசில் அளவு, டாக்டர் ஆர். பாண்டியராஜன், கற்பகம் புத்தகாலயம், பக். 128, விலை 100ரூ. இந்நுால், பாண்டியராஜன் நடிகராகவும், இயக்குனராகவும் மலர்ந்ததை சொல்லும் சுயசரிதை. ஆரம்ப அத்தியாயங்கள் சிலவற்றில் தன் குடும்பத்தினர் வறுமையில் வாடியதை உருக்கமாகச் குறிப்பிடுகிறார் பாண்டியராஜன். சைதாப்பேட்டையில், ஒரு எளிய குடும்பத்தில், பேருந்து ஓட்டுனரின் மகனாக பிறந்தவர், பாண்டியராஜன். சைதாப்பேட்டை, மாதிரி உயர்நிலைப் பள்ளியில் படித்த போது, அவர் என்.சி.சி.,யில் சேர்ந்து பயிற்சி பெற்றார். ஒரு ஆண்டு, என்.சி.சி., கேம்ப், சைதையில் அவர்கள் பள்ளிக்கூட வளாகத்திலேயே நடைபெற்றது. கேம்ப் கலை […]

Read more

இரக்கம் கொள்வோம் விட்டுக் கொடுப்போம்

இரக்கம் கொள்வோம் விட்டுக் கொடுப்போம், முனைவர் மா.ராமச்சந்திரன், மணிமேகலை பிரசுரம், பக். 118, விலை 130ரூ. ‘சீர் சுமக்கும் சிறகுகள்’ என்ற தலைப்பில், மாத இதழில் வெளியான கட்டுரைகளைத் தொகுத்து, ‘இரக்கம் கொள்வோம் விட்டுக் கொடுப்போம்’ என்ற தலைப்பில் வந்திருக்கிறது புத்தகம். மனம் பண்படுவதற்கு வழிவகை செய்யும் முறையில், 48 உள்தலைப்புகளில் அடுக்கப்பட்டிருக்கிறது கட்டுரைகள். ‘வாழ்க்கை நெறிக் கல்வி’ என்ற தலைப்பில், வகுப்பில் மாணவர்களுக்கு நன்னெறி, தன்னம்பிக்கை ஊட்டும் வகையிலான உயர் எண்ணங்களைப் பேசுவதற்காக சேகரித்த சிறு சிறு குறிப்புகளை சற்று விரிவாக்கி, கட்டுரையாக்கிய […]

Read more

குழந்தைப் பருவத்து நினைவுகள்

குழந்தைப் பருவத்து நினைவுகள், தெ.வி.விஜயகுமார், சங்கமித்ரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளை, பக். 113. மனிதனின் வாழ்நாளில் குழந்தைப் பருவம் பலருக்கு வரமாகவும், பலருக்கு சாபமாகவும் அமைந்து விடுகிறது. இந்த வேறுபாட்டிற்கு பெரும்பாலும் முதன்மையான காரணம் பொருளாதார பலமும், பலவீனமுமே. பொருளில்லார்க்கு இவ்வுலகு முற்றிலுமாக இல்லை என்பதை உணர்ந்து உழைத்து மீண்டெழுந்தவர் பலர்; எழாது வீழ்ந்தோரும் பலர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து மீண்டெழும் ஒரு சாமானியரின் அல்லல் மிக்க இளமைக் காலத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நுால். போதுமான வருவாய் இல்லாத நோயாளித் […]

Read more

யார் தமிழர்?

யார் தமிழர்?, ஆர்.பி.எஸ்.மணியன், வர்ஷன் பிரசுரம், விலை 140ரூ. ஆர்யமாம் திராவிடமாம் அத்தனையும் புளுகே’ என துவங்கி, ‘பாரதி பார்வையில் பிராமணர்கள்’ ஈறாக, 13 கட்டுரைகள் பெரும்பாலும் திராவிட இயக்க எதிர்ப்புக் கருத்துக்களை உள்ளடக்கியவையாகும். கடந்த, 1965ல் காங்கிரசை வீழ்த்த ராஜாஜி தான் ஹிந்தியை எதிர்ப்பதாக நாடகம் ஆடினார் -– பக்., 56. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதல் தேதியை, ராஜ்யோத்சவ நாளாக ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் கொண்டாடி வருகின்றன. ஆனால், தமிழக அரசு கொண்டாடவில்லை – பக்., 60. இப்படி […]

Read more

ஓட்டைக் குடிசை

ஓட்டைக் குடிசை, வித்யாசாகர், முகில் பதிப்பகம், விலை 120ரூ. தமிழ் வாசக உள்ளங்களை தன் பேனா முனையால் தன்வசப்படுத்திக் கொண்ட வித்யாசாகர், சிறுகதை மூலம் அழகிய அனுபவப் பகிர்வை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஓட்டைக் குடிசை சிறுகதை தொகுப்பில் காட்டாற்று வெள்ளம் போல மடமடவென வரும் வார்த்தைகள், நுாலாசிரியரின் எழுத்தாற்றலுக்கு கிடைத்திருக்கும் பெரும் பலம். புதிய அனுபவத்தை மாறுபட்ட களத்தில் அளித்திருக்கும் வித்யாசாகருக்கு பாராட்டுகள். – மாசிலா ராஜகுரு நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]

Read more

விபரீத ஆட்டம்

விபரீத ஆட்டம், சுப்ரஜா, வாதினி, விலை 120ரூ. நாவல் பேசியிருப்பது சுப்ரஜாவின் திக் திக் திகில் நடனமல்ல, விளையாட்டு; அதுவும் மரண விளையாட்டு. இரட்டை பெண்களில் ஒருத்தி காணாமல் போகிறாள். அவள் தலை மறைந்ததன் ரகசியம் என்ன என்பதை அறிய வரும் அவளின் குடும்பத்தினரை, அடுத்தடுத்து விபரீதங்கள் துரத்துகின்றன. இறுதியில் மர்மம் விடுபடுகிறது. மரணத்திற்கும், மர்ம சம்பவங்களுக்கும் காரணமானதே ஆட்டந்தான் என்பதை அறியும்போது வியப்பு மேலிடுகிறது. அடுத்தடுத்த சம்பவங்களின் துரத்தலாக கதை அமைந்திருப்பது, இந்நுாலை படிக்கும் ஆர்வத்தை துாண்டுவதாக உள்ளது. திரைப்படத்தை மிஞ்சும் திகில் […]

Read more
1 175 176 177 178 179 505