தமிழ்ச் சிறுகதை வரலாறு

தமிழ்ச் சிறுகதை வரலாறு, கி.துர்காதேவி, கி.ராஜம் வெளியீடு, விலை 225ரூ. தமிழகத்தில் பிரசண்ட விகடன் என்ற இதழ், 1932ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இதழில் 1935 முதல் அந்த இதழ் நிறுத்தப்படும் வரை ஆசிரியராக இருந்த எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் காலத்தில் அந்த இதழில் பல்வேறு சிறுகதைகள், கவிதைகள் வெளியிடப்பட்டன. இவற்றில் 1951 முதல் 1952 வரை உள்ள ஓராண்டு காலத்தில் வெளியான சிறுகதைகளின் ஆய்வு நூலாக இந்த நூல் தயாராகி இருக்கிறது. அந்த காலத்தில் வெளியான கதைகளின் சுருக்கம், அந்தக் கதைகளின் பாடுபொருள், […]

Read more

பி.எஸ்.நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும்

பி.எஸ்.நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும், எஸ்.மோதிலால், சைவப் பிரகாச சபை, விலை 450ரூ. நீராரும் கடல் உடுத்த.. என்ற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைத் தந்த மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் ஒரே மகனான பி.எஸ்.நடராஜபிள்ளை பற்றிய அரிய பல தகவல்களை இந்த நூல் கொண்டு இருக்கிறது. கேரள தலைவர்களில் ஒருவரான பட்டம் தாணுப்பிள்ளையுடன் இணைந்து திருவிதாங்கூர் அரசியலில் பி.எஸ்.நடராஜபிள்ளை எவ்வாறு பெரும் ஆளுமையாக விளங்கினார் என்பதும், அவரது சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பணிகள் தொடர்பான தகவல்களும் சிறந்த முறையில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. பி.எஸ்.நடராஜபிள்ளை […]

Read more

ஆதித்ய இருதயம் விரிவுரை

ஆதித்ய இருதயம் விரிவுரை, க.அரங்கநாதன், ஸ்ரீ அரங்கன் நிலையம், விலை 400ரூ. ராமாயண காவியத்தில், ராவணனுடன் ராமர் போருக்கு ஆயத்தமாக இருக்கும் காலத்தில், ராமருக்கு சூரிய வழிபாடு மற்றும் குல தெய்வ வழிபாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கி அகத்திய முனிவர் அருளிய மந்திரங்களான ஆதித்ய இருதயத்தில் கூறப்பட்டுள்ள அற்புதமான விஷயங்களை இந்த நூல் விளக்கமாகவும் எளிய முறையிலும் தந்து இருக்கிறது. அனைத்து தெய்வங்களின் அம்சங்களையும் பெற்றுக்கொண்டு அவற்றை மக்களுக்கு வழங்கும் சூரிய பகவான் செய்லபாடுகளை உணர்வு பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் ஆசிரியர் இந்த நூலில் […]

Read more

மனவெளிப் பறவைகள்

மனவெளிப் பறவைகள், பேராசிரியர் தி.ராஜகோபாலன், வானதி, விலை 200ரூ. எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தக்களை துணிந்து ஆணித்தரமாகக் கூறக்கூடிய எழுத்தாளர் என்ற நற்பெயரைப் பெற்ற பேராசிரியர் தி.ராஜகோபாலன் எழுதிய 33 கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய சமுதாயத்தில் நிலவும் அவல நிலை, சித்தர்கள் பெருமை, பத்திரிகைகள் நிலைமை, பாலியல் துன்புறுத்தல்கள், கவிஞர் கண்ணதாசனின் சிறப்பு, ஓட்டு அரசியல், சுற்றுச் சுழலை பாதுகாத்த டாக்டர் பிந்தேஸ்வர் பதக், மத சகிப்புத்தன்மையின் முக்கியத்துவம், தீண்டாமைக் கொடுமை, தேவதாசி முறை, மீ டூ இயக்கம் […]

Read more

கேம் சேஞ்சர்ஸ்

கேம் சேஞ்சர்ஸ், உலகை மாற்றயி ஸ்டார்ட் அப்களின் கதை, கார்க்கிபவா, விகடன் வெளியீடு, விலை 240ரூ. மின்னல் போன மனதில் சட்டென்று தோன்றும் வித்தியாசமான யோசனையை ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுத்தி, முன்னேற்றம் காணும் தொழில்நுட்பம் ஸ்டார்ட் அப் என்று கொண்டாடப்படுகிறது என்பதை இந்த நூல் சிறப்பாக பதிவு செய்து இருக்கிறது. தற்காலத்தில் தவிர்க்க முடியாத சேவைகளாக விளங்குவதோடு, ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, மிக அதிக அளவு பொருளீட்டும் நிறுவனங்களான ஊபர், ஸ்விக்கி, பிளிப்கார்ட், அமேசான், பே டிஎம் மற்றும் வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ரெட் […]

Read more

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள்

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள், மதுரை இளங்கவின், காவ்யா, விலை 170ரூ. ஏழைக் குழந்தைகளுக்கு கல்விப் பணி, நோயுற்றவர்களுக்கு மருத்துவ வசதி என்று ஏராளமான அன்புப் பணிகளைச் செய்த கிறிஸ்தவ அருளாளர்களை இந்த நூல் சிறப்பாக அடையாளம் காட்டி இருக்கிறது. தந்தை லெவே, புனிதர் அல்போன்ஸ், தேவசகாயம் பிள்ளை, அன்னை தெரசா, இறை ஊழியர் ஞானம்மா ஆகிய ஐவரின் வாழ்க்கைக் குறிப்பு, அவர்கள் ஆற்றிய தொண்டுகள், அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், துயரங்கள் ஆகிய அனைத்தும் இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 9/10/19 இந்தப் புத்தகத்தை […]

Read more

இனிய இணையதள நூலகம்

இனிய இணையதள நூலகம், ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 110ரூ. நூலகம் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழக அரசுதான் 1948 ம் ஆண்டு சென்னைப் பொது நூலக சட்டத்தை இயற்றி நூலகப் பணிகளைச் சீராக்க முயற்சி மேற்கொண்டது என்பது போன்ற பல செய்திகள் இந்த நூலில் இருக்கின்றன. நூலகப் பணிக்கு இணையதளம் எவ்வாறு பயன்படுகிறது? தமிழ் இணையம் எவ்வாறு செயல்படுகிறது? மின் நூல் எனப்படுவது என்ன? என்பது போன்ற பல விவரங்கள் நன்றாகத் தொகுத்துத் தரப்பட்டு […]

Read more

மன அழுத்தமும் ஒரு வரமே

மன அழுத்தமும் ஒரு வரமே, பி.வி.பட்டாபிராம், கொரல் வெளியீடு, விலை 150ரூ. மன அழுத்தம் என்பது ஒரு நோய் என்று அனைவரும் நினைத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், மன அழுத்தம் என்பது நம்மை ஊக்குவிக்கிறது. ஆகவே இது அனைவருக்கும் அவசியமான ஒன்றே. ஆனால் தகுந்த அளவில் இருக்கும் படி நிர்வகித்துக் கொள்ள வேண்டும் என்ற வித்தியாசமான கோணத்தில் சொல்லும்இந்த நூலில், மன அழுத்தம் தொடர்பான அத்தனை தகவல்களும் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம் எந்த நிலையில் இருக்கின்றது, அவற்றை சரி செய்து எவ்வாறு என்பது உள்பட […]

Read more

மகாரதத்தில் குறளின் குரல்

மகாரதத்தில் குறளின் குரல், கு.பாலசுந்தரி, மணிமேகலைப் பிரசுரம், விலை 80ரூ. மகாபாரதமும், திருக்குறளும் பல நூற்றாண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்டவை என்றாலும், இரண்டு நூல்களிலும் உள்ள பல கருத்துக்கள் ஒன்றாக இருக்கின்றன என்பதை இந்த நூல் சிறப்பாக விளக்கி இருக்கிறது. ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு, அதில் மகாபாரதம் தொடர்பாகக் கூறப்பட்டுள்ள சம்பவங்கள், சிறுகதைகள் ஆகியவற்றைக் கூறி, அதே கருத்தை சுருக்கமாக விளக்கும் திருக்குறளை அடையாளப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்க முயற்சி. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 30 கட்டுரைகளும், நீதி […]

Read more

மதுரையின் அரசியல் வரலாறு 1868

மதுரையின் அரசியல் வரலாறு 1868, ஜே.எச்.நெல்சன், தமிழில்: ச.சரவணன், சந்தியா பதிப்பகம், பக்.352, விலை ரூ.360. தூங்கா நகரம் என்று புகழ்பெற்ற மதுரை கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதும் நூலாசிரியர், இந்நூலில் ;மதுரா தலபுராணம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள 64 திருவிளையாடல்களை விவரிக்கிறார். அது மதுரையை ஆண்ட 73 பாண்டிய மன்னர்களைப் பற்றிய பட்டியலை வழங்குகிறது. கி.பி.1559 – இல் ஆட்சிக்கு வந்த விசுவநாதாவின் முக்கிய தளபதியாக இருந்த அரியநாயகா, மதுரை புதுமண்டபத்தில் குதிரை வீரன் சிலை ஒன்றை நிறுவியிருக்கிறார். […]

Read more
1 178 179 180 181 182 505