சிலப்பதிகாரம் இனவரைவியல் நோக்கு

சிலப்பதிகாரம் இனவரைவியல் நோக்கு,  பெ.சுப்பிரமணியன், காவ்யா, பக்.170, விலைரூ.160. ஒரு சமூகத்தின் புவிச் சூழலியல், குடியிருப்புகள், பொருளாதாரம், குடும்ப அமைப்பு, திருமணம் உள்ளிட்ட சடங்குகளைத் தொகுத்துக் கூறுவது இனவரைவியல் ஆகும். சிலப்பதிகார காப்பியத்தை இனவரைவியல் கோட்பாடு முறையில் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரி, குன்றக் குரவை, ஆய்ச்சியர் குரவை ஆகிய 3 காதைகளும் தொல்குடிகளின் வாழ்வியலைக் காட்டும் பகுதிகளாக உள்ளன. வேட்டுவ வரி இயலில் வேட்டுவ இனமக்களின் கூத்துகள், ஆடல்- பாடல், இசை, கொற்றவை வழிபாடு, பலியிடல் முதலிய பல்வேறு செய்திகள் […]

Read more

தமிழர் வரலாறு

தமிழர் வரலாறு, ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.200. இந்தியப் பகுதியில்தான் பூர்வ குடிகள் வாழ்ந்தனர் என்பதற்கான சான்றுகள் பல உள்ளன. தொல் உயிர்கள் தோன்றி, வளர்ந்து, பெருகியதும் இந்தியாவில்தான்; மனிதனும் அங்குதான் தோன்றி வளர்ந்திருக்கக்கூடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். கி.மு. நான்காயிரம் ஆண்டுகள் வரை இந்தியா முதல் பாரசீகம், எகிப்து, சைப்ரஸ், கிரேத்தா வரையில் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களே வாழ்ந்தனர்; தென் பகுதியில் வாழ்ந்த மக்களே வடக்கிலும் இன்ன பிற இடங்களிலும் சென்று குடியேறினர். இந்த உலகில் இல்லாத ஒரு நிலப்பரப்பு […]

Read more

காதலுக்கு எண் 143-ஐ அழுத்தவும்

காதலுக்கு எண் 143-ஐ அழுத்தவும், நவ்ஷாத் கான்.லி, காகிதம் பதிப்பகம், விலை 60ரூ. காதல், சமூகம், குடும்ப உறவுகள் ஆகியவை தொடர்பாக எழுதப்பட்ட புதுக்கவிதைகள் இந்த நூலில் காணப்படுகின்றன. நீ வாசித்த புத்ககங்களில்கூட நீங்காத உன் வாசனை என்பது போன்ற காதல் தொடர்பானவை படிக்க சுவையாகவும், கிருஷ்ணர் வேடம் அழகாய் இருந்தது பாய் வீட்டு குழந்தைக்கு என்பது போன்றவை சிந்தனைக்கு விருந்தாகவும் உள்ளன. நன்றி: தினத்தந்தி,5/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

அன்பே அமிழ்தம்

அன்பே அமிழ்தம், ஞா.சிவகாமி, முல்லை பதிப்பகம், விலை 120ரூ. நேரில் பார்த்து படித்தது, அவற்றில் மனைதப் பாதித்தது ஆகிய உணர்ச்சிகளை 23 சிறுகதைகளாகக் கொடுத்து இருக்கிறார் ஆசிரியர். மாமனாரை வெறுக்கும் மருமகள், குடிக்கு எதிராகப் போராடும் பெண்கள், கொரோனாவின் தாக்கம் போன்ற சிறுகதைகள் மனதைத் தொடும் வகையில் இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி,5/9/21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031626_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஜீவன் லீலா

ஜீவன் லீலா: அருவிகளின் லீலைகள், காகா கலேல்கர், தமிழில்: பி.எம்.கிருஷ்ணசாமி, சாகித்ய அகாடமி, விலை: ரூ.385. இந்திய நீர்நிலைகளின் அழகும் ஆழமும் காந்தியுடன் நெருங்கிப் பழகியவரும் குஜராத்தி, மராத்தி, இந்தி மொழிகளில் புகழ்பெற்ற எழுத்தாளரும் இந்தியா முழுவதும் ஓயாமல் பயணித்த சஞ்சாரியுமான காகா கலேல்கர் தன் பயண அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்தியாவின் முக்கியமான நதிகள், ஆறுகள், அருவிகள், ஏரிகள், கடல்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் பற்றி காலேல்கர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ‘ஜீவன் லீலா’ என்னும் நூலாக குஜராத்தி மொழியில் சாகித்ய […]

Read more

வரம் தரும் அன்னை

வரம் தரும் அன்னை, பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.190. இந்து கடவுள் என்றால் இந்தியாவிலிருந்து தான் வரமுடியுமா… பிரான்சிலிருந்தும் பராசக்தி அவதாரம் வெளிப்படலாம்; மகாகாளி உருவெடுக்கலாம்; சரஸ்வதி வீணை மீட்டலாம். மகாலட்சுமி அருட்கடாட்சம் தரலாம் என்பதை உணர்த்தும் நுால். பிரான்சில் இருந்து வந்த மிர்ரா, அன்னையாக மகான் அரவிந்தர் அடியொற்றி, தத்துவங்களை பின்பற்றி நடந்தவர். நீ நீயாய் இரு என்பது தான் அன்னை சொல்லும் வேதம். உண்மை, அன்பு, பாசம் என நற்பண்புகளுடன் விளங்குவது தான் நீயாக இருப்பதன் அவசியம். […]

Read more

பாபாயணம்

பாபாயணம், ஜி.ஏ. பிரபா, விகடன் பிரசுரம், விலைரூ.350. ஷீரடி சாய்பாபா பற்றி ஏராளமான நுால்கள் வந்த வண்ணமாக உள்ளன. பாபா பற்றி, ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். பாபாவின் அற்புதமான நிகழ்வுகள், அருட்செயல்கள் அனைத்தும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஷீரடியில் காலை ஆரத்தியில் துவங்கும் இதில், ‘பாபாவும் நானும்’ என்ற தலைப்பில் பிரபலமானவர்களின் அனுபவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவை சிறப்பாக உள்ளன. பக்கம் பக்கமாக பாபாவின் படங்கள் பரவசம் ஊட்டுகின்றன. பாபாவின் பக்தர்களுக்கு நல்ல படைப்பு. – பின்னலுாரான் நன்றி: […]

Read more

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், முல்லை முத்தையா, முல்லை பதிப்பகம், விலைரூ.50 வ.உ.சிதம்பரனார் 150ம் பிறந்த நாளை ஒட்டி, சிறப்பு வெளியீடாக வந்துள்ள நுால். வ.உ.சி., பற்றி பல அறிஞர்களின் தொகுப்பு நுால். இந்த நுாலில், 22 தலைப்புகள் உள்ளன. கவிஞர் பாரதி உட்பட பல தமிழறிஞர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் கூறிய, எழுதிய ஆக்கங்கள் இதில் உள்ளன. அவரது உயர்ந்த உள்ளத்தையும், தியாகத்தையும் சுட்டுகின்றன. பாதுகாக்கத்தக்க ஆவணமாக உள்ளது. – வசந்தன் நன்றி: தினமலர், 24/10/22.. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

வியப்பூட்டும் வழிபாடுகள்

வியப்பூட்டும் வழிபாடுகள், பெ.பெரியார் மன்னன், விவேகா பதிப்பகம், விலைரூ.145. வித்தியாசமான 50 கோவில்கள் பற்றியும், அவற்றின் வழிபாட்டு முறை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்துள்ள இந்த நுாலில், அந்தச் சுவாமிகளின் படத்தையும் தெளிவான தகவல் கொண்ட நுால். இதில் இடம்பெற்றுள்ள கோவில்கள் சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டாரத்தில் உள்ளவை. கல்வராயன் மலையில் ராமனைக் கரியராமன் என்று குறிப்பிடுகின்றனர். கல்வெட்டையும் கடவுளாக வணங்குகின்றனர். அந்தக் கல்வெட்டை வணங்கினால் நோய் தீர்ந்துவிடும் என்னும் நம்பிக்கையும் இந்தப் பகுதியில் நிலவுகிறது. ஓர் ஊரில் எட்டுக்கை அம்மன் சிலை 45 அடி […]

Read more

நுண்ணுயிர் எதிரி

நுண்ணுயிர் எதிரி, கே.நித்தியானந்தன், இனிய நந்தவனம் பதிப்பகம், விலைரூ.150. உலகையே ஆட்டி படைத்த கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக, அறிவியல், உளவியல் ரீதியாக தொகுக்கப்பட்ட நுால். வைரஸ் தொடர்பான செய்திகள், ஊடகங்களில் அதிகம் இடம் பிடித்தன. ஆனால், சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் அதிகம் பரவின. இதனால், மக்கள் குழப்பம், பயம் அடைந்தனர். இவை, ஐந்து அத்தியாயங்கள் வழியாக விவரிக்கின்றன. வைரசின் தோற்றம், பரவல், உடல், மனநல பாதிப்புகள், தடுப்பு மருந்து உருவாக்கம், சர்வதேசம் சந்தித்த பிரச்னைகள், மக்களின் வாழ்வியல் சோதனைகள் போன்ற தொடர் […]

Read more
1 18 19 20 21 22 505