மனம் எனும் வனம்

மனம் எனும் வனம், மாலன், கவிதா பப்ளிகேஷன், விலைரூ.60. வனத்தின் வாசல் என்ற தலைப்பிலேயே உள்ள கவிதைகளின் தலைப்புகளை அறிமுகம் செய்த ஆசிரியரின் கவித்துவம் புலப்படுகிறது. எழுத்து இதழில் கவிதை பயணம் துவங்கிய மாலன், கதாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர், பத்திரிகையாளர் என்று பன்முகம் காட்டி ஜெயித்தவர்; புதுக்கவிதைகளிலும் ஜெயித்து உள்ளார். கொரோனா பற்றி பாடுகிறார்; குறும்பு கொப்பளிக்கிறது. என் கவிதையைப் போல நீ எடை குறைவு எனினும் வீரியம் அதிகம்! கொரோனா மற்றும் கவிதைக்கும் எடை குறைவு தானாம். தாக்கும் சக்தி மிக அதிகமாம். […]

Read more

பழமிருக்க பயமேன்

பழமிருக்க பயமேன், டாக்டர் வி, விக்ரம்குமார், காக்கைக் கூடு, விலை 100ரூ. எண்ணிலடங்கா தாதுக்கள்… வைட்டமின்கள்… நார்ச்சத்து… ஆன்டி-ஆக்ஸிடன்ஸ்… என உணவாகக் கொள்ளப்படும் மருந்துகளே பழங்கள். மலக்கட்டு முதல் புற்றுநோய் வரை தடுக்கும் வல்லமை பழங்களுக்கு உண்டு. பழங்களைச் சாப்பிடும் முறை, உணவுக்கும் அவற்றுக்குமான தொடர்பு, அவற்றின் நோய் நீக்கும் குணநலன்கள் போன்றவற்றை அறிந்துகொள்ள இந்த நூல் உதவுகிறது. பழங்களின் வரலாறு, தனித்துவம், சுவை, ஊட்டம் போன்றவற்றைப் பற்றி ஆசிரியர் விவரித்துள்ள விதம் பழங்களைச் சாப்பிடும் ஆவலை அதிகரிக்கும். நன்றி: தமிழ் இந்து, 26/2/22. […]

Read more

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் – கேள்விகளும் பதில்களும், இரா. மகேந்திரன், ஜெ. பழனிவேல், காலச்சுவடு பதிப்பகம், விலை 100ரூ. பெருந்தொற்றுக் காலத்தில் கரோனா வைரஸ், அதற்கான சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து அறிவியலுக்குப் புறம்பான தகவல்கள் காட்டுத்தீயைப் போலப் பரவின. தேவையற்ற குழப்பத்தையும் அச்சத்தையும் மக்களிடம் அவை ஏற்படுத்தின. இந்தச் சூழலில் அறிவியல் அடிப்படையிலான நம்பகமான தகவல்களின் மூலம் அறிவியலுக்கு வலுசேர்க்கும் விதமாகவும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. சாமானியர்களுக்குப் புரியும் வகையில் எளிய மொழியில் எழுதப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு. நன்றி: […]

Read more

ஒளரங்கசீப்

ஒளரங்கசீப், ஆங்கிலத்தில்: ஆட்ரே ட்ரஷ்கெ, தமிழில்: ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், பக்.158, விலை  ரூ.200. முகலாயப் பேரரசர்களில் மிகக் கொடூரமானவராகச் சித்திரிக்கப்பட்டவர் ஒளரங்கசீப். உண்மையில் ஒளரங்கசீப் கொடூரமானவரா என்பதை இந்நூல் ஆராய்கிறது. அமெரிக்க வரலாற்றாசிரியரான ஆட்ரே ட்ரஷ்கே, இது குறித்து பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில், ஒளரங்கசீப் பற்றி கூறப்படும் பல குற்றச்சாட்டுகள் மிகைப்படுத்தப்பட்டவை என்ற முடிவுக்கு வருகிறார். ஒளரங்கசீப் ஆட்சிக் காலத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் அழிக்கப்பட்டன என்று கூறுவது உண்மையல்ல என்று கூறும் நூலாசிரியர், அவருடைய ஆட்சிக் காலத்தில் இடிக்கப்பட்ட இந்துக் கோயில்களின் எண்ணிக்கை பத்து […]

Read more

திருப்பாவை நாச்சியார் திருமொழி

திருப்பாவை நாச்சியார் திருமொழி, வே.சாய் சத்தியவதி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலைரூ.120. சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் நோன்பிருந்து பாடிக் கொடுத்த திருப்பாவை முப்பது பாடல்களையும் புரிந்துகொள்ளும்படி, எளிய நடையில் விளக்க உரை கொடுக்கப்பட்டுள்ள நுால். அதுமட்டுமல்ல, நாச்சியார் திருமொழி பதினான்கையும் சந்தி பிரித்து தந்துள்ளது மிக அருமை. இதில் ஆறாம் பத்து பாடல்கள் கண்ணபிரான் தன்னை மணம் செய்த கனவைச் சொல்லும் பாடல்கள். அம்மி மிதிக்கக் கனாக் கண்டால் திருமணம் கைகூடுமே! – சீத்தலைச்சாத்தன் நன்றி: தினமலர். இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

காலங்களில் அவள் வசந்தம்

காலங்களில் அவள் வசந்தம், காஞ்சி பாலச்சந்திரன், பானு பாலா பதிப்பகம், விலைரூ.250. இரு நாவல்களை உள்ளடக்கிய நுால். படிப்பவர்களின் மனதில் தத்ரூபமாக காட்சிகளை கொண்டு சேர்க்கின்றன. முழுதும் படித்து விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் அளவிற்கு கதைகள் அமைந்துள்ளன. கேசவன், கமலா, மஞ்சரி என்னும் கதாபாத்திரங்கள், காலங்களில் அவள் வசந்தம் என்னும் நாவலின் உயிரோட்டமாக அமைந்துள்ளன. இரண்டாம் நாவலான, ‘பூர்ணிமா’வில் பெண்ணின் வாழ்க்கை கதையும், ஏன் சிறைக்கு சென்றாள் என்பதையும் எடுத்துரைக்கிறது. – வி.விஷ்வா நன்றி: தினமலர்.24/10/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

பாடி, ஆடு பாப்பா

பாடி, ஆடு பாப்பா, கவிஞர் சபா.அருள்சுப்பிரமணியம், மணிமேகலை பிரசுரம், விலை 400ரூ. குழந்தைகள் முதல், சிறுவர்கள் வரை பாடி மகிழ ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ள பாடல்களின் தொகுப்பு நுால். பாலர் பாடல்கள், சிறுவர் பாடல்கள், கதைப்பாடல்கள், மாணவர் பாடல்கள், தமிழ் மரபுத் திங்கள் பாடல்கள், தமிழ்மலர் பாடல்கள், பாடி ஆடு பாப்பா, தங்கக் கலசம், பாடலும் ஆடலும், பாச்செண்டு ஆகிய தலைப்புகளின் கீழ் சந்தப் பாடல்கள் அமைந்துள்ளன. மிக எளிமையாக, இசையுடன் பாடத்தக்க வகையில் சொற்களைக் கோர்த்து உருவாக்கப்பட்டுள்ளது. மழலையருக்கு, மொழி கற்பிக்கும் வகையில் […]

Read more

நட்சத்திரப் பெண்

நட்சத்திரப் பெண் – விஞ்ஞான சிறுகதைகள், ஆர்னிகாநாசர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.200 நிஜமா, கற்பனையா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞானத்துடன் கதை பேசி வடிவம் கொடுத்துள்ளார் ஆர்னிகா நாசர். இளமை துள்ளும் எழுத்துக்கு காதலும், அறிவியலும் கைகோர்த்து வெற்றி மகுடம் சூட்டுகின்றன. காலக் கடிகாரத்தை கொண்டு நல்லதை முடிக்கப் போகிறார் என்று நினைக்கும் போது, முடிவிலும் நிஜத்தைப் போலவே சோகத்தை தருகிறார். ரோபோ குழந்தையை பேச வைத்து அதிரச் செய்கிறார். பூனையும், எலியுமான ‘டாம் அண்டு ஜெர்ரி’ கதை […]

Read more

பயம்

பயம், ஹிப்னோ ராஜராஜன், ராரா புக்ஸ், விலைரூ.350 மனநல மருத்துவர் எழுதியுள்ள நுால். குற்றவாளியிடம் உண்மை கண்டறியும் சோதனையில் காவல் துறைக்கும் உதவுகிறார். திக்குவாய், பேச்சுத் தடைகளையும் நீக்குகிறார். இவர் அனுபவங்கள் நீண்டு நுாலாகி, வானில் பட்டமாக உயர்த்துகின்றன. பயம் எப்படி உடலையும், மனதையும் பாதிக்கிறது என்பதை 20 தலைப்புகளில் விளக்குகிறார். எண்ணங்களின் குவியல் மனம். அது ஆத்மாவில் அடங்கிவிட்டால் ஆன்ம சுகம் வந்துவிடுகிறது என்ற பகவான் ரமணரின் தவமொழியுடன் துவங்குகிறார். ஆழ்மனதில் பயத்தை அழித்துவிட்டால், நோயிலிருந்து விடுதலை பெற்றுவிடலாம். பயத்தைப் போக்கும் பயனுள்ள […]

Read more

பொற்றைக்காடு

பொற்றைக்காடு,  முள்ளஞ்சேரி மு.வேலையன், காவ்யா, பக்.361, விலை  ரூ.360. குமரி மாவட்டத்தில் உள்ள முள்ளஞ்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 60 ஆண்டுகளுக்கு முன்பு எப்படிவாழ்க்கை இருந்தது என்பதை அசைபோடும் நூல். அந்தப் பகுதிகளில் இருந்த உணவுமுறைகள், விளைபொருள்கள், மக்களின் பழக்க, வழக்கங்கள், தொழில்கள், கடைகள், சந்தைகள், கள், சாராயப் பழக்கங்கள் என அன்றைய வாழ்வைப் பற்றிய தகவல்கள் சுவையாக விவரிக்கப்பட்டுள்ளன. ‘நுனி வீட்டுக்கு; நடு மாட்டுக்கு; அடி வயலுக்கு என பயன்பட்டு வந்த நெல் விவசாயம் 1970 ஆம் ஆண்டில் பசுமைப்புரட்சி வந்தவுடன் […]

Read more
1 19 20 21 22 23 505