வாழும் வழிமுறைகள்

வாழும் வழிமுறைகள், லேனா தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.65 வானொலி நிகழ்ச்சிகளில், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஆற்றிய உரைகளை தொகுத்து அழகிய நுால் வடிவம் பெற்றுள்ளது. முதலில், ‘ஏன் வேண்டாம் வாக்குவாதம்’ என்ற தலைப்பில் துவங்குகிறது. இறுதியில், ‘அர்த்தநாரீஸ்வரர் தத்துவம்’ என்ற தலைப்பில் முடிகிறது, மொத்தம், 28 தலைப்புகளில் உரைத் தகவல்கள் சுவாரசியம் தருகின்றன. வாழ்வுக்கு தேவையான முக்கிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றில், ‘பெண்ணாதிக்கத்தை தடுப்பது எப்படி’ என ஒரு தலைப்பில் உள்ள உரை மிகவும் சுவாரசியம் தருகிறது. அந்த கட்டுரையில், ‘ஆதிக்க உணர்வை […]

Read more

இதம் தரும் இதயம்

இதம் தரும் இதயம், க.மகுடமுடி,  மகுடம் பதிப்பகம்,  பக்.254, விலை ரூ.350; சாமானிய வாசகர்களுக்கு புரியும் அடிப்படை மருத்துவத் தகவல்களோடு இந்நூல் நின்றுவிடாமல் அறுவை சிகிச்சைகளின் அதி நவீன தொழில்நுட்பம் வரை எளிமையான மொழியில் இந்த நூல் விளக்குகிறது. பொதுவாக இதுபோன்ற நூல்களில் மருத்துவக் கலைச் சொற்களும், தொழில்நுட்பரீதியிலான சொல்லாடல்களும் நிறைந்திருக்கும். ஆனால், இது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையாக எழுதப்பட்டு இருக்கிறது. இதயத்தின் உள்வடிவமைப்பு எப்படி உள்ளது, அது எவ்வாறு செயல்படுகிறது என்ற அரிச்சுவடியுடன் நூல் தொடங்குகிறது. அதன் பின்னர், நாம் அன்றாடம் […]

Read more

நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம்

View Post நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம், ரா.கிருஷ்ணன், திருப்புகழ் சங்கமம், விலைரூ.396. கர்நாடக சங்கீத வித்தகர் முத்துஸ்வாமி தீட்சிதர் பாடியுள்ள தலங்களைப் பற்றிய விரிவான யாத்திரை நுால். அவர் பாடியுள்ள 66 தலங்களின் வரலாறு, புராண, இலக்கியச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. கோவில் அமைப்பு, இறைவன் அருள்பாலிக்கும் விதம், துணை சன்னிதிகள், தீர்த்தகுளம் ஆகியவை பற்றியும் விரிவாக கூறியுள்ளார் தீட்சிதர். அந்த கோவில்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர். தீட்சிதர் பாடியுள்ள தலங்கள் மற்றும் க்ருதிகளின் பட்டியலைத் […]

Read more

மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு

மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு, எம்.எஸ்.செல்வராஜ், பாரதி புத்தகாலயம், விலைரூ.100 இலங்கையின் வளர்ச்சிக்கு மலையகத்தமிழர்களின் பங்களிப்பு மிகுதி. மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வும் போராட்டமும் சொல்லிட முடியாது. அவர்களின் வலியை உணர்த்தும் வகையில் தொகுக்கப்பட்டுள்ள நுால். மனித உரிமைகள் பறிக்கப்பட்டு மிகவும் கொடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகி நாடற்றவர்களாக ஆக்கப்பட்டவர்கள், மலையகத் தமிழர்களின் உழைப்பைச் சுரண்டியதை வரலாற்று கண்ணோட்டத்தோடு எடுத்துக்காட்டுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியின் உழைப்புச்சுரண்டலை இதழ்களில் வெளிப்படுத்திப் புது எழுச்சியை உண்டாக்கிய தஞ்சாவூரைச் சார்ந்த நடேசய்யர் பற்றிய செய்தியும் முக்கியமானது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் […]

Read more

சிவகங்கை மாவட்டம் ஊரும் பேரும்

சிவகங்கை மாவட்டம் ஊரும் பேரும், மு. பாலகிருஷ்ணன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.100. சிவகங்கை மாவட்டத்தை அறிந்து கொள்ள, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மு.பாலகிருஷ்ணன் எடுத்துள்ள அருமையான முயற்சி இந்த புத்தகம். 125 ஊர்களின் பெயர் காரணம், அமைப்பு, வரலாறு, தொன்மை, ஆன்மிக சிறப்பு ஆகியவற்றை எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதத்தில் தொகுத்திருக்கிறார் நுாலாசிரியர். நாட்டரசன்கோட்டை, திருப்புத்துார், திருப்புவனம், திருக்கோஷ்டியூர் போன்ற பல ஊர்களின் வரலாற்று, ஆன்மிக பெருமைகள் வியக்க வைக்கின்றன. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பும், வரலாற்று பெருமையும் இருப்பது ஆச்சரியம். சிவகங்கை […]

Read more

தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஒழுங்கு நடவடிக்கை நடைமுறைகள், பொறிஞர் ப.நரசிம்மன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.60 அரசு பணியில் உள்ள அடிப்படை விதிகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் நோக்கில் எழுதப்பட்டுள்ள நுால். அடிப்படை விதிகளை அறியாத அரசு ஊழியர்கள் தான், அதிகாரம் படைத்தவர் போல் சக ஊழியர்களையும், மக்களையும் மதிக்காமல் மனம் போன போக்கில் செயல்படுவர் என சுட்டிக்காட்டி, அரசு பணியாளர் தவறு செய்யும் பட்சத்தில், என்ன வகையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை விவரிக்கிறது. அனைத்து தரப்பினரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை உள்ளடக்கியுள்ள நுால். […]

Read more

பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை

பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.340 ‘பச்சைப் புடவைக்காரி’ என உச்சரிக்கும்போதே தெய்வத்துடனான நெருக்கமான உறவு புலப்படுகிறது. மனிதனுக்கு மனசாட்சி எப்படி உள்ளுக்குள்ளேயே இருந்து நல்லது, கெட்டதைப் பகுத்தாய்ந்து வழி நடத்துமோ, அவ்வாறு பச்சைப் புடவைக்காரியான அன்னை மீனாட்சி உறுதுணையாக இருந்திருக்கிறார் என்பதை நுால் முழுதும் பல்வேறு சம்பவங்களை மேற்கோள் காட்டி, அலுப்பு ஏற்படாவண்ணம் விவரித்திருக்கிறார் வரலொட்டி ரெங்கசாமி. ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்த வாழ்விலும், மற்றவர்கள் வாழ்விலும் நிகழும் சில சம்பவங்கள், கடவுள் குறித்த சந்தேகத்தைக் கிளப்புவது […]

Read more

உலகப் புகழ் பெற்ற நாவல்கள்

உலகப் புகழ் பெற்ற நாவல்கள், முல்லை பி.எல். முத்தையா, முல்லை பதிப்பகம், விலைரூ.700 உலகப் புகழ் பெற்ற ஆறு நாவல்களின் தொகுப்பு நுால். ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி எழுதிய அம்மா, லியோ டால்ஸ்டாய் எழுதிய அன்னா கரீனினா, தாஸ்தாவ்ஸ்கி எழுதிய குற்றமும் தண்டனையும், அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஜூனியர் வாடாமல்லிகை, எமிலி ஜோலா எழுதிய நானா, ஜேம்ஸ் ஆஸ்டின் எழுதிய ஐந்து சகோதரிகள் ஆகிய நாவல்கள் ஒரே தொகுப்பில் அடக்கப்பட்டுள்ளன. எளிய நடையில் நாவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய மிகச் […]

Read more

சாதி பேதத்தை தகர்த்த இராஜாஜி

சாதி பேதத்தை தகர்த்த இராஜாஜி (ராஜாஜி 143-ஆவது பிறந்த நாள் வெளியீடு), ரெ.தே.பெ.சுப்ரமணியன், பக்.80, விலை குறிப்பிடப்படவில்லை. ‘இந்தியத் தலைவர்களிலேயே அதிகம் தவறாக அறியப்பட்டவர் ராஜாஜி’ என காந்தியடிகளே கூறுமளவுக்கு ராஜாஜிக்கு எதிரான அவதூறுகள் வலுப்பெற்றிருந்தன. ராஜாஜியின் கல்விக் கொள்கையை ‘குலக் கல்வித் திட்டம்’ என அடையாளப்படுத்தும் அளவுக்கு பிரசாரங்கள் வலிமையுடன் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அந்தக் கல்வித் திட்ட வரைவில் எங்கேயும் அப்படிப்பட்ட உணர்வு இல்லை என்பதே உண்மை. எத்தொழிலும் இழிவானதல்ல என்ற எண்ணத்தை சமுதாயத்தில் விதைக்க வேண்டும் என்று நினைத்த ராஜாஜிக்கு கிடைத்தது […]

Read more

தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி

தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி, சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக். 786, விலை 800ரூ. தமிழில் திவாகர நிகண்டு, பிங்கல நிகண்டு, வீரமாமுனிவரின் சதுரகராதி எனத் தொடர்ச்சியாக இதுவரை எண்ணற்ற அகராதிகள் வெளிவந்திருக்கின்றன. பின்னர், தமிழகத்திலேயே சில குறிப்பிட்ட வட்டாரங்களுக்கே உரியதான வழக்குச் சொல் அகராதிகளும் வரத் தொடங்கின. இவற்றைத் தொகுப்பது என்பதே பெரும் உழைப்பையும் நேரத்தையும் வேண்டுகிற மிகுந்த அக்கறையுடன் கூடிய பணி. தமிழ் நாட்டுப்புறவியல் அகராதி என்ற இந்த நூலில் நாஞ்சில் நாடு, நெல்லை, செட்டிநாடு, நடுநாடு, தஞ்சை, கொங்கு, மதுரை, முகவை, பரதவர் […]

Read more
1 21 22 23 24 25 505