அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும், அந்தோன் சேகவ், தமிழில் ரா.கிருஷ்ணய்யா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 300ரூ. ரஷிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான அந்தோன் சேகவ் எழுதிய கதைகள் அனைத்தும் இலக்கியத் தரம் வாய்ந்தவை. அவற்றில் இருந்து 4 சிறுகதைகளும் 4 குறுநவால்களும் தேர்ந்தெடுத்து இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அனைத்துக் கதைகளிலும், அந்தக் கால ரஷியாவின் சமூக கலாசாரம், மக்களின் போக்கு ஆகியவை யதார்த்தமான முறையில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதிகாரிகள் எவ்வாறு ஆட்சியாளர்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பச்சோந்தி என்ற சிறுகதை அழகாகப் […]

Read more

வாசிப்பும் வாழ்வும்

வாசிப்பும் வாழ்வும், தொகுப்பு ஆசிரியர் கே. சுந்தர்ராஜ், பார்ட் இயக்கம் வெளியீடு, விலை 120ரூ. வாசிப்புக் கலை பற்றி 60-க்கும் மேற்பட்டவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்த நூல், இளைய தலைமுறையினரை வாசிக்கும் பழக்கத்துக்கு இட்டுச் செல்லும் வகையில் உள்ளது. நன்றி : தினத்தந்தி, 18/4/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வெற்றி என் கைகளிலே

வெற்றி என் கைகளிலே, ஹெரால்ட் ரஸ்ஸல்; தமிழில்: அப்துற்-றஹீம், யுனிவர்ஸல்பப்ளிஷர்ஸ், பக்.128, விலை  ரூ.100. ஒரு விபத்தில் இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளியான ஹெரால்ட் ரஸ்ஸல் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிய கதையை தன்வாழ்க்கை வரலாற்று நூலாக எழுதினார். 1954-இல் அப்துற்-றஹீம் வெளியிட்ட அதன் தமிழாக்கம் 67 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தனது கைகளை இழந்தஹெரால்ட் ரஸ்ஸல் அதற்காகத் தளர்ந்துவிடாமல், தனது மனதை எவ்வாறு பக்குவப்படுத்தி வெற்றியை நோக்கி முன்னேறினார் என்பதை இந்த நூல் விளக்குகிறது. “தனக்கு ஏற்படும் தடைகள், தோல்விகள், குறைகள் […]

Read more

ஆன்மீகம் தெய்வீகம்

ஆன்மீகம் தெய்வீகம் , சத்யவதனா, சத்யா பதிப்பகம்,  பக்.236, விலை ரூ.300. “பிரதோஷத்தின் பலன்கள்’,”ஐந்தெழுத்து மந்திர ஆற்றல்’, “கடவுளைக் காண்பது எப்படி?’, “ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயரின் பெருமை’ என்பன உள்ளிட்ட 52 தலைப்புகளில் எழுதப்பட்ட ஆன்மிக கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். திருக்கோயில்கள், தரிசனங்கள், வழிபாட்டு முறைகள் குறித்த அபூர்வ தகவல்களை நூலாசிரியர் இந்நூலில் வாரி வழங்கியிருக்கிறார். போகருக்கே ஞானம் வழங்கிய புலிப்பாணிச் சித்தரின் வரலாறு வியப்பூட்டுகிறது. “ஒருவன் தீய எண்ணத்துடன் மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தால், அதை உண்டவனின் ரத்தத்திலும் தீய எண்ணம் கலந்து விடும். நான் […]

Read more

திகம்பர நினைவுகள்

திகம்பர நினைவுகள் ,  தேவகாந்தன், ஆதி பதிப்பகம், பக்.128, விலை ரூ.120. யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிறந்த நூலாசிரியர்,1984முதல் 2003 வரை தமிழ்நாட்டில் வாழ்ந்தார். தற்போது கனடா நாட்டில் வாழ்கிறார். என்றாலும் தான் பிறந்த மண்ணோடான அவருடைய அனுபவங்களை அவரால் மறக்க முடியவில்லை.அந்த நினைவுகளை இந்நூலில் பகிர்ந்துள்ளார். யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கப்பட்டிருக்கும் கிடுகு வேலி கலாசாரத்துடன் தொடங்குகிறது நூல்.இந்தக் கிடுகுவேலிகள் மழைக்காலத்தில் மண்ணரிப்பைத் தடுப்பவையாக இருந்திருக்கின்றன. குறுகியமணல் பாதைகளின் திருப்பத்தில் செல்லும் வண்டிகள் கிடுகு வேலிகளில் மோதி, வேலி சேதமடையாமல் இருப்பதற்காக வேலியின் மூலையில் […]

Read more

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், முல்லை பிஎல்.முத்தையா, முல்லை பதிப்பகம், விலை 50ரூ. ஆங்கிலேயர்களுக்கு எதிராத சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் உன்னதமான வாழ்க்கைக் குறிப்பும், அவரைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் தெரிவித்த கருத்துகளும் இந்த நூலில் காணப்படுகின்றன. வ.உ.சி.யின் மகன் எழுதிய கட்டுரை மனதைத் தொடுகிறது. நன்றி : தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மண்வளம் காக்க பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்

மண்வளம் காக்க பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், யாஸ்மின் பேகம், மணிமேகலைப் பிரசுரம், விலை 120ரூ. பிளாஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரை உள்பட பல்வேறு கருத்துக்ளையும் விழிப்புணர்வு அம்சங்களையும் கொண்ட கருவூலமாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. மணிப்பூரில் பெண்கள் மட்டுமே இயக்கும் ஆச்சரியமான மார்க்கெட், இந்திய தேசிய கீதம் பிறந்த கதை, கோகோ மற்றும் சாக்லெட் அறிமுகமானது எப்படி என்ற விவரம், கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் பற்றி வெளிவராத செய்திகள், அலையாத்திக் காடுகளின் அருமை போன்ற கட்டுரைகளை, வசனகர்த்தா மற்றும் படத் […]

Read more

100 கவிஞர்கள் 100 கவிதைகள்

100 கவிஞர்கள் 100 கவிதைகள், தொகுப்பாசிரியர் தங்கம் மூர்த்தி, அகநி வெளியீடு, விலை 130ரூ. சுரங்கத்தைத் தோண்டி தங்கம் வைரம் போன்றவற்றை எடுத்துக் கொடுப்பதுபோல, இலக்கியத் தரம் வாய்ந்த ஏராளமான கவிதைகளில், மனதைக் கவர்ந்த 100 கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்த நூலில் தரப்பட்டுள்ளன. அப்துல் ரகுமான், வைரமுத்து, மு.மேத்தா, நா. காமராசன், ஈரோடு தமிழன்பன், நா. முத்துக்குமார், இன்குலாப், மனுஷ்ய புத்திரன், யுகபாரதி, ஆண்டாள் பிரியதர்ஷினி, தமிழச்சி தங்கபாண்டியன், அ.வெண்ணிலா, சல்மா உள்ளிட்ட 100 கவிஞர்களின் படைப்புகளை ஒருசேர இந்த நூலில் காணமுடிகிறது. பின் […]

Read more

என் ஜன்னலுக்கு வெளியே

என் ஜன்னலுக்கு வெளியே, மாலன், கவிதா பப்ளிகேஷன், விலைரூ.300 வார இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘இன்னும் கொஞ்சம் இனிப்பு சேராதா?’ முதல், ‘கனவுகளும் கருகலாமா?’ என்பது வரை, 71 தலைப்புகளில் சமூகம் குறித்து பேசும் நுால். உறவு, குழந்தை மனம், காதல், கனவு, கலை, நம்பிக்கை, சாதனையாளர்கள், சிறந்த மனிதர்கள், அரசியல், ஆன்மிகம், ஊடகம், பிரபலங்கள், சமூக சூழல், வாழ்வியல் குறித்த தலைப்புகளில் எழுதி உள்ளார். தமிழகம் முதல், உலக அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் வரை, அவர்களின் குணங்கள், அதிகாரம், அரசியல் தந்திரங்களை […]

Read more

ஒற்றைப் புளியமரம்

ஒற்றைப் புளியமரம், சுவாமிதோப்பு ஜி.லிங்கி, அனன்யா வெளியீடு, விலை 200ரூ. இந்த நூலின் ஆசிரியை, தனது வாழ்வைப் பாதித்த மற்றும் தான் பார்த்த நிகழ்வுகளையே அடிப்படையாக வைத்து 20 சிறுகதைகளைப் படைத்து இருக்கிறார். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கோணத்தில் பயணிப்பதால் ரசிக்க முடிகிறது. அனைத்துக் கதைகளிலும் நெல்லைத் தமிழ் மணம் கமழ்கிறது. நன்றி : தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 44 45 46 47 48 505