சீனாவின் கொரோனா அரசியல்

சீனாவின் கொரோனா அரசியல், கோலாகல ஸ்ரீநிவாஸ், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 68, விலை 70ரூ. மனிதரிடம் இருந்து மனிதருக்கு கொரோனா வைரஸ் பரவாது என, ஜன., 14ம் தேதி சீன அரசு, உலக சுகாதார நிறுவனத்துக்கு அறிக்கை கொடுக்கிறது. அதை மீளாய்வு செய்யாமல் அப்படியே காப்பியடித்து உலகத்துக்கு அறிவிக்கிறது, WHO. இங்கே தான் வைரஸால் மனிதப் பேரழிவு துவங்கியது. இப்படித் தான் சீனா, உலக நாடுகளை ஏமாற்ற ஆரம்பித்தது என்ற, வேரில் இருந்து துவங்குகிறார் ஆசிரியர் கோலாகல ஸ்ரீநிவாஸ்.வைரஸால், 184 […]

Read more

தீர்ப்பு: இந்தியத் தேர்தலைப் புரிந்துகொள்ளல்

தீர்ப்பு: இந்தியத் தேர்தலைப் புரிந்துகொள்ளல், பிரணாய் ராய், தொராய் ஆர்.சொபாரிவாலா, எதிர் வெளியீடு, விலை: ரூ.399 தேர்தல் குறித்த கருத்துகளை 1980-களின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து பேசிவரும் நிபுணர் பிரணாய் ராய், கள ஆய்வு நிபுணர் தொராய் ஆர்.சொபாரிவாலா இருவரும் இணைந்து இந்தியாவின் தேர்தல்கள் குறித்த சிறந்ததொரு நூலை எழுதியிருக்கின்றனர். ‘தீர்ப்பு: இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ளல்’ என்ற பெயரில், ச.வின்சென்ட்டின் தமிழாக்கத்தில் இப்போது ‘எதிர்’ வெளியீடாக வந்திருக்கிறது. இதுவரையிலான இந்தியத் தேர்தல் வரலாற்றை மூன்று கட்டங்களாகப் பிரித்து, பல்வேறு பிரிவு சமூகத்தினரின் தேர்தல் பங்கேற்பு எவ்வாறு […]

Read more

தி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன்

தி ஆர்.எஸ்.எஸ். அண்டு தி மேக்கிங் ஆஃப் தி டீப் நேஷன், தினேஷ் நாராயணன், பெங்குயின் வெளியீடு,விலை: ரூ.699 இன்னும் ஐந்தாண்டுகளில் நூற்றாண்டைக் காணவிருக்கிறது ‘ஆர்.எஸ்.எஸ்.’ எனும் ‘ராஷ்ட்ரிய ஸ்வயம்ஸேவக் சங்’. கடந்த காலத்தைப் பொற்காலமாக உருவகித்து இந்தியாவை ஒற்றை இந்து தேசியமாக மாற்றும் கனவில் அது முன்னேறிக்கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தின் வழித்தோன்றலான பாஜக ஆட்சியில் இருப்பதால் அதன் கனவுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையிலான காரியங்கள் ஒவ்வொன்றாகச் செயல்படுத்தப்படுகின்றன. நாட்டின் மீதும் அரசின் மீதும் இவ்வளவு செல்வாக்கு கொண்டிருந்தாலும், அந்த அமைப்பு பெரிதும் […]

Read more

ஜே.வி.ஸ்டாலின் படைப்புகள்

ஜே.வி.ஸ்டாலின் படைப்புகள் தொகுதி- 1,  தமிழில்: மணியம்,  அலைகள் வெளியீட்டகம்,  விலை: ரூ.450. ஏகாதிபத்தியத்தையும் நாஜிஸத்தையும் வீழ்த்தி சோவியத் ரஷ்யாவில் சோஷலிஸக் குடியரசைச் செதுக்கியவர் ஸ்டாலின். என்றாலும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியவர் என்ற விமர்சனமும் அவர் மீது உண்டு. இத்தகைய விமர்சனங்கள் குருச்சேவ் குழுவினரின் திருத்தல்வாதமே என்றும், ஸ்டாலினைப் பற்றி அறிந்துகொள்ள அவரது எழுத்துகளையே படியுங்கள் என்றும் பரிந்துரைக்கிறது ‘அலைகள்’ பதிப்பகம். தமிழில் முதன்முதலாக ஸ்டாலின் எழுத்துகள் முழுமையையும் 15 தொகுதிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. முதல் தொகுதி, 1901-1907 காலகட்டத்தில் எழுதப்பட்டவை. டிப்லிஸ் நகரத்தை […]

Read more

தொடரும் காஷ்மீர் யுத்தமும் இந்துத்துவ அரசியலும்

தொடரும் காஷ்மீர் யுத்தமும் இந்துத்துவ அரசியலும், கி.இலக்குவன், அலைகள் வெளியீட்டகம், விலை 140ரூ. இந்தியாவின் தலை போல அமைந்து, 70 ஆண்டுகளாகத் தீராத தலைவலியாக இருக்கும் காஷ்மீர் பிரச்சினை பற்றி, ஆதி முதல் தற்போது 370 – வது பிரிவு ரத்து செய்யப்பட்டது வரையில் நடைபெற்ற வரலாற்றை இந்த நூல் விளக்கமாகத் தருகிறது. முதல் நூற்றாண்டு முதல் அங்கு நடைபெற்ற படையெடுப்புகளும், 1846 -ம் ஆண்டு டோக்ரா மன்னர் குலாப் சிங்கிடம் 75 லட்சம் ரூபாய்க்கு காஷ்மீர் மாநிலம் ஆங்கிலேயர்களால் விற்கப்பட்டது என்ற வியப்பான […]

Read more

சில கருத்துகள் சில சிந்தனைகள்

சில கருத்துகள் சில சிந்தனைகள், லட்சுமணப் பெருமாள், தடம் பதிப்பகம், பக். 216, விலை 200ரூ. அரசியல் கட்சிகளின் நுண்ணரசியல், சூழலியல் என, அவ்வப்போதைய சூழல்களைச் சார்ந்து, லட்சுமணபெருமாள், இணையதளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். இதில், ஹைட்ரோ கார்பன், லோக் ஆயுக்தாவின் மாநில உரிமை, முத்ரா வங்கி திட்டம் என, பலவற்றை புள்ளி விபரங்களுடன் பேசுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

இல்லுமினாட்டி

இல்லுமினாட்டி, குன்றில் குமார், அழகு பதிப்பகம், பக்.160, விலை 150ரூ. உலகம் முழுவதையும் ஒரே ஆட்சி அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் எனும் ஒற்றை லட்சியத்தின் கீழ், 1776ம் ஆண்டு துவங்கப்பட்டு, உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களால் ரகசியமாகச் செயல்படுத்தப்படுவதாகக் கருதப்படும், ‘இல்லுமினாட்டி’ அமைப்பு பற்றிய விரிவான நுால். இல்லுமினாட்டி என்றால், ‘தெளிவூட்டுபவர்’ எனும் பொருள். உலக வங்கி மற்றும் ராணுவத் தலைமையகத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும், உலகின் மக்கள் தொகையைக் குறைப்பதும், பஞ்சம், பட்டினி, வறுமை, யுத்தம், வியாதிகள் மூலமாக பேரழிவுகளை ஏற்படுத்துவது […]

Read more

கடற்காகம்

கடற்காகம், முஹம்மது யூசுஃப், யாவரும் பதிப்பகம், விலை: ரூ.395 அரபு நாடுகளின் அரசியல் இராக், குவைத், சவூதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், அமீரகம், ஓமன், ஈரான் போன்ற அரபு நாடுகளின் அரசியலை இந்நாவல் பேசுகிறது. சுற்றுச்சூழல் போர் என்ற தொழில்நுட்பத்தை வல்லரசு நாடுகள் பயன்படுத்தி, செயற்கை சுனாமி, நிலநடுக்கத்தை உருவாக்குவதை விவரிக்கிறது. வானில் கருமேகம் சூழும்போதெல்லாம், ஈரானிய பார்சி மொழியில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் சமீரா டீச்சர் கதாபாத்திரம் ஒரு கவிதை. அரபு மண் என்றாலே பாலைவனம், ஒட்டகம், வறட்சி என்றே பழக்கப்பட்ட நமக்கு அதன் […]

Read more

காஷ்மீர் இந்தியாவுக்கே

காஷ்மீர் இந்தியாவுக்கே, கேப்டன் எஸ்.பி.குட்டி, கிழக்கு பதிப்பகம், பக்.304, விலை 250ரூ. கடந்த, 1947ல் நடந்த இந்தியா – பாக்., போர் பின்னணியை முழுமையாக விளக்குகிறது இந்த நூல். ஆசிரியர் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதால், ராணுவ செயல்பாடுகளையும், நுணுக்கங்களையும் எளிமையாக விவரிக்கிறார். போரின் நிகழ்வுகள், அதில் இந்திய ராணுவ வீரர்களின் தியாகம், அரசியல்வாதிகளின் தவறான அணுகுமுறை என, அனைத்தும் விளக்கப்பட்டுள்ளன. காஷ்மீரில் உரிமை கோரும் பாகிஸ்தானின் நடவடிக்கையை ஏற்க மறுப்பதற்கான காரணத்தை ஆதாரங்களுடன் பேசுவது கடினம். அதனை எளிமைப்படுத்தி இருக்கிறார், நூலாசிரியர். காஷ்மீர் பிரச்னை […]

Read more

ஒரு விரல் புரட்சி

ஒரு விரல் புரட்சி, அருணன், வசந்தம் வெளியீட்டகம், விலை 150ரூ. ஒற்றைவிரலில் ஒரு துளி மையால் கறைப்படுத்திக் கொண்டு தேர்ந்தெடுத்த நாட்டின் கறையைப் போக்கக்கூடிய கறையில்லா அரசியல் வாதியைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படுவதுதான் தேர்தல். ஆனால், ஜனநாயக நாட்டில் தேர்தலின் நோக்கம் சரியாக நடக்கிறதா? சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரையான தேர்தல் நிகழ்வுகள், வெற்றிக்காக கட்சிகள் வகுத்த வியூகங்கள், அதன் விளைவுகள் என்று சுமார் ஐம்பது ஆண்டுகால இந்திய, தமிழக தேர்தல் குறித்து அலசி ஆய்ந்து எழுதப்பட்ட வரலாறு, ஓட்டுப்போடும் பொது ஜனம் முதல் […]

Read more
1 3 4 5 6 7 44