தருமபுரி முதல் பூடான் வரை

தருமபுரி முதல் பூடான் வரை, வரலாற்றுத் தடங்களின் வழியே, இரா.செந்தில், டிஸ்கவரி புக் பேலஸ், பக்.104, விலை ரூ.120; தருமபுரியில் மருத்துவராக உள்ள நூலாசிரியர், பயணங்களின் பயனை அறிந்தவர் மட்டுமல்ல; அதற்கான நெறிமுறைகளையும் அனுபவத்தால் உணர்ந்தவர். தனது பூடான் வரையிலான மகிழுந்துப் பயண அனுபவத்தை நூலாகத் தந்திருக்கிறார். தருமபுரியில் தொடங்கி நாட்டின் பல மாநிலங்கள் வழியே காரில் பயணித்து, அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்க்கைச்சூழல், விருந்தோம்பல், சரித்திர நிகழ்வுகள் ஆகியவற்றை ஆங்காங்கே பதிவு செய்யும் நூலாசிரியரின் நுட்பம் பாராட்டுக்குரியது. குறிப்பாக, இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு […]

Read more

பா.ஜ.க வடகிழக்கை வென்ற வரலாறு

பா.ஜ.க வடகிழக்கை வென்ற வரலாறு, எஸ்.ஜி.சூர்யா, தடம் பதிப்பகம், விலைரூ.300 குறிப்பிட்ட கட்சி தேர்தல் செயல்பாட்டில் மேற்கொண்ட உத்தி சார்ந்து விரிவாக எழுதப்பட்டுள்ள புத்தகம். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் கடைப்பிடிக்கப்படும் தேர்தல் உத்தி சார்ந்து ஒப்பீட்டு வாய்ப்பை வழங்குகிறது. ஓட்டுக்கு நோட்டு கொடுக்காமல், இலவசங்கள் பற்றி அறிவிக்காமல் சாதித்துள்ள வெற்றி என குறிப்பிட்டுள்ளார். இலக்கை நிர்ணயித்து, களத்தில் பணியாற்றி, ஒருங்கிணைத்து, எதிர்க் கட்சிகளை பின்தள்ளிய கதை விவரிக்கப்பட்டுள்ளது. அரசியல் எதிரியான காங்கிரஸ், சித்தாந்த எதிரியான கம்யூனிஸ்ட் கட்சிகளை, வட […]

Read more

நவீன அரசை காந்தி எப்படிப் பார்த்தார்?

நவீன அரசை காந்தி எப்படிப் பார்த்தார்?, காந்திஸ் பொலிட்டிக்கல் ஃபிலாஸஃபி: எ க்ரிட்டிக்கல் எக்ஸாமினேஷன், பிக்கு பாரேக், பால்கிரேவ் மேக்மில்லன் – 1989, விலை: ரூ.1,895 காந்திய ஆய்வுகளில் பிக்கு பாரேக் எழுதிய ‘காந்தியின் அரசியல் தத்துவம்: ஒரு நுண்ணாய்வு’ (Gandhi’s Political Philosophy: A Critical Examination) என்ற ஆங்கில நூல் குறிப்பிடத் தக்க ஒன்று. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இந்நூல் முன்வைத்த சில வாதங்கள் இன்றைய காலத்தில் கேள்விகளாக மீண்டும் எழத் தொடங்கியிருக்கின்றன. காந்தியின் அரசியல் தத்துவ நிலைப்பாடுகள் […]

Read more

தியாகச் செம்மல் காமராஜ்

தியாகச் செம்மல் காமராஜ், சாவி, நர்மதா பதிப்பகம், விலைரூ.75. மறைந்த காமராஜரின் அரசியல் வாழ்வை விவரிக்கும் நுால். பத்திரிகையாளர் சாவி, நேரடியாக பார்த்தவற்றை பதிவு செய்துள்ளார். கேள்வி – பதிலாகவும் உள்ளது. பதவியில் இருந்து விலகுவதால், அசவுகரியங்கள் ஏற்படாதா என்ற கேள்விக்கு, ‘ஓய்வூதியத்தில் வீட்டு வாடகை, வரி போக, 1,000 ரூபாய் மீதமிருக்கும். அதில், காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்கு சென்று வரும் செலவு, 600 ரூபாய்; மீதமுள்ள, 400 ரூபாயை என் செலவுக்கும், தாய்க்கும் அனுப்பியது போக, மீதி பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து விடுவேன்…’ […]

Read more

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை? ,  டி.தருமராஜ், கிழக்கு பதிப்பகம், பக்.176, விலை ரூ.180.     சமுதாயத்திற்கு ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி நிற்கிற பொது பிம்பங்கள் அவசியம். அப்படிப்பட்ட பொது பிம்பமாக இளையராஜா இருக்கிறார். அதனால் அவர் முதல்வர் வேட்பாளராக மாட்டார் என்பதை விளக்குகிறது நூலின் தலைப்பைக் கொண்ட கட்டுரை. இந்நூலில் 12 கட்டுரைகள்அடங்கியுள்ளன. ஏற்கெனவே தமிழ்த் திரைப்படப் பாடல்கள் தமிழ் மக்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கங்கள் எவை? இளையராஜா இசை அமைத்த பாடல்கள் அவற்றிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை இந்நூலில் […]

Read more

சுக்கா… மிளகா… சமூக நீதி?

சுக்கா… மிளகா… சமூக நீதி?  ஒரு மிக நீண்ட நெடிய வரலாறு,  மருத்துவர் ச.ராமதாசு, செய்திப்புனல், பக்.512,  விலை ரூ.500; இட ஒதுக்கீடு என்றால் என்ன? இந்த உரிமையை நிலைநாட்ட எவ்வளவு போராட்டங்களும் தியாகங்களும் செய்யவேண்டி வந்தது என்பதை இந்நூல் விளக்குகிறது. ஒட்டுமொத்த இந்தியாவின் இடஒதுக்கீட்டு வரலாற்றையும் குறிப்பாக, கேரளா-தமிழ்நாடு-கர்நாடகா- ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றின் இட ஒதுக்கீட்டிற்கான வரலாற்றையும் எழுதியிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியில் பின் தங்கியோர் கல்வி மேம்பாட்டுக்காக 1885-இல் அளிக்கப்பட்ட நிதி உதவி; நீதிக்கட்சி ஆட்சியில் 1927-இல் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கான ஆணை வெளியிடப்பட்டது; 1935-இல் […]

Read more

தமிழக மாவட்டங்கள்

தமிழக மாவட்டங்கள், குன்றில் குமார், சங்கர் பதிப்பகம், விலைரூ.200 தமிழகத்தில், 36 மாவட்டங்கள் குறித்த செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. மாவட்ட பரப்பளவு, மக்கள்தொகை, லோக்சபா, சட்டசபை தொகுதிகள், வருவாய் கோட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சி நகராட்சிகள் என, அனைத்து விபரங்களும் அமைந்துள்ளன.கடந்த, 1956ல், 13 மாவட்டங்களாக இருந்த தமிழகம், 1966 முதல் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. புதிய மாவட்டங்கள் எந்த ஆண்டுகளில் உருவாக்கப்பட்டன என்ற தெளிவான விபரங்களும் உள்ளன. ‘சுப்ரீம் கோர்ட் ஆப் மெட்ராஸ்’ என துவக்கத்தில் இருந்தது, பின் ஆகஸ்ட் 15, 1862 முதல், […]

Read more

ஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து மன் கி பாத்

ஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து மன் கி பாத், வேலூர் எம்.இப்ராஹிம், கிழக்குப் பதிப்பகம், பக்.160, விலை ரூ.180. மதவெறி மிகுந்திருக்கும் ஆபத்தான காலகட்டத்தில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக மிளிர்கிறார் நூலாசிரியர். ஒருகாலத்தில் தீவிர பாஜக எதிர்ப்பாளராக இருந்த அவர், சில ஆண்டுகளாக பாஜகவின் மீது நல்லெண்ணத்தை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன்மூலம், தேசிய நீரோட்டத்திலிருந்து பிரிந்து செல்ல விழைபவர்களைச் சிந்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார். இது எளிய செயலல்ல. இந்த மத ஒற்றுமைப் பணியில் ஈடுபடுவதால் இவரது குடும்பமே சமுதாயரீதியாக ஒதுக்கிவைக்கப்பட்டது; […]

Read more

முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள்

முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் பேருரைகள், இரண்டாம் பாகம், தொகுப்பாசிரியர்:கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெளியீடு, விலை: ரூ.100 முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களான காயிதே மில்லத் எம்.முஹம்மது இஸ்மாயில் தொடங்கி லால்பேட்டை எம்.ஏ.அபுசாலிஹ் வரையிலான ஒன்பது பேர்களின் பேருரைகள் ஏற்கெனவே முதல் பாகமாக வெளியாகியிருந்தன. இப்போது எம்.ஏ.லத்தீப், ஏ.ஷாகுல் ஹமீத், ஆ.கா.அ.அம்துல் சமத், வி.எஸ்.டி.சம்சுல் ஆலம் ஆகியோரின் பேருரைகள் தொகுக்கப்பட்டுப் புத்தகமாகியிருக்கின்றன. முக்கியமானதொரு அரசியல் ஆவணம் இந்தப் புத்தகம். நன்றி: தமிழ் இந்து, 7/3/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

நரேந்திர மோடி என்னும் நான்

நரேந்திர மோடி என்னும் நான்…, மானோஸ், குமரன் பதிப்பகம், விலைரூ.400 பிரதமர் மோடி, இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றிப் பெற்று, பிரதமர் ஆனதை முன்னிட்டு, அவரது சாதனை பயணத்தை விரிவாக எழுதியுள்ளார். மோடியின் தேர்தல் வெற்றியை தொடர்ந்து, இந்தியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், அவரது அடுத்தடுத்த திட்டங்கள், வெளிநாட்டு பயணங்களின் நோக்கம், ஊழலுக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதற்கான அவரது திட்டங்கள் போன்றவற்றை விரிவாக, 125 அத்தியாயங்களில் எழுதியுள்ளார். – என்.எஸ்., நன்றி: தினமலர், 23/8/20. இந்தப் புத்தகத்தை […]

Read more
1 2 3 4 5 6 44