ஆப்கானிஸ்தான் – புரியாத போர்களின் தொடர் சங்கிலி -நேற்றும் இன்றும்

ஆப்கானிஸ்தான் – புரியாத போர்களின் தொடர் சங்கிலி -நேற்றும் இன்றும், ஜெகாதா, வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை: ரூ.150. ஒசாமா பின்லேடனின் ஆதிக்கம், ஆப்கனில் முளைத்த பயங்கரவாதக் குழுக்கள் என தாலிபான்களின் வரலாற்றையும் அதன் மூலமாகக் கடந்த 40 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த மாற்றங்களையும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிடமிருந்து ஆப்கன் எதிர்கொண்ட அழுத்தங்களையும் விளக்கும் விதமாக எழுதப்பட்ட 19 கட்டுரைகளை உள்ளடக்கிய நூல். நன்றி: தமிழ் இந்து, 12/2/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

கிராம நிருவாகத்தின் புரட்சி

கிராம நிருவாகத்தின் புரட்சி, இரா.போசு, ரெயின்போ, விலைரூ.300. வருவாய் கிராம நிர்வாகத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றி வரலாற்று பின்புலத்துடன் எழுதப்பட்டுள்ள நுால். கிராம நிர்வாகத்தின் தோற்றம், அதில் பணியாற்றிய கர்ணம், மணியம், தலையாரி நியமன முறை, அவர்களின் பணி நிர்ணயம், போலீஸ் அதிகாரத்துடன் பணியாற்றிய தலையாரிகள் போன்ற விபரங்கள் எளிமையாகத் தரப்பட்டுள்ளன. கிராம நிர்வாகத்தில் முதல் சட்டம், 1894ல் கொண்டு வரப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து கிராம உருவாக்கம் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப தலையாரிகள் நியமனம் செய்யப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. […]

Read more

ஆறங்கம்

ஆறங்கம் (அரசியல் நாவல்), ஆர். நடராஜன், ஆதாரம்வெளியீடு, பக்.208, விலை குறிப்பிடப்படவில்லை; அரசியல் உலகில் ஜாம்பவான்களாக வலம் வந்த ஒவ்வொருவரும், அரசியல் – அரசியல்வாதிகள் குறித்த அவர்களின் பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல சாமானியர்களும் நகைச்சுவையாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவையெல்லாம் இந்நூலுக்கு வலு சேர்த்திருக்கின்றன. நாட்டை ஆளும் தலைவனுக்கு (அரசர்) தேவையான ஆறு உறுப்புகள் என்று சொல்லக்கூடிய படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆகியவற்றையும், ஆறு வேதாங்கங்களையும் சுற்றி நூல் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தானோ என்னவோ இந்நூலுக்கு ஆறங்கம் என்று பெயர் சூட்டியிருக்கிறார் […]

Read more

அகதியின் துயரம்

அகதியின் துயரம், பெர்னார்ட் சந்திரா, காலச்சுவடு பதிப்பகம், விலைரூ.120 இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. போரால் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் நாடு திரும்பவில்லை. இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களின் துயரங்கள் குறித்து எழுதப்பட்டுள்ள நுால். உலக அகதிகளின் நிலவரம், இந்திய நாடு எதிர்கொள்ளும் அகதி பிரச்னை, உலகெங்கும் வாழும் இலங்கை தமிழ் அகதிகள், மொழி சார்ந்த நல்லிணக்கத்துக்கு தடையாக உள்ள போட்டி அரசியல் என பல கருத்துகளை அலசுகிறது. இந்திய வம்சாவளி அகதிகள் எதிர்கொள்ளும் தனித்துவமான […]

Read more

தே: ஒரு இலையின் வரலாறு, இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு

தே: ஒரு இலையின் வரலாறு, ராய் மாக்ஸம், தமிழில்: சிறில் அலெக்ஸ், இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு, தமிழில்: பி.ஆர்.மகாதேவன், கிழக்கு வெளியீடு, மொத்த விலை: ரூ.650. தமிழ் வாசகர்களுக்கு ‘உப்பு வேலி’ மொழிபெயர்ப்பு நூல் மூலம் ஏற்கெனவே அறிமுகமானவர் ராய் மாக்ஸம். இந்த இரண்டு புத்தகங்களுக்கும் ‘உப்பு வேலி’க்கும் தொடர்பு இருக்கிறது. எந்த வழியிலெல்லாம் இந்தியா காலனியப்படுத்தப்பட்டது என்பதை சுவாரஸ்யமான நடையில் கூறுபவை இந்தப் புத்தகங்கள். இந்திய வரலாற்றில் தேயிலைக்கு உள்ள முக்கியமான இடத்தை ஒரு புத்தகம் சொல்கிறதென்றால் இன்னொரு புத்தகம் ஐரோப்பிய ஆக்கிரமிப்புகளைப் பற்றிய […]

Read more

கரிசலில் உதித்த செஞ்சூரியன்

கரிசலில் உதித்த செஞ்சூரியன், (சோ.அழகர் சாமியின் வாழ்க்கைத் தடம்),  எஸ்.காசிவிஸ்வநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.366,  விலை ரூ.335. எட்டயபுரத்துக்கு அருகில் உள்ள ராமனூத்து என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் சோ. அழகர்சாமி. தனது 14 வயதிலேயே நாட்டுப்பற்று உடையவராகத் திகழ்ந்த அவர் காங்கிரஸ், சோசலிஸ்ட் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு இருந்திருக்கிறார். ஜெயபிரகாஷ் நாராயண் உள்ளிட்ட பல புகழ்பெற்ற அரசியல் தலைவர்களை எட்டயபுரத்துக்கு வரவழைத்து அரசியல்மாநாடுகள் நடத்தியிருக்கிறார். பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். 1948 – இல் கம்யூனிஸ்ட் […]

Read more

இந்தியப் பொருளாதாரம் வரலாறு காட்டும் வழிகள்

இந்தியப் பொருளாதாரம் வரலாறு காட்டும் வழிகள், தொகுப்பு ஆசிரியர் ஆ.அறிவழகன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், விலை 250ரூ. வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி, ஏழைகளின் முன்னேற்றம் ஆகியவற்றைத் தனது குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றிய மால்கம் ஆதிசேசய்யாவின் பன்முகத் தன்மைகளை இந்த நூல் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது. சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் மூலம், வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை, தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் லஞ்ச ஊழல், கருப்புப் பணம், சுற்றுச் சூழல் […]

Read more

காமராஜ் எனும் தமிழ் ஆளுமை

காமராஜ் எனும் தமிழ் ஆளுமை, வை.ஜவஹர் ஆறுமுகம், மணிமேகலைப் பிரசுரம், விலை 120ரூ. கர்மவீரர் காமராஜரின் ஆளுமைகளை இந்த நூல் புதிய கோணத்தில் தந்து இருக்கிறது. காமராஜரின் சுற்றுப் பயணத்தில் அவருடன் பல ஆண்டுகள் கலந்துகொண்ட இந்த நூலின் ஆசிரியர், அந்தப் பயணங்களின் போது வெளியான காமராஜரின் வியப்பான குணநலன்களை சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறார். பத்திரிகைகளை காமராஜர் எந்த அளவுக்கு மதித்தார் என்பது, கடைநிலை ஊழியரின் குறையைக் கேட்டதும், அதற்குத் தீர்வு காணும் வகையில் அரசு ஆணையை மாற்றி அமைத்தது, விதிவிலக்கு கொடுத்து […]

Read more

காந்தி என்கிற காந்தப்புலம்

காந்தி என்கிற காந்தப்புலம், அ.பிச்சை, சந்தியா பதிப்பகம்,  பக்.140, விலை ரூ.138. தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்து நூற்றைம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவர் குறித்து எழுதப்பட்ட இருபது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். தென்னாப்பிரிக்காவின் ஒரு பகுதியில் வசிக்கும் ஆசிய கண்டத்தினர் தங்கள் சுயவிவரங்களைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தார், அப்போது அங்கு பாரிஸ்டராக இருந்த மகாத்மா காந்தி. அந்த சட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அவர் கைக்கொண்ட முறையே பிற்காலத்தில் சத்தியாகிரகம் […]

Read more

கலைஞர் என்னும் மனிதர்

கலைஞர் என்னும் மனிதர், மணா, பரிதி பதிப்பகம் வெளியீடு, விலை: ரூ.500. கருணாநிதி ஆட்சியில் முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டபோதும் பத்திரிகை யாளர்கள் சந்திப்புகளில் கேள்விகளை எதிர்கொள்ள ஒருபோதும் தயங்கியதில்லை. அவருடைய பதின்பருவத்து வாழ்க்கை, பத்திரிகையாளராகத் தொடங்கியதன் காரணமாக அவருக்கு எப்போதும் பத்திரிகையாளர்கள்மீது இணக்கமான பார்வை உண்டு. பத்திரிகையாளர்கள் கேட்கிற முரண்பாடான கேள்விகளுக்கும் லாகவமாகப் பதில் சொல்லும் ஆற்றல் மிக்கவர் அவர். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படுகிற பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள், அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்துக் கேள்விகளை எழுப்பி […]

Read more
1 2 3 4 44