ஸ்பெக்ட்ரம் சர்ச்சை

ஸ்பெக்ட்ரம் சர்ச்சை, பத்ரி சேஷாத்ரி, கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை – 18, விலை 40 ரூ. உலகையே மலைக்க வைத்த ஊழல். தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.விற்குப் பெரும் அதிர்ச்சித் தோல்விக்குக் காரணமாக இருந்த ஊழல். இதையும் மிஞ்சி ஒரு ஊழல் உலகில் இனி நடக்க வாய்ப்பில்லை என்று கருதப்படும் ஊழல்… என்று பல ஆச்சரியங்களையும் அதிர்ச்சிகளையும் உள்ளடக்கிய ஊழல்,ஸ்பெக்ட்ரம் ஊழல், சுமார் ஒண்ணே முக்கால் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஊழல் விவகாரத்தின் முழுமையான பின்னணியை […]

Read more

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை, நாவலர் ஏ. இளஞ்செழியன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-02, விலை 95ரூ இங்கே தி.மு.க. இருப்பதைப்போல இலங்கையிலும் தி.மு.க. இருந்தது என்பதே பலருக்கும் தெரியாது. பெரியாரின் தலைமையை ஏற்று திராவிடர் கழகம் இங்கே இருந்தபோது இலங்கையிலும் அது உதயமானது. பெரியாரிடம் இருந்து முரண்பட்டு அண்ணாவும் அவரின் தம்பிமார்களும் விலகி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டபோது, இலங்கையிலும் அது தொடர்ந்தது. இங்கே, அரசியல் கட்சியாக தி.மு.க. மாறியபோது, அங்கே ஒரு மாற்றுச் சிந்தனை ஒலித்தது. ‘திராவிட’ என்று […]

Read more

வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி. தியாகராயர்

வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி. தியாகராயர், புலவர் ம. அய்யாசாமி, திருக்குறள் பதிப்பகம், பக்கங்கள் 336, விலை 225 ரூ. சென்னை சென்ட்ரலைத் தாண்டிப் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் செல்லும்போது வலப்பக்கத்தில் ரிப்பன் மாளிகை, அனைவரது கண்ணையும் கவரும். சென்னை மாநகராட்சிக் கட்டம் என, இன்று சிறப்பிக்கப்படும் இந்தக் கட்டடத்தின் முகப்பில் அமைந்திருக்கும் சிலைதான் பிட்டி தியாகராயர். எப்போதும் வெள்ளை ஆடை அணிந்ததால், ‘வெள்ளுடைவேந்தர்’ என்று போற்றப்பட்டவர். எனவே, அவரது சிலையும் வெள்ளை நிறத்திலேயே அமைந்துள்ளது. ராவ் பகதூர், திவான் பகதூர், சர் முதலான பட்டங்களை […]

Read more

மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர்.

மனிதப்புனிதர் எம்.ஜி.ஆர், கே.பி. ராமகிருஷ்ணன், எழுத்தாக்கம் – ஆர். கோவிந்தராஜ், வெளியீடு- விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை -2, விலை 110ரூ. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் என்ற பெயர் கலை, அரசியல் மற்றும் வெகுமக்கள் கலாச்சாரத்தில் இன்னும் அதிர்வுகளை ஏற்படுத்துவதாகும். எம்.ஜி.ஆர் என்ற ஆளுமை மறைந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும் தமிழ் நினைவில் அவர் அழிக்க முடியாத புராணிக கதாபாத்திரமாக நீடிக்கிறார். அவரது வள்ளல் தன்மை, மனிதாபிமானம், மக்கள் ஈர்ப்பு, அரசியல், சினிமா என சகல பரிமாணங்களிலும் நு¡ல்கள் தொடர்ந்து எழுதப்பட்டுக் […]

Read more

வாழ்புலம் இழந்த துயரம்

வாழ்புலம் இழந்த துயரம் சாளரம் வெளியீடு 2.1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யு மடிப்பாக்கம் சென்னை 600091 செப்டம்பர் 11 இரட்டைக்கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு இந்த உலகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுவிட்டது. அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்காவின் எதிரிகள் என்பதுதான் அந்தப் பிரிவினை. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் இரண்டு பெரும் யுத்தங்களை நடத்தி, பல்லாயிரக்கணக்கான மக்களை அமெரிக்கா படுகொலை செய்தது மட்டுமல்ல, உலகெங்கும் சுதந்திரப் போராட்ட இயக்கங்கள் கடுமையாக ஒடுக்கப்படுவதற்கான சூழலையும் அது உருவாக்கியது. இந்த நூலில் உள்ள கட்டுரைகள் கடந்த பத்தாண்டுகளில் இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா […]

Read more

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு, பழ. அதியமான், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பக்கங்கள் 480, விலை 325ரூ. மறுக்கப்பட்ட வரலாற்றுப் பக்கங்கள் –சா. கந்தசாமி சுதந்திரப் போராட்டக் காலத்தில் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்தார்கள். பத்திரிகைகள் நடத்தினார்கள். சத்தியாகிரகம் புரிந்தார்கள். தடியடி பட்டார்கள். சிறை சென்றார்கள். சிறையில் செக்கிழுத்தார்கள். கடைசியாக தூக்கில் போடப்பட்டார்கள். அவர்களில் பலரின் போராட்டப் பங்களிப்பு என்பது அதிகமாக இருந்தாலும், தங்களின் சொந்த நடத்தைகள், கருத்துக்கள், பேச்சுக்களால் தலைவர்களிடம் முரண்பட்டதால் பெரிய பதவிகளை பெறமுடியவில்லை. […]

Read more
1 42 43 44