திருக்குறள் ஆன்மிக உளவியல் உரை

திருக்குறள் ஆன்மிக உளவியல் உரை, பேரா.அர.வெங்கடாசலம், பழனியப்பா பிரதர்ஸ், பக். 432, விலை 385ரூ. திருக்குறளில், அரசியல், பொருளியல், சமயம், மெய்ப்பொருளியல், அளவையியல், மருத்துவ இயல், உளவியல், உழவியல் முதலான பல்துறைப் புலமைக் கூறுகளையும் திருவள்ளுவர் பதிவு செய்துள்ளார். ஆன்மிகம் என்பதை நடுநிலையோடு விளக்கி, உளவியல் என்ற அறிவியல் சார்ந்த அனுபவத்தோடு ஆன்மிக உளவியல் நோக்கில் உரை கண்டுள்ளார், நுாலாசிரியர். சில குறட்பாக்களுக்கு, தான் கருதும் மாற்றுப் பொருளையும் வழங்கி, பின் ஆன்மிகம் சார்ந்த உளவியல் உரையை ஆய்வுரையாகத் தந்துள்ளார். ‘ஆன்மா’ என்னும் சொல்லை […]

Read more

காஞ்சியின் கருணைக்கடல்

காஞ்சியின் கருணைக்கடல், திருப்புர் கிருஷ்ணன், தாமரை பிரதர்ஸ், பக். 212, விலை 210ரூ. மனிதர்களின் மேல் கருணை கொண்டு கனிந்த பழமாய் காட்சியளிப்பவர் காஞ்சிப் பெரியவர். எளிமையின் திருவுருவாய் இருந்தாலும், பிரச்னைகளின் தீட்சண்யத்தை உணர்ந்து பக்தர்களின் துயர் துடைப்பவர். எல்லாம் இறையே என்பது தான் அவரது சிந்தனை. கீரையை ருசித்து சாப்பிடுவதால், அதை தினமும் நடைமுறைப்படுத்திய பணியாளரிடம், சாணி உருண்டையை வரவழைக்கச் சொல்லி சாப்பிட்டவர் காஞ்சிப்பெரியவர். பதறிப்போன பணியாளரிடம், கீரையும், சாணியும் ஒன்று தான் என்பதை என் நாக்கிற்கு உணர்த்தி பாடம் நடத்திக் கொண்டிருக்கிறேன் […]

Read more

சுந்தரர்

சுந்தரர், முகிலை இராசபாண்டியன், ஞாலம் இலக்கிய இயக்கம், பக். 224, விலை 200ரூ. சேக்கிழார் படைத்த பெரிய புராணம், சுந்தரர் வாழ்க்கையுடன் தொடங்கி, சுந்தரர் வாழ்க்கையுடனே நிறைவடைகிறது. திருக்கயிலாயத்திற்குச் சுந்தரர் வருகிற காட்சியைக் கண்டதும், உபமன்னிய முனிவர் எழுந்து நின்று வணங்குகிறார். சிவபெருமானை மட்டுமே வணங்கும் உபமன்னிய முனிவர், இவரைக் கண்டதும் எழுந்து நின்று வணங்குகிறாரே என்று, அவரது சீடர்கள் கேட்கின்றனர். அவர்களிடம், இவர் தான் சுந்தரர். சிவபெருமானின் மறுவடிவம் தான் சுந்தரர். அடியார்கள் அந்தச் சுந்தரரின் வரலாற்றை கேட்கின்றனர். அவர்களுக்கு அந்த வரலாற்றை […]

Read more

இறை இரகசியம்

இறை இரகசியம், பண்டிட் நாராயணன், ஸ்ரீநிதி பப்ளிஷர்ஸ், விலை 390ரூ. எங்கே கடவுள்? பிரபஞ்சம் உருவான வரலாறு, யுகங்கள், சிருஷ்டி கர்த்தா, முப்பெரும் தேவியராகிய கலைமகள், அலைமகள், மலைமகள், விஷ்ணு மாயா, 108 திவ்ய தேசங்கள், ஆதிசிவன், 1,008 லிங்கங்கள், சிவபெருமானின் வேறு வடிவங்கள், தட்ஷிணாமூர்த்தி, காலபைரவர் உள்ளிட்ட ஆன்மிக செய்திகள் அடங்கிய பொக்கிஷம் இந்நுால். ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள், குலதெய்வ வழிபாடு ஏன்? இறை வழிபாடு ஆறு, ஜோதிடம் உருவான வரலாறு, இறையை உணர்வது எப்படி? நம்மை நாமே உணர்வது எப்படி? மந்திரம், […]

Read more

திருமாலின் பெயர்கள் 1000

திருமாலின் பெயர்கள் 1000, வரத நம்பி இளநகர் காஞ்சிநாதன், ஜெயதாரிணி அறக்கட்டளை, விலை 330ரூ. பீஷ்மரால் உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரத்தின் பொருளை அனைவரும் அறிந்து பயனடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழில் தொகுக்கப்பட்டு உள்ளது. இதில் புதைந்துள்ள அர்த்த விசேஷங்கள் எளிய நடையில் எடுத்துக் கூறப்பட்டு உள்ளது. பகவானின் ஆயிரம் நாமங்களையும் அணுஅணுவாக அலசி ஆராய்ந்துஒவ்வொரு திருநாமத்தின் உட்பொருளை நூலாசிரியர் உலகமறியவைத்துள்ளார். அனைவராலும் பாட படிக்க புரிந்துகொள்ளக்கூடிய பழகு தமிழில் கவிதை வடிவில் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை […]

Read more

கிரிவலப் பாதையிலே

கிரிவலப் பாதையிலே, வே.மகாதேவன், அருள் பதிப்பகம், விலை 80ரூ. திருவண்ணாமலை கிரிவலத்தின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், எந்தெந்த நாட்களில் செல்லும் கிரிவலத்துக்கு என்னென்ன சிறப்பு, கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து தெய்வங்கள் மற்றும் தீர்த்தங்களின் சிறப்பு ஆகியவை இந்த நூலில் விவரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாடு

சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாடு, சு.சசிகலா,  காவ்யா, பக்.272, விலை ரூ.280 சித்தர்கள் குறித்து பல்வேறு ஆய்வுகளைச் செய்திருக்கும் நூலாசிரியர், சித்தர் பாடல்களில் இறைக்கோட்பாட்டை ஆய்வு செய்திருக்கிறார். அகத்தியர், பட்டினத்தார், பாம்பாட்டிச் சித்தர், சிவவாக்கியர் உள்ளிட்ட 18 சித்தர்களின் வரலாற்றையும், அவர்களுடைய படைப்புகளில் காணப்படும் இறைக்கோட்பாட்டையும் இந்நூல் ஆய்வு செய்திருக்கிறது. யோகம், மருத்துவம், ஞானம், இரசவாதம் ஆகியவற்றை சித்தர்கள் நுட்பமாக விளக்கியுள்ளதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது. மனிதனுக்கு வெளியே உள்ள அண்டத்துள் உள்ளது மனிதனின் பிண்டத்துள் உள்ளது என்று சித்தர்கள் கூறியிருப்பதை, மனிதன் இயற்கையின் ஒரு பகுதி, […]

Read more

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், எழுபது பீடாதிபதிபளின் குருபரம்பரை தொகுப்பு, டாக்டர் ஆர்.வைத்தியநாதன், ஸ்ரீ சங்கராலயம், பக். 212, விலை 250ரூ. எழுபது பீடாதிபதிகளின் குருபரம்பரை தொகுப்பு புத்தகம் ஆன்மிகம் தொடர்பானது. ஸ்ரீ காஞ்சி மடம் என்பது மகா பெரியவர் என்ற ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் காலத்தில் பெரிய விருட்சமாக வளர்ந்தது. நாத்திக வாதம் குறைய பல்முனை ஆன்மிக கருத்துக்களை மக்களிடம் பரப்பியவர். அவர் சீடர்கள் அளித்த தகவல்கள், ஸ்ரீ ஜெயேந்திரர் காட்டிய சில ஆதாரங்கள் அடிப்படையில், இப்புத்தகம் உருவானதாக ஆசிரியர் […]

Read more

உன்னை அறிந்தால்

உன்னை அறிந்தால், லட்சுமி ராஜரத்னம், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 120, விலை 120ரூ. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை. வார்த்தை தவறி விட்டால்… அதன் விளைவுகள் சொல்லொணா துயரம் தருகின்றன. நெல் போட்டால் நெல் விளையும். சொல் போட்டால் சொல் தானே விளைய வேண்டும். மாறாக துன்பம், கோபம், ஆற்றாமை, ஆதங்கத்தை ஏன் அறுவடை செய்ய வேண்டும் என, கேள்வி கேட்கிறார், ஆசிரியர் லட்சுமி ராஜரத்னம். மக்கு பல், உதட்டை கடவுள் ஏன் கொடுத்திருக்கிறார் தெரியுமா என்பது அவரது கேள்வி. […]

Read more

கா.சு.பிள்ளை சைவப்பெருமக்கள்

கா.சு.பிள்ளை சைவப்பெருமக்கள், பேரா.சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக். 664, விலை 680ரூ. தமிழகத்தின் தொன்மைச் சமயம் சைவமாகும். இச்சமயம் வளர்த்த பெரியோர் பற்பலராவர்; அவருள் தாயுமானவர், பட்டினத்தார், குமரகுருபரர், சிவஞான சுவாமிகள் ஆகிய நால்வர் பற்றியும், சைவ சித்தாந்த விளக்கத்தையும், சைவ சிந்தாந்த சந்தனாச்சிரியர்கள் பற்றியும் இந்நுால் விரிவாகச் சொல்லியுள்ளது. நுாலைப் படைத்தவர், தமிழகத்தில் தமிழ் வளர்த்த சான்றோரில் குறிப்பிடத்தக்க இடம்பெற்றவர். சட்டம் படித்த பலர் தமிழறிஞராகவும் விளங்கினர். அவருள் எம்.எல்., பிள்ளை எனக் குறிக்கப்பட்ட, கா.சுப்பிரமணிய பிள்ளை முதன்மையாளர். அவர் காலத்து, பி.எல்., சட்டப் […]

Read more
1 24 25 26 27 28 128