கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்தபுராணம்

கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்தபுராணம், மூலமும் உரையும் பகுதி 1, உரையாசிரியர் சிவ.சண்முகசுந்தரம், பாரி நிலையம், விலை 1500ரூ. எல்லாப் பொருளும் உள்ள கந்தபுராணம் பதினான்காம் நூற்றாண்டில் கச்சியப்ப சிவாசாரியார் இயற்றியதாகக் கணிக்கப்படும் காவியமான கந்தபுராணத்தின் மூலமும் உரையும் கொண்ட நூல் வரிசையின் முதல் பகுதி இது. கந்தனாகிய முருகனின் வீரதீரச் செயல்களைச் சொல்லும் கந்தபுராணம் 91 படலங்கள், 10 ஆயிரத்து 345 பாடல்களைக் கொண்டதாகும். ‘எந்தப் பொருளும் கந்தபுராணத்திலே உள’ என்னும் பழமொழியால் சிறப்புப் பெற்றது ‘கந்தபுராணம்’. கச்சியப்ப சிவாச்சாரியார் வரலாறு, கந்தபுராணம் […]

Read more

நெமிலி ஸ்ரீ பாலா குருபீடம்

நெமிலி ஸ்ரீ பாலா குருபீடம், நெமிலி ஸ்ரீ பாபாஜி பாலா, வானதி பதிப்பகம், விலை 200ரூ. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது சான்றோர் வாக்கு. அருணகிரியாருக்கு முருகனே குருவாய் வர வேண்டும் என்ற ஆசையால், குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்றார். நெமிலி ஜி.பாபாவிற்கு, பாலாவே குருவாக ஆட்கொண்டார் என்ற தகவல் உள்ளது. குருவருளும் திருவருளும் துவங்கி, குருவின் ஆற்றல் வரை, 10 தலைப்புகளில் இந்த நுால் பேசுகிறது. படிப்போருக்குக் கிடைக்கும் பாக்கியம் எனலாம். இந்த நுாலின் தனி சிறப்பே நாமாவளிகள் தான். […]

Read more

இன்புற்று சீலத்து ராமானுஜர்

இன்புற்று சீலத்து ராமானுஜர், தி.விப்நாராயணன், மித்ரஸ் பதிப்பகம், விலை 70ரூ. உலகு உய்ய வந்து அவதரித்த மகான் ராமானுஜர். அவரது வரலாற்றை இனிய கவிதைகளாக வடித்துள்ளார் விப்ரநாராயணன். ராமானுஜர், வைணவருக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக சமுதாயத்திற்காகவே வாழ்ந்தவர். ‘வேரூன்றிய தீண்டாமையை வேரோடு அழித்த சமுதாயச் சிற்பியாவார். வேதாந்த ஞானி இவர்; வேதத்தின் சாரத்தை தந்தவர்; வேண்டுதல் வேண்டாமை இலாதவர்’ என்று ராமானுஜரைப் புகழ்கிறார். ராமானுஜரின் வரலாறு, அவர் கற்ற முறை, அவரின் ஆச்சார்யர்கள் பற்றிய செய்திகள், ஸ்ரீபாஷ்யம் விளக்கவுரைக்கு அவர் பட்ட இன்னல்கள், அவரின் […]

Read more

குண்டலினி சொல்லப்படாத ஒரு கதை

குண்டலினி சொல்லப்படாத ஒரு கதை, ஓம் சுவாமி, ஜெய்கோ பப்ளிஷிங், விலை 199ரூ. இமயமலை அடிவாரத்தில் வாழும் ஒரு துறவியான ஓம் சுவாமி, மகிழ்ச்சியான வாழ்வைத் தேடும் வாழ்க்கையை இதில் அழகாகச் சொல்கிறார். குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்களை குழப்பாமல், புதிய விதமாக அவர் சொல்வதை, அவர் உரைகளில் கேட்டு உருவாக்கப்பட்ட சிறந்த படைப்பாகும். வணிக இயல் பட்டம், மேலாண்மைப்பட்டம் பெற்ற ஓம்சுவாமி, அகங்காரம் உட்பட அனைத்தையும் தகர்க்கும் குண்டலினி எழுப்புதல், நம் பாரம்பரிய தத்துவம் அதை சரளமாக விளக்குகிறது இந்த நுால், அன்புத்தத்துவத்தை […]

Read more

இராமகிருஷ்ண பரமஹம்சர்

இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி லோகேஸ்வரானந்தா, தமிழில்: இலா.வின்சென்ட், சாகித்திய அகாதெமி, பக்.128, விலைரூ.50. முறையான தொடக்க கல்வி கூட கற்காத கடாதர் என்ற சிறுவன் எவ்வாறு உலகமறிந்த ஞானியாக இராமகிருஷ்ண பரமஹம்சராகப் பரிணமித்தார் என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவும். ராமனின் அவதாரமாக ராமகிருஷ்ண பரமஹம்சர் தோன்றியிருப்பதாக அவர் குழந்தையாக இருக்கும்போதே பலர் கருதியிருக்கின்றனர். ராமகிருஷ்ண பரமஹம்சரும் பல சமயங்களில் கடவுளைக் காணும் பரவசநிலைக்கு உள்ளாகியிருக்கிறார். இந்நூல் ராமகிருஷ்ண பரமஹம்சரின் தனித்தன்மைகளை எடுத்துக்காட்டுகிறது. இந்துமதம் மூலம் மட்டுமே கடவுளை உணரும் வழிமுறைகளைத் தெரிந்து வைத்திருந்த ராமகிருஷ்ண […]

Read more

திருவருட்குறள்

திருவருட்குறள் (மூலமும் உரையும்), ஆளரியார் என்ற ஆதிநரசிம்மன், மணிவாசகர் பதிப்பகம், பக்.799, விலை ரூ.750. கால வகையினான் புதியன புகுதல் என்பது இலக்கிய உலகில் தவிர்க்க முடியாத ஒன்று. திருவள்ளுவரின் திருக்குறளை அடியொற்றியும், அடித்தளமாகவும் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. முப்பால்களையும், 366 அதிகாரங்களையும் கொண்டு, இயலுக்கு பத்து குறள்களாக, அதிகாரப் பெயர்களில் சில மாற்றங்களுடன் அமைந்துள்ளது. கற்புடைமை (13) அதிகாரத்தில், கற்புடைய பொற்புடையார் நல்லுருச் செய்துலகு/ கற்கோட்டம் கட்டித் தொழும்என்றும்; கணவன்-மனைவி கடன் எனக் கூறும் (22) அதிகாரத்தில், படிப்பும் பதவியும் பட்டமும் வாசல்/ படியிலே […]

Read more

பட்டினத்தார் தத்துவம்

பட்டினத்தார் தத்துவம், கு. பொன்மணிச்செல்வன், செந்தமிழ் பதிப்பகம், பக். 192, விலை 175ரூ. காதறுந்த ஊசியும் வாராது காணுங் கடை வழிக்கே என்ற ஞான வரிகளுக்கும், பட்டினத்தாருக்கும் உள்ள தொடர்பு தமிழகம் அறிந்தது. அத்தகைய சித்தர், சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சோழநாட்டின் பெருநகரமாகவும், மிகப்பெரிய துறைமுகமாகவும் விளங்கிய காவிரிப் பூம்பட்டினத்தில், செல்வம் கொழிக்கும் முதன்மை வணிகக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது இயற்பெயர் திருவெண்காடர். இவர் மாடமாளிகை, அயல்நாட்டு வணிகம், இன்பமான குடும்ப வாழ்க்கை, ஏராளமான பணியாளர்கள்… என்று செல்வச் செழிப்போடு வாழ்ந்தார். ஒருநாள் […]

Read more

காலமெல்லாம் காத்தருளும் காஞ்சித்தலங்கள்

காலமெல்லாம் காத்தருளும் காஞ்சித்தலங்கள், கே.சாய்குமார், சாய் குமார் வெளியீடு, விலை 140ரூ. புகழ்பெற்ற ஆயிரக்கணக்கான கோவில்களைக் கொண்டது காஞ்சிபுரம் மாவட்டம். இந்த மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய மூன்று வட்டங்களில் உள்ள கோவில்களின் தொகுப்பாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. மொத்தம் 355 சைவம் மற்றும் வைணவக் கோவில்களின் வரலாறு, அந்தக் கோவில்களுக்குச் செல்லும் வழி, அந்தக் கோவில்கள் திறந்து இருக்கும் நேரம், அங்கு தொடர்பு கொள்ள வேண்டியவரின் பெயர் மற்றும் தொலைபேசி விவரம் என்று பக்தர்களுக்குத் தேவையான அனைத்து பயன் உள்ள […]

Read more

வைணவம் வளர்த்த மகான்கள்

வைணவம் வளர்த்த மகான்கள், ஆர்.வி.பதி, நிவேதிதா பதிப்பகம், பக். 154, விலை 150ரூ. வைணவம் வளர்த்தவர் என்றதும் பன்னிரு ஆழ்வார்களையே நினைப்போம். ஆனால், வைணவத்தை எங்கும் பரப்பிய, 32 மகான்களை, இந்த நுாலில் மிகச் சுருக்கமாக ஆசிரியர் தந்துள்ளார். வைணவ குரு மரபில் முதல்வர் நாராயணர், இரண்டாம் ஆச்சார்யர் பெரிய பிராட்டியார், பின், விஷ்வக்சேனர் இவரே நம்மாழ்வாராக அவதரித்து நான்கு வேதங்களையும் திருவாய் மொழியாகப் பாடியவர். பெருமாள் கோவில்கள் தலையில் சாத்தப்படும் ஸ்ரீசடாரி, நம்மாழ்வார் சடகோபன் பெயரால் வழங்கப்படும் பெருமாள் பாதங்கள். பல நுாற்றாண்டுகளுக்கு […]

Read more

இறை இரகசியம்

இறை இரகசியம், பண்டிட் நாராயணன், ஸ்ரீநிதி பப்ளிஷர்ஸ், விலை 390ரூ. எங்கே கடவுள்? பிரபஞ்சம் உருவான வரலாறு, யுகங்கள், சிருஷ்டி கர்த்தா, முப்பெரும் தேவியராகிய கலைமகள், அலைமகள், மலைமகள், விஷ்ணு மாயா, 108 திவ்ய தேசங்கள், ஆதிசிவன், 1,008 லிங்கங்கள், சிவபெருமானின் வேறு வடிவங்கள், தட்ஷிணாமூர்த்தி, காலபைரவர் உள்ளிட்ட ஆன்மிக செய்திகள் அடங்கிய பொக்கிஷம் இந்நுால். ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள், குலதெய்வ வழிபாடு ஏன்? இறை வழிபாடு ஆறு, ஜோதிடம் உருவான வரலாறு, இறையை உணர்வது எப்படி? நம்மை நாமே உணர்வது எப்படி? மந்திரம், […]

Read more
1 25 26 27 28 29 128