தத்வமஸி

தத்வமஸி, சு.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ. தத்வமஸி என்ற வார்த்தையை கேட்டவுடன், அய்யப்பன் கோவில் தான் நினைவுக்கு வரும். ஏனெனில், அய்யப்பன் கோவில்களில் சன்னிதி முகப்பில், இந்த வார்த்தை எழுதப்பட்டிருக்கும். ஆனால், இந்த வார்த்தைக்கு பலருக்கு அர்த்தம் தெரியும். ‘நீ அதுவாக இருக்கிறாய்’ என்பது தான் இதன் அர்த்தம். இறைவனும் நாமும் ஒன்று தான் என்ற, அத்வைத தத்துவத்தை விளக்கும் வாசகம். ஆதிசங்கரர் எழுதிய, ‘வாக்கிய விருத்தி’ என்ற நுாலை, ஆங்கிலத்தில், சுவாமி தயானந்த சரஸ்வதி சுவாமிகள் மொழிபெயர்த்துள்ளார். அதை தமிழாக்கம் செய்துள்ள […]

Read more

புகழ் மணக்கும் அத்தி வரதர்

புகழ் மணக்கும் அத்தி வரதர், க.ஸ்ரீதரன், நர்மதா வெளியீடு, விலை: ரூ.60 முக்திதரு நகரேழில் முக்கியமாம் கச்சிதனில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை அனந்தசரஸ் என்ற திருக்குளத்திலிருந்து எழுந்தருளும் அத்திமர வரதர் வைபவத்தையொட்டி நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது இந்தப் புத்தகம். காஞ்சிபுரத்தின் பெருமை, அவதார வரலாறு, சரஸ்வதி வேகவதியாக வந்த கதை, கோயிலின் அமைப்பு, உற்சவங்கள், காஞ்சியுடன் தொடர்புள்ள ஆசார்யர்கள், திவ்யப் பிரபந்தத்தில் காஞ்சி தொடர்பான பாசுரங்கள், திருக்கச்சி நம்பிகள் அருளிய தேவராஜ அஷ்டகம், கூரத்தாழ்வானின் வரதராஜ ஸ்தவம், மஹா தேசிகன் அருளிய மெய்விரத மான்மியம், […]

Read more

கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்தபுராணம் (மூலமும் உரையும்-பகுதி-1)

கச்சியப்ப சிவாசாரியார் இயற்றிய கந்தபுராணம் (மூலமும் உரையும்-பகுதி-1) – உரையாசிரியர்: சிவ.சண்முகசுந்தரம்; பாரி நிலையம், பக்.1648; விலை ரூ.1500; சிவபெருமானின் மூன்று திருக்கண்களுள் கந்தபுராணம் நெற்றிக் கண்ணாகப் போற்றப்படுகிறது. "வடமொழியில் உள்ள பதிணென் புராணங்களுள் சிவபெருமானுக்குரியவை பத்துப் புராணங்கள். அவற்றுள் ஒன்று கந்தபுராணம். அதிலுள்ள ஆறு சங்கிதைகளுள் சங்கர சங்கிதையின் முதற்காண்டம் சிவரகசிய காண்டம். அதனுள் உள்ள நமது வரலாற்றைக் கந்தபுராணம் எனப் பெயரிட்டுத் தமிழில் பெருங்காப்பியமாக இயற்றுவாயாக' என முருகப்பெருமான், கச்சியப்ப சிவாசாரியார் கனவில் தோன்றி கட்டளையிட்டும், முதலடியும் (திகடச் சக்கரம்) எடுத்துக் […]

Read more

சுந்தரர்

சுந்தரர், முகிலை இராசபாண்டியன், ஞாலம் இலக்கிய இயக்கம், விலை 200ரூ. சேக்கிழார் படைத்த பெரிய புராணம், சுந்தரர் வாழ்க்கையுடன் தொடங்கி, சுந்தரர் வாழ்க்கையுடனே நிறைவடைகிறது. திருக்கயிலாயத்திற்குச் சுந்தரர் வருகிற காட்சியைக் கண்டதும், உபமன்னிய முனிவர் எழுந்து நின்று வணங்குகிறார். சிவபெருமானை மட்டுமே வணங்கும் உபமன்னிய முனிவர், இவரைக் கண்டதும் எழுந்து நின்று வணங்குகிறாரே என்று, அவரது சீடர்கள் கேட்கின்றனர். அவர்களிடம், இவர் தான் சுந்தரர். சிவபெருமானின் மறுவடிவம் தான் சுந்தரர். அடியார்கள் அந்தச் சுந்தரரின் வரலாற்றை கேட்கின்றனர். அவர்களுக்கு அந்த வரலாற்றை கூறுவது போல் […]

Read more

தி டிவைன் சைவ நாயன்மார்ஸ்

தி டிவைன் சைவ நாயன்மார்ஸ், துர்காதாஸ் என்.கே.சுவாமி, பிரேமா பிரசுரம், விலை 300ரூ. தமிழில் அறுபத்து மூவர் கதைகள் என்னும் பெயரில் எழுதப்பட்டு, 1967ல் வெளிவந்துள்ளது. ஐம்பத்தொரு ஆண்டுகளுக்குப் பின் இந்த நுால் எளிய ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. பெரியபுராணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு இந்த அறுபத்து மூவர் வரலாற்றை எழுதுவதற்கு முன், திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்தைப் படைத்த சேக்கிழார் வரலாற்றை இந்த நுால் விரிவாக எடுத்துக் கூறுகிறது. இந்த நாயன்மார் வரலாற்றை விளக்கும் வகையில் பக்கத்துக்குப் பக்கம் அழகிய கறுப்பு […]

Read more

அள்ள அள்ள புதையல்

அள்ள அள்ள புதையல், ஆ.ஞானகுரு, தமிழ்வனம், விலை110ரூ. ஏராளமான பிரச்சினைகளுக்கு எளிய முறையில் தீர்வு காண்பது எப்படி என்பது நூற்றுக்கணக்கான துணுக்குச் செய்திகளாக இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு ராசிக்காரரும் எந்த கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்த வேண்டும் என்பதும், செல்வம் பெருக, வழக்குகளில் வெற்றிபெற, கொடுத்த கடனை திரும்பப் பெற என்ன செய்யவேண்டும் என்பதும், பிரபஞ்சத்துடன் தொடர்புகொள்வது எப்படி என்பது குறித்தும் இந்த நூலில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி 3/7/19, இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

ஆன்மா என்னும் புத்தகம்

ஆன்மா என்னும் புத்தகம், என்.கௌரி, இந்து தமிழ் திசை வெளியீடு,  விலை: ரூ.130 உலகெங்கும் பெரு மதங்களில் தொடங்கி அந்த மதங்களின் உட்பிரிவுகள், சிறு மதங்கள் என்று ஆன்மிகம் தொடர்பாகக் கணக்கற்ற நூல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த ஆன்மிகச் செல்வங்களிலிருந்து 30 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘ஆனந்த ஜோதி’ இணைப்பிதழில் வாரந்தோறும் கௌரி எழுதிய அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்தக் கட்டுரைகளைப் படிப்பதே அந்த ஆன்மிகப் புத்தகங்களின் சாரத்தைப் படிப்பதைப் போன்ற உணர்வைத் தருகிறது. நன்றி: தமிழ் இந்து, 15/6/19. […]

Read more

தெய்வத்தின் குரலமுதம்

தெய்வத்தின் குரலமுதம், ஆர். பொன்னம்மாள், கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை 150ரூ. கண்கண்ட தெய்வமாக இருந்து ஏராளமான ஆன்மிக சாதனைகளைச் செய்தவர் என்று காஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரசுவதி சுவாமிகளை பக்தர்கள் போற்றிப் பாராட்டுவது மிகச் சரியான கருத்து என்பதை, இந்த நூலைப் படிக்கும் போது உணரமுடியும். பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பிரிச்சினைகள் பற்றி காஞ்சிப் பெரியவர் வழங்கிய அமுத மொழிகளை அவரது சரளமான பேச்சு நடையிலேயே தொகுத்துத் தந்து இருப்பதால், அவரே நம் முன் அமர்ந்து உரையாற்றுவது போன்ற அனுபவம் ஏற்படுகிறது. மோர் […]

Read more

கண்ணன் எத்தனை கண்ணனடி

கண்ணன் எத்தனை கண்ணனடி, மாலதி சந்திரசேகரன், கைத்தடி பதிப்பகம், பக்.242, விலைரூ. 225. வித்தியாசமான நூல் இது. பகவான் கண்ணனின் லீலைகளை கண்ணனுடன் தொடர்புடையவர்கள் வாய் மொழியாக தெரிவிப்பதாக அமைந்துள்ளது. சுமார் 20 பாத்திரங்கள் கண்ணனின் லீலைகள் குறித்து பேசுகின்றன. குறிப்பாக, வசுதேவருக்கும் ரோஹிணிக்கும் மகனாகப் பிறந்த பலராமனின் பிறப்பு, அப்போது நடந்த சம்பவங்களை நந்தகோபன் கூறுகிறார். அடுத்ததாக, குழந்தை கிருஷ்ணர் மாம்பழம் விற்கும் கிழவியின் ஆசைப்படி, அவளை அம்மா என்றழைத்து மாம்பழம் பெற்ற லீலையை என்னவென்று சொல்வது? பகவானை வணங்கி நாம் ஓரடி […]

Read more

ஸ்ரீபாஷ்யம்

ஸ்ரீபாஷ்யம், (ஸ்ரீ ராமானுஜரின் பிரும்ம சூத்திர விளக்கவுரை), ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், விலை 600ரூ. பகவான் வேதவியாசர் அருளிய பிரம்ம சூத்திரத்திற்கு ஸ்ரீமத் ராமானுஜர் எழுதிய பாஷ்யத்துக்கான விளக்கநூல். பிரும்மத்தில் இருந்தே உலகம் தோன்றியது என்பது முதல் அந்த பிரம்மம் யார்? பிரும்மத்தை அறிவதற்கும் அடைவதற்கும் வேதங்களும் வேதாந்தங்களும் சொல்லும் நெறிமுறைகள் என்னென்ன என்பதையெல்லாம் சாமான்யர்களுக்கும் புரியும் வகையில் எளிமையாகச் சொல்லியிருப்பது சிறப்பு. பகவானைக் காண பக்தர்களுக்குப் பாதை காட்டும் நூல். நன்றி: குமுதம், 5/6/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more
1 26 27 28 29 30 128