பகவான் புத்தர்

பகவான் புத்தர், தர்மானந்த கோஸம்பி, கா.ஸ்ரீ.ஸ்ரீ., சாகித்திய அகாதெமி, பக். 334, விலை 270ரூ. உலகத்தின் உயர்நிலைச் சிந்தனையாளர்களின் கலங்கரை விளக்கமாகத் திகழ்பவர் பகவான் புத்தர். அரச வாழ்க்கையைத் துறந்து, மனித வாழ்வின் துன்பங்களை நீக்கும் வழியைக் காண முற்பட்டு அதில் வெற்றி கண்டவர். அவருடைய அறவழிகள் ஜப்பான், சீனா, தாய்லாந்து மற்றும் பிற கிழக்காசிய நாடுகளில் பரவின. புத்தர் பெருமானின் இந்தச் சரித்திரம் பலவகை நோக்கத்தால் மூலநுாலாக விளங்குகிறது.அதை, தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார் கா.ஸ்ரீ.ஸ்ரீ.தங்கு தடையற்ற சரளமான மொழியாக்கம், அறுபது ஆண்டுகளுக்குப்பின் மறுபதிப்பு […]

Read more

ஸ்ரீபாஷ்யம்

ஸ்ரீபாஷ்யம், ராமாநுஜரின் பிரம்மசூத்திர விளக்கவுரை,  ஸ்வாமி,  ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக்.752, விலை ரூ.600. பிரம்மசூத்ரம் என்கிற நூலை பாதராயணர் தொகுத்தது என்று கூறும் மரபு உள்ளது. வேத வியாசர் அருளியதே பிரம்ம சூத்ரம்; ஸ்ரீமந் நாராயணனே வியாசராக அவதரித்து பிரம்மசூத்ரத்தை அருளிச் செய்தார் என்றும் கூறப்படுகிறது. வேத-உபநிஷத்துக்கள் என்னும் ஞானப் பாற்கடலைக் கடைந்து பிரம்ம சூத்ரம் என்கிற அமிருதத்தைப் பெற்று, வியாசர் நமக்களித்தார் என்போர் உளர். ராமாநுஜரின் பிரம்ம சூத்ர உரை ஸ்ரீபாஷ்யம் என்று அறியப்படுகிறது. சரஸ்வதி தேவியே ராமாநுஜரின் உரைக்கு ஸ்ரீபாஷ்யம் […]

Read more

சித்த நூல் ரகசியங்கள்

சித்த நூல் ரகசியங்கள், எஸ். சந்திரசேகர், கற்பகம் புத்தகாலயம், விலை 140ரூ. சித்த நூல் ரகசியங்கள் ரிஷிவர்ஷா என்ற தேசம் தான் இப்போது ரஷியா என்று அழைக்கப்படுகிறது என்று கூறும் ஆசிரியர். இதே போல பல எடுத்துக்காட்டுகளைக் கூறி, பழங்காலத்தில் உலகம் முழுவதும் பாரத கண்டத்தோடு தான் இருந்தது என்பதையும் விளக்குகிறார். வானூர்தி, கப்பல் சாஸ்திரம் ஆகியவற்றை அந்தக் கால சித்தர்கள் அறிந்து இருந்தார்கள் என்றும் மாந்திரீக மற்றும் அட்டமா சித்திகளில் தேர்ந்தவர்களாக இருந்தார்கள் என்றும் கூறும் ஆசிரியர், தனது கருத்து நம்ப முடியாததாகவும் […]

Read more

ராகுகால ஸ்ரீ துர்க்கா பூஜையும் கிரக தோஷப் பரிகாரங்களும்

ராகுகால ஸ்ரீ துர்க்கா பூஜையும் கிரக தோஷப் பரிகாரங்களும், வேணுசீனிவாசன், அழகு பதிப்பகம், விலை 180ரூ. துர்க்கையின் அவதாரம், துர்க்கையின் வடிவங்கள், துர்க்கா பூஜை மற்றும் நவராத்திரியின் சிறப்பு அம்சங்கள் ஆகியவை எளிய முறையில் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன. ராகு காலம் என்றால் என்ன? வாரத்தில் ஒவ்வொரு நாளும் ராகு காலம் எப்போது என்பதை சுலபமாகத் தெரிந்து கொள்ளும் வழி என்ன? ராகு கால பூஜை செய்வது எப்படி என்பவையும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. மற்ற கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள், […]

Read more

உபநிஷதச் சிந்தனைகள்

உபநிஷதச் சிந்தனைகள் – (ஐதரேயம், ப்ரச்னம், ப்ருஹதாரண்யகம், சாந்தோக்யம்) -சங்கரரின் சிந்தனைகளைத் தழுவியது- பகுதி-3; தொகுப்புரை: கே.எஸ்.சந்திரசேகரன், வி.மோகன்; சி.பி.ஆர். பப்ளிகேஷன்ஸ், நூற்று எட்டில் தசோபநிஷத் என்று பத்து உபநிஷத்துகள்தாம் ஆசார்யர்களால் பாஷ்யம் எழுதப்பட்டிருக்கின்றன. உபநிஷதச் சிந்தனைகள் மூன்றாம் பாகமான இந்நூலில் ரிக் வேதத்திலிருந்து ஐதரேயமும், அதர்வணத்திலிருந்து ப்ரச்னமும், சுக்ல யஜுரிலிருந்து ப்ரஹதாரண்யகமும், சாம வேதத்திலிருந்து சாந்தோக்கியமும் இடம்பெற்றுள்ளன. இந்த உபநிஷதங்களில் உள்ள மந்திரங்களின் விளக்கத்தை சிந்தனைகள் என்று நூலாசிரியர்கள் தொகுத்து வழங்கியிருப்பது தனிச்சிறப்பு. முதலிரண்டு நூல்களில் ஏனைய ஆறு உபநிஷதச் சிந்தனைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. […]

Read more

ரபியுல் அவ்வல் வசந்தம்

ரபியுல் அவ்வல் வசந்தம், ஹிஜ்ரா பப்ளிகேஷன்ஸ், விலை 50ரூ. உலகத்திற்கு இறைவனால் அருட்கொடையாக அனுப்பி வைக்கப்பட்டவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். அவர்கள் பிறந்த மாதம் ரபியுல் அவ்வல். அவர்கள் பிறந்ததால் வசந்தம் வந்தது என்ற அடிப்படையில் இந்த நூலில், நபிகளாரின் புகழை கவிஞரும், எழுத்தாளருமான அபுஹாஷிமா அழகுற பாடியுள்ளார். மா நிலமெங்கும் மாநபியின் வாசம் மண்ணுக்கோ புத்தம் புது சுவாசம், நாயகமே நீங்கள் குர்ஆனின் விளக்கம், உங்கள் வாக்கும் வாழவும் அதனை விளக்கும் என்பன போன்ற நெஞ்சை அள்ளும் வரிகள். நன்றி: தினத்தந்தி, […]

Read more

சபரிமலை அய்யப்பன் வரலாறும் பக்தர்களுக்கான வழிகாட்டியும்

சபரிமலை அய்யப்பன் வரலாறும் பக்தர்களுக்கான வழிகாட்டியும், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை 330ரூ. பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பால் சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரம் பரபரப்பான பேசுபொருளாக ஆகி இருக்கும் நிலையில், அந்தப் பிரச்சினையை சமநிலையில் இருந்து நோக்கும் வகையிலான தகவல் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது. அய்யப்பனின் விரிவான வரலாறு, ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய விரதம், கோவிலில் விரைவான தரிசனத்திற்கும் தங்கும் வசதிக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்வத எப்படி என்ற தகவல், கோவிலுக்குச் செல்வதற்கான வழிகள், […]

Read more

தத்வமஸி

தத்வமஸி – மகாவாக்கிய விளக்கம், க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக்.112, விலை ரூ.150. உன்னத ஞானம் – மோட்சம் கிட்டச் செய்யும் தத்துவ சிந்தனைக்கு வழி வகுக்கிற சொற்றொடர் மஹாவாக்யம் என்று அறியப்படுகிறது. வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் ஏராளமான மஹாவாக்யங்கள் காணக் கிடைக்கின்றன. இவை உயரிய ஞானத்தைப் பெற எளிய வழியாகக் கருதப்படுகின்றன. வேதத்துக்கு ஒன்று என்ற அளவில், ஹைந்தவ தத்துவ விசாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் குறிப்பிடத்தக்கவையான, பரவலாகப் பலரும் கேள்விப்பட்டிருக்கக் கூடிய, மஹாவாக்யங்கள் நான்கு பிரஜ்ஞானம் பிரஹ்மா என்கிற மஹாவாக்யம், ரிக் வேதத்தில் அடங்கிய ஐதரேய […]

Read more

கர்மா தர்மா

கர்மா தர்மா, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ்,  பக்.64, விலை ரூ.100. அறிவியல் சார்ந்த நிறைய நூல்களை எழுதியிருக்கும் நூலாசிரியர், ஆன்மிகம் சார்ந்து இந்நூலை எழுதியுள்ளார். செய்வது அனைத்தும் கர்மம், அதன் பலனை நிச்சயிப்பது தர்மம் என்ற கருத்தின் அடிப்படையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. புதுப்புது இயற்பியல், ஆகாயவியல் விதிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் தோறும் அவர்கள் ஈச்வரனின் இயக்க நியதிகளைத்தான் சிறிது புரிந்து கொள்கிறார்கள். விஞ்ஞானம் என்பதே ஈச்வரனை அறியும் அறிவே. விஞ்ஞானிகள் ஈச்வரனைத்தான் ஆராய்கிறார்கள். ஈச்வரனைப் புரிந்து கொள்வதற்காக கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், காஸ்மாலஜி போன்ற படிப்புகளை எல்லாம் […]

Read more

சங்கரர் என்கிற புரட்சிக்காரர்

சங்கரர் என்கிற புரட்சிக்காரர், எம்.என்.கிருஷ்ணமணி; தமிழில்: க.ஜெயராமன், சந்தியா பதிப்பகம்,  பக்.464, விலை ரூ.450. Shankara: The revolutionary என்று வழக்குரைஞர் எம்.என். கிருஷ்ணமணி எழுதிய ஆங்கில மூலத்தைத் தமிழில் க.ஜெயராமன் (87) அவர்கள் சங்கரர் என்கிற புரட்சிக்காரர் என்று மொழிபெயர்த்திருக்கிறார். இப்புத்தகத்தின் தலைப்பிற்கேற்ப ஆதிசங்கரரின் புரட்சிகரமான அத்வைத தத்துவங்களை அலசியிருக்கும் இந்நூலில், அவரின் தெய்வீகமான ஆச்சாரியர் என்னும் குரு பட்டத்தின் புனிதம் கெடாமல் அற்புதங்கள் நிகழ்த்தியதையும் ஒருசேர அலசப்பட்டிருக்கிறது. சங்கரர் வாழ்ந்த காலத்தைக் கணக்கிடும் அத்தியாயம் மிகவும் விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டிருக்கிறது. சங்கரர் வாழ்ந்த […]

Read more
1 28 29 30 31 32 128