தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920
தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்.720, விலை ரூ.630. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக 12,838 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில், தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம்,1920 எனும் நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சட்டம்தான் நகராட்சிகள், பேரூராட்சிகளின் அனைத்து செயல்பாடுகளுக்கும் அடிப்படையாகும். இந்த நூலில் நகராட்சிகள், பேரூராட்சி மன்றத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பணி என்ன? அவர்களுக்கான அதிகாரங்கள் எவை? என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. […]
Read more