இந்திய இலக்கியச் சிற்பிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள், கே.எஸ். சுப்பிரமணியன், பக். 80, விலை 50ரூ. ஜெயகாந்தனின் முக்கிய பரிமாணங்களாக பரந்த மனித நேயம், மானுடத்தில் ஆரோக்கிய நம்பிக்கை, அறிவு நேர்மையில் விளைந்த கம்பீரம், மனித உள்ளத்தின் ஆழங்களில் நிழலாடும் மெல் அதிர்வுகளை படம் பிடிக்கும் லேசர் பார்வை, ஆன்மிகச் சாய்மானத்தை முன்னிறுத்திய அறிவியல் கண்ணோட்டம் உள்ளிட்ட சிறப்புகளைக் குறிப்பிடுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 27/8/2017.

Read more

எலும்போடு ஒரு வாழ்க்கை

எலும்போடு ஒரு வாழ்க்கை,  பிரபல ஆர்த்தோபீடிக் சர்ஜன் மயில்வாகனன் நடராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, ராணி மைந்தன், வானதி பதிப்பகம், பக்.224, விலை ரூ.275. முடநீக்கியலின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் எம்.நடராஜனின் வழிகாட்டுதலால், அவருடைய மகனான டாக்டர் மயில்வாகனன் நடராஜன், முடநீக்கியல்துறையில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறந்து விளங்கி அத்துறையில் புகழின் உச்சியை எப்படி அடைந்தார் என்பது இந்நூலில் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் ராணிமைந்தன் டாக்டர் மயில்வாகனன் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றையும், முடநீக்கியல் மருத்துவம் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் இந்நூலில் பதிவு செய்திருப்பது […]

Read more

அறிவுலக மேதை அண்ணல் அம்பேத்கார்

அறிவுலக மேதை அண்ணல் அம்பேத்கார், பேராசிரியர் மு. இராமதாஸ், புதுச்சேரிகூட்டுறவு புத்தக சங்கம், விலை 380ரூ. இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதை “பாரத ரத்னா” அண்ணல் அம்பேத்கார். இந்தியாவின் வரலாற்றில் அவேர் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. அவருடைய வரலாற்றை, எல்லோரும் விரும்பி ரசிக்கும் விதத்தில் பேராசிரியர் மு.இராமதாஸ் எழுதியுள்ளார். அம்பேத்காரின் சாதனைகளும், இந்தியாவின் முன்னேற்றதுக்கு அவருடைய செயல்பாடுகளும் எவ்வாறு உதவின என்பது பற்றிய விவரங்களும் இதில் உள்ளன. படிக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 23/8/2017.

Read more

பாரதி காவியம்

பாரதி காவியம், நெல்லை சு. முத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 300ரூ. மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த “பாரதி காவியம்” என்ற நூல் இப்போது வெளிவந்துள்ளது. இதை எழுதிய நெல்லை சு.முத்து, இந்திய விண்வெளித்துறை முதல் நிலை விஞ்ஞானி என்றாலும், இலக்கியத்தில் மூழ்கித் திளைப்பவர். தமிழில் 140 நூல்கள் எழுதியுள்ள சாதனையாளர். பாரதி வரலாற்றை அருமையான கவிதைகளில் வடித்துத் தந்துள்ளார். படிப்பவர்கள் “நிச்சயமாக இது ஒரு காவியம்தான்” என்று ஒப்புக்கொள்வார்கள். அந்த அளவுக்கு அருமையும், […]

Read more

அம்மா தமிழகத்தின் இரும்புப்பெண்

அம்மா தமிழகத்தின் இரும்புப்பெண், முனைவர் சந்திரிகா சுப்ரமணியன், கிரி லா ஹவுஸ், விலை 220ரூ. சினிமா நட்சத்திரமாக ஒளிவீசி, பின்னர் எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாகத் திகழ்ந்து, தமிழக முதல்-அமைச்சராகபணிபுரிந்தவர் ஜெயலலிதா. அவருடைய வாழ்க்கை வரலாற்றை சிறந்த முறையில் எழுதியுள்ளார் முனைவர் சந்திரிகாசுப்ரமணியன். இந்தப் புத்தகத்தில் உள்ள சில தகவல்கள் – ஜெயலலிதா கதாநாயகியாக நடித்த 92 தமிழ்ப் படங்களில் 85படங்கள் வெள்ளிவிழா (25 வாரம்) கொண்டாடியவை. நடிக்க மட்டுமல்ல, பாடல்கள் பாடுவதிலும் திறமையானவர்.திரைப்படங்களில் 11 பாடல்கள் பாடியுள்ளார். 1968-ல் தர்மேந்திரா நடித்த “இஜத்” என்ற […]

Read more

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம், ஜெ.சி.டி. பிரபாகர், இதயக்கனி பிரசுரம், விலை 60ரூ. மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். குறித்து 20 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகள் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. இதனை படிப்பதன் மூலம் எம்.ஜி.ஆரின் இயல்பான குணங்களை முழுமையாக நாம் அறிந்துகொள்ள முடியும். நன்றி: தினத்தந்தி, 26/7/2017,

Read more

நான் ஜிபு மற்றும் புற்றுநோய்

நான் ஜிபு மற்றும் புற்றுநோய், ம. அஹமது நவ்ரோஸ் பேகம், என்.ஜே.பதிப்பகம், விலை 30ரூ. தன்னுடைய 11 வயது மூத்த மகனுக்கு ரத்தப் புற்று நோய் என்றதும் துடித்துபோன தாயின் துயரத்தையும் வேதனையையும் ம.அஹமது நவ்ரோஸ் பேகம் இந்த நூலில் பதிவுசெய்துள்ளார். தொடக்கம் முதல் இறுதி வரை விழித்திரைகளில் கண்ணீர் திரையிடுகிறது. துயரம் நெஞ்சை அடைக்கிறது. நன்றி: தினத்தந்தி, 26/7/2017.

Read more

த மெனி கேரியர்ஸ் ஆஃப் டி.டி. கோசாம்பி கிரிடிகல் எஸ்ஸேஸ்

த மெனி கேரியர்ஸ் ஆஃப் டி.டி. கோசாம்பி கிரிடிகல் எஸ்ஸேஸ், தொகுப்பு டி.என்.ஜா., லெஃப்ட் வேர்ட், விலை 275ரூ. பன்முக மேதை டி.டி. கோசாம்பி தாமோதர் தர்மானந்த கோசாம்பி (டி.டி.கோசம்பி) கணிதப் பேராசிரியராக இருந்தபோதிலும், இந்திய வரலாறு, இந்தியவியல், மொழியியல், மதங்கள், சாதிகள், நாணயவியல், புள்ளியியல் எனப் பல்வேறு துறைகளிலும், இந்தியாவை மையமாகக் கொண்ட ஆய்வுகளை முன்வைத்துப் புதிய ஆய்வாளர்களையும் அறிஞர்களையும் உருவாக்கிய பேரறிஞர். அவரது தந்தை தர்மானந்த கோசாம்பி, இந்தியாவில் பாலி மொழி இலக்கியத்துக்கு உயிரூட்டியதோடு, ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலும் ஆசிரியர் பணியாற்றியவர். எண்ணற்ற […]

Read more

நடிகையர் திலகம் சாவித்திரி நிழலும் நிஜமும்

நடிகையர் திலகம் சாவித்திரி  நிழலும் நிஜமும், இருகூர் இளவரசன், தோழமை வெளியீடு, விலை 225ரூ. துயர நாயகி சாவித்திரி எவ்வளவு உயரத்தில் சினிமா ஒருவரைத் தூக்கி நிறுத்துகிறதோ அதைவிடப் பல மடங்கு கீழே தூக்கியும் எறிந்துவிடும். இதற்கு உதாரணம் சாவித்திரியின் வாழ்க்கை. திரைப்படங்களில் தனது அபாரமான நடிப்புத் திறமையால் நடிகையர் திலகமாக வாழ்ந்த சாவித்திரியை மக்களுக்குத் தெரியும். ஆனால், படத் தயாரிப்பாளராக, இயக்குநராக, நெருக்கடியான நேரத்தில் நடிகர் சுருளிராஜனுக்கு ரூ.30 ஆயிரம் கொடுத்து உதவியவராக, குழந்தைத்தனம் மிக்கவராக சாவித்திரியின் பன்முகங்களைக் காட்டியுள்ளார் ஆசிரியர். அன்றைய […]

Read more

விழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் (நினைவு மலர்)

விழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் (நினைவு மலர்),  சேகர் பதிப்பகம், தொகுப்பாசிரியர்: ம.அய்யாசாமி, பக். 236, விலை ரூ.150. பிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, தங்கள் பெயருக்கு முன்பு ஊரின் பெயரை சேர்த்துக்கொண்டு புகழ் படைத்தவர்கள் வரிசையில் கவிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரமும் ஒருவர். தெ.பொ.மீ., மு.வ., கா.அப்பாத்துரை, கவிஞர் கண்ணதாசன், தோழர் பா.ஜீவானந்தம், கவிஞர் சுரதா, கி.வா.ஜ. முதலியவர்களுடன் நெருங்கிப் பழகியவர். கல்வெட்டு, சிற்பம், கட்டடம், ஓவியம், கோட்டை, கோயில் முதலியன குறித்து பல நூல்களையும் எழுதியுள்ளார். துணை இயக்குநராகவும், மாலையிட்ட மங்கை என்ற […]

Read more
1 12 13 14 15 16 46