அறிவுலகின் ஆசான் அப்துல்கலாம்

அறிவுலகின் ஆசான் அப்துல்கலாம், இரா. குழந்தை அருள், சங்கர் பதிப்பகம், பக். 168, விலை145ரூ. பெரியோர் பலர் வாழ்வியல் நெறியைக் கற்பித்துள்ளனர் என்றாலும், மாமேதை அப்துல் கலாமின் அணுகுமுறை வித்தியாசமானது. இந்நுாலை வாசிக்கும் ஒவ்வொருவரும், அறிவியலில் சாதனை படைத்த விஞ்ஞானி, கலாம் வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்தோம் என்று பெருமிதம் கொள்ளக்கூடியவர்களாகவே இருப்போம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 5/11/2017.

Read more

100 ஆண்டுகளாக பொதுச்சார்பியல்

100 ஆண்டுகளாக பொதுச்சார்பியல்,பேராசிரியர் க.மணி, அபயம் பதிப்பகம், பக்.116, விலை 100ரூ. ஆல்பர்ட் ஐன்ஸ்டின் சார்பியல் கோட்பாட்டைக் கண்டுபிடித்ததற்குப் பின்பு அறிவியல் உலகில் ஏற்பட்ட அதிரடி மாற்றங்களை மிக எளியமுறையில் இந்நூல் விவரிக்கிறது. ஆகாயத்துக்கும் வடிவக் கட்டமைப்பு உண்டு; ஒருவர் எங்கேயிருக்கிறார் என்பதைப் பொறுத்து காலம் மெதுவாகவும், வேகமாகவும் நகரும்; ஒளி துகள்களால் ஆனது; ஆற்றலும் பொருளும் வேறு வேறானவை அல்ல. இரண்டும் ஒன்றே. பொருள் ஆற்றலாக மாறும். ஆற்றல் பொருளாக மாறும்; இவைதான் ஐன்ஸ்டினின் கண்டுபிடிப்புகள். நியூட்டனின் புவி ஈர்ப்பு விசைக் கண்டுபிடிப்பை […]

Read more

புரட்சித் தலைவி ஜெ!ஜெ!,

புரட்சித் தலைவி ஜெ!ஜெ!, முனைவர் க.பன்னீர் செல்வம், அஸ்வின் பப்ளிகேஷன்ஸ், விலை 185ரூ. மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு அவருடைய இளமை பருவம், சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவர் பணியாற்றிய காலகட்டங்களில் அவர் செய்த சாதனைகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இறுதியாக அவர் மறைவு தொடர்பான செய்திகளை  “சங்கக் கரையில் தங்கம் புதைப்பு” கட்டுரையில் தெரிவித்துள்ளார். இதில் பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 27/9/2017.

Read more

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., வித்வான் வே.லட்சுமணன், வானதி பதிப்பகம், பக்.288, விலை 150ரூ. எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்தபோது 1985-ஆம் ஆண்டு இந்தப் புத்தகத்தின் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. தற்போது 5-ஆம் பதிப்பாக வெளிவந்துள்ளது. புகழுக்கு ஒருவர்  எடுத்ததை முடிப்பவர் எதிர்ப்பினை வெல்பவர் ஆகிய தலைப்புகளில் முதல் மூன்று பாகங்களில் எம்.ஜி.ஆர். நாடக அனுபவங்கள், திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு அடைந்த ஏமாற்றங்கள், திரைத் துறையிலும், அரசியலிலும் அவர் பெற்ற வெற்றிகள் தொடர்பான நிகழ்வுகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப காலங்களில் நல்ல தங்காள் நாடகத்தில் ஏழாவது பையன் வேடத்தில் […]

Read more

ஏ.பி.ஜே. அப்துல்கலாம்(ஒரு வாழ்க்கை வரலாறு)

ஏ.பி.ஜே. அப்துல்கலாம்(ஒரு வாழ்க்கை வரலாறு), அருண் திவாரி, தமிழில் நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், விலை 495ரூ. இந்திய வரலாற்றில் மகாத்மாவுக்குப் பிறகு மகத்தான மனிதராகப் போற்றப்பட்ட அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு. படிப்படியாக உருப்பெற்று விண்தொட்ட ஏவுகணைப்போல் வாழ்வில் படிப்படியாக உயர்ந்து அவர் சாதித்ததைச் சொல்லி இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டும் அற்புத வரலாறு. கலாமின் சீடரும் நெருங்கிய நண்பரும் அவரது நூல்கள் பலவற்றுக்கு இணை ஆசிரியருமான பேராசிரியர் அருண்திவாரி எழுதிய ஆங்கில நூலின் செம்மை குறையாத தமிழ் வடிவம். நன்றி: குமுதம், […]

Read more

நினைத்ததை முடித்த ஜி.ஆர்.

நினைத்ததை முடித்த ஜி.ஆர்., பி.டி.விமல், மணிமேகலைப் பிரசுரம், விலை 90ரூ. சேலம் மாவட்டம் உப்பாரப்பட்டியில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஜி.ராமச்சந்திரன். இவர் சினிமா துறையில் நுழைந்து தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்து பல்வேறு திரைப்படங்களில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவருடைய வாழக்கை வரலாற்றை புகைப்படங்களுடன் பி.டி.விமல் எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

பெரியார் 95

பெரியார் 95, ஞான.வள்ளுவன், இனியவன் பதிப்பகம், விலை 300ரூ. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றி பல நூல்கள் வெளியாகி உள்ளன. இருந்தபோதிலும் பெரியாரைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் ஞான.வள்ளுவன் எழுதிய நூல். பெரியாரின் இளமைப் பருவம் தொடங்கி 95 தலைப்புகளில் பெரியார் வாழ்வில் நடந்த அனைத்துத் தகவல்களையும் திரட்டித் தந்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 11/10/2017.

Read more

அ.ச.ஞானசம்பந்தன்

அ.ச.ஞானசம்பந்தன், நிர்மலா மோகன், சாகித்திய அகாதெமி, பக்.128, விலை ரூ. 50. தமிழறிஞர் என்று பொதுவாக அறியப்படும் அ.ச.ஞானசம்பந்தன் ஒரு தமிழறிஞராக மட்டுமல்லாது, எழுத்தாளர், சொற்பொழிவாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர். அவரது அனைத்துத் தமிழ்ப் பணிகளையும் இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். தனது ஒன்பதாவது வயதில் துறையூர் சைவ சமய மாநாட்டில் முதன்முதலில் மேடையேறிப் பேசினார் அ.ச.ஞா. அதனைத் தொடர்ந்து பதினைந்தாவது வயதில், தூத்துக்குடியில் வ.உ.சி. ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ரா.பி. சேதுப்பிள்ளை உள்ளிட்ட தமிழறிஞர்கள் பலருடன் அ.ச.ஞா.வும் உரையாற்றிப் […]

Read more

முத்துராமலிங்கத் தேவர் தியாக வரலாறு

முத்துராமலிங்கத் தேவர் தியாக வரலாறு, முனைவர் பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 65ரூ. தமிழ்நாட்டில் தோன்றிய மிக முக்கியத் தலைவர்களில் ஒருவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். மக்களிடம் அவர் பெற்றிருந்த செல்வாக்கு வியப்புக்கு உரியது. ஒரே சமயத்தில் பாராளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் போட்டியிடுவார். இரண்டிலும் வெற்றி பெறுவார். நேதாஜியுடன் நெருங்கிப் பழகியவர். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் மணிக்கணக்கில் சொற்பொழிவு நிகழ்த்தும் ஆற்றல் படைத்தவர். அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிந்த நடையில் விறுவிறுப்பாக எழுதியுள்ளார் முனைவர் ப.பாலசுப்பிரமணியன். நன்றி: தினத்தந்தி, 13/9/2017.

Read more

இந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்

இந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன், ஆ. பூமிச்செல்வம், சாகித்ய அகாடமி, பக். 128, விலை 50ரூ. ‘எழுத்தாளர்களின் எழுத்தாளர்’ என்று புகழப்படும் நகுலனின் இயற்பெயர் டி.கே.துரைசாமி. கும்பகோணத்தில் பிறந்து, திருவனந்தபுரத்தில் எழுத்தாளராக நிலை கொண்டவர். திருவனந்தபுரம், ‘மார் இவானியஸ்’கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர். நகுலன், நவீனன், எஸ்.நாயர், ஜான் துரைசாமி என பல பெயர்களில் நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, நூல் தொகுப்பு, மொழிபெயர்ப்பு என, நவீனத் தமிழ் இலக்கியத்தின் சகல தளங்களிலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுதியவர். ஆங்கிலத்திலும் […]

Read more
1 11 12 13 14 15 46