குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்

குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள், எஸ்.குருபாதம்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.500, விலை ரூ.450. குழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வளர்ப்பை இந்நூல் அணுகுகிறது. எனவே குழந்தைகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் இயல்பறிந்து எவ்வாறு பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்? குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? என்பதை இந்நூல் விளக்குகிறது. குழந்தைகளிடம் […]

Read more

தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்

தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும், மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 100ரூ. குழந்தைகளுக்குக் கதை சொல்வது என்பது ஒரு கலை. அதற்கு சிறுவர்களின் உலகத்தில் நுழைந்தாக வேண்டும். அந்த வித்தை அறிந்து குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதப்பட்ட சின்னச் சின்ன கதைகள். கதையோடு ஒழுக்கமும் நுணுக்கமாய் போதிக்கப்பட்டிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027676.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள்

குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள், மொழிபெயர்ப்பாளர் எம்.பாண்டியராஜன், பக். 100, விலை 99ரூ. குழந்தைகளுக்கான கதைகள் என்று தலைப்பிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பெரியவர்களும் விரும்பி படிக்கும் வகையில் தான் இந்த கதைகள் உள்ளன. பல கதைகளில் குழந்தைகளுக்கு தக்க அறிவுரை மற்றும் ஆலோசனையும், பல கதைகளில் நாம் அறிந்திராத தகவல்களும் அழகாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்க மொழியிலிருந்து ரஷிய மொழியில் பெயர்க்கப்பட்ட இந்த கதைகளை, ஆங்கிலவழி தமிழில் தந்திருக்கிறார் ஊடகவியலாளர் பாண்டியராஜன். குழந்தைகளுக்கான அறிவுத் தேடலில் பல நுால்கள் வெளிவந்தாலும், இந்நுால் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறது. குழந்தைகள் […]

Read more

பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்

பெர்சியாவின் மூன்று இளவரசர்கள்-உலக இதிகாசங்களில் குழந்தைகள்-ரோஹிணி சவுத்ரி, தமிழில்: சசிகலா பாபு, எதிர் வெளியீடு, பக்.200, விலை ரூ.200. உலக நாடுகளின் பாரம்பரியங்களை பறைசாற்றும் பல்வேறு புராணக் கதைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்புதான் இந்நூல். ஆனால், இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நூலில் இடம்பெற்றுள்ள அனைத்து கதைகளின் நாயகர்களுமே சிறுவர்கள் என்பதுதான். இதிகாசங்களில் இடம்பெற்றுள்ள இளவரசர்களின் பாத்திரங்களை மட்டும் தனியாகத் தொகுத்து, அவற்றினூடே புராணங்களின் கருப்பொருள்கள் அலசப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் இணையற்ற இதிகாசமாகக் கருதப்படும் மகாபாரத்தை எடுத்துரைக்கும்போது கூட, பால்ய பருவ பாண்டவர்களின் கதையாகவே அது விரிகிறது. […]

Read more

அழகான அம்மா

அழகான அம்மா, ரஷ்ய சிறார் கதைகள், தமிழில் யூமா வாசுகி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 360, விலை 290ரூ. குழந்தைகளின் உலகம் மிக இனிமையானது. சாதாரண விஷயங்களையும் கதையாக சொல்லும் போது, ஈர்க்கும் பருவம் அது. வாழ்க்கையின் புரிதலை, கதை வழியாக கேட்பதால் ஆனந்தமடையும் வயது. அதனால் தான், வீடியோ காட்சிகளாகவும், ஆடியோ பேச்சுகளாகவும் வடிவம் எடுத்துள்ள கதைகளுக்கும் மவுசு குறையவில்லை. ‘டிவி சேனலில்’ ஒளிபரப்பாகும், பொம்மை படங்களின் கதைகள், இந்த தலைமுறை குழந்தைகளை ஈர்க்கின்றன. இருந்தாலும், ‘பாட்டி வடை சுட்ட […]

Read more

கௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்

கௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம், சாய் சூர்யா எண்டர்பிரைசஸ், விலை 200ரூ. அக்காலம் மட்டுமல்ல; எக்காலத்திலும் சிறுவர்களுக்கு கதை என்றால் மிகவும் பிடிக்கும். கதை சொல்வதும், கதை கேட்பதும் தமிழர்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கம். நாம் ஒவ்வொருவரும் அத்தகைய இளமைப்பருவத்தைக் கடந்து வந்தவர்கள் தான். இளமைப் பருவத்தில் கதை கேட்பதும், அக்கதையினுாடே பேசும் விலங்குகள், பறவைகள், தேவலோகம், தேவதைகள், அசுரர்கள் எனக் கற்பனை உலகில் மிதப்பதும் இனிமையான கனாக்காலம். உலக இயலைத் தெரிந்து கொள்வதற்கும், வாழ்க்கையில் எதிர்கொள்ளும் துன்பங்களிலிருந்து மீள்வதற்கும், வாழ்க்கைச் சூழலில் […]

Read more

பாப்பாவுக்குப் பாட்டு

பாப்பாவுக்குப் பாட்டு, ருக்மணி சேஷசாயி, சாயி பதிப்பகம், பக்.64, விலை 80ரூ. பாட்டுக்கு என்றாலே மகாகவி பாரதி தான் நினைவுக்கு வருவார். குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் காலம் மறைந்து வருகிறது. இக்குறையை போக்கும் வகையில், குழந்தைகளுக்கென்றே விலங்குகளை நாயகனாக வைத்து பாடல்களை ஆசிரியர் தொகுத்து தந்துள்ளது பாராட்டிற்குரியது. உறவுகளை வளர்க்கும் வகையில் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி பற்றிய பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்நுாலை வாங்கி, குழந்தைகளுக்கு பாட்டு சொல்லிக் கொடுத்தால், அவர்களும் சிறப்பாக பாடுவர்; உச்சரிப்பும் சரியாக வரும் என்பதில் எள்ளளவும் […]

Read more

இயந்திரத் தலை மனிதர்கள்

இயந்திரத் தலை மனிதர்கள், முல்லை தங்கராசன், முத்து காமிக்ஸ். தமிழ் காமிக்ஸ் உலகின் தலைமகன் முல்லை தங்கராசனின் கை வண்ணத்தில், மத்த பத்திரிகையாளர் காமராஜின் மொழிபெயர்ப்பில், சௌந்தரபாண்டியன் உருவாக்கிய முத்து காமிக்ஸ் இதழின் மறுபதிப்பு இது. இரும்புக் கை மாயாவியின் சாகசங்கள் மறுபதிப்பு செய்யும்போது, கொஞ்சம் கிளாசிக் தன்மையை இழந்திருந்தாலும் பழைய வாசகர்களின் பாலைவனச் சொர்க்கம் அதுதான். http://இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் – 044-49595818 நன்றி: தி இந்து, 22/1/2018.

Read more

ஈரான்

ஈரான் (குழந்தைப் பருவத்தின் கதை & திரும்பும் காலம்), மர்ஜானே சத்ரபி, விடியல் பதிப்பகம், விலை 100ரூ. உலகப் புகழ்பெற்ற படைப்பாளியான மர்ஜானே சத்ரபியின் கிராஃபிக் நாவல்களான இந்த இரண்டுமே திரைப்படங்களாகவும் வந்துள்ளன. மொழிபெயர்ப்பில் ஓரிரு இடர்கள் இருந்தாலும், ஒட்டுமொத்தமான கலைப்படைப்பு என்ற பார்வையில், தமிழில் நீங்கா இடம்பிடிக்கும் புத்தகங்கள் இவை. http://இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் – 044-49595818 நன்றி: தி இந்து, 22/1/2018.

Read more

குட்டி ஆகாயம்

குட்டி ஆகாயம் (சிறார் இதழ்), நிழல்,காந்தி, வானம் அமைப்பு, விலை 40ரூ. குழந்தைகள் உருவாக்கிய புத்தகம். இது குழந்தைகளுக்கான சிறுகதை தொகுப்புப் புத்தகம். இந்த புத்தகத்தை உருவாக்கியது முழுக்க முழுக்க குழந்தைகளே. ஒருவர் ஒரு வரி சொல்ல, அடுத்தவர் அடுத்த வரி சொல்ல குட்டி குட்டி சிறுகதைகளை உருவாக்கி, அதற்கான ஓவியங்களையும் அழகாக தீட்டி, இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளது இதன் சிறப்பு. நன்றி: தினமணி, 13/1/2018.

Read more
1 2 3 4 5 6 16