திருக்குறள் கதைகள் 50

திருக்குறள் கதைகள் 50, லதா, அருண் பதிப்பகம், விலை 150ரூ. கடவுள் நம்பிக்கை, அறிவே பலம், நன்றி மறவாதே, விருந்தோம்பல், உழைப்பின் உயர்வு, நல்ல நட்பு, நீதி தவறாமை உள்ளிட்ட தெதாகுப்புகளைக் கொண்ட குழந்தைகளுக்கான நூல் இது. நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:.https://www.nhm.in/shop/1000000026700.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சேற்றுக்குள் சடுகுடு

சேற்றுக்குள் சடுகுடு, ராகுல் கவின், முத்து காமிக்ஸ், பக். 50, விலை 75ரூ. தமிழ் காமிக்ஸ் உலகில், முத்து காமிக்ஸ் பதிப்பகத்திற்கு முக்கிய இடம் உண்டு. தற்போது, மீண்டும் காமிக்ஸ் புத்தகங்களின் வருகை அதிகரித்து உள்ளது. அவ்வகையில், ப்ளுகோட் பட்டாளத்தின் நகைச்சுவையோடு, இந்நூல் வெளிவந்திருக்கிறது. வண்ணமயமான இப்புத்தகத்தை சிறார்கள் நேசிப்பர். நன்றி: தினமலர், 16/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026809.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மலர்களே கொஞ்சம் மலருங்கள்

மலர்களே கொஞ்சம் மலருங்கள், சிறுவர்களுக்கான அறிவியல் சிறுகதைகள், லூர்து எஸ்.ராஜ், வைகறை பதிப்பகம், விலை 40ரூ. பூக்கள் குறித்த அறிவியல் சார்ந்த விஷயங்கள், வித்தியாசமான கதை பாணியில் சொல்லப்படுகின்றன. மாணவர்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து மணம் வீசும். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

பொன்னியின் செல்வன் காமிக்ஸ் 8 தொகுதிகள்

பொன்னியின் செல்வன் காமிக்ஸ் 8 தொகுதிகள், கல்கி, நிலா காமிக்ஸ், பக். 42, விலை 145ரூ. கல்கியின், பொன்னியின் செல்வன், ஐந்து தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகமான, வரலாற்று நாவல்களின் சிகரம். அதை, இளைஞர்களும் முதியோரும் படித்திருப்பர். அதில் 1000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட, மன்னர்களின் வீரம், தீரம், பக்தியை கண் முன் கொண்டு வந்திருப்பார் கல்கி. அதை சிறுவர்களுக்கான படக்கதையாக மாற்றி அருமையான படைப்பாக வெளியிட்டிருக்கிறது நிலா காமிக்ஸ். நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

சிறுவர் கதைக் களஞ்சியம்

சிறுவர் கதைக் களஞ்சியம், தொகுப்பாசிரியர்கள் இரா.காமராசு, சேதுபதி, சாகித்ய அகாடமி, பக். 240, விலை 160ரூ. கதை இலக்கியம் தமிழகத்திற்கு புதியதன்று. கதையும், கற்பனையும் மனித சமுதாயத்துடன் ஒன்றி வளர்ந்து வருவதாகும். பிள்ளைக்குச் சோறுாட்டும் தாய்மார்கள் தம் கட்டவிழ்ந்த கற்பனையால் புனைந்துரைக்கும் கதைகள் கணக்கற்றவை. பழந்தமிழகத்திலும் கதைகள் நிலவி வந்தன. தொல்காப்பியத்திலேயே உரைநடை வகைகள் பற்றி கூறும் தொல்காப்பியர், ‘பொருளோடு புணராப் பொய்ம் மொழி’ என்று குறிப்பிடுவது கற்பனைச் செறிவுடனான கதைகளையே ஆகும். சிறுகதைக்குரிய இலக்கணம் பற்றித் திறனாய்வாளர்கள் பலரும் விளக்கம் கூறியுள்ள போதும், […]

Read more

பாலர்களுக்கான பாகவதக் கதைகள்,

பாலர்களுக்கான பாகவதக் கதைகள், ஆர்.சி.சம்பத், அருணா பப்பிளகேஷன்ஸ், விலை 35ரூ. மஹாவிஷ்ணுவின் பெருமைகளை விளக்கும் நுால் ஸ்ரீமத் பாகவதம். இதை, எளிதில் ஒருவரால் முழுமையாக படித்துவிட முடியாது. படிக்க படிக்க சுவை கூட்டக் கூடிய பாகவதத்தை, குழந்தைகளுக்கு புரியும் வகையில், சிறு சிறு கதைகளாக ஆசிரியர் தந்துள்ளார். இதை, குழந்தைகள் கண்டிப்பாக படிக்க வேண்டும். அதனால், அவர்கள் மனதில் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும்; நம் கலாசாரம், புராணங்கள் மீதும் பற்று ஏற்படும். இதனால், அவர்கள் மனதில் ஒழுக்க நெறி மேம்படும். ஆண்டவன் மீது […]

Read more

மகாபாரதக் கதைகள்

மகாபாரதக் கதைகள், எஸ்.தமயந்தி, குமரன் பதிப்பகம், பக்.112, விலை 40ரூ. உலகில் பல குணங்களை கொண்ட மனிதர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரையும், ஒரு காவியத்தில் காண முடியும் என்றால், அது மகாபாரதம் தான். மகாபாரதத்தை ஒரு கதை களஞ்சியம் என்றே கூற வேண்டும்; கதைக்குள் கதை என பல்லாயிரம் கதைகள் உள்ளன. கடல் போன்ற மகாபாரதத்தை, ஏழு கதைகள் மூலம், ஆசிரியர் மிகச் சுருக்கமாக தந்துள்ளார். இதை படித்தால், மகாபாரதத்தை படித்த திருப்தி ஏற்படுகிறது. குழந்தைகளிடம் இந்த புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொன்னால், அவர்கள் […]

Read more

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை

அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை(சிறுவர் கதைகள்), மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 100ரூ. குழந்தைகளின் இலக்யி உலகின் கதவு, கதை கேட்பதில்தான் திறக்கிறது. பாட்டிகள் கதை சொல்வது அபூர்வமாகிவிட்ட இக்காலத்தில் குழந்தைகளுக்காக குட்டிக் குட்டி கதைகளை சுவாரஸ்யம், நகைச்சுவை, புத்திசாலித்தனம் கலந்து சொல்லி அவர்களின் இலக்கியக் கதவைத் திறந்திட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். படிக்கும் குழந்தைகள் ரசிப்பார்கள். சிரிப்பார்கள். சிந்திப்பார்கள். நன்றி: குமுதம், 6/12/2017.

Read more

சிரிக்கவும் சிந்திக்கவும்

சிரிக்கவும் சிந்திக்கவும், இலங்கை ஆ.ரகுபதி பாலஸ்ரீதரன், சுமதி பதிப்பகம், விலை 250ரூ. இலங்கையைச் சேர்ந்த ஆ.ரகுபதி பாலஸ்ரீதரன், நகைச்சுவையாக எழுதுவதில் புகழ் பெற்றவர். அவர் எழுதிய நகைச்சுவை கதைகள் அடங்கிய புத்தகம் இது. சிறுவர் நகைச்சுவைக் கதைகள், கணவன் – மனைவி கதைகள், மிருகங்களின் கதைகள், பைத்தியக்காரக் கதைகள், ஒரு பக்கக் கதைகள்.. இப்படி பல வகையான கதைகள் இதில் அடங்கியுள்ளன. சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைக்கவும் வேண்டும் என்ற நோக்கத்தில், ஆசிரியர் வெற்றி பெற்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

பட்டி வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்

பட்டி வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலை 400ரூ. விக்கிரமாதித்தனுக்கு பதுமைகள் சொன்ன கதைகள் புகழ் பெற்றவை. விக்கிரமாதித்தனின் வீரதீரச் செயல்களும், கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்களும் எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தட்டாதவை. இதுவரை விக்கிரமாதித்தன் கதைகள் பல்வேறு பதிப்பகங்களால், பல்வேறு பதிப்பகங்களால், பல்வேறு வடிவமைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன. இப்போது நர்மதா வெளியிட்டுள்ள புத்தகம், பெரிய அளவில் 532 பக்கங்களில் அமைந்துள்ளது. சிறந்த கட்டமைப்பு. நன்றி: தினத்தந்தி, 15/11/2017

Read more
1 3 4 5 6 7 16