மருதநாயகம் என்ற மர்ம நாயகம்

மருதநாயகம் என்ற மர்ம நாயகம், அமுதன், மணிமேகலைப் பிரசுரம், பக்.336, விலை ரூ.300. மருத நாயகத்தின் 39 வருட வாழ்க்கையை பல்வேறு ஆவண ஆதாரங்களுடன் தேதி வாரியாக விரிவாக அலசுகிறது இந்நூல். மருதநாயகம் இந்துவா, இஸ்லாமியரா அல்லது இந்துவாகப் பிறந்து இஸ்லாத்துக்கு மாறினாரா என்ற குழப்பம் இன்று வரை நீடிக்கிறது. அதுபோன்றேஅவர் ஆங்கிலேயர்களை தமிழக மண்ணில் வேரூன்ற வழிவகை செய்தாரா அல்லது விடுதலை வீரரா என்பதை வாசகர்களின் முடிவுக்கு நூலாசிரியர் விட்டுவிடுகிறார். 17-ஆம் நூற்றாண்டில் முகலாயர், ஜமீன்தார், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்கள் என நான்கு முக்கிய […]

Read more

தமிழகம்

தமிழகம் – கி.பி. முதல் நூற்றாண்டு,ந.சி.கந்தையா பிள்ளை, அழகு பதிப்பகம், பக்.25, விலை  ரூ.250. தமிழகம் தொன்மை மிக்க நாடு. இதன் வரலாற்றை பல்வேறு அறிஞர்களும் பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ளனர். அவற்றையெல்லாம் ஆய்ந்து, ஏற்புடையனவற்றைத் தொகுத்து அவற்றோடு தனது முடிவுகளையும் இணைத்து நூலாக்கியிருக்கிறார் ஆசிரியர். அற்றை நாளில் தமிழ்நாட்டின் எல்லைகள், தமிழ்நாட்டில் பயின்ற மொழிகள், பின்னர் தமிழினின்றும் கிளைத்த வழிமொழிகள், தமிழில் முத்தமிழ் வளர்ந்த விதம், தமிழர் நாகரிகம், நம்பிக்கை, பொழுதுபோக்கு ஆகியவற்றையும், தமிழர், ஓவியம், சிற்பம், வணிகம், சோதிடம், வானவியல் போன்ற துறைகளில் […]

Read more

நாரண.துரைக்கண்ணனாரின் புதினப் படைப்புத்திறன்கள்

நாரண.துரைக்கண்ணனாரின் புதினப் படைப்புத்திறன்கள், அ.இராமரத்தினம்; பதின்மர் பதிப்பம், பக்.226, விலை ரூ100.  இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த பலருள் குறிப்பிடத்தக்கவர் நாரண. துரைக்கண்ணன். இவர் புதினம், கவிதை, கட்டுரை, நாடகம், சிறுகதை, வாழ்க்கை வரலாறு, பயண இலக்கியம் என எல்லா வகைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆயினும் இவர் ஒரு புதின எழுத்தாளராகவே அறியப்படுகிறார். இந்நூல் நாரண.துரைக்கண்ணனின் படைப்புத்திறனை ஆய்வுநோக்கில் பார்த்து எழுதப்பட்டுள்ளது. அவர் தனது புதினங்களுக்காகத் தேர்ந்தெடுத்துள்ள கருப்பொருள்களில் உள்ள சமூக, அரசியல், பொருளாதாரத் தாக்கம், அவர் கைக்கொண்ட […]

Read more

கிராமத்து தெருக்களின் வழியே

View Post கிராமத்து தெருக்களின் வழியே…, ந.முருகேச பாண்டியன், டிஸ்கவரி புக் பேலஸ், விலைரூ.350. தமிழக கிராமிய வாழ்வியல் முறையை விவரிக்கும் நுால். முற்றிலும் அனுபவம் சார்ந்து எழுதப்பட்டுள்ளது. எளிய நடையில் காட்சிப் பூர்வமாக உள்ளது. மதுரை நகர் அருகே, 60 முதல், 80 வரையான காலத்தில், ஒரு கிராமத்தின் இயக்கம் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. அன்றாட வாழ்வியல் மிக இயல்பாக வரையப்பட்டு உள்ளது.புத்தகத்திலிருந்து… எழுபதுகளின் இறுதியில், மலையாளிகள் சிலர் எங்கள் ஊருக்கு வந்தனர். மந்தையில் கொட்டகை போட்டு, பல சரக்கு, […]

Read more

தேவேந்திரர்களின் கதைகள்

தேவேந்திரர்களின் கதைகள், தே.ஞானசேகரன், காவ்யா, விலைரூ.120. வேளாண்மையை தொழிலாகக் கொண்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தில் பரம்பரையாக செவிவழிச் செய்தி கதைகளை புரிந்து, ஆய்வு ஏடுகளுக்கு பயன்படுத்திய பெருமக்களின் குறிப்புகளோடு வெளிவந்திருக்கும் நுால். நெல்லை முதலில் பயிராக கண்டவர்கள் என்பதுடன், தேவர்களின் தலைவன் தேவேந்திரன் தான் மழை மற்றும் உழவுத் தொழிலின் கடவுள் எனச் சொல்கிறது. அதனால் தான் பல பிரிவுகளாக பிரிந்திருந்தாலும், தேவேந்திரகுல வேளாளர் எனும் பொதுப் பெயரில் அழைக்கப்படுகின்றனர். வட்டார வழக்கு மொழிச்சொற்களில் அமைந்துள்ளது சிறப்பு. – சீத்தலைச்சாத்தன். நன்றி: தினமலர்,8/8/21 இந்தப் […]

Read more

காலா பாணி

காலா பாணி, டாக்டர் மு.ராஜேந்திரன், அகநி, விலைரூ.650 ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட்ட சிவகங்கைச் சீமையின் வரலாற்றை – குறிப்பாக நாடு கடத்தப்பட்ட போராளிகளைப் பற்றியது இந்த நுால். கிழக்கிந்தியக் கம்பெனி தமிழகத்துப் போராளிகளை எல்லா வகைகளிலும் ஒடுக்கியும், கொன்று குவித்தும், நாடு கடத்தியும் செயல்பட்ட நிகழ்வுகளை வரலாற்றுப் பின்னணியில் விவரிக்கிறது. சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையண்ணத் தேவர் உள்ளிட்ட 73 போராட்ட வீரர்களைக் குற்றவாளிகளாகக் கருதி காலா பாணியாக ஆக்கிய கதையை விளக்குகிறது. காலா பாணி என்ற சொல்லுக்குக் கறுப்புத் தண்ணீர் என்று […]

Read more

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், முல்லை பி.எல். முத்தையா, முல்லை பதிப்பகம், விலை 50ரூ. ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் உன்னதமான வாழ்க்கைக் குறிப்பும், அவரைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் தெரிவித்த கருத்துகளும் இந்த நூலில் காணப்படுகின்றன. வ.உ.சி.யின் மகன் எழுதிய கட்டுரை மனதைத் தொடுகிறது. நன்றி: தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818/p>

Read more

பழவேற்காடு வரலாறு

பழவேற்காடு வரலாறு, பழவை வீ.ராதாகிருஷ்ணன், வைகரி பால்டேனியல் பதிப்பகம், பக்.320, விலை ரூ.250. “பழவேற்காடு’ தொடர்பாக இதுவரை யாருமே சொல்லாத வரலாற்று உண்மைகளைப் பல்வேறு சான்றுகளோடு முன்வைத்திருக்கிறார் நூலாசிரியர். பழவேற்காடு ஒரு மீன்பிடித் துறைமுகம், கடற்பகுதி, ஏரி என்று மட்டும் நினைப்பவரின் எண்ணத்தைப் புரட்டிப் போட்டுவிடுகிறது இந்நூல். இந்தியாவில் பெரும்பான்மையான நகரங்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்பே புதுப்பொலிவு பெற்றன. தலைசிறந்த துறைமுகப்பட்டினங்களும் உருவாயின. அவற்றுள் பழவேற்காடும் ஒன்று. கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட “எரிதேரியன் கடற்பயணக் குறிப்புகள்’ என்ற நூலில்தான் பழவேற்காடு ஏரியைப் […]

Read more

வீரம் விளைந்த வேலுார் கோட்டை

வீரம் விளைந்த வேலுார் கோட்டை, சா.திருமலை கமலநாதன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.100 புகழ்பெற்ற வேலுார் கோட்டை பற்றிய வரலாற்றுத் தகவல்களின் தொகுப்பு நுால். அரிய செய்திகளை உள்ளடக்கியுள்ளது. வேலுார் ஊர் பெயர் காரணம் இலக்கிய ஆதாரத்துடன் விளக்கப்பட்டுள்ளது. வேலுார் கோட்டை வரலாறு, சிப்பாய் கலகம் வரை சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது. கோட்டையில் கோலோச்சிய மன்னர்கள் பற்றிய விபரமும் கால வரிசைப்படி உள்ளது. கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் பற்றியும் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆன்மிகத் தொண்டு புரிந்த மகான்கள் பற்றிய விபரமும் உள்ளது. […]

Read more

பாம்பு மனிதன்’ ரோமுலஸ் விட்டேகர்

பாம்பு மனிதன்’ ரோமுலஸ் விட்டேகர், ஜாய் விட்டேகர், வானதி பதிப்பகம், விலைரூ.500 பாம்பு, முதலை போன்ற உயிரினங்களுடன் நெருக்கமாக வாழும், ரோமுலஸ் விட்டேகரின் வாழ்க்கை வரலாற்று நுால். ஆங்கிலத்திலிருந்து தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பிறந்து, இந்தியாவில் பாம்பு, முதலைகளை பாதுகாக்கும் சேவையில் ஈடுபட்டு வருபவர் விட்டேகர். இந்த அற்புத பணிக்கு நகர்ந்து வந்த விதமும், வழித்தடமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இயற்கை மீதான புரிதலைத் துாண்டுகிறது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற எதிர்மறை எண்ணம், நம்பிக்கை நிறைந்த நாட்டில், அவற்றை தகர்க்கும் வழிமுறைகளுடன் களத்தில் […]

Read more
1 2 3 98