சாதி பேதத்தை தகர்த்த இராஜாஜி

சாதி பேதத்தை தகர்த்த இராஜாஜி (ராஜாஜி 143-ஆவது பிறந்த நாள் வெளியீடு), ரெ.தே.பெ.சுப்ரமணியன், பக்.80, விலை குறிப்பிடப்படவில்லை. ‘இந்தியத் தலைவர்களிலேயே அதிகம் தவறாக அறியப்பட்டவர் ராஜாஜி’ என காந்தியடிகளே கூறுமளவுக்கு ராஜாஜிக்கு எதிரான அவதூறுகள் வலுப்பெற்றிருந்தன. ராஜாஜியின் கல்விக் கொள்கையை ‘குலக் கல்வித் திட்டம்’ என அடையாளப்படுத்தும் அளவுக்கு பிரசாரங்கள் வலிமையுடன் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அந்தக் கல்வித் திட்ட வரைவில் எங்கேயும் அப்படிப்பட்ட உணர்வு இல்லை என்பதே உண்மை. எத்தொழிலும் இழிவானதல்ல என்ற எண்ணத்தை சமுதாயத்தில் விதைக்க வேண்டும் என்று நினைத்த ராஜாஜிக்கு கிடைத்தது […]

Read more

பிசிராந்தையார்

பிசிராந்தையார், பாவேந்தர் பாரதிதாசன், முல்லை பதிப்பகம், விலைரூ.100. பிசிராந்தையார் – கோப்பெருஞ் சோழனின் ஆழ்ந்த நட்பை கருத்தில் கொண்டு கவிஞர் நாடகமாக்கி, ஆங்காங்கே வசனங்களுக்கு இடையே பாட்டுகளையும் புகுத்தி பாவிருந்து படைத்து உள்ளார். தென்னாடு வாழ வேண்டும்; செந்தமிழ் வாழ வேண்டும்; முன்னேறும் திறமை வேண்டும். தன்மானம் நாம் பெற வேண்டும் என்று இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைத்துள்ளார். நாடகத்தில் 34 காட்சிகள் உள்ளன. காலத்திற்கு ஏற்ற வகையில் கவிதை வடிவில் தலைப்புகள் மிகச் சிறப்பு. புரட்சி கவிஞர் பாரதிதாசனின் புதுமை படைப்பு. சாகித்ய அகாடமி […]

Read more

மலையாளக்கரையினில் இஸ்லாம்

மலையாளக்கரையினில் இஸ்லாம், செ.திவான், ரெகான் சுலைமான் பதிப்பகம், விலைரூ.200 கேரளாவில் இஸ்லாம் காலுான்றியதை வரலாற்றுப் பூர்வமாக விவரிக்கும் நுால். மொத்தம் 10 தலைப்புகளில் தகவல் தொகுக்கப்பட்டுள்ளது. எண்ண அலைகளில் துவங்கி, கடல், பழந்தமிழர் வாணிபமும் பன்னாட்டு தொடர்பும், அரேபியா, அரேபியரின் வணிகம், குதிரை, இஸ்லாம், சந்திரன், சேரமான் பெருமாள் இயல்களின் கீழ் தகவல்கள் உள்ளன. முதல் இயலில், தமிழகத்தில் முஸ்லிம்கள் பற்றிய தகவல் வரலாறு மற்றும் சங்க கால இலக்கிய பின்னணியுடன் அலசித் தரப்பட்டுள்ளது. அடுத்து கடல் பற்றிய குறிப்புகளும், இலக்கிய பின்னணி மற்றும் […]

Read more

அந்தக் காலப் பக்கங்கள்

அந்தக் காலப் பக்கங்கள், அரவிந்த் சுவாமிநாதன், தடம் பதிப்பகம், விலை: ரூ.200. வரலாற்றை நூல்களிலும் நூலகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பழங்கால வழிபாட்டுத் தலங்களிலும் மட்டுமல்ல, பலரது வீட்டு டிரங்குப் பெட்டிகளிலிருந்தும் பரணிலிருந்தும் தேடி எடுத்து எழுதலாம். உ.வே.சா. உள்ளிட்டோர் பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள் பலவற்றையும் அப்படித்தான் மீட்டெடுத்தார்கள். இன்று நாம் சாதாரணமாகக் கடந்துபோகும் ஒரு சுவரொட்டிகூட நாளை மிக முக்கியமான வரலாற்று ஆவணமாகலாம். சில பத்தாண்டுகளுக்கு முன்பு பலருக்கும் அபிமானமாக இருந்த பாட்டுப் புத்தகங்கள் இந்தக் காலத்தில் ஆவணங்களாக மாறியுள்ளன. […]

Read more

குரு கோவிந் சிங்

குரு கோவிந் சிங், மஹீப் சிங், தமிழாக்கம் – அலமேலு கிருஷ்ணன், சாகித்ய அகாடமி, விலை: ரூ.50. சாகித்ய அகாடமியின் இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் சீக்கிய மதத்தின் பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங்கைப் பற்றிய நூல் இது. 15-க்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ள குரு கோவிந்த் சிங் இலக்கியம், ஆன்மிகம், சமூகச் சீர்திருத்தம் ஆகிய துறைகளில் ஆற்றிய பணிகளை விரிவான சான்றுகளுடன் இந்த நூல் விவரிக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 22/1/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-2/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

ஆப்கானிஸ்தான் – புரியாத போர்களின் தொடர் சங்கிலி -நேற்றும் இன்றும்

ஆப்கானிஸ்தான் – புரியாத போர்களின் தொடர் சங்கிலி -நேற்றும் இன்றும், ஜெகாதா, வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை: ரூ.150. ஒசாமா பின்லேடனின் ஆதிக்கம், ஆப்கனில் முளைத்த பயங்கரவாதக் குழுக்கள் என தாலிபான்களின் வரலாற்றையும் அதன் மூலமாகக் கடந்த 40 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த மாற்றங்களையும் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிடமிருந்து ஆப்கன் எதிர்கொண்ட அழுத்தங்களையும் விளக்கும் விதமாக எழுதப்பட்ட 19 கட்டுரைகளை உள்ளடக்கிய நூல். நன்றி: தமிழ் இந்து, 12/2/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

சுதந்திர இந்தியாவின் பொறியியல் புரட்சிகள்

சுதந்திர இந்தியாவின் பொறியியல் புரட்சிகள், வி.டில்லிபாபு, திசையெட்டு, பக்.88, விலை ரூ.120. சுதந்திர இந்தியாவின் தொழில்நுட்பத் தலைமகன்களால் முன்னெடுக்கப்பட்டசில முக்கிய அறிவியல் தொழில்நுட்பப் பொறியியல் புரட்சிகளைப் பற்றி பதிவு செய்யும் முயற்சியே இந்த நூல். வேளாண் துறை, பாதுகாப்புத்துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளில் நமது நாட்டின் பெருமிதம் கொள்ளும் சாதனைகளையும், சாதனையாளர்களையும் ஒருசேரக் கொணர்ந்துள்ள இந்த நூல், இளைய தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டியாக விளங்கும். அறிவியல்துறையை சாராதவர்களும், பொதுமக்களும் நமது நாட்டின் தொழில்நுட்பச் சாதனைகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும். விளக்கில்லாத் […]

Read more

மலைக்க வைக்கும் மெளரியப் பேரரசு

மலைக்க வைக்கும் மெளரியப் பேரரசு, குன்றில்குமார், அழகு பதிப்பகம், விலை: ரூ.160. சந்திரகுப்த மெளரியர், அசோகர், சாணக்கியர், சாரநாத் சிம்மத் தூண், சாஞ்சி ஸ்தூபி என இந்திய வரலாற்றின் மிக முக்கியமான ஆளுமைகளையும் சின்னங்களையும் அளித்த மெளரியப் பேரரசின் ஆட்சியையும் அந்தக் காலகட்டத்தின் வாழ்க்கை முறையையும் அறிமுகப்படுத்தும் நூல். நன்றி: தமிழ் இந்து, 29/1/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%86%e0%ae%b3%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

நீராட்டும் ஆறாட்டும்

நீராட்டும் ஆறாட்டும், தொ.பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.75 புறவயமாகத் தமிழ்ப் பண்பாட்டைப் பேசும் வரலாற்று நூல்கள் தமிழில் அதிகளவில் எழுதப்பட்டுள்ளன. அகவயமாகத் தமிழரின் தொல் பண்பாட்டை ஆராயும் நூல்கள் மிக மிகக் குறைவாகவே எழுதப்படுகின்றன. அதில் ஒன்றுதான் தொ.பரமசிவனின் ‘நீராட்டும் ஆறாட்டும்.’ தமிழரின் புழங்குபொருள் சார்ந்தும் சடங்குகள் சார்ந்தும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். தொல் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் இன்றும் நடைமுறை வாழ்க்கையில் பின்பற்றப்படுகின்றன. சில சிதைந்தும் மருவியும் தொடர்கின்றன. நாம் செய்யும் ஒவ்வொரு சடங்குக்குப் பின்னாலும் ஒரு […]

Read more

தலைவர்களை உருவாக்கிய தலைவர் பூபேந்திரநாத் தத்தா

தலைவர்களை உருவாக்கிய தலைவர் பூபேந்திரநாத் தத்தா, கே.சுப்ரமணியன், இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம்-சரோஜினி பதிப்பகம், விலை: ரூ.75. ‘வெய்ய சிறைக்குள்ளே புன்னகையோடு போம்/ ஐயன் பூபேந்த்ரனுக்கு அடிமைக்காரன்’ என பாரதியே வியந்து போற்றிய பூபேந்திரநாத் தத்தா, சுவாமி விவேகானந்தரின் இளைய சகோதரர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இளைஞர்களை அணிதிரட்டிய அனுசீலன் சமிதியின் உறுப்பினர் மட்டுமின்றி அதன் வெளியீடான ‘யுகாந்தர்’ இதழின் ஆசிரியர். பொறிபறந்த அவரது எழுத்துக்கு பிரிட்டிஷ் ஆட்சி ஓராண்டு கடுங்காவல் தண்டனை கொடுத்தது. சிறையிலிருந்து வெளியே வந்து, சகோதரி நிவேதிதா தேவியின் உதவியுடன் […]

Read more
1 2 3 4 5 6 104