உலகக் கவிஞர் தமிழ்ஒளி

உலகக் கவிஞர் தமிழ்ஒளி, மு.பரமசிவம், வேமன் பதிப்பகம், பக்.160, விலை ரூ.150. கவிஞர் தமிழ்ஒளியுடன் பழக வாய்ப்புக் கிடைத்த நூலாசிரியர், கவிஞரின் தனிப்பட்ட வாழ்வு குறித்தும், படைப்புகள் குறித்தும் மிகச் சிறப்பாக இந்நூலை எழுதியிருக்கிறார். 1924 -ஆம் ஆண்டு பிறந்த விஜயரங்கம், கவிஞர் பாரதிதாசன் பணியாற்றிய கல்வே கல்லூரியில் பயின்றார். சிறு வயது முதலே கவிதை எழுதுவதில் ஆர்வமுடைய விஜயரங்கம், பாரதிதாசனின் மாணவராகி அவருடைய சீர்திருத்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு தமிழ்ஒளி என்ற புனைபெயரை வைத்துக் கொள்கிறார். 1947 – ஆம் ஆண்டு திராவிட இயக்கத்தில் […]

Read more

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்

சட்டமேதை அண்ணல் அம்பேத்கர், டாக்டர் எச்.வி. ஹண்டே, வசந்தா பதிப்பகம், பக். 176, விலை ரூ. 200. டாக்டர் அம்பேத்கர் பற்றிய எண்ணற்ற நூல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அம்பேத்கரின் மிகப் பெரும் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப்படும் இந்திய அரசியல் சட்ட உருவாக்கத்தைப் பற்றி மிகச் சிறப்பாக இந்நூலில் விவரித்துள்ளார் நூலாசிரியர். “டாக்டர் அம்பேத்கர் அன்ட் த மேக்கிங் ஆஃப் த இந்தியன் கான்ஸ்டிடியூஷன்’ என்ற ஆங்கில நூலின் தமிழாக்கமே இந்நூல். நூலாசிரியர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை ரத்தினச் சுருக்கமாகத் தெரிவித்துவிட்டு, அரசியல் சட்ட உருவாக்கத்தைப் […]

Read more

மருத்துவ மன்னர்கள்

மருத்துவ மன்னர்கள்,  ஹெலன் கிலேப்ப சேட்டில், தமிழில்  அப்துற் றஹீம், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், பக்.192, விலை  ரூ.160. மருத்துவத் துறையின் முன்னோடிகளாகக் கருதப்படும் மேயோ குடும்பத்தினர் குறித்து எழுதப்பட்ட ஆங்கில நூலின் தமிழ் வடிவம் இது. கடந்த 1955-ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளியான இந்நூல் தற்போது மறுபதிப்பு கண்டிருக்கிறது. 18-ஆம் நூற்றாண்டில் டாக்டர் வில்லியம் வாரல் மேயோவும், அவரது மகன்களான டாக்டர் வில்லியம் ஜேம்ஸ் மேயோ மற்றும் சார்லஸ் ஹொரே மேயோவும் கட்டமைத்த மாபெரும் மருத்துவ சாம்ராஜ்யத்தின் கதைதான் இந்நூல். ஒரு மருத்துவக் […]

Read more

வெற்றி என் கைகளிலே

வெற்றி என் கைகளிலே, ஹெரால்ட் ரஸ்ஸல்; தமிழில்: அப்துற்-றஹீம், யுனிவர்ஸல்பப்ளிஷர்ஸ், பக்.128, விலை  ரூ.100. ஒரு விபத்தில் இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளியான ஹெரால்ட் ரஸ்ஸல் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிய கதையை தன்வாழ்க்கை வரலாற்று நூலாக எழுதினார். 1954-இல் அப்துற்-றஹீம் வெளியிட்ட அதன் தமிழாக்கம் 67 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தனது கைகளை இழந்தஹெரால்ட் ரஸ்ஸல் அதற்காகத் தளர்ந்துவிடாமல், தனது மனதை எவ்வாறு பக்குவப்படுத்தி வெற்றியை நோக்கி முன்னேறினார் என்பதை இந்த நூல் விளக்குகிறது. “தனக்கு ஏற்படும் தடைகள், தோல்விகள், குறைகள் […]

Read more

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், முல்லை பிஎல்.முத்தையா, முல்லை பதிப்பகம், விலை 50ரூ. ஆங்கிலேயர்களுக்கு எதிராத சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் உன்னதமான வாழ்க்கைக் குறிப்பும், அவரைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் தெரிவித்த கருத்துகளும் இந்த நூலில் காணப்படுகின்றன. வ.உ.சி.யின் மகன் எழுதிய கட்டுரை மனதைத் தொடுகிறது. நன்றி : தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

காமராஜ் எனும் தமிழ் ஆளுமை

காமராஜ் எனும் தமிழ் ஆளுமை, வை.ஜவஹர் ஆறுமுகம், மணிமேகலைப் பிரசுரம், விலை 120ரூ. கர்மவீரர் காமராஜரின் ஆளுமைகளை இந்த நூல் புதிய கோணத்தில் தந்து இருக்கிறது. காமராஜரின் சுற்றுப் பயணத்தில் அவருடன் பல ஆண்டுகள் கலந்துகொண்ட இந்த நூலின் ஆசிரியர், அந்தப் பயணங்களின் போது வெளியான காமராஜரின் வியப்பான குணநலன்களை சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறார். பத்திரிகைகளை காமராஜர் எந்த அளவுக்கு மதித்தார் என்பது, கடைநிலை ஊழியரின் குறையைக் கேட்டதும், அதற்குத் தீர்வு காணும் வகையில் அரசு ஆணையை மாற்றி அமைத்தது, விதிவிலக்கு கொடுத்து […]

Read more

சித்திரச் சோலை

சித்திரச் சோலை, சிவகுமார், இந்து தமிழ் திசை, விலை: ரூ.285. பன்முக வாழ்க்கை ‘சித்திரச் சோலை’ நூலைப் படிக்கும்போது ஒரு பன்முகக் கலைஞரின் வாழ்வு எப்படி ரத்தமும் சதையுமாக வார்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுப்போவீர்கள். ஓவியர், நடிகர் என்ற இரு அம்சங்களில், இரு வேறு கோணங்களில் தன் ஒட்டுமொத்த அனுபவங்களையும் ‘சித்திரச் சோலை’யில் சிவகுமார் வடித்துள்ளார். மிகச் சிறந்த மனிதர், மார்க்கண்டேயர் என்றெல்லாம் அவர் புகழப்படுவதன் சூட்சுமம் அவரது சொல்லும் செயலும் ஒன்றாக இருப்பதிலும், அளவிட்டு அறிய முடியாத ஒரு கலை உணர்வு எப்போதும் […]

Read more

பேராசிரியர் சாலை இளந்திரையன் புலமை நலம்

பேராசிரியர் சாலை இளந்திரையன் புலமை நலம், முதுமுனைவர் பால் வளன் அரசு, கதிரவன் பதிப்பகம், விலைரூ.150 அறிவியக்க பேரவை தலைவராகவும், டில்லி பல்கலைக் கழக தமிழ்த் துறை தலைவராகவும் பணியாற்றியவர் பேராசிரியர் சாலை இளந்திரையன். அறிவியல் ரீதியான சிந்தனையை வளர்க்க முயன்றனர். அவரது இணையர் பேராசிரியை சாலினி இளந்திரையனுடன் இந்த பணியில் ஈடுபட்டு வந்தார். இவர்களின் தமிழ் மற்றும் அறிவியக்கத் தொண்டு மற்றும் வாழ்க்கை பற்றி எடுத்துக் கூறும் நுால். சிறு கிராமத்தில் பிறந்து, கல்வியால் உயர்ந்தவர். உரைவீச்சு என்ற அறிவு எழுச்சிக் கவிதைகள் […]

Read more

எனக்கு மட்டுமே தெரிந்த எம்ஜிஆர்

எனக்கு மட்டுமே தெரிந்த எம்ஜிஆர்.,  ஜானகி எம்ஜிஆர்., தாய் வெளியீடு,   பக்.152,  விலை குறிப்பிடப்படவில்லை;  தாய் வார இதழில் எம்.ஜி.ஆர்.குறித்து அவரது மனைவி ஜானகி எழுதிய தொடரின் தொகுப்பே இந்நூல். மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் குறித்து எத்தனையோ நூல்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் எம்ஜிஆரின் மனைவி என்கிற முறையில் ஜானகி எழுதியுள்ளதால் உணர்வுபூர்வமாக மட்டுமல்லாது பல்வேறு அரிய தகவல்கள், புகைப்படங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கர்நாடக இசையை திரைப்படங்களில் ஒலிக்கச் செய்த பாபநாசம் சிவனுக்கு நடந்த பாராட்டு விழாவில் அவரது தொண்டை பாராட்டி நிதி […]

Read more

கர்ஜனை

கர்ஜனை (பாகம் – 1) (பாகம் 2), இளையவேள் ராதாரவி, நக்கீரன் பதிப்பகம், விலைரூ.560 நடிகர் ராதாரவியின் வாழ்க்கை சம்பவங்களை சுவாரசியமாகக் கூறும் நுால். இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. ‘நக்கீரன்’ இதழில் பிரசுரமான கட்டுரைகளின் தொகுப்பு. பிரபல நடிகர் எம்.ஆர்.ராதா, சிறையில் இருந்து விடுதலையானதில் இருந்து துவங்குகிறது. தகவல்கள் பரபரப்பு சார்ந்து தொகுக்கப்பட்டுள்ளன. இயல்பான செய்தி மொழியில் மொத்த வாழ்க்கை வரலாறும் சொல்லப்பட்டு உள்ளதால், வாசிக்க சுலமாக உள்ளது. முதல் புத்தகம் 60 இயல்களைக் கொண்டுள்ளது. இரண்டாவது பாகம், துணிவே துணை என நம்பிக்கை […]

Read more
1 2 3 4 46