கள்ளத்தோணி

கள்ளத்தோணி, என்.சரவணன், குமரன் புத்தக இல்லம், விலை 275ரூ. மலையக மக்களின் துயரம் தோய்ந்த வாழ்க்கையைச் சமூக, அரசியல், வரலாற்று நிகழ்வுகளுடன் காலவரிசைப்படுத்தி ‘சரிநிகர்’, ‘காக்கைச் சிறகினிலே’ உள்ளிட்ட இதழ்களில் எழுதியவை இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன. கள்ளத்தோணி என்றாலே உரிய ஆவணங்களின்றி, அரசின் அனுமதியின்றி சட்டவிரோதமாகச் செல்வதல்ல, தோணியிலேயே ஒரு ரகம் அப்படியிருக்கிறது என்பது தொடங்கி வியப்பூட்டும் தகவல்கள் நிறைய உள்ளன. வடக்கு-கிழக்குத் தமிழர்களும் மலையகத் தமிழர்களும் இரண்டாம்தரக் குடிமக்களாகவும் வேற்றினத்தவராகவும் வாழ்க்கை நடத்தும் நிலை உருவானது. அதில் மலையகத் தமிழர்களைப் பல […]

Read more

உல்லாசத் திருமணம்

உல்லாசத் திருமணம், தஹர் பென் ஜெலூன், பிரெஞ்சிலிருந்து தமிழில்:சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர், தடாகம் வெளியீடு, விலை: ரூ.300 நிறப் பாகுபாட்டைப் பேசும் நாவல் புகழ்பெற்ற பிரெஞ்சு எழுத்தாளரான தஹர் பென் ஜெலூனின் புதிய நாவலை ‘உல்லாசத் திருமணம்’ எனும் லைப்பில் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர். ஆங்கில வாசகர்களுக்கு இந்நாவல் அடுத்த ஆண்டின் மத்தியில்தான் கிடைக்கவிருக்கிறது. ‘உல்லாசத் திருமணம்’ நாவல் அடிப்படையில் நிறப் பாகுபாட்டைப் பேசுகிறது. நாவல் களத்தில், இஸ்லாம் வழக்கப்படி நான்கு பெண்களை மணப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அமீரின் மனைவி லாலா […]

Read more

பேய்ச்சி

பேய்ச்சி, ம.நவீன், வல்லினம், யாவரும் வெளியீடு, விலை 300ரூ. வசைச்சொற்கள் அளவுகோல் ஆகுமா? ம.நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ நாவலை (வெளியீடு: வல்லினம் பதிப்பகம், மலேசியா; யாவரும் பப்ளிஷர்ஸ், தமிழ்நாடு) மலேசிய அரசாங்கம் தடைசெய்திருக்கிறது. தடை கோரியவர்கள் சில தமிழ் எழுத்தாளர்கள்; தமிழ் அமைப்புகள் எனத் தெரிகிறது. தடை கோர முக்கியக் காரணம், இந்நாவலில் பாலுறுப்புகளையும் சாதியையும் குறிக்கும் வசைச்சொற்கள் இடம்பெற்றுள்ளன என்பது. பாத்திரங்களின் உரையாடலில் வசைகள் வருவதும் அவற்றில் பாலுறுப்பு, பாலுறவு தொடர்பானவை அமைவதும் இயல்பானதே. கீழ், மேல் என எதிரிடையைக் கொண்டது சாதியமைப்பு. […]

Read more

தாளடி

1967 தாளடி, சீனிவாசன் நடராஜன், தேநீர் பதிப்பகம், விலை: ரூ.230 குடிசை நெருப்பில் குளிர்காயும் புனைவு ஓவியரும் எழுத்தாளருமான சீனிவாசன் நடராஜன் இலக்கிய மதிப்பீடுகளில் மட்டுமின்றி, அரசியல் கருத்துகளிலும் தனது மாறுபட்ட பார்வைகளைத் தயங்காது முன்வைப்பவர். சமீபத்தில் அவர் எழுதியிருக்கும் ‘1967 தாளடி’ நாவல், நேர்க்கோட்டு முறையைத் தவிர்த்து, கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் மாறி மாறிப் பயணிக்கிறது. பாத்திரங்களுக்கு இடையிலும் கூடுவிட்டுக் கூடுபாய்கிறது. நாட்டியம், ஓவிய நுண்கலைஞர்களின் மனவோட்டங்களையும் ரசிக மனோபாவங்களையும் விவரிக்கிறது. நாகப்பட்டினத்திலிருந்து ஹம்பிக்கும் அங்கிருந்து ஐரோப்பாவுக்கும் நாவல் பயணிக்கிறது. நிர்வாண ஓவியங்களை […]

Read more

தாளடி

தாளடி, சீனிவாசன் நடராஜன், தேநீர் பதிப்பகம், விலை 230ரூ. நீரும் நெருப்பும் சம்பா, தாளடி, குறுவை என முப்போகம் விளைவது தஞ்சை மண். இங்கு 1960களின் இறுதியில் ஏற்பட்ட மாறுதல்கள், இடது சாரி இயக்கங்கள், திராவிட இயக்க எழுச்சி, விவசாயத்தில் ஏற்பட்ட மாறுதல்கள் ஆகியவற்றின் பின்னணியில் குறிப்பாக கீழத் தஞ்சையை முன்வைத்து தாளடி என்று இந்த நாவலை எழுதி இருக்கிறார் சீனிவாசன் நடராஜன். இப்பகுதியின் வாழ்வோடு தொடர்புடையவர் ஆசிரியர் என்பதால் வரிக்கு வரி நெல்வயலின் வாசமும், குளங்கள், ஆறுகள், செடிகொடிகள், மாட்டு வண்டிகள் ஆகியவற்றின் […]

Read more

பிராந்தியம்

பிராந்தியம், நாராயணி கண்ணகி, தேனீர் பதிப்பகம், விலைரூ.55 அமரர் கல்கி நுாற்றாண்டு நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற குறுநாவல். காட்சி மயமாக எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. உரையாடல்கள் மிக இயல்பாக உள்ளன. மதுக்கடை ஏலம் பற்றி பேசுகிறது. மிகவும் முதிர்ச்சியுடன் எழுதப்பட்டுள்ளது. அருமையாக தயாரிக்கப்பட்டுள்ளது நுால். நன்றி: தினமலர் 25/10/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பதிமூனாவது மையவாடி

பதிமூனாவது மையவாடி, சோ.தர்மன், அடையாளம் பதிப்பகம், விலை 320ரூ. இலக்கியமா, பிரச்சாரமா? இது எல்லாவற்றையும் தொகுத்துப்பாருங்கள். ‘வெள்ளைக்காரர்கள் விட்டுச்சென்ற முப்பத்து ஆறாயிரம் கண்மாய்களைத் திராவிடக் கட்சிகள் அழித்த கதையைப் பேசுகிறேன்’ என்று தன்னைப் பிரகடனப்படுத்திக்கொள்ளும் ‘சூல்’ நாவலுக்குக் கடந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைக்கிறது. சோ.தர்மன் அதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ மதப் பிரிவினரைப் பின்புலமாகக் கொண்டு – குறிப்பாக, கிறிஸ்தவக் கல்வி நிலையங்கள், மடங்கள் போன்றவற்றை மிகக் கடுமையாக விமர்சிக்கும் விதமாக ‘பதிமூனாவது மையவாடி’ நாவலை எழுதுகிறார். ஜெயமோகன் முன்னுரை எழுதுகிறார். ‘அடையாளம்’ […]

Read more

கழிசடை

கழிசடை, அறிவழகன், அலைகள் வெளியீட்டகம், விலை: ரூ.160 உண்மையில் யார் கழிசடைகள்? தூய்மைப் பணியாளர்கள் ‘கடவுளாகக் கருதப்படும்’ இந்த கரோனா காலத்தில், ‘கழிசடை’ (2003) நாவல் மறுவாசிக்கப்பட வேண்டியதாகிறது. மலத்தோடும் சாக்கடைகளோடும் குப்பைகளோடும் குடும்பம் குடும்பமாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது ஓர் இனம். இவர்களைப் பற்றி, அனுமந்தய்யா எனும் துப்புரவுத் தொழிலாளர் பார்வையில் ‘கழிசடை’ நாவலைப் படைத்தார் அறிவழகன். கழிசடைகளாகவும் ஈனப் பிறவிகளாகவும் ஆக்கப்பட்டவர்களைப் பற்றி இந்த நாவல் அழுத்தமாகப் பேசுகிறது. “தீண்டப்படாத சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கம்பீரமாக ஒலிக்கும் பெயர்களை வைப்பது குற்றம்; […]

Read more

ஏதிலி

ஏதிலி, அ.சி.விஜிதரன், சிந்தன் புக்ஸ் வெளியீடு, விலை: ரூ.250. ஈழப் போரின் பின்னணியில் எவ்வளவோ நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதப்பட்டிருந்தாலும்கூட, அதன் சில பக்கங்கள் இன்னும் ஆழமாக அணுகப்படாமலே இருக்கின்றன. போரால் ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளை மகத்தான இலக்கியங்களாக்கிய ஷோபாசக்தி, ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில், “போராட்டத்துக்கும் சாதிக்கும் இடையேயான தொடர்பு, குழந்தைப் போராளிகளின் அகவுலகம், ஈழப் பிரச்சினை குறித்த சிங்கள அடித்தள மக்களின் பார்வை, போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு என முழுமையான படைப்புகள் இனிதான் எழுதப்பட வேண்டும்” என்றார். […]

Read more

கழுதைப்பாதை

கழுதைப்பாதை, எஸ்.செந்தில்குமார், எழுத்து பிரசுரம் வெளியீடு, விலை: ரூ.375 கழுதைகள் மனிதரோடு இணைந்து வாழப் பழகி கிட்டத்தட்ட 6,000 வருடங்கள் ஆகிவிட்டன. இன்று கழுதைகள் காண்பதற்கரிய விலங்காகிப் போனாலும், தமிழ்நாட்டில் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை பொதி சுமக்கும் விலங்காக, குறிப்பாக மலைப் பகுதிகளில் பயன்பட்டுவந்திருக்கின்றன. 1950-களில் தேனி, கம்பம் சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் விளையும் காப்பித் தளிர்களை இறக்கவும், தரையிலிருந்து அத்தியாவசியப் பொருட்களை மலைக்கு மேலேற்றவும் பயன்படும் கழுதைகள், அவற்றின் மேய்ப்பர்களான கழுதைக்காரர்கள், அந்த மலைகளின் ஆதிகுடிகளான முதுவான்கள், முதுவாச்சிகள், தலைச்சுமைக் கூலிகள், […]

Read more
1 5 6 7 8 9 66