பத்து இரவுகளின் கனவுகள்

பத்து இரவுகளின் கனவுகள், நாட்சுமே சொசெகி, தமிழில்: கே.கணேஷ்ராம், நூல்வனம் வெளியீடு, விலை: ரூ.150. நாட்சுமே சொசெகி: கனவுகளைத் தியானிக்கும் எழுத்து கனவின் மாயத்துடன் புனைவுகளை உருவாக்குவதில் வெற்றிபெற்ற வெகு சிலரில் போர்ஹேஸும் ஒருவர். ‘நீங்கள் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை, முந்தைய கனவொன்றில் விழித்திருக்கிறீர்கள், அந்தக் கனவு இன்னொரு கனவுக்குள் இருக்கிறது, அது இன்னொரு கனவுக்குள், இப்படியே முடிவற்றுப் போய்க்கொண்டிருக்கிறது…’ என்று ‘கடவுளின் எழுத்து’ கதையில் எழுதியிருப்பார். கனவை இலக்கியமாக்குவதில் போர்ஹேஸுக்கும் முன்னோடி ஜப்பானின் மிக முக்கியமான நவீனப் படைப்பாளிகளுள் ஒருவரான நாட்சுமே சொசெகி (1867-1916). […]

Read more

மதாம்

மதாம், மு.ராஜேந்திரன், அகநி வெளியீடு, பக். 336, விலை ரூ.400. ஆனந்தரங்கப் பிள்ளை எழுதிய நாள்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட வரலாற்று நாவல் இது. 1742 முதல் 1754 வரை புதுச்சேரி கவர்னராக இருந்த ஜோசப் துயூப்ளேவின் மனைவி ழான் சீமாட்டியை மையப்படுத்தி நிகழ்ந்த சம்பவங்களை வரிசைக் கிரமமாகத் தொகுத்து சுவாரஸ்யமான நாவலாக உருவாக்கியிருக்கிறார் நூலாசிரியர். இந்திய வம்சாவளித் தாய்க்கும், ஐரோப்பிய தந்தைக்கும் மகளாக பிறந்தவர்தான் ழான். தனது 13-ஆவது வயதில் தன்னை விட வயதில் மிகவும் மூத்த வேன்சான் என்ற பிரெஞ்சு வணிகரை […]

Read more

மனிதன் நினைப்பது ஒன்று

மனிதன் நினைப்பது ஒன்று, அசோக் யெசுரன் மாசிலாமணி, மாசி பப்ளிகேஷன்ஸ், பக்.152,  விலை ரூ.130. ஜமீன்தார் முறை நம்நாட்டில் ஒழிக்கப்பட்டுவிட்டாலும், பழைய ஜமீன்தார்கள் செல்வ வளத்தோடும், பாரம்பரிய மரியாதைகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய நாவல் இது. பாரம்பரியமான வாழ்க்கைமுறையை மேற்கொள்ளும் பெரிய ஜமீன், நவீன கலாசாரத்தில் மூழ்கிக் கிடக்கிற தன் மகனைப் பற்றிக் கவலைப்படுகிறார். சின்ன ஜமீனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு, சின்ன ஜமீனின் மனைவி கர்ப்பம் தரிக்கிறாள். உறவினர் ஒருவரின் மரணத்தின் காரணமாக, பெரிய ஜமீனும் அவருடைய மனைவியும் […]

Read more

திருமூர்த்தி மண்

திருமூர்த்தி மண் (நாவல்) படுகளம்-2, ப.க. பொன்னுசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., பக்.524, விலை ரூ.530.  நூலாசிரியரின் படுகளம் நாவலைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்குப்பின் திருமூர்த்தி மண்-படுகளம் இரண்டாம் பாகம் வெளிவந்துள்ளது. திருமூர்த்தி மலைக்கும் உடுமலைப்பேட்டைக்கும் இடையே உள்ள பள்ளிபுரம் கிராமத்தைச் சுற்றிதான். கரும்பும் நெல்லும் பிரதான தொழில்கள். வழக்கம் போல் ஊரின் 3 முக்கிய கவுண்டர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடையே காலம்காலமாக தொடரும் விரோதமே படுகளத்தின் கரு. திருமூர்த்தி மண்- 1935-ஆம் ஆண்டு முதல் 1985 வரையுள்ள 50 ஆண்டு […]

Read more

பட்டக்காடு

பட்டக்காடு, அமல்ராஜ் பிரான்சிஸ், எழுத்துப் பிரசுரம் வெளியீடு, விலை: ரூ.599. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தில் பணியாற்றும் அமல்ராஜ் பிரான்சிஸின் முதல் நாவல் ‘பட்டக்காடு’. ஈழப் போரின் இறுதிக் காலகட்ட அனுபவங்களை மையமாக வைத்து அவர் ‘தினக்குரல்’ பத்திரிகையில் எழுதிய தொடர்தான் இப்போது நாவலாக உருமாறியிருக்கிறது. வன்னிக்கு வெளியே இருந்து போரை எதிர்கொண்ட தமிழர்களின் கதையாக இந்நாவல் விரிகிறது. அதாவது, வன்னியில் நடக்கும் சாவுகளைக் கண்டு பயந்து வாழ்பவர்களின் கதை. நன்றி: இந்து தமிழ், 7/09/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

தடங்கள்

தடங்கள், எம்.ஏ.சுசீலா, மீனாட்சி புத்தக நிலையம், விலை: ரூ.225. பெண்களும் நெருக்கடிகளும் தன்னுடைய அனுபவங்களிலிருந்தே இந்த நாவலை எழுதியதாகச் சொல்கிறார் நாவலாசிரியர் எம்.ஏ.சுசீலா. தனது பேராசிரியர் பணியில் எதிர்கொண்ட பலதரப்பட்ட பெண்களை நாவலுக்குள் உலவவிட்டிருக்கிறார். நாவல் முழுக்கவும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள்தான். ஒவ்வொருவருக்கும் விதவிதமான பிரச்சினைகள். பெண்களின் கோணத்திலிருந்தே அவர்களுடைய பிரச்சினைகள் விவரிக்கப்படுகின்றன. பெண்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கெல்லாம் ஆதார மையமாக ஆண்களே இருக்கிறார்கள். பெண்கள் தாம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை எப்படிச் சமாளிக்கிறார்கள், அந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியாமல் எப்படித் திணறுகிறார்கள் என்பனவற்றைச் சொல்வதே நாவலாசிரியரின் அக்கறையாக […]

Read more

உணர்வுகள் மோதும் பொழுது

உணர்வுகள் மோதும் பொழுது, மாந்துறை பாபுஜி, மணிமேகலை பிரசுரம், விலைரூ.220 நெஞ்சை தொடும் சம்பவங்கள் அடங்கிய நாவல். அற்புத ராஜ் – லுார்து குடும்பத்தினர் நெடுங்காலத் தோழமை உடையவர்கள். லுார்துவின் மகன் ஜோசப் நல்ல பையன். திடீரென்று திருத்த முடியாத குடிகாரன் ஆகிறான். அவன் ஏன் குடிகாரன் ஆனான் என்பது தான் கதையை வளர்க்கிறது. காதல் தோல்வி அவனை குடிகாரன் ஆக்குகிறது. காதலித்த பெண் கிடைத்ததும் திருந்தி நல்ல மனிதன் ஆகிறான். சம்பவங்களை அடுக்கிச் செல்லும் முறையிலும் கதை மாந்தர் உரையாடலிலும் நேர்த்தி உள்ளது. […]

Read more

சிலிங்

சிலிங்,  கணேசகுமாரன்; எழுத்து பதிப்பகம்,  பக். 85,,  விலை ரூ. 110; கண்ணாடி உடையும் போது கிடைக்கும் ஒலியாகிய சிலிங் என்பதையும், இப்போதைய சூழலில் பெரும்பாலானோருக்குத் தேவைப்படும் மனோதத்துவ கவுன்சிலிங் என்பதன் கடைசி மூன்று எழுத்தைக் கொண்ட சிலிங்- கும் தான் தனது குறுநாவலின் பெயருக்கான பொருள் என்கிறார் நூலாசிரியர். இரு பாகங்கள். முதல் பாகம் 12 பகுதிகளைக் கொண்டது. ஒரு பகுதி கதையாகவும், அடுத்த பகுதி டைரிக் குறிப்பாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் பாகம் 12 பகுதிகளைக் கொண்டது. இதில் 10ஆவது பகுதி மட்டும் […]

Read more

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் – பாகம் 5

தமிழ்வாணனின் மர்ம நாவல்கள் – பாகம் 5, தமிழ்வாணன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.440 எளிய தமிழ் நடையில் புதினங்கள் படைத்த பெருமைக்கு உரியவர் தமிழ்வாணன். துப்பறியும் புதினங்களுக்கு முன்னோடியாக கொடிகட்டிப் பறந்தவர். மர்ம நாவல்கள், துப்பறியும் நாவல்கள் என்று ஆர்வத்தைத் துாண்டும் எழுத்து நடைக்குச் சொந்தக்காரர். சங்கர்லால் என்னும் துப்பறியும் பாத்திரத்தை உருவாக்கிப் பல நாவல்களைப் படைத்தவர், சொந்தப் பெயரிலேயே, ‘தமிழ்வாணன் துப்பறிகிறார்’ என்றும் படைத்துள்ளார். பெர்லின், டோக்கியோ, சிகாகோ முதலான அயல்நாட்டு நகரங்களின் பெயர்களை, தமிழகத்தில் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் அறிமுகம் செய்தவர் […]

Read more

மணிச்சித்திரத்தாழ்

மணிச்சித்திரத்தாழ், தாழை மதியவன்; தாழையான் பதிப்பகம்,  பக்.158;  விலைரூ.150. மாறுபட்ட சமூகங்களைச் சேர்ந்த இரு இணையர்கள்தான் இந்நாவலின் நாயகர்கள் மற்றும் நாயகியர். அவர்களது காதல், மண வாழ்க்கை, இல்லறம் குறித்த கதை என்றாலும், அதனுள்ளே இருவேறு மதங்களைப் பற்றிய சமூகக் கட்டமைப்புகளையும், அதனால் ஏற்படும் சவால்களையும் விவரித்திருக்கிறார் நூலாசிரியர். காதலின் ஊடே சமகால சமூகப் பிரச்னைகளை அலசும் வகையில் இந்நாவல் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. பேரன்பாக ஒவ்வொருவரது ஆழ்மனதுக்குள்ளும் நிறைந்திருக்கும் காதல், பேராண்மையாக இந்த மானுடத்தை எப்படி எதிர்கொள்கிறது என்பதுதான் கருப்பொருள். அனுராதா என்னும் […]

Read more
1 3 4 5 6 7 66