மாறுமோ தமிழக வறட்சி நிலை?

மாறுமோ தமிழக வறட்சி நிலை?, ச. அரிகரபுத்ரன், மணிமேகலைப்பிரசுரம், விலை 60ரூ. நூலில் இடம் பெற்றுள்ள கவிதைகளில் நாட்டு நலன், மக்கள் நலன், மொழி நலன், சிந்தனை ஆற்றல்கள் காணப்படுகிறது. பெண் குழந்தைகள் குப்பைத் தொட்டியில் வீசப்படும் அவலம் கண்டு ஆசிரியரின் உள்ளக்குமுறல் வெளிப்படுகிறது. நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

இன்றைய பிரச்சனைகளும் தீர்வுகளும்

இன்றைய பிரச்சனைகளும் தீர்வுகளும், ப. திருமலை, கற்பகம் புத்தகாலயம், விலை 250ரூ. சமூக, பொருளாதார, அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு. இதில் பொதுமக்களிடம் இருந்து அன்னியப்பட்டு போகிறதா பொது வினியோகத் திட்டம்? அள்ளும் மணல் அழியும் உயிரினம், தமிழகத்தில் தலித் படுகொலைகள், பிளாஸ்டிக் பயங்கரம், சுங்கச் சாவடியா வழிப்பறி நிலையமா?, பொது சிவில் சட்டம் அவசியமா? என்பன போன்ற 42 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தேசிய அளவிலும், மாநில அளவிலுமான மக்கள் பிரச்சினைகள் குறித்து இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன. மக்களின் அன்றாட வாழக்கையைப் பறிக்கும் அரசின் கொள்கைகள் […]

Read more

சாதி தேசத்தின் சாம்பல் பறவை

சாதி தேசத்தின் சாம்பல் பறவை, ‘எவிடன்ஸ்’கதிர், விகடன் பிரசுரம், விலை 175ரூ. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். காவல் துறை வன்முறைகள், ஜாதிய வன்கொடுமைகள், பெண்கள் மீதான கொடுமைகள் என கள ஆய்வு செய்து, செய்திகளோடு மட்டும் அல்லாமல் ஆதாரப் படத்துடன் கூடிய, 29 நீண்ட கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். ஜாதியக் கொடுமைகளுக்கு எதிராக மட்டும் அல்லாமல், பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் இந்நூல் குரல் கொடுக்கிறது. சமூக நீதிக்காகவும், மனித உரிமைக்காகவும் இந்நூல் பதியப்பட்டு உள்ளது. – முனைவர் […]

Read more

நெருப்புப் பொறிகள்

நெருப்புப் பொறிகள், அரசியல் சமூக பொருளாதாரக் கட்டுரைகள், பேராசிரியர் மு. நாகநாதன், கதிரொளி பதிப்பகம், விலை 150ரூ. ஆழமும் விரிவும் தமிழ்நாட்டில் வாழும் முக்கியமான பொருளாதாரம், மாநில சுயாட்சியில் அறிஞரான பேராசிரியர் நாகநாதனின் கருத்துக்கள் எப்போதுமே கவனிக்கத்தக்கன. திமுக தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தாலும் கூட அவரது கருத்துகளில் துணிச்சலும் தனித்துவமும் இருக்கும். அவர் சிந்தனையாளன் இதழில் குட்டுவன் என்ற பெயரில் எழுதிவந்த தொடர் பத்தியிலும் இந்த தனித்துவம் இருந்தது. இந்திய அரசியல், உலக அரசியல், பொருளாதாரம், மதம், நீதித்துறை, சாதியம், மத்தியில் ஆளும் கட்சிகள் […]

Read more

சாதி தேசத்தின் சாம்பல் பறவை

சாதி தேசத்தின் சாம்பல் பறவை, எவிடன்ஸ் கதிர், விகடன் பிரசுரம், பக். 216, விலை 175ரூ. காவல் துறை வன்முறைகள், சாதிய வன்கொடுமைகள், தீண்டாமை சித்ரவதைகள், கொத்தடிமை தொழிலின் அவலம், பெண்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக, 20 ஆண்டுகளாக போராடிய, ‘எவிடன்ஸ்’ கதிரின் அனுபவங்களே இந்த கட்டுரை தொகுப்பு. இந்த புத்தகம், அநீதிகள் நடக்கும்போது, அமைதியாய் இருப்போரின் மனசாட்சியை தட்டி எழுப்பும். நன்றி: தினமலர், 17/1/2017.

Read more

ஈழத்தில் தமிழ் இலக்கியம்

ஈழத்தில் தமிழ் இலக்கியம், கார்த்திகேசு சிவத்தம்பி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 240ரூ. ஈழத்தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கட்டங்களையும், வெவ்வேறு காலநிலைகளில் வெளியான இலக்கிய ஆக்கங்களைப் பற்றிய நூல். பழமையான வரலாற்றை கொண்ட ஈழத்தமிழ் இலக்கியத்தை ஆழமாக ஆய்வு செய்து நூலாசிரியர் எழுதியிருப்பது பல்வேறு கட்டுரைகள் மூலமாக தெரிகிறது. இலக்கியப்படைப்புகள், ஈழத்துக் கவிதைப் போக்கு, நாடகங்களின் வகைகள், இலக்கிய விமர்சனம், இலக்கிய அரசியல் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய கருத்துகள் இதில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டு உள்ளன. புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிய ஆய்வுக்கட்டுரையும், […]

Read more

தமிழில் பிழைகள் தவிர்ப்போம்

தமிழில் பிழைகள் தவிர்ப்போம், புலவர் அ.சா. குருசாமி, நர்மதாபதிப்பகம், விலை 70ரூ. தமிழில் பிழை இன்றி எழுதுவதற்கான வழிகளைச் சொல்கிறார், புலவர் அ.சா. குருசாமி. இந்தப் புத்தகத்தைப் படித்தால் இலக்கணப் பிழை இல்லாமல் எழுதலாம். பயனுள்ள நூல். நன்றி: தினத்தந்தி, 15/6/2016.   —- எழுத்துகளை எரித்தல் கருத்துகளை ஒடுக்குதல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலை 300ரூ. கலை, இலக்கியம், வரலாறு குறித்து நூலாசிரியர் எஸ்.வி. ராஜதுரை எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சமூக பிரச்சினைகளையும், அரசியல் கட்சிகளின் மக்கள் விரோத போக்குகுளையும் விரிவாக […]

Read more

சங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை

சங்கப் பாடல்களில் சாதி, தீண்டாமை இன்ன பிற…, வீ.எஸ். ராஜம், மணற்கேணி, பக். 80, விலை 60ரூ. சாதிகளின் உடலரசியல், உதயசங்கர், நூல்வனம், பக். 94, விலை 75ரூ. ஜாதி ஒழிப்பு : நம்பிக்கை விதைக்கும் நூல்கள் இந்தியச் சூழலில், சாதியை சந்திக்காமல் எவரும் வாழ்க்கை நடத்திவிட முடியாது. சாதியை வெளியில் சொல்லிக் கொள்வது அநாகரிகம். இன்னொருத்தர் சாதியைக் கேட்பது அவமரியாதை என்ற உணர்ச்சிகளுக்கு, இன்றைய இந்திய சமூகத்தில் இடமில்லாமல் போய்விட்டது. மாறாக தன், சாதியின் ‘பெருமை’யை பெரிதாகப் பேசித்திரிவது, தன்னை இன்ன சாதி […]

Read more

உறவுகள்

உறவுகள், வி.ஜி. சந்தோஷம், சந்தனம்மாள் பதிப்பகம், பக். 287, விலை 150ரூ. ‘வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால் பெரும் சாதனைகள் புரிவதற்காக அதனைச் செலவிட வேண்டும்’ என்கிறார் மகாத்மா காந்தி. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். உலகிலுள்ள 700 கோடி மக்களும் கூடி வாழ்வது எத்தனை பெரிய சிறப்பு! மகிழ்ச்சி, அன்பு, ஒற்றுமை, உறவு, உழைப்பு, உயர்வு போன்ற கொள்கைகளே உலக மக்களை ஒருங்கிணைக்கும் பாலங்களாக அமைய முடியும். எனவே, ஒற்றுமை என்பது அனைத்து உயிரினங்களிலும் காணப்படுகின்றது. அவை பெரும்பாலும் குழுக்களாகவே இயங்குகின்றன. […]

Read more

கவி கா.மு. ஷெரீப் கட்டுரைகள்

கவி கா.மு. ஷெரீப் கட்டுரைகள், தொகுப்பு காவ்யா சு. சண்முக சுந்தரம், காவ்யா, விலை 900ரூ. கவிஞர், எழுத்தாளர், பாடல் ஆசிரியர், நாடக ஆசிரியர், சொற்பொழிவாளர், சீறாப்புராண விரிவுரையாளர் என்பன போன்ற பன்முகம் கொண்டவர் கவி கா.மு. ஷெரீப். இவர் எழுதிய கட்டுரைத் தொகுப்புகள் முதல் முறையாக முழு அளவில் நூலாக வெளி வந்துள்ளது. இதில் தமிழரின் சமயநெறி, தமிழரசு கழகம் ஏன் வந்தது? சீறாப்புராண சொற்பொழிவுகள், வள்ளல் சீதக்காதி வரலாறு, பத்ர் போரின் பின் விளைவுகள் மாதம் இருமுறை வெளியான ‘ஒளி’ தலையங்கங்கள் […]

Read more
1 2