மனம் செய்யும் மாயவித்தை

மனம் செய்யும் மாயவித்தை, ரவி வல்லூரி, மணிமேகலை பிரசுரம், விலை- ரூ.260. இந்த நூலின் ஆசிரியரான ரவி வல்லூரி, இந்திய ராணுவத்தில் பணியாற்றிவிட்டு தற்போது உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் இந்திய ரயில்வேயில் பணியாற்றிவருகிறார். ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரின் ‘வாழும் கலை’ இயக்கத்தில் ஆசிரியராகச் செயல்பட்டுவருகிறார். கடந்த இரண்டாண்டுகளில் பெற்றோர் இருவரையும் அடுத்தடுத்துப் பறிகொடுத்திருக்கிறார். கரோனா தொற்றுக்கு ஆட்பட்டுத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். இதுபோன்ற மோசமான சூழ்நிலைகளும் துரதிர்ஷ்டங்களும் நிறைந்த இந்த வாழ்வின் இருண்ட பக்கங்களை எதிர்கொள்வதற்குத் தேவையான விழிப்புணர்வையும் பக்குவப்பட்ட மனநிலையையும் அடைவதற்கு ஆன்மிகப் பாதையில் வழிகாட்டும் […]

Read more

பெண்மைய வாசிப்பும் அரசியலும்

பெண்மைய வாசிப்பும் அரசியலும், அரங்க மல்லிகா, புலம் வெளியீடு, விலை: ரூ.150. பெண்மைய வாசிப்பு பேராசிரியரும், சமூகச் செயல்பாட்டாளருமான அரங்க மல்லிகா விளிம்பு நிலை விடுதலைச் சிந்தனை ஓட்டத்தில் தொடர்ந்து பயணித்துவருபவர். இந்த நூலில் மொத்தம் 18 கட்டுரைகள். அத்தனையும் பெண்ணை மையப்படுத்தியே சுழல்கின்றன. சங்க இலக்கியம் தொடங்கிச் சமகால இலக்கியம் வரை பேராசிரியர் காத்திரமாகக் களமாடியிருக்கிறார். தமிழ்ச் சமூகத்துக்கு அவர் புதுப்புதுத் தகவல்களை, தரவுகளை அள்ளியள்ளித் தருகிறார். வரலாற்று மூலமும் தொன்மமும் அவர் கட்டுரைகளில் மிக இயல்பாக வந்து நுழைகின்றன. அவை பண்பாட்டுத் […]

Read more

வாசிப்பும் வாழ்வும்

வாசிப்பும் வாழ்வும், தொகுப்பு ஆசிரியர் கே. சுந்தர்ராஜ், பார்ட் இயக்கம் வெளியீடு, விலை 120ரூ. வாசிப்புக் கலை பற்றி 60-க்கும் மேற்பட்டவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான இந்த நூல், இளைய தலைமுறையினரை வாசிக்கும் பழக்கத்துக்கு இட்டுச் செல்லும் வகையில் உள்ளது. நன்றி : தினத்தந்தி, 18/4/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மண்வளம் காக்க பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்

மண்வளம் காக்க பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், யாஸ்மின் பேகம், மணிமேகலைப் பிரசுரம், விலை 120ரூ. பிளாஸ்டிக்கைத் தவிர்க்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரை உள்பட பல்வேறு கருத்துக்ளையும் விழிப்புணர்வு அம்சங்களையும் கொண்ட கருவூலமாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. மணிப்பூரில் பெண்கள் மட்டுமே இயக்கும் ஆச்சரியமான மார்க்கெட், இந்திய தேசிய கீதம் பிறந்த கதை, கோகோ மற்றும் சாக்லெட் அறிமுகமானது எப்படி என்ற விவரம், கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பல் பற்றி வெளிவராத செய்திகள், அலையாத்திக் காடுகளின் அருமை போன்ற கட்டுரைகளை, வசனகர்த்தா மற்றும் படத் […]

Read more

எல்லோருக்குமானவரே

எல்லோருக்குமானவரே, க.கணேசன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை, விலை: ரூ.20. அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி கடந்த ஏப்ரல் 14 அன்று மலிவுப் பதிப்பாக வெளியான ‘எல்லோருக்குமானவரே’ நூல், இதுவரையில் இரண்டாயிரம் பிரதிகளுக்கும் மேலாக விற்பனையாகியுள்ளது. ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி குறித்த அம்பேத்கரின் சிந்தனைகளைப் பற்றி அசோக் தாவ்லே எழுதிய கட்டுரை, பெண் விடுதலைக்கு அம்பேத்கரின் பங்களிப்பு குறித்து பிருந்தா காரத் எழுதிய கட்டுரை ஆகியவற்றின் மொழிபெயர்ப்புடன் பேராசிரியர் க.கணேசன் எழுதிய கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இந்திய அரசமைப்பின் சிற்பி, ஒடுக்கப்பட்டோரின் தலைவர் என்பதைத் தாண்டி மானுடவியல், […]

Read more

என் ஜன்னலுக்கு வெளியே

என் ஜன்னலுக்கு வெளியே, மாலன், கவிதா பப்ளிகேஷன், விலைரூ.300 வார இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். ‘இன்னும் கொஞ்சம் இனிப்பு சேராதா?’ முதல், ‘கனவுகளும் கருகலாமா?’ என்பது வரை, 71 தலைப்புகளில் சமூகம் குறித்து பேசும் நுால். உறவு, குழந்தை மனம், காதல், கனவு, கலை, நம்பிக்கை, சாதனையாளர்கள், சிறந்த மனிதர்கள், அரசியல், ஆன்மிகம், ஊடகம், பிரபலங்கள், சமூக சூழல், வாழ்வியல் குறித்த தலைப்புகளில் எழுதி உள்ளார். தமிழகம் முதல், உலக அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் வரை, அவர்களின் குணங்கள், அதிகாரம், அரசியல் தந்திரங்களை […]

Read more

அகத்தைத் தேடி

அகத்தைத் தேடி, தஞ்சாவூர்க் கவிராயர், விலை: ரூ. 200. அகத்தின் சாவி அஷ்டாவக்கிரர், அரிஸ்டாட்டில் காலத்திலிருந்து சத்தியம் என்பது வெளிப்படையாகவே உள்ளது. அதைப் புரிந்துகொள்வதற்கான திராணிதான் அனைவருக்கும் இல்லை. திறந்து கிடக்கும் உண்மையைப் பார்ப்பதற்கான, எதிர்கொள்வதற்கான திராணி இல்லாத இடத்தில்தான் உண்மைக்குத் திரை போடப்பட்டு, பூசைகளும் புனஸ்காரங்களும் தொடங்குகின்றன. அனுஷ்டானங்களும் மடத்தனங்களும் நியமங்களும் மனிதனைப் பிரித்து வகுக்கும் பாகுபாடுகளும் தொடங்குகின்றன. நன்மை, தீமை, கருத்தியல், விருப்புவெறுப்புகள், ஆசைகள், அச்சங்களால் மனிதர்களும் சமூகங்களும் தேசங்களும் தங்களுக்குள் போரிட்டு மாயும் காலத்தில் மனிதர்கள் நேசிக்க மறந்துவிட்ட சூழலில் […]

Read more

விதையாக இரு

விதையாக இரு, வழக்கறிஞர் த.இராமலிங்கம், விகடன் பிரசுரம், விலை 210ரூ. தமிழ் இலக்கியங்களில் அனைவருக்கும் பயனளிக்கும் கருத்துகள் ஏராளம் இருப்பதை இந்த நூல் சுட்டிக்காட்டி இருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பாடல்களை எடுத்துக்கூறி, அவற்றில் காணப்படும் வாழ்க்கைக்குத் தேவையான முன்னேற்ற சிந்தனைகள் என்ன என்பது, ஆர்வத்துடன் படிக்கும்வகையில் தரப்பட்டு இருக்கின்றன. அவ்வையார் பாடல்கள், உலகநீதி, வெற்றிவேற்கை, திரிகடுகம், நீதிவெண்பா, திருமந்திரம் போன்றவற்றின் இலக்கிய வரிகள் கூறும் அறநெறிகள், ஆங்காங்கே கதை வடிவிலும் உரை நடையாகவும் கொடுத்து இருப்பது அனைத்துக் கருத்துகளையும் படிக்க […]

Read more

என் ஜன்னலுக்கு வெளியே

என் ஜன்னலுக்கு வெளியே, மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.352, விலை ரூ.300.  குடும்பத்தோடு தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் நாம், நமக்காகப் பணி செய்வதாலேயே குடும்பத்தோடு தீபாவளியைக் கொண்டாட இயலாதநிலையில் இருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களையும் நமது கொண்டாட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று யோசனை கூறும் கட்டுரையில் தொடங்கி, ரஜினிகாந்த் இந்தியப் படவிழாவில் கெளரவிக்கப்பட்டது, தமிழ் நாளேடுகளில் இடம் பெறும் விளம்பரங்களில் தமிழ் சொற்றொடர்கள் ஆங்கில எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பது, தமிழ்ப் பெயர்களைத் தமிழ் உச்சரிப்பில் உள்ளவாறு ஆங்கில எழுத்துகளைக் கொண்டு எழுத வேண்டும் என்று மாநில […]

Read more

திருநெல்வேலி-நீர்-நிலம்-மனிதர்கள்

திருநெல்வேலி-நீர்-நிலம்-மனிதர்கள், இரா.நாறும்பூநாதன், சந்தியா பதிப்பகம், பக். 270, விலை ரூ.270. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மண்ணின் சிறப்புகள் பற்றிய 41 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஆதிச்சநல்லூர் அகழாய்வு முதல் குற்றால குறவஞ்சி வரை தெரிந்த விஷயங்கள் பற்றிய தெரியாத விவரங்களை சுவாரசியமாகத் தந்திருப்பது சிறப்பு. தஞ்சையில் பிறந்து திருநெல்வேலிக்கு வந்து ஏழை, எளிய மக்களுக்கு கல்விக் கொடையளித்த கிளாரிந்தா, ஆசியாவிலேயே பெரிய கண் பார்வையற்றோர் பள்ளியை பாளையங்கோட்டையில் தொடங்கிய ஆஸ்க்வித் ஆகியோரின் வரலாறு, நெல்லைச் சீமையில் 19-ஆம் நூற்றாண்டில் பல்வேறு கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்ட […]

Read more
1 8 9 10 11 12 88