எல்லோர்க்கும் சொந்தம் முஹம்மது நபி

எல்லோர்க்கும் சொந்தம் முஹம்மது நபி, நாகூர் சா.அப்துர் ரகீம், அறிவு நாற்றங்கால், விலைரூ.110. நபிகளின் பிறப்பும் வளர்ப்பும், வருகை, முன்னறிவிப்புகள், துாதர் ஆனது, உதாரண வாழ்வும் வரலாறும், முழுமை நிலை, வழிகாட்டல், தந்த செய்திகள், அற்புதங்கள், தோழர்கள், நிகழ்த்திய உரைகள் என்ற 17 தலைப்புகளில் விரிவடைகிறது. வரலாற்றுச் செய்திகளை அழகுடன் வரிசைப்படி விளக்குகிறார். விவிலியத்தில் இயேசு, யோவான் சுவிஷேசத்தின் வசனம், நபிகள் பெருமான் வருகையைக் கூறுவதாகவும் எழுதியுள்ளார். புனித நபிகள் பெருமை பேசும் நுால். – முனைவர் மா.கி.ரமணன் நன்றி: தினமலர், 28/11/21. இந்தப் […]

Read more

திருமணமும் ஒழுக்கநெறிகளும்

திருமணமும் ஒழுக்கநெறிகளும், முனைவர் சி.ஸ்ரீராம், காவ்யஸ்ரீ பப்ளிஷர்ஸ், விலைரூ.350 இயற்கை வடிவமைத்த திருமண உறவின் அருமைகளைப் பாலியல் வேட்கையின் பின்னணியில் உலகளாவிய பார்வையில் ஆய்ந்து, நோபல் பரிசு பெற்ற அறிஞர் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் எழுதிய ஆங்கில நுாலின் மொழிபெயர்ப்பு வடிவம். பாலியல் உறவு என்பது உணவு, குடிநீர் மீதான வேட்கை போன்றதே என முன்மொழிந்து, உணர்வியல் போக்குகளை உற்றுநோக்கி, மூட நம்பிக்கைகளை முற்றிலும் மறுதலித்துத் தெளிவான கண்ணோட்டத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடக்க கால சமூகத்தில் தனிநபர் உணர்வு, காதல், குடும்பம், நாடு எனும் பல […]

Read more

பார்த்தது கேட்டது படித்தது! பாகம் 5

பார்த்தது கேட்டது படித்தது! பாகம் 5, அந்துமணி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.600 தினமலர் – வாரமலர் இதழில், வாசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ளது, அந்துமணி எழுதி வரும், பா.கே.ப., என்ற, ‘பார்த்தது கேட்டது படித்தது’ பகுதி. இந்த பகுதியில் வெளியான கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, ஏற்கனவே மூன்று புத்தகங்களாக வந்துள்ளன. நான்கு மற்றும் ஐந்தாவது தொகுதிகளை, தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகம் தற்போது வெளியிட்டுள்ளது. புத்தகங்களின், ‘என்னுரை’ பகுதியில், பா.கே.ப., பகுதியை தன் டைரி என குறிப்பிட்டுள்ளார் அந்துமணி. சாதாரண மனிதனின் […]

Read more

அறிவோம் ஆன்மிகம்

அறிவோம் ஆன்மிகம், சத்தியவதனா, சத்யா பதிப்பகம், விலைரூ.150 மன அமைதிக்கும், ஒழுக்க நெறிகளுக்கும் துணையாக அமையும் நுால். எத்தனை முறை படித்தாலும், சலிப்பு ஏற்படுத்தாத, 30 கட்டுரைகள் உள்ளன. தர்மத்தின் அளவுகோல் கருத்தும், கல்வி வளம்தரும் கோவில் விளக்கமும், கீதை உபதேசத்தை ஏன் கிருஷ்ணர் செய்தார் என்பது குறித்து எழுதப்பட்டு உள்ளது. வள்ளலாரின் போதனைகளை பட்டியலிடுகிறது. காளிதாசனின், ‘சியாமளா தண்டகம்’ தோன்றிய விதமும், நந்தி பற்றிய குறிப்புகளும் விளக்கமாக உள்ளன. குடும்பத்தில் சண்டை போடாமல் இருந்தால் கிடைக்கும் பலனும், தேர்த் திருவிழாவின் நன்மையும் பயனுள்ளதாக […]

Read more

சிவாலயங்களும் சிவகங்கை வாவிகளும்

சிவாலயங்களும் சிவகங்கை வாவிகளும், குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம்,  பக்.280, விலை ரூ.250. கோயில் சார்ந்த குடிகளும் குடிகள் சார்ந்த கோயிலுமே தமிழர் வாழ்நெறி. ஆனால், கோயில்களைப் பற்றி நன்கு அறிந்திருப்பவர்கள் கூட அக்கோயில்களோடு தொடர்புடைய குளங்கள் குறித்து அறிந்திருப்பார்களா என்பது ஐயமே. இந்நூலில் திருக்கோயில்கள் குறித்தும், திருக்குளங்கள் குறித்தும் அரிய பல செய்திகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். திருவாரூர் கமலாலய தீர்த்தக் குளம் குறித்த முதல் கட்டுரையில் தொடங்கி, குத்தாலம், திருச்செங்கோடு, திருவேங்கடம், கும்பகோணம், திருவண்ணாமலை, தாராசுரம், சிதம்பரம் போன்ற தமிழக சிவாலயங்கள் குறித்தும், […]

Read more

தமிழக மரபுச் சுவடுகள்

தமிழக மரபுச் சுவடுகள், குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம்,  பக். 344, விலை ரூ. 300.   தமிழர்களின் மரபுச் செல்வங்களில் அழிந்தவை போக, எஞ்சியிருக்கும் குறிப்பிட்ட சிலவற்றைப் பற்றி விரிவாக அறிமுகம் செய்கிறது இந்த நூல். கல்வெட்டுகளிலும் சாசனங்களிலும் (கூரை) “மேய்தல்’ என்ற சொல்லாட்சி விரவிக் கிடக்கிறது. ஆனால் மேய்தல் என்பதைத் தவறாகக் கருதி வேய்தல் என்று அதை மாற்றும் போக்கு உள்ளது. மேய்தல் என்பது சரியானது என்பதை சான்றுகளுடன் நிறுவுகிறார் நூலாசிரியர். மண்டபம் என்ற சொல்லுக்குப் பதிலாக “கற்பந்தல்’ என்ற சொல்லை சிராப்பள்ளி […]

Read more

நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்

நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்: இரா.காமராசு, சாகித்திய அகாதெமி, பக்.288,  விலை ரூ.315. 2017 – ஆம் ஆண்டு வரலாற்றியல் ஆய்வறிஞர் நா.வானமாமலையின் நூற்றாண்டு உரையரங்கம் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நடத்தப்பட்டது. அந்த உரையரங்கத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். ஆசிரியராக சில ஆண்டுகள் பணியாற்றிய நா.வானமாமலை, ஆசிரியர் பணியைத் துறந்து சொந்தமாக “ஸ்டூடன்ட்ஸ் டுட்டோரியல் இன்ஸ்டிடியூட்’ என்ற தனிப்பயிற்சிக் கல்லூரியைத் தொடங்கினார். அது பின்னர் “வானமாமலை தனிப்பயிற்சி நிறுவனம்’ என்று மாறியது. 1967 – இல் அவர் “நெல்லை ஆய்வுக் […]

Read more

பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ

பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ, அ.கா.பெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.135 நாட்டார் இலக்கியம் தொடர்பான 12 கட்டுரைகளைக் கொண்ட நுால். பேரிலக்கிய வடிவத்தைப் பெற்றாலும் மக்களின் கதையாகவே கண்ணகி கதை விளங்குகிறது. சிலப்பதிகாரம் என்னும் தலைப்பே நாட்டுப்புற மக்களை அந்நியப்படுத்தி, இலக்கியத் தகுதியை வழங்குவதாக அமைந்திருப்பதை ஆய்வாளர்கள் உணர்வர்.கி.பி., 8ம் நுாற்றாண்டில் நம்பூதிரிகள் துளு நாட்டிலிருந்து கேரளத்திற்கு வந்த பின், கண்ணகி வழிபாடு மேனிலையாக்கம் பெற்று, பகவதி வழிபாடு ஆனது என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவம், சோதிடம், இலக்கியம் என பல்வேறு துறை […]

Read more

பல கோணங்களில் பசும்பொன் தேவர்

பல கோணங்களில் பசும்பொன் தேவர் (கட்டுரைகள்), தொகுப்பாசிரியர் கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக்.320, விலை ரூ.260. சாதித் தலைவரைப் போலவும் மதத் தலைவரைப் போலவும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை முன்னிறுத்தும் இன்றைய காலகட்டத்தில், அந்த கண்ணோட்டத்தை மறுக்கும்விதமாக வெளிவந்திருக்கிற இந்த நூல், தேவரின் ஆளுமையைப் பற்றிய எண்ணற்ற சித்திரங்களைக் கட்டுரைகளாகத் தருகிறது. சாதி வட்டத்துக்கு அப்பாற்பட்டவராகப் பசும்பொன் தேவர் திகழ்ந்தது பற்றியும் அவருடைய பல செயல்பாடுகள், நிகழ்வுகள் பற்றியும் மகரிஷி சுத்தானந்த பாரதியார் தொடங்கி, மா. இராசமாணிக்கனார் வரை 56 பேரின் சிந்தனைகள் […]

Read more

ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள்

ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள், பி.சாய்நாத், தமிழில்: ஆர்.செம்மலர், பாரதி புத்தகாலயம் வெளியீடு, விலை: ரூ.550. இந்தியாவில் கிராமப்புறச் செய்திகளின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவற்றுக்குத் தனிக் கவனத்தை உருவாக்கிய மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத்தின் பிரபலமான புத்தகம் இது. விவசாயிகளின் பிரச்சினைகள், கிராமப்புறங்களில் நிலவும் கல்வி, சுகாதாரச் சிக்கல்கள், அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்களின் தோல்விக்குக் காரணங்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்தும் கட்டுரைகளின் தொகுப்பு இது. வறட்சிக்குப் பெயர்போன ராமநாதபுரம் மாவட்டத்தில் பனையேறும் தொழிலாளர்களின் பரிதாபகரமான வாழ்க்கை, இடைத்தரகர்களால் விவசாயிகளின் வருமான இழப்பு, சாராயம் காய்ச்சுபவர்களின் […]

Read more
1 7 8 9 10 11 88