திருக்கோவையார்

திருக்கோவையார், பேரின்பப் பொருள் விளக்கம், எட்டாம் திருமுறை, இரண்டாம் பாகம்,  அ.ஜம்புலிங்கம், இந்துமதிபதிப்பகம், பக்.408,  விலை ரூ.600. பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையில் இடம்பெறும் திருவாசகம் பேசப்படும் அளவுக்குத் திருக்கோவையார் பேசப்படவில்லை என்பதற்குக் காரணம், அது ஐந்திணை ஒழுக்கம் பற்றிய சிற்றிலக்கிய நூல் என்ற தவறான கருத்து மக்களிடம் நிலவி வருவதால்தான். ஆனால், சிற்றிலக்கியத்தின் மூலம் மாணிக்கவாசகர் பேரின்ப- மெய்ஞ்ஞான தத்துவங்களையே சொல்லியிருக்கிறார், அது பேரின்பப் பெருநூலே என்று நுண்மாண்நுழைபுலம் கொண்டு அதை ஆய்ந்த சைவப் பேரறிஞர்களான யாழ்ப்பாணம் நவநீத கிருஷ்ண பாரதியார், கா.சு.பிள்ளை, […]

Read more

முடங்கலில் மலர்ந்த மலர்கள்

முடங்கலில் மலர்ந்த மலர்கள் (வாழ்வியல் கட்டுரைகள்), தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், பக்.208, விலை ரூ. 200. பொதுமுடக்க காலத்தில் எழுதப்பட்ட இருபத்தெட்டு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பிரபல ஆளுமைகள் குறித்து 13 கட்டுரைகளும், திருக்குறள், சைவம் – வைணவம் குறித்த பெருமைகளைவிளக்கி ஒரு கட்டுரையும், தனிப்பாடல்கள், தாய்மை, ரமலான் ஆகியவை குறித்த 5 கட்டுரைகளும் தவிர, மற்றவை சமூகம் சார்ந்தவை என்று, இந்நூலின் வாழ்த்துரையில் உச்சநீதிமன்ற நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் பட்டியலிட்டுள்ளார். இது தவிர, இக்கட்டுரைகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் நூலாசிரியர் உழைப்பு தெரிவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். […]

Read more

ஜானகிராமம்

ஜானகிராமம், கல்யாணராமன், காலச்சுவடு பதிப்பகம், விலைரூ.1175. பிரபல எழுத்தாளர் தி.ஜானகிராமனின் படைப்புகள் பற்றிய ஆய்வு மற்றும் அலசல் கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நுால். அவரது பிறந்த நாள் நுாற்றாண்டு நிறைவடைந்ததை ஒட்டி, நினைவாக வெளியிடப்பட்டுள்ளது. தொகுப்பில், 102 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஒன்று ஆங்கிலத்தில் உள்ளது. ஜானகிராமன் படைப்புகளை படித்து நுட்பங்களை உள்வாங்கி, கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. பல்வேறு பார்வைகள் இடம்பெற்றுள்ளன. ஒரே படைப்பை பற்றி, பல கோணங்களில் அலசல்களும் உள்ளன. பேராசிரியர், எழுத்தாளர், வாசகர், மொழிபெயர்ப்பு வல்லுனர், பத்திரிகையாளர், சமூக செயல்பாட்டாளர் என பல தரப்பினரும் […]

Read more

தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு தினமலர் வாரமலர் அந்துமணி பதில்களின் பங்கு

தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு தினமலர் வாரமலர் அந்துமணி பதில்களின் பங்கு, ரஜனி ரஜத், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.150. தினமலர் வாரமலர் இதழில் வெளியாகும், அந்துமணி கேள்வி – பதில்கள் பகுதியை பற்றிய ஆய்வு நுால். அரசியல், திரைப்படம், நாட்டு வளர்ச்சி, பொருளாதாரம், அறிவியல், சுற்றுப்புறச் சூழல், குடும்பம், பெண்கள் பற்றி அந்துமணி பதில்களை வகைப்படுத்தி அலசப்பட்டுள்ளது. சமுதாய விழிப்புணர்வு, பெண்கள் முன்னேற்றம், சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நாட்டுப்பற்று, மொழிப்பற்று போன்றவற்றில் அந்துமணி பதில்கள் ஏற்படுத்திய விளைவுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. […]

Read more

தமிழ்நூல் வரலாறு

தமிழ்நூல் வரலாறு, பாலூர் கண்ணப்ப முதலியார், ஜீவா பதிப்பகம், பக். 440, விலை ரூ.360. சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சித்தர் பாடல்கள், நிகண்டுகள், புராணங்கள், தல புராணங்கள், தனிப்பாடல் திரட்டு போன்றவை குறித்தும், தமிழ் வளர்த்த பெüத்தர்கள், கிறிஸ்தவர்கள், சைவ மடங்கள் குறித்தும், முஸ்லிம் புலவர்கள் குறித்தும் தெளிவாகவும், விரிவாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நூலைப் பற்றிக் கூறுமிடத்தும் அந்நூலிலுள்ள சில பாடல்களை ஆசிரியர் மேற்கோளாக எடுத்துக்காட்டுகிறார். இந்நூலில் முற்கால, இடைக்கால, பிற்கால நூல்களைப் பற்றியும் அவற்றின் ஆசிரியர்களைப் பற்றியும் குறிப்பிட்டிருப்பது மட்டுமல்ல, […]

Read more

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம்

இலக்கியத்துக்கு ஓர் இயக்கம், க.நா.சுப்ரமண்யம், தேநீர் பதிப்பகம், பக்.176, விலை ரூ.180. தமிழின் முக்கிய இலக்கிய விமர்சகரான க.நா.சுப்ரமண்யம் தான் நடத்திய “இலக்கிய வட்டம்’ இதழில் 1963 – 65 காலகட்டத்தில் எழுதிய 25 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இலக்கியத்தைப் படைப்பது, வாசிப்பது, விமர்சிப்பது என்ற அடிப்படையில் விரியும் க.நா.சு.வின் இலக்கியப் பார்வையை விளக்குவதாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன. இலக்கியப் படைப்பு என்பது தனிமனித சிருஷ்டி. படைப்பாளியின் உள்ளத்தில் திரண்டு எழுகிற ஓர் உணர்ச்சியின் உந்துதலில் ஏற்படுவது என்பது நூலாசிரியரின் கருத்து. வாசிப்பவனின் ரசனை, வாசிப்பனுபவம் […]

Read more

காந்தி என்கிற காந்தப்புலம்

காந்தி என்கிற காந்தப்புலம், அ.பிச்சை, சந்தியா பதிப்பகம்,  பக்.140, விலை ரூ.138. தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்து நூற்றைம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி அவர் குறித்து எழுதப்பட்ட இருபது கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு இந்நூல். தென்னாப்பிரிக்காவின் ஒரு பகுதியில் வசிக்கும் ஆசிய கண்டத்தினர் தங்கள் சுயவிவரங்களைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டு வரப்பட்டபோது, அதனைக் கடுமையாக எதிர்த்தார், அப்போது அங்கு பாரிஸ்டராக இருந்த மகாத்மா காந்தி. அந்த சட்டத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அவர் கைக்கொண்ட முறையே பிற்காலத்தில் சத்தியாகிரகம் […]

Read more

விந்தன் படைப்புலகம்

விந்தன் படைப்புலகம், மு.பரமசிவம், வேமன் பதிப்பகம், பக்.216, விலை ரூ.200.   “கல்கியின் மாணவன்’ என்று போற்றப்படும் எழுத்தாளர் விந்தனின் படைப்புகள் இன்றும் பேசப்படுகின்றன. நகைச்சுவையாக எழுதுவது அவருடைய நோக்கமாக இருந்தது. நாற்பதாண்டு இலக்கிய வாழ்க்கையில் விந்தன் எழுதிய ஒரே வரலாற்று நூல் எம்.கே.டி.பாகவதர் கதைதான். “தினமணி கதிர்’ இதழில் தொடராக வந்தது. விந்தனின் “ஆத்திசூடி’ வித்தியாசமானது. புரட்சி சிந்தனை உடையது. நடிகர் எம்.ஆர். ராதாவைப் பேட்டி கண்டு “சிறைச்சாலை சிந்தனைகள்’ என்ற தொடர் வெளிவரவிந்தன் காரணமாக இருந்தார். “ஓ மனிதா!’ தொடர் அவருடைய […]

Read more

குறள் அமிர்தம்

குறள் அமிர்தம், திருக்குறளின் மெய்ப்பொருள், கோ.திருமுருகன் (எ) பூர்ணாநந்தன், வைதேகி பதிப்பகம், விலை  ரூ.800. அதிக உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுள் ஒன்று என்ற பெருமையப் பெற்றது திருக்குறள். திருக்குறளுக்குக் காலந்தோறும் பல அறிஞர்கள் உரை எழுதியுள்ளனர். பலரும் வாழ்க்கை நெறிகளைக் கற்பிக்கும் உலகியல் நூலாகவே அதனை அணுகியுள்ளனர். ‘ஜீவ அமிர்தம்’ என்னும் சித்தர் மரபு இதழை கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்திவருபவரும் ‘ஞான அமிர்தம்’, ‘ஜீவ அமிர்தம்’ உள்ளிட்ட சித்தர் நூல்களை எழுதியவருமான கோ.திருமுருகன் இந்த நூலில் 1,330 குறள்களுக்கும் மெய்ப்பொருள் விளக்க […]

Read more

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும், துரை ஆனந்த் குமார், டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், பக்.80, விலை ரூ.100. வளரிளம் பருவம் எனப்படும் டீன் ஏஜில் ஆண், பெண் குழந்தைகளிடம் உடல், மன ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. கண்டதே காட்சி; கொண்டதே கோலம் என அலைபாயும் பருவ வயதை பக்குவத்துடன் எவ்வாறு கடந்து செல்வது என்பதை ஒன்பது அத்தியாயங்களில் இந்நூல் பதிவு செய்துள்ளது. ஒருவரின் எதிர்காலம், குணாதிசயம், மன உறுதி, உடல்நலம் உள்ளிட்ட அடிப்படைக்கூறுகளை நிர்ணயிப்பதில், 11 வயது முதல் 19 வயது வரையிலான 9 வருடங்கள் […]

Read more
1 9 10 11 12 13 88