அரவான் களப்பலி

அரவான் களப்பலி, கே.பாலகங்காதரன், அருள்நிதி நுாலகம், விலைரூ.330. மகாபாரதத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் வந்து, மிகப்பெரிய விஷயங்கள் செய்தவர் அரவான். பஞ்ச பாண்டவர்களின் குணநலன், அவர்களின் சிறப்புகள், பாஞ்சாலியின் வரலாறு, உலுாபி என்ற நாகக்கன்னி யார்? அவர் அர்ஜுனன் மீது வைத்துள்ள காதல் எத்தகையது போன்ற வரலாற்றை இந்நுால் விவரிக்கிறது. தெருக்கூத்து, நாடகம் வாயிலாக அறிந்த அரவான் களப்பலி நிகழ்வை, இன்றைய தலைமுறை அறியும் விதமாக, பல மனிதர்களை சந்தித்து விளக்கம் பெற்று எழுதியுள்ளார் ஆசிரியர். அரவானை தெய்வமாக திருநங்கையர் வழிபட்டு வருவதையும், களப்பலி எதற்கு, […]

Read more

இங்கிலாந்தில் 100 நாட்கள்

இங்கிலாந்தில் 100 நாட்கள், அகிலா, எழிலினி பதிப்பகம், விலைரூ.300. பயண இலக்கியங்கள், ஒரு இடத்தின் புவியியல் அமைப்பு, மக்கள் வாழ்வியலை தெரிந்துகொள்ள வழி செய்கின்றன. பயண நுாலுக்கு முக்கியத்துவம், அதன் எளிய மொழிநடை தான். ஐரோப்பிய நாடான பிரிட்டனில் விழாக்கள், வாழ்வியல், அரசியல் என, 22 தலைப்புகளில் விரித்துள்ளார். போக்குவரத்து வசதி, பணம், மொழி ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் விளக்குகிறது. லண்டன் மாநகர அரண்மனைகள், கோட்டைகள், தேவாலயங்கள் என பல குறிப்புகளை கொண்டுள்ளது. பயண இலக்கியத்தில் முக்கிய நுால். – முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன். நன்றி: தினமலர், […]

Read more

வியப்பூட்டும் வழிபாடுகள்

வியப்பூட்டும் வழிபாடுகள், பெ.பெரியார்மன்னன், விவேகா பதிப்பகம், பக்.118, விலை  ரூ.145. சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் பல்வேறுவிதமான வழிபடும் முறைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய அறிமுகமாக இந்நூல் மலர்ந்திருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் அமைந்துள்ள பழனியாபுரம் கிராம எல்லை வனப்பகுதியில் அஞ்சலான் குட்டை முனியப்பன் கோவிலில் ஆண்கள் மட்டுமே வழிபடுகிறார்கள். இரவு நேரத்தில் காவல்தெய்வமான “முனி’ உலாவுவதால் இக்கோவிலுக்குப் பெண்கள் செல்வதில்லை. குமாரபாளையம் கிராமத்தின் நுழைவு வாயிலில் வெள்ளாற்றின் வலது கரையில் அமைந்துள்ளது “சாராய’ முனியப்பன் கோவில். முனியப்ப […]

Read more

சமூகவியல் பார்வையில் சிலப்பதிகாரம்

சமூகவியல் பார்வையில் சிலப்பதிகாரம், க.ப.அறவாணன், வெளியீடு: தமிழ்க் கோட்டம், விலைரூ.100 சிலப்பதிகாரத்தை சமூகவியல் பார்வையில் நோக்கிக் காப்பியத்தின் பாடுபொருள்களில் பொதிந்துள்ள, பொது வாசிப்புக்குப் புலப்படாத ஊடு பொருட்களைக் கூர்மையாக ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டுள்ள நுால். பழமையான இலக்கியப் படைப்புகளுக்கு மாற்றாகக் காப்பியம் படைத்தல், சோதிடத்தை மீறுதல், அரச மரபினர் துறவு கொள்ளுதல், திங்களையும் ஞாயிற்றையும் போற்றுதல், தமிழில் மடல் வரைதல், பெண் துறவி உருவாக்கம், வஞ்சினம் கூறி நிறைவேற்றும் முதல் பெண், பெண்ணுக்கு முதல் கோவில், பரத்தைக்கு மகப்பேறு போன்றவற்றை மாறுபட்ட நோக்கில் […]

Read more

அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி

அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், காவ்யா, விலை 370ரூ. பன்முக வித்தகரான பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து சமர்ப்பித்தவை அடங்கிய இந்த நூலில் தனது சொந்த ஊரான சோழவந்தானைச் சேர்ந்த தமிழ் அறிஞர் அரசஞ் சண்முகனார் ஆற்றிய தமிழ்ப் பணிகளைத் திறம்பட வெளிக்கொணர்ந்து இருக்கிறார். அரசஞ் சண்முகனார், வ.உ.சி.க்கு தொல்காப்பிய இலக்கணத்தைக் கற்றுக்கொடத்தார் என்பதையும், பாரதியார், உ.வே.சா., மறைமலையடிகள், ராகவையங்கர் போன்ற ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார் என்பதையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அரசஞ் சண்முகனாரின் இலக்கண, […]

Read more

மண்ணும் மக்களும்

மண்ணும் மக்களும், இறையன்பு, கற்பகம் புத்தகாலயம், விலை 230ரூ. மனிதநேயப் பண்புகளை மதித்துப் போற்றும் நூலாக இதனை ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு எழுதி இருக்கிறார். இளமைக் காலம் முதல் அவரது வாழ்வில் ஏதோ ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை உணர்ச்சிகரமான வார்த்தைகளால் நம்கண் முன் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார். அவர்கள் காட்டிய அன்பின் வெளிப்பாடும், அவற்றை ஆசிரியர் மன நிறைவோடு நினைவு கூர்ந்து இருப்பதும் உள்ளத்தை தொடுகின்றன. இந்தப் புத்தகத்தைக் கை தவறி கீ போட்டுவிடாதீர்கள். இதில் இருக்கிற எளிய மனிதர்களுக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டுவிடலாம் […]

Read more

ரத்தத்தின் ரத்தமே

ரத்தத்தின் ரத்தமே, எஸ்.ரஜத், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160. நிறமும், அழகும் கடவுள் நிறைய பேருக்கு கொடுத்திருக்கிறார். ஒரு சிலர் தான் நிறம், அழகைத் தாண்டி, நல்ல குணத்தால் காலமெல்லாம் தன் புகழை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றனர். எம்.ஜி.ஆர்., தியேட்டரைத் தாண்டி, மக்கள் மனங்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்த நிரந்தர முதல்வர். சிம்லாவில் நம் ராணுவத்தினரை ரசிக்க வைத்த கலாரசிகன். படப்பிடிப்பின் போது உடல் களைத்தாலும், மனம் களைக்காமல் ரசிகர்களை கொண்டாடும் தலைவன். கூட்டுப் பிரார்த்தனைக்கு பலன் கிடைக்கும் என்பதை மக்களின் வேண்டுதல் […]

Read more

ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம்

ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம், சே.ப.நரசிம்மலு நாயுடு, டிஸ்கவரி புக் பேலஸ், விலைரூ.600. தமிழில் வெளிவந்த முதல் பயண நுால் என்ற குறிப்புடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த அனுபவம், வழிகாட்டுதலுடன் மிக விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் மகாசபை நிகழ்வுகள் பற்றியும் விவரிப்பு உள்ளது. கோவையைச் சேர்ந்த நரசிம்மலு நாயுடு, காங்கிரஸ் மகாசபை கூட்டங்களில் பங்கேற்க, இந்தியாவின் பல பகுதிகளில் பயணம் செய்த அனுபவத்தை எழுதியுள்ளார். திவ்விய தேச யாத்திரையின் விஷய அட்டவணை என்ற முத்தாய்ப்புடன் துவங்குகிறது. அதில், […]

Read more

மனதில் நிற்கும் மாணவர்கள்

மனதில் நிற்கும் மாணவர்கள், பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம், விலைரூ.240. ‘ஆசிரியர் உதிர்க்கும் சொற்கள் விதை போல… அவை எங்கும் முளைக்கும்’ என்பதே இந்த நுாலின் அடிநாதம். மாணவர்களுடன், தமிழ் பேராசிரியருக்கு, வகுப்பறையிலும், அதைத் தாண்டியும் உள்ள உறவை, அக்கறையை நெடுஞ்சுவடுகளாக கண்முன் நிறுத்துகிறது. நெகிழ்த்தும் பண்புள்ள 40 கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இதை, தன் வரலாறாகவும் கொள்ளலாம். எளிய நடையில் சொற்கள், நிகழ்வுகளைக் காட்சிப்படுத்துகின்றன. துடிப்பாக மனதில் பதிகிறது. வகுப்பறையில் ஏற்றப்பட்ட அன்பும் பண்பும் மிக்கக் கொடி, மாணவன் வாழ்வுப் பாதையில் வண்ணமயமாக பறப்பதை […]

Read more

மருதநாயகம் என்ற மர்மநாயகம்

மருதநாயகம் என்ற மர்மநாயகம், அமுதன், மணிமேகலைப் பிரசுரம், விலை: ரூ.300. ஐம்பதாண்டு காலப் பணியனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளரான தனசேகரன், அமுதன் என்ற புனைபெயரில் தமிழர்களின் சரித்திரச் சிறப்புகளை எளிய தமிழில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர். தஞ்சை பெரிய கோயில், அங்கோர்வாட், ஆதிச்சநல்லூர், கீழடி என்ற வரிசையில் அடுத்து அவர் மருதநாயகம் என்றழைக்கப்பட்ட யூசுப் கானின் வரலாற்றை எழுதியுள்ளார். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட மறுத்த கலகக்காரர் மருதநாயகத்தை ஐந்தாறு மாதங்களாய் முயன்றும் வீழ்த்த முடியாமல், வஞ்சகத்தால் அதை நிறைவேற்றிக்கொண்டனர். தூக்கிலிட்டும் ஆத்திரம் தீராதவர்களாய் […]

Read more
1 10 11 12 13 14 88