சில தருணங்களும் சில நிகழ்வுகளும்

சில தருணங்களும் சில நிகழ்வுகளும், டாக்டர் கல்யாணி நித்யானந்தன், வெளியீடு: இந்து தமிழ் திசை, விலை: ரூ.200. எண்பது வயதைக் கடந்துவிட்ட டாக்டர் கல்யாணி நித்யானந்தன் கரோனா ஊரடங்கு காலத்தில், ‘இந்து தமிழ்’ இணையதளத்தில் தன் வாழ்வனுபவங்களையும் மருத்துவப் பணி அனுபவங்களையும் முன்வைத்து எழுதிய 40 கட்டுரைகளின் தொகுப்பு இது. சென்னையில் பிறந்து, வளர்ந்து ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் பட்டம்பெற்றவர் கல்யாணி. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தமிழ்நாட்டின் முதல் மாரடைப்பு நோய் அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர். 20 ஆண்டுகளுக்கும் மேல் […]

Read more

என் பார்வையில் இந்திய அரசியல்

என் பார்வையில் இந்திய அரசியல் , அ.பிச்சை, சந்தியா பதிப்பகம், பக்.134, விலை ரூ. 130.   இந்திய நாடு விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15 அன்றும் அதற்கு முந்தைய நாளிலும் தொடங்கி, நாட்டின் 73 -ஆவது விடுதலை நாளைக் கொண்டாடிய கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 வரை நாட்டில் நிகழ்ந்த பல்வேறு நிகழ்வுகளை வெவ்வேறு தலைப்புகளில் சுவையான கட்டுரைகளாகத் தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். சுதந்திர இந்தியாவில் ஜவாஹர்லால் நேரு முதலாவது பிரதமராகப் பொறுப்பேற்காமல் சர்தார் வல்லபபாய் பட்டேல் பொறுப்பேற்றிருந்தால் நாடு எப்படி […]

Read more

ஞான விசாரணை

ஞான விசாரணை (ஆன்மிகக் கட்டுரைகள்)-கெளதம நீலாம்பரன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.364, விலை ரூ.350. மறைந்த பத்திரிகையாளர் கெளதம நீலாம்பரன் “ஞானபூமி’ உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதிய ஆன்மிகக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல், எளிய நடையும் செறிவான கருத்துகளும் கொண்டதாக உள்ளது. பக்தர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கும், நாத்திகர்களின் அவதூறுகளுக்கும் பல கட்டுரைகளில் தெளிவான விளக்கம் அளிக்கிறார் நூலாசிரியர். நரகாசுர சதுர்த்தியா, நரக சதுர்த்தியா? ஐயப்பன் வரலாறு, சிவ வழிபாடு, உதங்க மகரிஷிக்கு மானுட சமத்துவத்தைக் காட்ட கண்ணன் நிகழ்த்திய திருவிளையாடல் (ஸ்ரீகிருஷ்ண தரிசனம்) உள்ளிட்ட […]

Read more

ரசிக்க… சமஸ்கிருதம்

ரசிக்க… சமஸ்கிருதம், அபிநவம் ராஜகோபால், ஜெனரல் பப்ளிஷர்ஸ், விலைரூ.160. சமஸ்கிருதத்தில் உள்ள அறக் கருத்துகளையும், நீதிகளையும் எளிய முறையில் அறிந்து கொள்ள ஏதுவாக, எட்டு தலைப்புகளில் வாழ்வியல் நுட்பங்களை பதிவு செய்துள்ளார். சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில், தெருவில் பொதுமக்கள் குப்பையைக் கொட்டினால் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்ற தகவலை பதிவு செய்துள்ளது. வேத காலத்தில் ஆண்களுடன், பெண்களும் சில தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். சாணக்கியரின் காலத்தில், ஓலைச் சுவடிகளில் தகவல் பரிமாற்றம் நடைபெற்றது. நான்கு வேதங்கள் குறிப்பிடும் அறக் கருத்துகள் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளன. குற்றத்திற்கு ஏற்ற […]

Read more

ஆதிச்சநல்லுார் அகழாய்வுகளும் மக்கள் வாழ்வியலும்

ஆதிச்சநல்லுார் அகழாய்வுகளும் மக்கள் வாழ்வியலும், முனைவர் பெ.ராஜேந்திரன், காவ்யா, விலைரூ.300. தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஆதிச்சநல்லுாரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளைச் சிறப்பாக விவரித்து, கல்வெட்டு, செப்பேடு, மெய்கீர்த்தி மற்றும் இலக்கிய ஆவணங்களின் அடிப்படையில் தொல்தமிழர் வாழ்வியல் அடையாளங்களை விளக்கிக் கூறும் நுால். அகழாய்வில் கிடைத்த பொன், இரும்புக் கருவிகள், மண்பாண்ட எச்சங்கள், வெண்கலப்பொருட்கள், வேளாண் பொருட்கள், நுண்கலைப் பொருட்கள், தாழிகள், தங்கப் பட்டைகள், மனித எலும்புகள், போர்க்கருவிகள் மற்றும் தரவுகளைத் தமிழரின் தொன்மையான நாகரிகத்தை வெளிக்கொணரும் வகையில் அரசு ஆவணங்கள், கள ஆய்வு தரவுகள் மற்றும் […]

Read more

எந்தையும் தாயும்

எந்தையும் தாயும், நரசய்யா, பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு, விலை: ரூ.230 ஒடிஷாவில் பிறந்தவரும், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவருமான நரசய்யாவுக்குத் தமிழிலும் ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. கடற்படைக் கப்பல், விசாகப்பட்டினத் துறைமுகத்தில் தலைமைப் பொறியாளர், கம்போடியா புணர் நிர்மாணத்தில் பங்குபெற்றது, வங்கதேச விடுதலைப் போரில் பங்காற்றியது என இவருடைய பணி வாழ்க்கையைப் போல எழுத்து வாழ்க்கையும் விரிவானது. ‘எந்தையும் தாயும்’ என்று இவருடைய புதிய நூலில் சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தை விவரிக்கிறார் நரசய்யா. தன்னுடைய அனுபவங்களும், அவருடைய தாய் தந்தையரின் அன்றாட அனுபவங்களை அவர்கள் கதையாகச் […]

Read more

சூழலும் சாதியும்

சூழலும் சாதியும், நக்கீரன், காடோடி பதிப்பகம், விலை: ரூ.80. சூழலியல் சார்ந்த அக்கறைகளை நாவல் வடிவிலும் அபுனைவாகவும் தொடர்ந்து வெளிப்படுத்திவரும் நக்கீரனின் புதிய புத்தகம் ‘சூழலும் சாதியும்’. சூழலைச் சாதி எப்படியெல்லாம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது. சாதி அவ்வளவு எளிதாக வேரறுத்துவிட முடியாத அளவுக்குப் பலம் கொண்ட ஆற்றலாக இருக்கக் காரணம், அது நம் வாழ்க்கையின் சகல கூறுகளோடும் சிக்கலான பிணைப்பைக் கொண்டிருப்பதுதான். இந்தச் சிக்கலான பிணைப்பைப் புரிந்துகொள்வதற்கு அதன் ஒவ்வொரு கூறுகளின் மீதும் தனித்தனியாகக் கவனம் குவிக்கும் முயற்சிகள் தொடர்ந்து […]

Read more

முக்திக்கு வழி

முக்திக்கு வழி, நரேஷ் குப்தா, தமிழில்: கே.சீ, சிபிஆர் பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.150 ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான நரேஷ் குப்தா, தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர் எனப் பல முக்கியமான பதவிகளை வகித்தவர். அவர் எழுதிய ‘தி பாத் டு சால்வேஷன்’ எனும் புத்தகம் ‘முக்திக்கு வழி’ என்ற பெயரில் இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியத் தத்துவச் சிந்தனைகளில் புலமை கொண்ட ஆளுமைகளின் கருத்துகளை எளிமையான முறையில் இந்தப் புத்தகத்தில் விவரித்திருக்கிறார். பல்லாயிரம் வருட வயது கொண்ட சிந்தனைகள் […]

Read more

புதுமையான தமிழ்ச் சீரமைப்பும் உச்சரிப்பும்

புதுமையான தமிழ்ச் சீரமைப்பும் உச்சரிப்பும், கே.எஸ்.சக்திகுமார், மணிமேகலை பிரசுரம், விலைரூ.150. தமிழ் எழுத்து வரி வடிவங்களை, 28 என்ற எண்ணிக்கையில் சீரமைத்து விளக்கமாக எழுதியுள்ளார். இந்த எழுத்துக்களை கணினியில் பயன்படுத்தும் முறைகளை விளக்கியுள்ளார். அதுபோல, 8 மற்றும் 9 என்ற எண்கள் சரி. ஆனால், ஒலி வடிவில், எண்பது மற்றும் தொன்னுாறு என்பதை, எண்பது, தொன்பது எனச் சொல்ல வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். கால மாற்றம் தான் இதை ஒப்புக் கொள்ள வேண்டும். – சீத்தலைச்சாத்தன் நன்றி: தினமலர்,25/7/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

மன வயலில் விளைந்த சிந்தனை மணிகள்

மன வயலில் விளைந்த சிந்தனை மணிகள் – பாகம் 1, டி.எஸ்.தியாகராசன், நர்மதா பதிப்பகம், பக்.240. விலை ரூ.225. மத நல்லிணக்கம், கல்வித்துறை மேம்பாடு, நெகிழியால் வரும் கேடு, இலவசங்களால் அரசுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு, நீதிமன்றங்களின் வித்தியாசமான தீர்ப்புகள், நதிநீர்ப் பிரச்னையில் மாநிலங்களுக்கிடையே நிகழும் மோதல்கள், பொதுத்துறை தனியார்மயமாவதில் உள்ள சாதக, பாதகங்கள் – இவ்வாறு பல்வேறு பொருண்மைகள் குறித்து எழுதப்பட்ட முப்பத்தெட்டு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அண்ணல் காந்தியடிகள் குறிப்பிட்ட “ஏழு பாவங்களும்’ இன்றுவரை சமுதாயத்தைவிட்டு நீங்கவில்லை என்பதில் தொடங்கி, கரோனா […]

Read more
1 12 13 14 15 16 88