உடல்மொழியின் கலை

உடல்மொழியின் கலை, வெளி ரங்கராஜன், போதிவனம் பதிப்பகம், விலை: ரூ.120 கலை, இலக்கியம், நாடகம் தொடர்பான வெளி ரங்கராஜனின் சமீபத்திய கட்டுரைத் தொகுப்பு இது. நேரடிக் கட்டுரைகளும் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளுமாக மொத்தம் 22 கட்டுரைகள். கலை வடிவங்களை ஆவணப்படுத்துவதன் வழியாக சமூக வரலாற்றைப் பேசும் புத்தகமாகவும் இந்நூலை வாசிக்க இடமுண்டு. பிரதிகள் சார்ந்ததாக மட்டுமல்லாமல் நபர்களும், அரசு நிறுவனங்களின் நடவடிக்கைகளும், சமூகத்தின் பிரதிபலிப்புகளும் விவாதமாகியிருப்பது இந்நூலின் தனித்துவம் எனலாம். மதங்களுக்கு உள்ளிருக்கும் குடும்ப அறநெறிகளும் ஏற்றத்தாழ்வுகளும் சமூக உளவியலுக்குள் ஏற்படுத்தியிருந்த துயரங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதற்காகவே […]

Read more

செந்தமிழ் நாடும் பண்பும்

செந்தமிழ் நாடும் பண்பும், இரா. நாகசாமி, கிழக்கு பதிப்பகம், பக்.172, விலை ரூ.200. பொதுவாக வரலாறு எழுதப்படும்போது பெருமைகள் மிகைப்படுத்தப்படுவதும், சிறுமைகள் மறைக்கப்படுவதுமே வழக்கம். அவ்வாறின்றி, கடந்த கால தமிழா் வாழ்வின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை ‘உள்ளது உள்ளபடி’ பதிவு செய்துள்ளாா் இந்நூலாசிரியா். இந்நூலில் ‘செந்தமிழ் நாடும் பண்பும்’ என்பதில் தொடங்கி, ‘தொல்காப்பியமும் தமிழா் வாழ்வும்’, ‘காலம்தோறும் தமிழா் திருமணம்’, ‘நடுகல் மரபு: உலகியல் மரபும் நாடக மரபும்’ உள்ளிட்ட முப்பத்தாறு தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் நாம் அறிந்திராத பல அரிய செய்திகள் […]

Read more

ஒப்புநோக்கில் காந்தியடிகள்

ஒப்புநோக்கில் காந்தியடிகள், மாா்க்ஸிலிருந்து வள்ளலாா் வரை, கா.செல்லப்பன், எழிலினி பதிப்பகம், பக்.116, விலை ரூ.180. காந்தியடிகளின் சிந்தனைகளுடன் ஒத்துப் போகிற அல்லது முரண்படுகிற சிந்தனையாளா்களுடன் காந்தியடிகளின் சிந்தனைகளை ஒப்பிட்டுப் பாா்க்கும் முயற்சியே இந்நூல். காரல்மாா்க்ஸ், உலக இலக்கியத்தில் தனி இடம் பெற்றிருக்கும் ஷேக்ஸ்பியா், லியோ டால்ஸ்டாய், கருப்பின மக்களின் விடுதலைக்காகப் போராடிய மாா்டின் லூதா் கிங், கவிஞா் ஷெல்லி, சிந்தனையாளா் ரஸ்கின், ஹென்றி டேவிட் தோரோ, எமா்சன், திருவள்ளுவா், நேரு, திரு.வி.க., வள்ளலாா் உள்ளிட்ட பல சிந்தனையாளா்களோடு காந்தி உடன்படும் பல அம்சங்களை இந்நூல் […]

Read more

இந்து மத அகராதி

இந்து மத அகராதி, மாா்க்கரெட், ஜேம்ஸ் ஸ்டட்லி, தமிழில்: உதயகுமாா் பாலன்,  பக்.704, விலை ரூ.600. மற்றவா்கள் சொல்லித்தான் இந்தியா்களான நமக்கு நமது அருமை பெருமைகள் எப்போதுமே தெரிந்திருக்கின்றன. ‘சநாதனம்’ (என்று தொடங்கியது என்பது தெரியாத, என்றென்றுமுள்ள) என்பதன் அா்த்தம் கூடத் தெரியாமல் சநாதன தா்மத்தை நாம் எதிா்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதன் ஆக்கபூா்வ சிந்தனைகள் குறித்து அயல்நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆய்வுகள் நடக்கின்றன. ‘ஹிந்து மதம்’ என்று பரவலாகக் குறிப்பிடப்படும் சநாதன தா்மத்தின் கூறுகளாக உள்ளவை நமது புராண, இதிகாசங்கள். அதுமட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான நூற்றாண்டுகள், […]

Read more

அமுதே! தமிழே! அருமருந்தே!

அமுதே! தமிழே! அருமருந்தே!, மா.கி.ரமணன், பூங்கொடி பதிப்பகம், விலைரூ.180. எளிய தமிழில், 27 கட்டுரைகளில் பக்தி இலக்கியச் சிந்தனைகளைப் படைத்துள்ளார். உடல் நோய்க்கும், மன நோய்க்கும் மருந்து வழங்கும் வல்லமை படைத்தது திருக்குறள் என துவங்கி, திரையிசைக் கவியரசர் மூவர் என்ற கட்டுரையுடன் நிறைவு செய்து உள்ளார். தமிழ் மொழியின் பழமை முதற்கொண்டு புதுமை வரை, படையல் ஆக்கியுள்ளார். திருமந்திரத்தில் உடல் நோய், மன நோய், மூளை நோய், பிறவி நோய் நீக்கும் மருத்துவ முறைகள் சொல்லப்பட்டுள்ள தன்மையை விளக்கியுள்ளார். இசையால் இசைவான் இறைவன் […]

Read more

இதுதான் வைரல்

இதுதான் வைரல், ஹேமபிரபா, பாரதி புத்தகாலயம், விலைரூ.90. அறிவியல் பார்வையில் கொரோனா வைரஸ் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். தகவல்கள் முழுமையாக உள்ளன. மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரிபவரே எழுதியுள்ளார். வைரஸ் குறித்த வதந்திகளையும் விளக்கி தெளிவு ஏற்படுத்துவம் வகையில் அமைந்துள்ளது. தொற்று பரவல் குறித்து அறிவியல் ரீதியாக விளக்கி, நுட்பமான வகையில் தகவல்களை எளிய நடையில் விவரித்துள்ளார். வைரஸ் பரவும் விதத்தை விளக்கி, கட்டுப்படுத்துவதில் கடைப் பிடிக்க வேண்டிய நடைமுறை, முன் எச்சரிக்கை செயல்பாடுகள் குறித்தும் விளக்கியுள்ளார். பெருந்தொற்று நிலவும் காலத்தில், விழிப்புணர்வு […]

Read more

நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?

நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?, முனைவர் ப.பாலசுப்ரமணியன், அழகு பதிப்பகம், விலைரூ.130 தேர்வாளர்கள் ஒரு கேள்வியை கேட்டு முடிக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும். குறுக்கே நீங்கள் பேசக் கூடாது. அது கேள்வி கேட்போருக்கு அதிருப்தியை அளிக்கும். கேள்விகள் கேட்கப்படும்போது அவற்றை ஆர்வத்துடன் செவி மடுக்க வேண்டும். முகத்தை உற்சாகமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அளவற்ற ஆர்வம் தான் தேர்வு நடத்துவோரை அதிகமாக ஈர்க்கும். உற்சாகத்தோடு பணி செய்யும் நபர் என்ற நல்ல எண்ணத்தை ஏற்படுத்தும் என்றெல்லாம் நுாலாசிரியர் சொல்லும் அறிவுரைகள் பயன் உள்ளவை! […]

Read more

அறிஞர் கோவை ஞானி கடிதமும் கருத்தும்

அறிஞர் கோவை ஞானி கடிதமும் கருத்தும், சிலம்பு நா.செல்வராசு, அனிச்சம் வெளியீடு, விலைரூ.20. கோவை ஞானி – சிலம்பு செல்வராசு இடையே நடந்த கடித தொடர்பு விபரம் முதற்பகுதியாகவும், தமிழின் ஆக்கம் தடையும் விடையும் என்ற கட்டுரை இரண்டாம் பகுதியாகவும் அமைந்த குறுநுால். காரசார விவாதத்துக்குரிய நுால். தமிழின உள் முரண்பாடுகள் குறித்தும், இனவரைவியல் குறித்தும் பேசும் கட்டுரை கவனிக்கத்தக்க ஒன்றாகும். தமிழர் வாழ்வியல் சடங்குகளில் செய்த மாற்றங்கள், எத்தகு பயனை விளைவித்து வருகின்றன என்பதை எடுத்துக்காட்டும் கட்டுரை குறிப்பிடத்தக்கது. தமிழின ஆக்கத்திற்கான தடைகள் […]

Read more

எழில் கொஞ்சும் அஜந்தா – எல்லோரா

எழில் கொஞ்சும் அஜந்தா – எல்லோரா, முனைவர் இரா.இராமகிருட்டினன், நர்மதா பதிப்பகம், விலைரூ.175 சிறப்பு மிக்க இந்திய கலை பொக்கிஷங்களை அடக்கியுள்ள அஜந்தா, எல்லோரா பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ள நுால். வரலாற்று பின்னணியுடன் ஆய்வுப் பார்வையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.இந்த நுால், ஒன்பது இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அஜந்தா குடவரை பற்றி முழுமையான அறிமுகத்தை முதல் இயலில் விளக்குகிறது. உரிய படங்கள் செய்திகளை புரிய வசதியாக சேர்க்கப்பட்டுள்ளன. கலை வரலாற்றை தெளிவாகக் கூறுகிறது. கையைப் பிடித்து, நேரில் அழைத்துச் சென்று காட்டுவது போல் கட்டுரைகள் அமைந்துள்ளன. பவுத்த, […]

Read more

கவிதை மரபும் தொல்காப்பியமும்

கவிதை மரபும் தொல்காப்பியமும், இராம.குருநாதன், மணிவாசகர் பதிப்பகம், பக்.208, விலை ரூ.150. “மரபென்பது காலந்தோறும், இடந்தோறும் வழக்குத் திரிந்தவற்றுக்கேற்ப வழுப்படாமற் செய்வதோர் முறைமை’ என்கிறார் நச்சினார்க்கினியர். “தொல்காப்பியப் பொருளதிகாரம் தமிழ்க் கவிதையியலுக்கான கட்டமைப்பைக் கொண்டது. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரண்டு இலக்கண நீர்மையைப் புலப்படுத்தினாலும், அவை கவிதை கோட்பாட்டிற்குரிய இயல்போடு அமைந்து, பொருளதிகாரம் உணர்த்தும் கவிதையியலுக்குத் துணை செய்வனவாய் உள்ளன’ என்கிறார் நூலாசிரியர். தொல்காப்பியக் கவிதையியல், சம்ஸ்கிருதத்தோடும், கிரேக்க கவிதையியலோடும் ஒப்பும் உறவும் கொண்டிருப்பதை இந்நூல் மிகச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது. அதுமட்டுமல்ல, மேலைநாட்டுக் கலை, […]

Read more
1 13 14 15 16 17 88