சமூகவியல் பார்வையில் பாரதியார்

சமூகவியல் பார்வையில் பாரதியார், க.ப.அறவாணன், தமிழ்க் கோட்டம்,பக்.232,  விலை ரூ.200.  மகாகவி பாரதியின் கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றில் இருந்து அவர் காலத்திய சமூகம் தொடர்பான அவருடைய கருத்துகளை விளக்கிக் கூறும் நூல். பாரதியாரின் தமிழ் வழிக் கல்வி பற்றிய கருத்து, சாதி ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிய அவருடைய பார்வை, பெண் சுதந்திரம், தேசப் பற்று குறித்த அவருடைய கருத்துகள், பாரதி விரும்பிய குடியாட்சிமுறை, பொதுவுடமை குறித்த அவருடைய எண்ணம், பிற மொழி இலக்கியங்கள் குறித்த அவருடைய பார்வை என பல்வேறு பரிமாணங்களில் பாரதியை இந்நூல் […]

Read more

விடுபட்டவர்கள்

விடுபட்டவர்கள்: இவர்களும் குழந்தைகள்தான், இனியன், நாடற்றோர் பதிப்பகம், விலை: ரூ.100. குழந்தைகள் நலனில் அக்கறையோடு இருக்கிறோமா?, பாரம்பரிய விளையாட்டுகளை அதன் வரலாற்றுடன் குழந்தைகளிடம் கொண்டுசேர்ப்பதையே வாழ்நாள் பணியாகச் செய்துவருபவர், குழந்தைகள் நலச் செயல்பாட்டாளர் இனியன். அது தொடர்பான கள அனுபவங்களை அப்படியே எழுத்தில் வடித்துள்ளார். குழந்தைகளுக்காகவே வாழ்கிறோம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் பெற்றோர்கள் அவர்கள் நலனில், உரிமையில், பாதுகாப்பில் பெரிதாக அக்கறை கொள்ளவில்லை என்ற உண்மையானது அப்பட்டமாகவும் ஆதங்கத்துடனும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்தச் சமூகத்தில் மாற்றுத்திறன், ஆட்டிசம் மற்றும் ஹைப்பர்டென்ஷன், பார்வைக் குறைபாடு, காது […]

Read more

சங்கத்தமிழ் களஞ்சியம்

சங்கத்தமிழ் களஞ்சியம், நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 316, விலை ரூ.200; தமிழின் தொன்மையை விளக்கும் ஆவணங்களாக இருப்பவை சங்கத்தமிழ் இலக்கியங்கள். சங்கத்தமிழ் நூல்களை தொல்காப்பியம் முதல் பக்தி இலக்கியம் வரை 21 கட்டுரைகளாக தொகுத்திருக்கிறார் நூலாசிரியர். தொல்காப்பியத்தில் தமிழர் வாழ்வு எப்படி வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பது முதல் பக்தி இலக்கியங்களின் பண்பாட்டுக்கூறுகள் வரை தற்காலத் தமிழ் ஆர்வலர்களுக்குப் புரியும் வகையில் நூலில் கருத்துகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சங்கத்தமிழ் இலக்கியங்களில் பெண்பாற் புலவர்களின் முக்கியத்துவத்தை ஒளவையார் முதல் ஒக்கூர் மாசாத்தியார் உள்ளிட்டோர் வரை எந்தவகையில் […]

Read more

கொரோனாவா? முதலாளித்துவமா?

கொரோனாவா? முதலாளித்துவமா?, தா.பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், விலைரூ.55. கொடியது கொரோனா; உலகையே முடக்கிப் போட்டுள்ளது. முதலாளித்துவம் செய்து வருகிற கொடுஞ்செயல்களைப் பற்றியும், தேசங்களுக்கு இடையிலும், மதங்களுக்கு இடையிலும் மோதலை ஏற்படுத்தும் மரண வியாபாரிகளின் தந்திரங்களைப் பற்றியும் விவாதிக்கிறது. முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, 200 ஆண்டுகளாக வணிகச் சுழற்சியாக வந்து கொண்டுள்ளது. வறுமை, பசி, பட்டினியால் வாடும் மனிதரை, கொரோனா நச்சுக் கிருமியும் தாக்கத் துவங்கி விட்டது. பயங்கரவாதம் போன்றே கொரோனாவும் மனித குலத்தின் பொது எதிரி […]

Read more

எங்கெங்கும் மாசுகளாய்…

எங்கெங்கும் மாசுகளாய்…, மண் முதல் விண் வரை (சூழலியல் கட்டுரைகள்), ப.திருமலை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 118, விலை ரூ.110. சுற்றுச்சூழல் தொடர்பாக பல்வேறு இதழ்களில் நூலாசிரியர் எழுதிய 17 கட்டுரைகளின் தொகுப்பு. இந்தப் பூமி மனிதர்களுக்கு மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது; ஆனால், மனிதர்கள் இதனை மறந்து இயற்கைக்கு எதிரான செயல்களில் கட்டுப்பாடின்றி ஈடுபடுவதால் கடுமையான இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என அழுத்தமாக உரைக்கிறது நூல். புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான பாரீஸ் பருவநிலை மாநாட்டின் தீர்மானங்களை எத்தனை […]

Read more

அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும்

அகவாழ்வில் கீழ்க்கணக்கும் மேற்கணக்கும், அ.சுபா, காவ்யா, பக்.212, விலை ரூ.220. சங்ககால இலக்கியங்களான பத்துப் பாட்டும், எட்டுத்தொகை நூல்களும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்றும்;சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நாலடியார் முதல் கைந்நிலை வரை உள்ள பதினெட்டு நூல்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் கூறப்படும். இவ்விரு தொகை நூல்களில் அகம், புறம் சார்ந்த நூல்களும் உள்ளன. அவற்றுள் அகப்பாக்கள் மட்டும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சங்ககால மக்களின் வாழ்வியலை இலக்கண, இலக்கியச் சான்றுகளுடன் இந்நூல் எடுத்துரைக்கிறது. சங்கம், சங்கம் மருவிய […]

Read more

மேஜிக் ஆப் தி மைண்ட்

மேஜிக் ஆப் தி மைண்ட் ஆங்கிலம், ரவி வல்லூரி, ஏ.கே.எஸ்.பப்ளிஷிங் ஹவுஸ், விலைரூ.199 தன்னம்பிக்கை மற்றும் இறை நம்பிக்கை துணை கொண்டு மனதை பக்குவப்படுத்தும் வழிமுறைகளை, 50 அத்தியாயங்களில் எடுத்துரைக்கும் ஆங்கில நுால். தீபத்தால் நல்ல புத்தகங்களை படிக்கலாம்; எரிக்கவும் செய்யலாம். அது போல் மனம் வலிமையானது. இதை பயிற்சி அடிப்படையிலேயே செயல்படுகிறது. இதை உறுதிப்படுத்துகிறது. ஒவ்வோர் உயிரினமும் சுவாசிப்பதால் தான் உயிர் வாழ்கின்றன. சுவாசிப்பதை முறைப்படுத்துவதை பிரணாயாமம் உணர்த்துகிறது. உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்துவதற்காக, ‘கிரியா’ என்ற முறையை பயன்படுத்துகிறோம். இந்த செயல்கள் வாயிலாக உள்ளம், […]

Read more

இந்திய இலக்கியத்திற்கு கு.சின்னப்ப பாரதியின் பங்களிப்பு

இந்திய இலக்கியத்திற்கு கு.சின்னப்ப பாரதியின் பங்களிப்பு(கட்டுரைத் தொகுப்பு) , பாரதி புத்தகாலயம், பக்.224, விலை ரூ.150. தமிழ் இலக்கிய உலகுக்கு இடதுசாரி இயக்கம் வழங்கிய மிகப் பெரிய கொடை கு. சின்னப்ப பாரதி. கவிஞராகவும், புனைவுப் படைப்பாளியாகவும் இவர் எழுதியிருக்கும் நூல்கள் அனைத்துமே சர்வதேச அளவில் கொண்டாடப்படுகின்றன. தமிழகத்தில் அல்லாமல் கேரளத்திலோ, மேற்கு வங்கத்திலோ கு. சின்னப்ப பாரதி பிறந்திருந்தால், அவருக்குத் தரப்பட்டிருக்கும் அங்கீகாரமும், கெளரவமும் பன்மடங்கு அதிகம். கொண்டாடப்படும் எழுத்தாளராக இருந்திருப்பார். கு.சி.பா. என்று பரவலாக அறியப்படும் கு. சின்னப்ப பாரதி அளவிற்கு, […]

Read more

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?, டி.தருமராஜ், கிழக்கு பதிப்பகம், பக்.176, விலை ரூ.180. சமுதாயத்திற்கு ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி நிற்கிற பொது பிம்பங்கள் அவசியம். அப்படிப்பட்ட பொது பிம்பமாக இளையராஜா இருக்கிறார். அதனால் அவர் முதல்வர் வேட்பாளராக மாட்டார் என்பதை விளக்குகிறது நூலின் தலைப்பைக் கொண்ட கட்டுரை. இந்நூலில் 12 கட்டுரைகள்அடங்கியுள்ளன. ஏற்கெனவே தமிழ்த் திரைப்படப் பாடல்கள் தமிழ் மக்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கங்கள் எவை? இளையராஜா இசை அமைத்த பாடல்கள் அவற்றிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை இந்நூலில் உள்ள பல கட்டுரைகள் […]

Read more

கரோனாவை வெற்றி கொள்வோம்

கரோனாவை வெற்றி கொள்வோம், டாக்டர் கு. கணேசன், தமிழ் திசை,விலைரூ.200.   ‘தினமலர்’ உட்பட இதழ்களில் கொரோனா குறித்தும், விழிப்புணர்வு ஏற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், தடுப்பூசியின் தேவை பற்றியும் எழுதி குவித்தவர் டாக்டர் கணேசன். இவரது கைவண்ணத்தில், 51 கட்டுரைகளின் தொகுப்பு நுால். கொடிய தொற்றின் அத்தனை அம்சங்களையும் எளிய தமிழில் அலசியுள்ளார். கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு பதில் இந்த நுாலில் இருப்பது ஆச்சரியம். ஒரு பதிலையும் விட்டு வைக்காமல் முழுமையாக எழுதியிருக்கிறார். நோய் பற்றி முழுமையாக எழுதப்பட்டிருப்பதால், இது மருத்துவ நுால் […]

Read more
1 14 15 16 17 18 88