மதாம்

மதாம், மு.ராஜேந்திரன், அகநி வெளியீடு, பக். 336, விலை ரூ.400. ஆனந்தரங்கப் பிள்ளை எழுதிய நாள்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட வரலாற்று நாவல் இது. 1742 முதல் 1754 வரை புதுச்சேரி கவர்னராக இருந்த ஜோசப் துயூப்ளேவின் மனைவி ழான் சீமாட்டியை மையப்படுத்தி நிகழ்ந்த சம்பவங்களை வரிசைக் கிரமமாகத் தொகுத்து சுவாரஸ்யமான நாவலாக உருவாக்கியிருக்கிறார் நூலாசிரியர். இந்திய வம்சாவளித் தாய்க்கும், ஐரோப்பிய தந்தைக்கும் மகளாக பிறந்தவர்தான் ழான். தனது 13-ஆவது வயதில் தன்னை விட வயதில் மிகவும் மூத்த வேன்சான் என்ற பிரெஞ்சு வணிகரை […]

Read more

சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 400ரூ. கைத்தறி நெசவு தொடர்பான சொல் சாலாம்புரி என்பதைத் தலைப்பாகத் தாங்கி இருக்கும் இந்த நாவல். தமிழகத்தில் 1950 களில் நடைபெற்ற அரசியல், அப்போதைய நெசவாளர்களின் வாழ்க்கை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. திராவிடர் கழகத்தில் இருந்து விலகி தொடங்கப்பட்ட தி.மு.க.வின் வளர்ச்சிக்கு உழைக்கும் கதாநாயகன், அவரைச் சுற்றி நடைபெறும் நெசவாளர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், சாதி பிரச்சனை ஆகியவை கண் முன் படம் பிடித்துக் காட்டப்பட்டு இருக்கின்றன. சரளமான நடை, கதாபாத்திரங்களின் அப்பட்டமான பேச்சு, விறுவிறுப்பான […]

Read more

இந்திர நீலம்

இந்திர நீலம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை: ரூ.150 இன்று பிறக்கும் சங்க காலப் பெண்கள். சங்க காலத்துக்குப் பிறகு இருபதாம் நூற்றாண்டில்தான் பெண்களின் இலக்கியப் பங்களிப்பு பரவலாகக் காணக்கிடைக்கிறது. இதற்கு இடைப்பட்ட நெடிய பரப்பில் ஆண்டாள், காரைக்காலம்மையார் போன்றோரின் பக்திநெறிப் பனுவல்கள் மட்டுமே இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. இந்த இடைவெளியை நேர்செய்யும் விதமாக இன்று கவிதை எழுதும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது முக்கியமான விஷயம். அவ்வகையில் கவிஞராகக் கவனம்பெற்று தற்போது புனைவுகளிலும் கவனம் செலுத்திவருபவர் அ.வெண்ணிலா. இவரது மூன்றாவது சிறுகதைத் […]

Read more

தண்டோராக்காரர்கள்

தண்டோராக்காரர்கள் {தென்னிந்தியாவில் தேசியவாத அரசியலும், பொழுதுபோக்கு ஊடகங்களும் 1880-1945} , சு. தியடோர் பாஸ்கரன், தமிழில் அ.மங்கை, அகநி வெளியீடு, விலை 220ரூ. தமிழ் வாசகர்களுக்கு தியடோர் பாஸ்கரன் என்ற பெயர் ஒன்று போதும் புத்தகத்தை எடுக்க. சினிமா குறித்ததாகட்டும், இயற்கை குறித்ததாகட்டும் இவர் ஒவ்வொரு புத்தகத்திற்கு செய்யும் ஆய்வுகள், எடுக்கும் தரவுகள் என எல்லாம் அந்த புத்தகத்திற்கு மிகவும் சிறப்பு சேர்ப்பவை. The message bearers என்ற பெயரில் 1981 காலகட்டத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்களால் எழுதப்பட்ட இந்நூல் 35 வருடங்களுக்கு பின் […]

Read more

ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு

ஆனந்த ரங்கப்பிள்ளை அவர்களின் தினப்படி சேதிக் குறிப்பு – 12 தொகுதிகள்; பதிப்பாசிரியர்கள்: மு.இராஜேந்திரன், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, மொத்த பக்கங்கள்: 5190, விலை ரூ.8,400; தென்னிந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கம் உச்சத்தில் இருந்தபோது, புதுச்சேரியின் ஆளுநர்கள் 4 பேரிடம் துபாஷியாக இருந்தவர் ஆனந்த ரங்கப்பிள்ளை. குறிப்பாக 12 ஆண்டுகள் ஆளுநராக இருந்த துயூப்ளேக்சின் காலத்தில் ஆனந்த ரங்கப்பிள்ளை தலைமை துபாஷியாகப் புகழின் உச்சத்தில் இருந்தவர். 1736 செப்டம்பர் 6 -ஆம் நாள் தன்னுடைய கைப்பட தினப்படி செய்திக் குறிப்புகளை எழுதத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து 25 ஆண்டுகள் […]

Read more

தண்டோராக்காரர்கள்

தண்டோராக்காரர்கள், சு.தியடோர் பாஸ்கரன், தமிழில்: அ.மங்கை, அகநி வெளியீடு, விலை: ரூ.220 நம்பினார். காங்கிரஸ் ஆதரவாளரான அவர், சினிமா நேரடிப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை ஆதரித்தார். இராஜகோபாலாச்சாரி, சத்தியமூர்த்தி, டி.பிரகாசம் ஆகிய தலைவர்களோடும் நாராயணன் தொடர்புகொண்டிருந்தார். தனது வீட்டில் மிகுந்த விளம்பரத்தோடு அந்நியத் துணி எரிப்பை நடத்திவிட்டு, அவர் கதர் அணியத் தொடங்கினார். ஜெனரல் பிக்சர்ஸ் கார்ப்பரேஷன் தலைவர் என்ற முறையில், அவர் காங்கிரஸ் நிகழ்வுகள் பலவற்றைக் குறித்த செய்திச்சுருள், குறும்படங்களையும் தயாரித்திருந்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் நாட்டுத் திரைப்பட மையங்களுக்குப் பயணித்தார். ‘தி இந்து’ […]

Read more

கங்காபுரம்

கங்காபுரம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 450ரூ. சோழ சாம்ராஜ்யத்தின் தன்னிகரில்லாத பேரரசனாகவும், தந்தையை மிஞ்சிய தனயனாகவும் விளங்கிய மன்னர் ராஜேந்திரன் மனதில் வெகு காலமாக நிலை கொண்டு இருந்த வேதனையைச் சுற்றி இந்த சரித்திர நாவல் படைக்கப்பட்டு இருக்கிறது. தந்தை ராஜராஜனுக்காக நாட்டின் பல பகுதிகளுக்கும் படை நடத்திச் சென்று, வெற்றியை மட்டுமே ஈட்டித் தந்த ராஜராஜன், இளவரசு பட்டத்திற்காக தனது 50 வயது வரை காத்து இருக்க நேரிட்ட வரலாற்று நிகழ்வையும், அது குறித்து அந்த மன்னரின் உள்ளக்கிடங்கில் குவிந்து கிடந்த […]

Read more

தேவரடியார்

தேவரடியார், கலையே வாழ்வாக, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 250ரூ. 1947-ம் ஆண்டு வரை தமிழகக் கோவில்களில் இறைவனுக்கு சேவை செய்வதற்காக நேர்ந்து விடப்பட்ட பெண்கள் பற்றிய ஆவணமாக இந்த நூல் திகழ்கிறது. பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளர் அ.வெண்ணிலா, முனைவர் பட்டத்திற்காக தமிழக வரலாற்றை தீவிரமாக ஆய்வு செய்து, தேவதாசிகள் எனப்படும் தேவரடியார்கள் பற்றிய மிக விஸ்தாரமாக எழுதியுள்ள இந்த நூலில் வியப்பான பல தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. கோவில்களில் ஏராளமாகக் காணப்படும் கல்வெட்டுகள், செப்பேடுகள், பழங்கால இலக்கியங்கள் என்று அனைத்து விதமான தரவுகளில் […]

Read more

கங்காபுரம்

கங்காபுரம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 450ரூ. மதுராந்தகனின் அகவுலகம் ஜோ டி குருஸ்ராஜராஜனுக்கு மகனாய்ப் பிறந்து, அவனது ஒவ்வொரு சிகரச் சாதனைகளுக்கும் காரணமாய் இருந்த மதுராந்தகன் பின்னாளில் தாமதமாகவே ராஜேந்திரன் என மகுடம் சூட்டப்பட்டான். கங்கையும், கடாரமும் கொண்ட இச்சோழ இளவல், தன் முன்னோர்கள் உருவாக்கிய சோழ அரசின் விரிவாக்கத்துக்கும் பாதுகாப்புக்கும் பாடுபட்டதோடு மட்டுமல்லாது, நிர்வாகத் திறத்தால் மக்கள் மனங்களிலும் நீங்கா இடம்பெற்றிருந்தான். சோழர்களின் நீர் மேலாண்மை இன்றும் வியக்கவைக்கிறதே! ராஜேந்திரனின் ஆட்சிக்காலமே தமிழர்களின் பொற்காலம் என்பது யாராலும் என்றும் அழித்துவிட முடியாத […]

Read more

தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்

தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும், மு.முருகேஷ், அகநி வெளியீடு, விலை 100ரூ. குழந்தைகளுக்குக் கதை சொல்வது என்பது ஒரு கலை. அதற்கு சிறுவர்களின் உலகத்தில் நுழைந்தாக வேண்டும். அந்த வித்தை அறிந்து குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதப்பட்ட சின்னச் சின்ன கதைகள். கதையோடு ஒழுக்கமும் நுணுக்கமாய் போதிக்கப்பட்டிருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027676.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 4