தமிழகத்தில் எமதர்மன் வழிபாடு

தமிழகத்தில் எமதர்மன் வழிபாடு, மு.செல்லன், அன்னம், பக்.153, விலை ரூ.150. உயிரைப் படைப்பதற்கு ஒரு கடவுள் இருந்தால், உயிரை எடுப்பதற்கும் ஒருவர் வேண்டும். அவ்வாறு நியமிக்கப்பட்டவர்தான் எமன். மேலும், எமன் பற்றிய தொன்மைக் கதைகள், கர்ணபரம்பரைக் கதைகள், புராணங்கள், இதிகாசங்கள், ரிக் வேதம், அதர்வண வேதம், விஷ்ணுதர்மோத்ர புராணம், மகாபாரதம், கருட புராணம், பெளத்தம், கடோபநிஷத் முதலிய பலவற்றிலும் எமன் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. எமன் உலகத்தை இயக்குபவன் என்றும், சூரியக் கடவுள் என்றும் ரிக்வேதம் கூறுகிறது. சீனர்கள் எமனை ‘பின்இன்&39’ என்கின்றனர். அவர்தான் […]

Read more

காலத்தின் திரைச்சீலை

காலத்தின் திரைச்சீலை, டிராட்ஸ்கி மருது, தொகுப்பு-அ. வெண்ணிலா, அகநி வெளியீடு, வந்தவாசி, பக். 280, விலை 300ரூ. தமிழ் ஓவிய மரபில் நெடுவழிப்பாதை ஒன்றை உருவாக்கி அதில் பயணித்துக் கொண்டிருக்கும் ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் ஆளுமையைத் தொகுத்துத் தரும் நூல். விவாதங்களுக்கு அப்பாற்பட்டு, நாற்பதாண்டுகளுக்கும் மேலாக, அழுத்தமான தன்னுடைய கோடுகளின் மூலம் தமிழ்க் கலை உலகை அடையாளப்படுத்துவதில் முன் நிற்கும் மருதுவின் வாழ்க்கைப் பதிவுகள், ஒரு ஆவணப் பதிவாக மட்டுமாகிவிடாமல், உயிரோட்டத்துடனான செயலாகவும் ஆக்கியதில் அ.வெண்ணிலாவின் பங்கு அதிகம். கட்டுரைகளை வாசிக்கும்போது கண்முன் வந்து […]

Read more

சங்ககாலத் தொழில்நுட்பம்

சங்ககாலத் தொழில்நுட்பம், பேராசிரியர் த. சாமிநாதன், அன்னம், பக். 195, விலை 190ரூ. தமிழர்கள், சங்க காலத்திலேயே தொழில் நுட்ப அறிவு வாய்க்கப் பெற்றிருந்தவர்களாக இருந்தனர். அதற்கு சான்றாக சங்கப் பாடல்களில் இருந்து, பல்வேறு உதாரணங்களை காட்டி, இந்த நூலாசிரியர் ஆதாரங்களை நிறுவுகிறார். பயிர்த்தொழில், நெசவு, கட்டுமான இயல், மண்பாண்டம் செய்தல், இரும்புத் தொழில், பொன் தொழில், கடறப்யணம், தோல் பதனிடுதல், கண்ணாடி தயாரித்தல், மகளிர் ஒப்பனை, மதுவகைகள் தயாரிப்பு முறைகளும், தெரிந்திருந்ததையும், அன்றிருந்த தொழில்நுட்பங்களையும், ஆசிரியர் விரிவாக விளக்கி உள்ளார். நிறைவு தலைப்பாக, […]

Read more

உலக வரலாற்றை திசை திருப்பிய சொற்பொழிவுகள்

உலக வரலாற்றை திசை திருப்பிய சொற்பொழிவுகள், சௌமாரீஸ்வரி, மங்கை, சென்னை. பல தலைவர்களின் அனுபவப்பூர்வமான வழிநடத்தும் பேச்சுக்கள், வரலாற்றில் முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் ரஷ்யாவின் விளாடிமிர் லெனின், 1917ம் ஆண்டு நடத்திய போல்ஸ்விக் புரட்சியின் நினைவு தினமான1921ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி உரை நிகழ்த்தினார். அதில் நீ ஓநாய்களுக்கு நடுவில் வாழ நேர்ந்தால், அவற்றைப்போல ஊளையிடப் பழகிக்கொள். அவற்றை முழுவதுமாக வெளியேற்ற இந்த ஏற்பாடு தேவைப்படும் என்றார். காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சுவாமி விவேகானந்தர், ஜவஹர்லால் நேரு, இதிரா […]

Read more

மருது பாண்டிய மன்னர்கள்

மருது பாண்டிய மன்னர்கள், மீ. மனோகரன், அன்னம், மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 7, விலை 780ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-508-1.html பாளையக்காரப் புரட்சியின் தலைவர்கள் என்று, இந்திய வரலாற்று ஆசிரியர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டவர்கள் மருது சகோதரர்கள். இந்த இருவர்தான் வெள்ளையருக்கு எதிரான போரை ஒருங்கிணைத்து ஓர் இயக்கமாக்கி, வெள்ளையனை வெளியேறச் சொல்லி முறைப்படி பிரகடனம் செய்தவர்கள். வளரி என்ற ஆயுதத்தை வைத்துக்கொண்டு, வெள்ளையரை அச்சுறுத்தியவர்கள். இலக்கைத் தாக்கிவிட்டு, எய்தவன் கைக்கே வந்துசேரும் வளரி இருக்கும் வரை […]

Read more

அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம்

அருள்மிகு கருப்பசாமி ஒரு நடமாடும் தெய்வம், தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா, ஓங்காரம், சென்னை 80, பக். 1864, விலை 1500ரூ. To buy this Tamil book – www.nhm.in/shop/100-00-0001-014-6.html காவல் தெய்வமான கருப்பசாமியைப் பற்றி புராணங்களில் கூறப்பட்டிருப்பதில் தொடங்கி, அவருடைய வேறு பெயர்கள், பூஜை முறைகள், வணங்க வேண்டிய நாள்கள், தமிழகத்தில் இருக்கும் அனைத்து கருப்பசாமி கோயில்கள் பற்றிய தகவல்கள் (அமைவிடம், கோயில் அமைப்பு, வழிபாடு விவரம்) இப்படி கருப்பசாமி குறித்த அனைத்துச் செய்திகளும் அடங்கிய அருமையான தொகுப்பு இது. ஏராளமான படங்களும் […]

Read more
1 2