அந்நிய உணவுக்கு அடிமையாகலாமா?

அந்நிய உணவுக்கு அடிமையாகலாமா?,  ஆர்.எஸ்.நாராயணன்,  யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ், பக்.86, விலை ரூ.70; நூலின் முதல் கட்டுரையின் தலைப்பே நூலின் தலைப்புமாகியிருக்கிறது. எனினும் நூல் முழுக்க உணவு சார்ந்த பிரச்னைகளையே பேசியிருக்கிறது. நமதுநாட்டின் தீங்கற்ற பல உணவுவகைகள் காணாமற் போயிருக்க, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு பல வேதிப்பொருள்கள் கலக்கப்பட்ட உணவுப் பொருள்கள் நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஜங்க் உணவுக்குப் பலவிதமான தடைகளும், வரிகளும், கட்டுப்பாடுகளும் உள்ளபோது இந்தியாவில் அதற்குக் கட்டுப்பாடில்லாத சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. ரொட்டி மாவில் பொட்டாசியம் புரோமேட்டும் அயோடேட்டும் சேர்ப்பது ஐரோப்பிய […]

Read more

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம்

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம், ஆர்.எஸ்.நாராயணன், யுனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், விலை 120ரூ. நாட்டின் முதுகெலும்பாக இருப்பது விவசாயம் என்றால், அதன் பெருமைக்குரிய அம்சமாக விளங்குவது நஞ்சில்லா வேளாண்மை, உடலுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்காத அந்த இயற்கை விவசாயம் குறித்து பாடம் எடுக்கும் வகையில் அமைந்து இருக்கிறது இந்த நூல். விவசாயத்தில் விஷம் நுழையும் விதத்தை விளக்கி இருக்கிறார் ஆசிரியர். அதற்கான மாற்று வழிகளையும் எடுத்துரைத்து இருக்கிறார். மாடித்தோட்டம் மூலம் இயற்கை விவசாயம் செய்யும் தனது அனுபவங்களை அவர் விளக்கி இருப்பது பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி: […]

Read more

மாடித்தோட்டம் 77+ வயதினிலே

மாடித்தோட்டம் 77+ வயதினிலே,  ஆர்.எஸ். நாராயணன், யுனிக் மீடியா இன்டகரேட்டர்ஸ், பக்.168, விலை ரூ.135. இயற்கையான முறையில் செயற்கை உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் இல்லாமல் காய்கறிகள், கீரைகள், பழங்களை நமது வீட்டு மாடித்தோட்டத்தில் நாமே உருவாக்கிக் கொள்ள இந்நூல் உதவுகிறது. இயற்கை விஞ்ஞானியாகிய நூலாசிரியர், மாடித்தோட்டம் அமைத்த தனது அனுபவத்தின் அடிப்படையில் இந்த நூலைப் படைத்து அளித்திருக்கிறார். மாடித் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு எழும் பல ஐயங்களுக்கு இந்நூல் விடை பகர்கிறது. மாடித்தோட்டத்தில் எவற்றை எல்லாம் வளர்க்கலாம்? எவ்வளவு இடம் தேவை? மாடித்தோட்டம் அமைத்தால் […]

Read more

ஆயிரம் தெய்வங்கள்

ஆயிரம் தெய்வங்கள், ஆர்.எஸ்.நாராயணன், யூனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், பக். 136, விலை 100ரூ, ஒரே தெய்வக் கோட்பாட்டைக் கொண்ட மற்ற மதங்களில் மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளைவிட, ஆயிரம் தெய்வங்களைக் கும்பிடும் இந்தியாவில் – இந்து மதத்தில் வன்மை குறைவுதான். அதனால்தான் இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்து நிற்கிறது என்பதை ஒப்பீட்டு ஆய்வின் மூலம் விளக்கும் நூல். மதத்தையும் பக்தியையும் வித்தியாசமான கோணத்தில் அளவிட்டுள்ளார் இயற்கை விஞ்ஞானி ஆர்.எஸ். நாராயணன். நன்றி: குமுதம், 25/1/2017.

Read more

இறவு நிலையில் இயற்கையின் அற்புதங்கள்

இறவு நிலையில் இயற்கையின் அற்புதங்கள், ஆர்.எஸ். நாராயணன், யூனிக் மீடியா இன்டக்ரேட்டர்ஸ், பக். 160, விலை 125ரூ. 2012-2015ஆம் ஆண்டு காலகட்டத்தில் தினமணி, ஜனசக்தி, சொல்வனம் வலைப்பின்னல் ஆகியவற்றில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பனை, சந்தனம், யூகலிப்டஸ், செம்மரங்கள் குறித்த பல்வேறு வகையான செய்திகளை சங்க காலம், தொட்டு தற்காலம் வரை புள்ளி விவரங்களுடனும், அறிவியல் பூர்வமாகவும் இந்நூல் எடுத்துரைக்கிறது. இயற்கை வளங்களையும், சுற்றுச்சுழலையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், இயற்கையோடு ஒன்றி மனிதன் வாழ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. 1972-இல் பிரேசிலில் தொடங்கியு […]

Read more

வறட்சியிலும் வளமை

வறட்சியிலும் வளமை, ஆர்.எஸ். நாராயணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 127, விலை 100ரூ. தமிழகத்தில் ஒரு காலத்தில், புஞ்சை பயிர்களுக்கு என்று ஒரு தனி இடம் இருந்தது. நெல், வாழை, கரும்பு போன்றவற்றை எல்லா இடங்களிலும் பயிர் செய்ய முடியாத, பாசன வசதி இல்லாத சூழலில், புஞ்சை பயிர்களான தானிய வகைகள் பெருமளவு விவசாயிகளுக்கு கைகொடுத்து வந்தன. குறைவான தண்ணீரில், கம்பு, கேழ்வரகு, இவற்றுடன் சிறு தானியங்களான வரகு, குதிரை வாலி போன்றவையும் கணிசமாக சாகுபடி செய்யப்பட்டன. ஆனால், […]

Read more

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம்

இயற்கை வேளாண்மைக் களஞ்சியம், ஆர்.எஸ். நாராயணன், யூனிக் மீடியா இண்டக்ரேட்டர், பக். 144, விலை 120ரூ. இயற்கை விவசாய ஆராய்ச்சி விஞ்ஞானியான நூலாசிரியர், செயற்கை ரசாயன உரங்களால் நமது மண் மாசடைந்து, விவசாயம் செய்யவே தகுதியற்றதாக மாறிவிட்டதைக் கண்டு கொதித்து எழுபவர். அவருடைய இயற்கை விவசாயம் சார்ந்த தேடல்கள், அனுபவங்கள், தெளிவான கருத்துகளின் தொகுப்பே இந்நூல். பசுமைப் புரட்சிக்கு முன்பே நிலத்தில் ரசாயன உரங்களைப் போடும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது என்று நூலாசிரியர் எடுத்துக்காட்டுகளுடன் சொல்லியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நாம் மண்ணை நேசிப்பதனை மறந்து மண்ணை […]

Read more

வறட்சியிலும் வளமை

வறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி), ஆர். எஸ். நாராயணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 136, விலை 100ரூ. உணவுப் பயிர்களின் சாகுபடியில் குறைந்த அளவு நீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இந்நூல் விவரிக்கிறது. நாட்டின் மொத்தப் பரப்பளவில் 50 சதவிகித காடுகள் இருந்தபோது, மாதம் மும்மாரி மழை பொழிந்தது. ஆனால் தறேபாது பல்வேறு காரணங்களால் காடுகளின் மொத்தப் பரப்பளவு 10 சதவிகித அளவுக்குக் குறைந்துவிட்டது. இதனால், 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட மழை பெய்வதில்லை. […]

Read more