நனைந்த நதிகள்

நனைந்த நதிகள், கவிஞர் தமிழ்தாசன், காவ்யா பதிப்பகம், பக். 120, விலை 100ரூ. நனைந்த நதிகள் புத்தகம் முழுவதும் கவிதை துளிகளை தெளித்திருக்கிறார் கவிஞர் தமிழ்தாசன். ரத்தத் துளிகளால் எழுதப்பட்டது நம் சுதந்திர இந்திய வரலாறு தூசி படர்ந்து கிடக்கிறது என இது எங்கள் தேசம் என்ற தலைப்பில்(பக். 57) அவர் எழுதியுள்ள கவிதைகள் நடந்தவற்றை படம் பிடிக்கின்றன. சொல்லவந்த கருத்தை சுருங்கச் சொல்லி இருக்கும் முயற்சி பாராட்டுதற்குரியது. நன்றி: தினமலர், 2/10/2016

Read more

பறந்து மறையும் கடல்நாகம்

பறந்து மறையும் கடல்நாகம், சீனக் கலாசார கட்டுரைகள், ஜெயந்தி சங்கர், காவ்யா பதிப்பகம், பக். 1038, விலை 1000ரூ. சீனாவின் பண்பாடு, பெண்களின் நிலை, உணவு முறைகள், அதிகார கட்டமைப்பு பற்றிய ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தும் நூல் இது. கன்பூஷியஸ் வகுத்தளித்த கோட்பாட்டின் கீழ், மூதாதையர் வழிபாடு, ஆண் வாரிசை உருவாக்குதல், பெற்றோரை மதித்து பேணிக்காத்தல் ஆகிய மூன்று முக்கிய பண்பாட்டு அலகுகளைச் சுற்றி உருவாக்கப்பட்டதே சீனக் கலாசாரம். இரண்டாம் உலகப் போருக்குப் பின், சீனாவில் நிலவிய பிரச்னைகளை களைய, விவசாய துறையில் நவீன […]

Read more

கவி கா.மு.ஷெரீப் கட்டுரைகள்

கவி கா.மு.ஷெரீப் கட்டுரைகள், தொகுப்பாசிரியர்: சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 911, விலை  ரூ.900. கவி.கா.மு.ஷெரீப் எழுத்தின் மீது கொண்ட தாகத்தால் “ஒளி’, “தமிழ் முழக்கம்’, “சாட்டை’, “திங்கள்’ ஆகிய இதழ்களை அவர் நடத்தினார். அவற்றில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். “தமிழரின் நெறி”, “ஒளி தலையங்கங்கள்’, “தமிழரசுக் கழகம் ஏன் வந்தது?’, “இஸ்லாமும் ஜீவகாருண்யமும்’, “இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?’, “பத்ர் போரின் விளைவுகள்’, “வள்ளல் சீதக்காதி வரலாறு’ ஆகியவற்றுடன் புதுவை வானொலியில் தொடர்ந்து இவர் நிகழ்த்திய சீறாப்புராணச் சொற்பொழிவுகளும் இதில் அடக்கம். […]

Read more

பனித்துளிக்குள் ஒரு பயணம்

பனித்துளிக்குள் ஒரு பயணம், சந்தர் சுப்ரமணியன், வர்ஷன் பிரசுரம், பக். 128, விலை 80ரூ. உலகை பனித்துளியின் உள்ளிருந்து பார்க்கும் பார்வையாய் அமைந்த கவிதைகளின் தொகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.   —- ராம ராவண யுத்தம், வ. பாரத்வாஜர், காவ்யா பதிப்பகம், பக். 227, விலை200ரூ. நாம் நம் மனதில் தேக்கி வைத்திருக்கும் ராமாயணப் பாத்திரங்களை வேறுவகையான கோணத்தில் பார்த்து நவீன ராமாயணத்தைப் படைத்துள்ளார். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 21/3/2016.

Read more

இனிதே தொடரும் வானப்ரஸ்தம்

இனிதே தொடரும் வானப்ரஸ்தம், விஜயலட்சுமி சுந்தரராஜன், காவ்யா பதிப்பகம், பக். 160, விலை 150ரூ. காலவெள்ளத்தில் தோன்றிய முதியோர் இல்லங்களின் தேவை, அவசியத்தை பற்றி பேசுகிறது இந்த நூல். நூலாசிரியர் முதியோர் இல்லத்தில்தான் வசிக்கிறார். ‘கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு, சமூக நிர்ப்பந்தங்களுக்காக, பெற்றோரைக் கவனிப்பதாக கூறி, நம்மையும் வருத்தி பெற்றோரையும் சிறுமைப்படுத்தினோம். வெளிநாடுகளில் வேலைக்காக செல்லும் பிள்ளைகள், சம்பளத்தையும் அங்கு கிடைக்கும் வசதிகளையும் பெற்றோருக்காக விட்விட்டு வரவேண்டுமான என்று யோசிக்கும் தலைமுறை’ (பக். 76) என, காலமாற்றத்தை சுட்டிக் காட்டுகிறார். முதியோர் […]

Read more

சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம்

சிறுவர்களிடம் தமிழ் சினிமாவின் தாக்கம், பெரியநாயகம் ஜேசுதாஸ், மணிமேகலைப் பிரசுரம், விலை 185ரூ. சினிமா ஒரு சக்தி வாய்ந்த ஊடகம். சமூகத்தின் மீது சினிமா தாக்கம் ஏற்படுத்துவதையும், குறிப்பாக (வீதி) சிறுவர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் பெரிய நாயகம் ஜேசுதாஸ் எழுதியுள்ளார். சினிமா மூலம் கற்றுக்கொள்கின்ற சாதகமான நிலையையும், கலாச்சார சீரழிவு என்ற பாதகமான நிலையையும் அலசி ஆராய்ந்துள்ளார். நற்பயனளிக்கக் கூடிய கற்றல் சூழ்நிலையைச் சிறுவர்களுக்கு கல்வியாளர்கள் உருவாக்க வேண்டும் என்பதை முடிவாகக் கூறுகிறார். நன்றி: தினத்தந்தி, 16/12/2015   —-   […]

Read more

தமிழர் நாடு

தமிழர் நாடு, கி.ஆ.பெ. விசுவநாதம், காவ்யா பதிப்பகம், விலை 1300ரூ. “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்று வாழ்நாள் முழுவதும் முழங்கி வந்தவர், “முத்தமிழ் காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம். நீதிக்கட்சியின் பெயரை 1944ல் “திராவிடர் கழகம்” என்று பெரியாரும், அண்ணாவும் மாற்றினார்கள். “தமிழ்நாடு என்பதை உயிர் மூச்சாகக்கொண்ட கி.ஆ.பெ. விசுவநாதம், “திராவிட நாடு” என்பதை ஏற்க மறுத்து, அரசியலில் இருந்து விலகினார். அதன்பின், 1947ம் ஆண்டில் “தமிழர் நாடு” மாத இதழை தொடங்கினார். அதிழ் தமிழ் உணர்ச்சியைத் தூண்டும் தலையங்கங்களையும், கட்டுரைகளையும் எழுதினார். அவற்றை […]

Read more

சிவகங்கைச் சீமை படமாத்தூர் பாளையப்பட்டு வரலாறு

சிவகங்கைச் சீமை படமாத்தூர் பாளையப்பட்டு வரலாறு, கோ. மாரிசேர்வை, தமிழில் எஸ்.ஆர். விவேகானந்தம், காவ்யா பதிப்பகம், பக். 338, விலை 300ரூ. சிவகங்கையின் இரண்டாவது அரசர் முத்து வடுகநாத தேவர், நீதிக்குப் புறம்பாகக் காளையார் கோவிலில், ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டார். அந்த படுகொலையில், அவரது மனைவி கவுரி நாச்சியாரும் உயிரிழந்தார். மற்றொரு மனைவியான ராணி வேலு நாச்சியார், தன் மகள் வெள்ளச்சி நாச்சியாருடன் கொல்லங்குடி காளி கோவிலில் இருந்ததால் உயிர் தப்பி, வெள்ளையரின் ஆதிக்கத்திலிருந்து சிவகங்கையை மீட்க, ஐதர் அலியின் படை உதவியுடன் போரிட்டது வீர […]

Read more

பட்டினத்தார் (புதுக்கவிதை வடிவில்)

பட்டினத்தார் (புதுக்கவிதை வடிவில்), காவ்யா பதிப்பகம், சென்னை, பக். 1321, விலை 1300ரூ. பட்டினத்தார் இயற்றிய பாடல்களை இன்றைய தலைமுறையினரும் கற்றுணரும் வகையில் புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார் நுலாசிரியர். அதோடு பேரறிவுக் களஞ்சியம் எனும் ஏனைய பாடல்களையும் இந்நூலில் புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார். இந்த இரண்டையும் படைத்தது வெவ்வேறான பட்டினத்தார் என்ற வாதத்திற்குள் செல்லாமல் பாடல்களின் உட்கருத்தினை படிப்போர் உணரும் வகையில் எளிய நடையில் புதுக்கவிதை வடிவில் தந்திருப்பது புது முயற்சியே. புராணக் கதைகள், நாயன்மார் வாழ்க்கை கோயில்கள், கோயில்கள் பற்றிய செவிவழிச் செய்திகள் […]

Read more

கொடை காடு

கொடை காடு, ஏக்நாத், காவ்யா பதிப்பகம், சென்னை. திருநெல்வேலியைச் சேர்ந்த, எழுத்தாளர் ஏக்நாத்தின், கொடை காடு என்ற நாவலை சமீபத்தில் படித்தேன். காவ்யா பதிப்பகம் இந்த நாவலை வெளியிட்டுள்ளது. நெல்லை அருகில் உள்ள கல் ராக்கி மலைப் பகுதிக்கு, கால்நடைகளை மேய்க்க செல்வது பற்றி, இந்த நாவல் விவரிக்கிறது. மேய்ச்சல் வாழ்க்கையை பற்றி, தமிழில் பல எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். சீன மொழியிலிருந்துகூட, மேய்ச்சல் வாழ்க்கை நாவல் தமிழுக்கு வந்துள்ளது. அந்த வரிசையில், ஏக்நாத்தின் கொடை காடு நாவல் இடம் பெறுகிறது. கால்நடைகள் வீட்டின் ஒரு […]

Read more
1 2 3 4