மைக்ரோ பதிவுகள்

மைக்ரோ பதிவுகள், ராஜா சந்திரசேகர், சந்தியா பதிப்பகம், விலை 185ரூ. சுருங்கச் சொல்லி விரிய உணர்த்திடல் சொல்லுக்கு அழகு என்பார்கள். அத்தகைய ஆழமான வார்த்தைகளால், ட்விட்டரில் கீச்சியவற்றை அழகாகத் தொகுத்துத் தந்திருக்கிறார். ஒற்றை வரியில் உலகம் சுற்றிய நிறைவு கிடைக்கிறது. நன்றி: குமுதம், 7/3/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026696.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தமிழ் யாப்பியல் – பன்முக வாசிப்பு

தமிழ் யாப்பியல் – பன்முக வாசிப்பு, சந்தியா பதிப்பகம், மு.கஸ்தூரி, பக்.200, விலை ரூ.180. சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், பிற்கால இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் எனப் பலவற்றிலும் யாப்பியல் தொடர்பான பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன- மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. அவ்வரிசையில் இந்நூலையும் சேர்க்கலாம். இதிலுள்ள ஒன்பது கட்டுரைகளும் யாப்பியல் தொடர்பானவை. செய்யுளில் அமைந்த ஓசை நயத்துக்கு யாப்பமைப்பு எந்த விதத்தில் உதவுகிறது என்பதை எடுத்துக் கூறுகிறது இந்நூல். தமிழில் உள்ள இலக்கியங்களின் யாப்பியலை ஆராய்வதன் மூலம் அந்தந்த கால யாப்பியல் வளர்ச்சிகளை வரலாற்று நோக்கில் […]

Read more

வலி

வலி, அமரந்த்தா, சந்தியா பதிப்பகம், விலை 110ரூ. பல்வேறு பெண்களின் வாழ்க்கையைச் சொல்கிறது இந்நூல். இப்புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் கதைகள், நம்முடன் சக பயணியாக வரும் வெவ்வேறு தளங்களில் உள்ள பெண்களின் வாழ்க்கையை மிக நுட்பமாகச் சொல்கின்றன. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

சங்கப் பெண் கவிதைகள்

சங்கப் பெண் கவிதைகள், சக்தி ஜோதி, சந்தியா பதிப்பகம், விலை 400ரூ. சங்கப் பெண் புலவர்கள் 45 பேர் எழுதிய கவிதைகளை வரலாற்றுப் பின்புலத்தோடும் இன்றைய நோக்கிலிருந்தும் ஆராய்ந்து பார்க்க உதவுகிறது இந்நூல். நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

அந்தர மனிதர்கள்

அந்தர மனிதர்கள், வெ.நீலகண்டன், சந்தியா பதிப்பகம், பக்.112, விலை 105ரூ. பிறர் செய்யத் தயங்குகிற, கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேலைகளை, தங்கள் வாழ்க்கையாக கொண்டவர்கள் பற்றிய கட்டுரை தொகுப்பு இது. முகம் தெரியாத யாரோ ஒருவரின் விந்தணுவை சுமக்கும் பெண் முதல், ஆழ்கடலுக்குள் சென்று பாசி பறிக்கும் நபர் வரை, அனைவரையும், பசி துரத்துகிறது. அதைதான், இந்நுால் பதிவு செய்திருக்கிறது. நன்றி: தினமலர், 12/1/2018

Read more

மனநிழல் காட்சிகளும் சலனங்களும்

மனநிழல் காட்சிகளும் சலனங்களும், ந.பிச்சமூர்த்தி, சந்தியா பதிப்பகம், பக்.128, விலை ரூ.120. புதுக்கவிதை முன்னோடிகளுள் ஒருவரான ந.பிச்சமூர்த்தியின் கவிதையும் அல்லாத, கட்டுரையும் அல்லாத, கதையும் அல்லாத புதுவகை அனுபவத் தெறிப்புகளின் தொகுப்பு இந்நூல். வாழ்க்கையை தன் கவிதைக் கண்களால் மிக நுட்பமாக, அழகாகப் பார்த்து காட்சிப்படுத்தியிருக்கிறார் பிச்சமூர்த்தி. அவர் வாழ்வின் நேரடி அனுபவங்கள் இந்நூலில் பதிவாகியிருக்கின்றன. கூடவே அவருடைய வாழ்க்கைப் பார்வையும். மிகச் சிறு விஷயங்களிலும் கூட, இந்த வாழ்க்கைப் பார்வை வெளிப்படுகிறது. பிய்ந்து போன செருப்பைப் பற்றிக் கூறும்போது, இந்த உடம்பும் செருப்புத்தான். உயிரென்னும் […]

Read more

பத்மினி

பத்மினி, டி.ராமகிருஷ்ணா, தமிழில் பேராசிரியர் சிவ.முருகேசன், சந்தியா பதிப்பகம், விலை 100ரூ. ஆங்கில நாவல் எழுதிய முதல் தமிழர் தமிழ்நாடு, ஆந்திரா ஆகியவை இணைந்திருந்த பழைய சென்னை மாகாணத்தில், 1854-ம் ஆண்டில் பிறந்தவர் டி.ராமகிருஷ்ணா. ஆங்கிலத்தில் நாவல் எழுதிய முதல் தமிழர் இவர்தான். “பத்மினி” ஓர் இந்தியக் காதல் கதை” என்ற இந்த நாவலை 1903-ம் ஆண்டில் (அதாவது 114 ஆண்டுகளுக்கு முன்) அவர் எழுதினார். அதைத் தமிழில் மொழி பெயர்த்தவர் பேராசிரியர் சிவ.முருகேசன். விஜயநகர அரசரைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றும் சலுவா என்பவன், […]

Read more

வைணவக் கலைச்சொல் அகராதி

வைணவக் கலைச்சொல் அகராதி, தெ.ஞான சுந்தரம்,சந்தியா பதிப்பகம், பக்.228, விலை ரூ.220. தமிழ் வைணவ நூல்களுக்குத் தனித்துவமான மொழி உண்டு. வைணவ சமய சிந்தனைகளை தமிழில் அளிப்பதில் புதிய நயங்கள், சொல்லாடல்கள் ஆகியவற்றுக்குத் தனி வரலாறு உண்டு. இந்நூலாசிரியர் வடித்த ஓர் வைணவ ஆய்வு நூலின் பகுதியாக வைணவ அருந்தமிழ்ச் சொற்களுக்குப் பொருள் தொகுத்தார். அப்பகுதியின் மறுபதிப்பு இந்த நூல். பின்னிணைப்பாகப் பாராட்டைப் பெற்ற பகுதி தனி நூலானதும் வலுவிழந்ததாகவே உள்ளது. அருந்தமிழ்ச் சொல் அகர வரிசையில் உரப்பு என்கிற சொல்லுக்கு ‘உறுதி’ என […]

Read more

இனி இல்லை மரணபயம்

இனி இல்லை மரணபயம், உரையும் மொழிபெயர்ப்பும் சந்தியா நடராஜன், சந்தியா பதிப்பகம், விலை 100ரூ. ஒரு மரணமும் தினசரி மரணமும்! ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்றார் வள்ளுவர். ஆனால், புத்தகமே எழுதிவிட்டார் சந்தியா நடராஜன். இதயத்தின் ஓரிடத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டு, அதற்கான சிகிச்சை பெற்றபோது, அவருக்கு மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் அதிகமாக வந்துள்ளன. எனவே, மரணத்தைப் பற்றிப் படிக்க ஆரம்பிக்கிறார். அதுபற்றிய படைப்புகளைத் தேடத் தொடங்குகிறார். யோசிக்க ஆரம்பிக்கிறார். அவற்றை எல்லாம் தொகுக்கிறார்; எழுதுகிறார். அதையே புத்தகமாகவும் கொண்டுவந்துவிட்டார். யாம் பெற்ற துன்பம் […]

Read more

பத்துப்பாட்டு யாப்பியல்

பத்துப்பாட்டு யாப்பியல், மு.கஸ்தூரி, சந்தியா பதிப்பகம், பக்.584, ரூ.500. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பாட்டியல் ஆகிய இலக்கண வகைகளுள் யாப்பிலக்கணமும் ஒன்று. செய்யுள் இயற்ற இன்றியமையாதது யாப்பிலக்கணம். தொல்காப்பிய செய்யுளியலில் தொடங்கி, காலந்தோறும் பா வடிவங்களிலும், உறுப்புகளிலும் பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது யாப்பிலக்கணம். பாக்களின் வடிவ அமைப்பு, ஒலிநலக் கூறுகள் முதலியவற்றை ஆராயும் இலக்கணத் துறை இது. யாப்பியல் குறித்து ஆய்வு செய்வோர் அருகி வரும் இந்நாளில், முனைவர் பட்ட ஆய்வுக்கு யாப்பியலைத் துணிச்சலும் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஆய்வாளர். மேலும், குமரகுருபரரின் […]

Read more
1 3 4 5 6 7 11