புன்னகைக்கும் பிரபஞ்சம்

புன்னகைக்கும் பிரபஞ்சம், கபீர், தமிழில்: செங்கதிர், காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.200. கைவிளக்கைத் தொலையவிட்டும், அவ்வப்போது கைவிளக்கின் எண்ணெய் தீரும்படியாகவும் விதிக்கப்பட்ட கவிஞன், யுகம் யுகமாக இருட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறான். சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவன் தேடிய வெளிச்சம் கடவுள். அவன் வெளிச்சத்தில் பார்ப்பது மட்டுமல்ல, இருட்டில் பார்த்த பொருட்களும் இயற்கையும் சேர்ந்தே அவனது கவிதைகளுக்கு எழில் சேர்க்கின்றன. கவிஞன் வாழ்ந்த காலத்தின் கோலங்கள், புழங்கு பொருட்களைக் கவிதைகளில் மின்னவைப்பது என்பது அவனது கவித்துவம் அடைந்த ஊட்டச்சத்தைப் பொறுத்தது. நெசவாளியும் ஞானியும் தரிசியும் கவிஞனுமான […]

Read more

சொட்டாங்கல்

சொட்டாங்கல், தமிழச்சி தங்கபாண்டியன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 100ரூ. இந்து தமிழின் ஓர் அங்கமான ‘காமதேனு’ வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. நவீன வாழ்க்கையில் இன்றைய தலைமுறை தொலைத்துவிட்டு நிற்கும் பால்யத்தின் நினைவுகள் இவை. அழியும் நிலையிலிருக்கும் கிராமத்து விளையாட்டுகளையும் நினைவிலிருந்து அகலாத இளம்பருவத் தோழிகளையும் பற்றிய கட்டுரைகள். தமிழச்சி தங்கபாண்டியனின் கட்டுரைகள் கற்பனைகளிலிருந்து அல்ல, நினைவுகளிலிருந்து எழுதப்படுபவை என்பதற்கு இத்தொகுப்பு ஓர் இலக்கியச் சாட்சி. நன்றி: தமிழ் இந்து, 23/3/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

நடுகல்

நடுகல், தீபச் செல்வன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ. நினைவுகளை இழப்பதற்கில்லை தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து முள்ளிவாய்க்கால் ஊடாக, ஈழத்தில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் இக்காலத்தையும் உட்படுத்திய‌ முப்பது ஆண்டு காலவெளியில் பயணிக்கிறது தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல். இதுவே ஈழ மக்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்திய காலம், ஈழ மக்களை ஏதிலிகளாய் அலையச் செய்த காலம், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏந்தச் செய்த காலம். இக்காலத்தினூடே புலிகள் இயக்கம், ஈழ இயற்கை வளம், பண்பாட்டுக் கலாச்சாரம் போன்றவற்றைப் பேசிச் செல்கிறது இந்நாவல். போர் வாழ்க்கையை, முள்வேலி முகாம்களின் […]

Read more

ரசவாதி

ரசவாதி, பாலோ கொயலோ, தமிழில் நாகலட்சுமி சண்முகம், சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற பாலோ கொயலோவின் ‘தி அல்கெமிஸ்ட்’ நாவலை ‘ரசவாதி’ என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். ஆடு மேய்க்கும் சிறுவன் சான்டியாகோ, ஒரு புதையலைத் தேடி பிரமிடுகளை நோக்கி மேற்கொள்ளும் பயணமாக விரிகிறது இந்நாவல். இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. என்ன காரணம்? சகுனம், கனவுகள், எதேச்சை போன்ற நாம் பெரிதாகப் பொருட்படுத்தாத விஷயங்களை சான்டியாகோ தன் வெற்றிக்கான வழிகாட்டியாக எடுத்துக்கொள்கிறான். இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறது; சுவாரசியமற்ற […]

Read more

புத்தரின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை

புத்தரின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை, மானா பாஸ்கரன், சாக்பீஸ் வெளியீடு. எளிமையின் ருசி வாழ்க்கையை ஆழ்ந்து ரசிக்கும் மனதின் பார்வையில் எந்த விஷயமும் சுவை மிக்கதாக அமைந்துவிடும். பால்யகால நினைவுகள், அன்றாடக் குழப்பங்கள் எனப் பல விஷயங்களை இலகுவான மொழியில் பேசும் மானா பாஸ்கரனின் இப்புத்தகம், அமைதியான நீரோட்டத்தின் குளிர்ச்சியை உணர்த்தும் சுவையான படைப்பு. ‘பசி வந்தாலும் பறக்காத பத்து’ எனும் ஆளுமைகளின் பட்டியலில் புத்தர், அம்பேத்கர், பெரியார் தொடங்கி வடிவேலு வரை இடமளிக்கிறார் மானா. சின்னக்குத்தூசியின் அசாத்தியமான பெருந்தன்மை, கிருஷ்ணம்மாள் ஜெகநாதனின் […]

Read more

காவிரி அரசியல்

காவிரி அரசியல், கோமல் அன்பரசன், தமிழ் திசை வெளியீடு, உரிமைப் போராட்ட வரலாறு நீதிக்கான போராட்டத்தில் காவிரியின் கடைமடையான தமிழ்நாடு தத்தளித்துக்கொண்டிருக்கிறது. காவிரி நீர்ப்பகிர்வு சிக்கலுக்கான காரணங்கள், அதைக் களைவதற்கான முயற்சிகள், அவற்றின் வெற்றி-தோல்விகளை விரிவாக இந்நூலில் பேசுகிறார் ஊடகவியலாளரும் காவிரிக் கரையைச் சேர்ந்தவருமான கோமல் அன்பரசன். காவிரி நதிநீருக்கான உரிமைப் போராட்ட வரலாற்றைப் பேசுகிறது! நன்றி: தமிழ் இந்து, 20/4/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 […]

Read more

க.நா.சு. கவிதைகள்

க.நா.சு. கவிதைகள், பதிப்பாசிரியர்: இளையபாரதி, விலை: ரூ.165 புதுக்கவிதையின் தந்தையாக ந.பிச்சமூர்த்தி பொதுவில் அறியப்படுகிறார்; பாரதிக்குப் பிறகு வசனகவிதையை முயன்ற கு.ப.ராவும் புதுமைப்பித்தனும் முன்னோடிகள். ஆனால், புதுக்கவிதை என்ற பெயரை அந்த வடிவத்துக்குப் புனைந்ததோடு மட்டுமின்றி புதுக்கவிதைக்கு, இருபதாம் நூற்றாண்டு இந்திய, தமிழ் வாழ்க்கையின் நவீனத்தையும் லட்சணங்களையும் அழகியலையும் ஏற்றியவர் க.நா.சுப்ரமணியம். புதுக்கவிதை தன்னை நிறுவிக்கொண்ட கதை அவ்வளவு எளிதானதல்ல. இலக்கண வயப்பட்ட சட்டகங்களிலிருந்து மட்டுமல்ல, பழமையின் இறுகிய தடைகொண்ட மனோபாவங்களிலிருந்தும், சிந்தனை மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பெற்ற உருவம் புதுக்கவிதை. ஒரு உயிர் […]

Read more

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?, கி.வீரமணி, திராவிடர் கழகம், விலை: ரூ.180 திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி எழுதியிருக்கும் ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்’ என்ற புத்தகம், 270 பக்கங்களில் 20 அத்தியாங்களில் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தமிழர்களின் பண்பாடு, கலை, இலக்கியம், வாழ்வியல் ஆகியவை மேம்பட பெரியார் செய்த மகத்தான பங்களிப்புகளைப் பேசுகிறது. தமிழ், தமிழர் முன்னேற்றத்தில் அவருக்கு இருந்த ஓயாத அக்கறையையும், அதற்கு அவர் செலுத்திய அயராத உழைப்பையும் விவரிக்கிறது. பெரியாரின் உரைகள், ‘விடுதலை’, ‘குடிஅரசு’ இதழ்களில் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள் […]

Read more

காற்றில் கரையாத நினைவுகள்

காற்றில் கரையாத நினைவுகள், வெ.இறையன்பு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை 160ரூ. இந்து தமிழ்’ நாளிதழில் வெ.இறையன்பு வாரந்தோறும் தொடராக எழுதி பெரும் வரவேற்பு பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு இது. பயணங்கள், அனுபவங்கள் வழியாகத் தன்னை செழுமைப்படுத்திக்கொண்ட விஷயங்களை சுவாரசியமான நடையில் பகிர்ந்துகொள்கிறார் இறையன்பு. இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் நமக்குள் பசுமையான கருப்பு – வெள்ளைக் காட்சிகளை ஓட்டிக் காண்பிக்கின்றன. நன்றி: தமிழ் இந்து, 13/4/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

தி டாடாஸ்

தி டாடாஸ்: ஹவ் அ பேமிலி பில்ட் அ பிஸினஸ் அண்ட் அ நேஷன், கிரீஷ் குபேர்,ஹார்பெர்காலின்ஸ், விலை: ரூ.699 அந்நிய ஆதிக்கத்தின் கீழ் இந்தியா ஆட்பட்டிருந்த காலத்திலேயே இரும்பு உருக்காலை என்ற கனரகத் தொழிலைத் தொடங்கிய நிறுவனம் டாடா. ஜாம்ஷெட்பூர் என்ற புதியதொரு தொழில் நகரத்தையே உருவாக்கிய ஜாம்சேட்ஜி டாடாவின் கண்களிலிருந்து 150 ஆண்டுகளுக்கு முன்பு தெறித்த தொழில் முனைவு என்ற ஆர்வத் தீப்பொறி பற்றிப் பரவி, சாதாரண மக்களின் காரான ‘நானோ’வை அறிமுகப்படுத்திய ரத்தன் டாடா வரை டாடா குழுமத்தைச் சிறியதொரு […]

Read more
1 36 37 38 39 40 44