குறள் அமிர்தம்

குறள் அமிர்தம், திருக்குறளின் மெய்ப்பொருள், கோ.திருமுருகன் (எ) பூர்ணாநந்தன், வைதேகி பதிப்பகம், விலை  ரூ.800. அதிக உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களுள் ஒன்று என்ற பெருமையப் பெற்றது திருக்குறள். திருக்குறளுக்குக் காலந்தோறும் பல அறிஞர்கள் உரை எழுதியுள்ளனர். பலரும் வாழ்க்கை நெறிகளைக் கற்பிக்கும் உலகியல் நூலாகவே அதனை அணுகியுள்ளனர். ‘ஜீவ அமிர்தம்’ என்னும் சித்தர் மரபு இதழை கடந்த எட்டு ஆண்டுகளாக நடத்திவருபவரும் ‘ஞான அமிர்தம்’, ‘ஜீவ அமிர்தம்’ உள்ளிட்ட சித்தர் நூல்களை எழுதியவருமான கோ.திருமுருகன் இந்த நூலில் 1,330 குறள்களுக்கும் மெய்ப்பொருள் விளக்க […]

Read more

கலைஞர் என்னும் மனிதர்

கலைஞர் என்னும் மனிதர், மணா, பரிதி பதிப்பகம் வெளியீடு, விலை: ரூ.500. கருணாநிதி ஆட்சியில் முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டபோதும் பத்திரிகை யாளர்கள் சந்திப்புகளில் கேள்விகளை எதிர்கொள்ள ஒருபோதும் தயங்கியதில்லை. அவருடைய பதின்பருவத்து வாழ்க்கை, பத்திரிகையாளராகத் தொடங்கியதன் காரணமாக அவருக்கு எப்போதும் பத்திரிகையாளர்கள்மீது இணக்கமான பார்வை உண்டு. பத்திரிகையாளர்கள் கேட்கிற முரண்பாடான கேள்விகளுக்கும் லாகவமாகப் பதில் சொல்லும் ஆற்றல் மிக்கவர் அவர். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படுகிற பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள், அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்துக் கேள்விகளை எழுப்பி […]

Read more

திரை உலகில் செல்வி ஜெயலலிதா

திரை உலகில் செல்வி ஜெயலலிதா, பொன்.செல்லமுத்து, வைகுந்த் பதிப்பகம், விலை: ரூ.950. ஜெயலலிதா என்றவுடன் அவரது அரசியல் வாழ்க்கைதான் முந்திக்கொண்டு நினைவில் வருகிறது. அரசியல் வாழ்வில் அதிரடித் திருப்பங்களைச் சந்தித்தவர் என்பதால் இருக்கலாம். நடிப்பால் பிரபலமாகி, அரசியலில் அடியெடுத்துவைத்த அவரை, அரசியல் தவிர்த்து ஒரு நடிப்புக் கலைஞராக மட்டுமே சிறப்பிக்கிறது இந்தப் புத்தகம். 12 ஆண்டுகளில் ஜெயலலிதா நடித்தது மொத்தம் 121 படங்கள். தமிழில் நடித்த 87 படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்தது மட்டும் 28. கதாநாயகனே மொத்தத் திரைப்படத்தையும் ஆக்ரமித்திருந்த காலத்தில், ஜெயலலிதா […]

Read more

என் பெயர் நுஜூத்

என் பெயர் நுஜூத், வயது 10, விவாகரத்து ஆகிவிட்டது!, நுஜூத் அலி, உடன் இணைந்து டெல்ஃபின் மினோவி, ஆங்கிலத்தில்: லிண்டா கவர்டேல், தமிழில்: சூ.ம.ஜெயசீலன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.180. யேமன் நாட்டின் கார்ட்ஜி கிராமத்தில் பிறந்த நுஜூத், ஒரு விஷயத்தில் தன் அம்மாவை விஞ்சிவிடுகிறாள். அம்மாவுக்கு 16 வயதில் திருமணம் நடக்க, நுஜூத்துக்கோ பத்து வயதிலேயே மணமாகிவிடுகிறது. அம்மாவுக்கு 16 குழந்தைகள் பிறந்தன. மூன்று முறை கரு கலைந்தது. நான்கு குழந்தைகள் இறந்துவிட்டன. அப்பாவுக்குக் கூலி வேலை. வறுமைக்கு வீட்டுப் பொருட்கள் […]

Read more

என் பெயர் நுஜூத்

என் பெயர் நுஜூத், வயது 10, விவாகரத்து ஆகிவிட்டது!, நுஜூத் அலி, உடன் இணைந்து டெல்ஃபின் மினோவி, ஆங்கிலத்தில்: லிண்டா கவர்டேல், தமிழில்: சூ.ம.ஜெயசீலன், வெளியீடு:டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.180. யேமன் நாட்டின் கார்ட்ஜி கிராமத்தில் பிறந்த நுஜூத், ஒரு விஷயத்தில் தன் அம்மாவை விஞ்சிவிடுகிறாள். அம்மாவுக்கு 16 வயதில் திருமணம் நடக்க, நுஜூத்துக்கோ பத்து வயதிலேயே மணமாகிவிடுகிறது. அம்மாவுக்கு 16 குழந்தைகள் பிறந்தன. மூன்று முறை கரு கலைந்தது. நான்கு குழந்தைகள் இறந்துவிட்டன. அப்பாவுக்குக் கூலி வேலை. வறுமைக்கு வீட்டுப் பொருட்கள் […]

Read more

மருதநாயகம் என்ற மர்மநாயகம்

மருதநாயகம் என்ற மர்மநாயகம், அமுதன், மணிமேகலைப் பிரசுரம், விலை: ரூ.300. ஐம்பதாண்டு காலப் பணியனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளரான தனசேகரன், அமுதன் என்ற புனைபெயரில் தமிழர்களின் சரித்திரச் சிறப்புகளை எளிய தமிழில் பல்லாயிரக்கணக்கான வாசகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர். தஞ்சை பெரிய கோயில், அங்கோர்வாட், ஆதிச்சநல்லூர், கீழடி என்ற வரிசையில் அடுத்து அவர் மருதநாயகம் என்றழைக்கப்பட்ட யூசுப் கானின் வரலாற்றை எழுதியுள்ளார். ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட மறுத்த கலகக்காரர் மருதநாயகத்தை ஐந்தாறு மாதங்களாய் முயன்றும் வீழ்த்த முடியாமல், வஞ்சகத்தால் அதை நிறைவேற்றிக்கொண்டனர். தூக்கிலிட்டும் ஆத்திரம் தீராதவர்களாய் […]

Read more

எட்டுக் கதைகள்

எட்டுக் கதைகள், திலக் ராஜ்குமார், கடற்காகம் வெளியீடு, விலை: ரூ.145. மதுரையைச் சேர்ந்த திலக் ராஜ்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு. இளமைக்கால அனுபவங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், மனித உறவுகள், அறிவியல் புனைவுகள் என வெவ்வேறு தளங்களில் சஞ்சரிக்கும் கதைகள். இந்த நூற்றாண்டின் இறுதியிலேயே ரோபாட்கள் மூலம் டோர் டெலிவரி செய்ய வாய்ப்புகள் உண்டு என்ற அறிவியல் கற்பனையோடு தொடங்குகிறது தொகுப்பின் முதல் சிறுகதையான ‘நீங்கள் கேட்டவை’. கூடவே, அது சாத்தியமாகும் நாளில், தமிழ்நாடு ஏழு பெருநகர மண்டலங்களாகி ஒவ்வொன்றுக்கும் தனி முதல்வர் இருப்பார் என்பது […]

Read more

முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்

முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன், ஆ.கலைச்செல்வன், தென்குமரிப் பதிப்பகம், விலை: ரூ.160, ஈழ விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில், தமிழகத்தின் கையறு நிலை உணர்வுகளை உலகுக்குச் சொல்லும் வகையில் உயிரை மாய்த்துக்கொண்டார் முத்துக்குமார். அந்த இளைஞரின் வாழ்க்கை வரலாற்றோடு அவரது கவிதை முயற்சிகள், பதினான்கு கோரிக்கைகளை உள்ளடக்கி ஒரு மரணசாசனமாக அமைந்துவிட்ட அவரது இறுதிக் கடிதம் ஆகியவற்றையும் ஒருசேரத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார் ஆ.கலைச்செல்வன். இன, மொழிப் பற்றாளர்கள் உயிர்க்கொடையாளர் என்று முத்துக்குமாரின் நினைவுகளைப் போற்றுகிறார்கள். ஆனால், படைப்பூக்கமும் தீவிர வாசிப்பும் கொண்ட ஒரு இளைஞரின் வாழ்க்கையும் […]

Read more

திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர்

திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர், இனியன் கிருபாகரன், இனியன் பதிப்பகம், விலை: ரூ.300. திரைக்குப் பின்னாலும் நாயகன் திராவிட இயக்க இதழ்களை ஆவலோடு சேகரிக்கும் பழக்கமுடைய கிருபாகரனிடமிருந்து வெளிவந்த அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்ட ஆளுமைகள் பற்றிய புத்தகங்கள் பரவலான கவனம் பெற்றன. இந்த வரிசையில் திரைக் கலைஞர் ஜெய்சங்கர் இணைந்திருப்பது ஒரு சுவாரஸ்யமான கதை. எம்ஜிஆர் மீது அபிமானம் கொண்ட கிருபாகரனை ஜெய்சங்கரோடு இணைக்கும் புள்ளியாக மனிதாபிமானம் இருக்கிறது. திரைப் பயணத்துக்கு வெளியே ஜெய்சங்கர் செய்த மனிதாபிமான உதவிகளின்பால் ஈர்க்கப்பட்டதிலிருந்து இந்தப் புத்தகத்துக்கான தேடல் […]

Read more

கல்லாப் பிழை

கல்லாப் பிழை, க.மோகனரங்கன், தமிழினி வெளியீடு, விலை: ரூ.90. க.மோகனரங்கன். இந்தப் பெயர் ஒரு மந்திரச் சொல். நினைவில் சட்டென நிதானத்தைக் கொண்டுவரும் தன்மை கொண்ட எழுத்துக்காரர். தூரிகைகளும் வர்ணங்களும் இல்லாது நம்முள் சித்திரங்களை வரைந்துசெல்லும் கவிமொழிக்காரர். தற்பெருமையும் தளும்புதலும் இல்லாது மொழிக்கு வளமை சேர்த்தபடியே இருப்பவர். நான்கு கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரை நூல்கள், ஒரு கதைத் தொகுப்பு, இரு மொழிபெயர்ப்பு நூல்கள் என இவரின் பங்களிப்புகள் காத்திரமானவை. ‘வாசனை’ கவிதை வரைந்த பூக்கட்டும் பெண் தொடங்கி ‘கிளிப்பெண்’ணோடு கூடடைந்தது நல்ல அனுபவம். […]

Read more
1 6 7 8 9 10 44